Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naan Unnodu Than
Naan Unnodu Than
Naan Unnodu Than
Ebook120 pages44 minutes

Naan Unnodu Than

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

she has written several novels in Tamil.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115704103
Naan Unnodu Than

Read more from Lakshmi Rajarathnam

Related to Naan Unnodu Than

Related ebooks

Reviews for Naan Unnodu Than

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naan Unnodu Than - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    நான் உன்னோடு தான்

    Naan Unnodu Than

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    மாலை நேரக் கடற்கரை காற்றே தனி சுகம் தான். அதிலும் காதலனுக்காக காத்துக் கொண்டிருப்பது தனி இன்பம் தான். ஆனால் மனசுக்குத்தான் பொறுமை இல்லை. கை கடிகாரத்தைப் பார்த்தாள் சுமதி. மணி ஐந்து. கடற்கரை நுரையில் போய் கொஞ்சம் புடவையை தூக்கி வைத்தபடி காலை நனைத்துக் கொண்டாள்.

    கடற்கரை மணல் வெளியில் தான் எத்தனை விதமான மனிதர்கள். ஓய்வு பெற்று தன் நேரத்தை கழிக்க... பலகாரங்களை விற்று காசாக்கு பவர்கள், ராட்டினத்தை சுற்ற வைத்துக் குழந்தைகளை கவருபவர்கள், முறுக்கு, சுண்டல் விற்பவர்கள், தன்னைப் போல் காதலிப்பவர்கள்.

    சுமதிக்கு சிரிப்பு வந்தது. சில குழந்தைகள் அலைகளோடு கும்மாளம் போடும் போது பயமும் வந்தது. அலையோடு போகும் குழந்தைகளை பற்றி எத்தனை எத்தனை செய்திகள்.

    மறையும் அந்தி சூரியனை பார்த்த பொழுது தான் இன்று நேரம் கொஞ்சம் அதிகமாகிவிட்டது என்பது புரிந்தது. பார்வையை கடல் பரப்பிலிருந்து திருப்பி மணல்வெளியில் படர விட்ட பொழுது தான் தூரத்தில் ஹரி வருவது தெரிந்தது.

    நல்ல உயரம் தனக்கே உரிய பாணியில் முன்கை சட்டையை முழங்கையில் இழுத்துக் கொண்ட அழகு. அடர்ந்த மீசைக்கடியில் சிவந்த உதடுகள், தூரத்தில் இருந்தாலும் அவள் அவனழகில் மயங்கி தான் போனாள்.

    இருவரும் ஒரே அலுவலகம். இன்றும் சிநேகிதியின் அம்மாவுக்கு ஐம்பதாவது வயது பிறந்த நாள் என்று லீவ் போட்டு விட்டாள்.

    ஹரி, நான் இன்னிக்கு லீவ். ஏதாவது சாக்கு போக்கு சொல்லிட்டு நாலு மணிக்கே வந்துடுங்க என்று சொல்லி இருந்தாள்.

    படிச்சு படிச்சு சொல்லி இருந்தும், அவன் ஐந்து மணிக்கு மேல் வந்தால் அவளுக்கு கோபம் வராதா? அவனுடைய சுந்தர ரூபத்தைப் பார்த்தால் கோபம் மறைந்து போகும் என்றாலும், பொய் கோபம் மனத்தை துளைத்தது. பார்வையை கடற்பரப்பில் தவழ விட்டாள்.

    தோளில் சாய்ந்த கைக்குழந்தையின் வாய் நுரையாக கடற் நுரைகாலில் படர்ந்தது.

    ஹாய் சுமி, வந்து நேரமாச்சா அவள், அவன் பக்கம் முகத்தை காட்டாமல் மறைத்தாள்.

    ஏய் கோபமா?

    தோளில் கை வைத்து முகத்தை திருப்பினான்.

    அவளின் கருவிழிகள் அங்கும் இங்கும் அலைந்தன.

    கபாலியக் காணலையாம் சார்.

    இல்லே. ரொம்ப சந்தோஷம்

    மெல்லிய இருட்டுப் பரவ... குழந்தைகளின் ஆரவாரம் குறையத் தொடங்கின.

    வா. மணல்லே உட்கார்ந்து பேசலாம்

    ஒண்ணும் தேவை இல்லை

    அடம் பிடிக்கும் குழந்தையை இழுத்துச் செல்வது போல் கையை விடாமல் இழுத்துக் கொண்டு போனான்.

    விடுங்க கையை

    உதறி முரண்டு பிடித்தவள், போல கையை உதறினாள் பாவனை யாக, வடை, பஜ்ஜி, முறுக்கு என்று எண்ணெய் மணத்தது.

    அவள் கோபத்துடன் உட்கார்ந்தாள்.

    இரு, ஐஸ்கிரீம் வாங்கிட்டு வரேன்

    அவன் ஓடிப்போய் இரண்டு ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு வந்தான்.

    இரண்டு ஸ்பூன் ஐஸ்கிரீம் வாயில் கரைந்ததும், அவள் கோபமும் கரைந்தது.

    எத்தனை தடவைகள் ஆபீசுக்கு போன் பண்றது?

    என் மொபைலுக்கு பண்ணினாயா?

    ஸ்விட்ச் ஆப் பண்ணிட்டு கேள்வி கேட்கிறீங்களா? கிடைக்காம் தான் ஆபீசுக்கு போன் போட்டேன். மதியம் லீவ்னு முரளி சொன்னார் அவன் மவுனம் சாதித்தான்.

    ஏன் லீவ்? யாருக்காவது உடம்பு சரியில்லையா?

    அது வந்து

    வந்துட்டீங்க. மூஞ்சி கொஞ்சம் வாடி இருக்குது. ஆனா மாப்பிள்ளைகணக்கா டிரஸ் பண்ணிட்டு இருக்கீங்க

    மாப்பிள்ளைகணக்கா இல்ல சுமி. மாப்பிள்ளையாத்தான்

    ஐஸ்கிரீம் தொண்டையில் இறங்காமல் சண்டித்தனம் செய்தது.

    என்ன சொல்றீங்க ஹரி?

    மதியம் ரெண்டு மணிக்குப் பெண் பார்க்கவான்னு அப்பாகிட்டயிருந்து போன்.

    நீங்களும் உடனே போயிட்டீங்க இல்ல?

    சொல்றதைக் கேளு சுமி. எங்கப்பா ரொம்ப கோபக்காரர். அவர் பேச்சுக்கு மறு வார்த்தை பேச முடியாதும்மா

    அந்த இருட்டிலும் சுமியின் முகத்தில் கோபச் செம்மை ஏறியது.

    இப்படி சொல்லியே நம்ம காதலை உங்க வீட்ல சொல்லலே. அப்பாவுக்கு கோபம், அம்மா அழுதானு பெண் பார்க்கப் போயிட்டீங்க இல்லையா? அவளை ஆடச் சொல்லி பாடச் சொல்லி டிபன் சாப்பிட்டு விட்டு வந்தீங்க இல்லையா?

    ரைட், நடந்ததை அப்படியே சொல்லிட்டே. எந்த முடிவையும் சொல்லாம் நைஸா நழுவி வந்துட்டேன்

    கெட்டிக்காரர் தான். இப்படியே எத்தனை காலம் தான் சொல்ல முடியும்? இப்ப வீட்டுக்குப் போனதும் உங்கப்பா, அம்மா கேட்டாக்க என்ன பதிலை சொல்லப் போறீங்க! சொல்லுங்க ஹரி பெண்ணைப் பிடிக்கல்லேன்னு தைரியமா சொல்லுவீங்களா?

    அப்படி பட்டுனு சொல்ல முடியாது சுமி

    அது ஏன் ஹரி... என்னைக் காதலிக்கிறேன்னு தைரியமாக சொல்லுங்களேன். எனக்கும் பதினைஞ்சாயிரம் சம்பளம் வருது ஹரி

    அது மட்டும் போதாது சுமி. எங்கம்மாவுக்கு ஜாதகம் பார்க்கணும். அதுல அசாத்திய நம்பிக்கை உண்டு. எங்க தாத்தா பெரிய அஸ்ட்ராலஜர். அப்பாம்மா ரெண்டு பேருமே ஜாதகத்துல நம்பிக்கை உள்ளவங்க கலகலவென்று சிரித்தாள் சுமதி.

    இது என்ன பெரிய விஷயம். இந்த விஞ்ஞான யுகத்துல எதைத் தான் மாத்த முடியாது? உங்க ஜாதகத்தை ரகசியமாக கொண்டு வந்து எங்கிட்ட தாங்க. அப்புறம் நான் பார்த்துக்கிறேன்

    மாத்த முடியாத ஒண்ணு இருக்கே சுமி

    என்னது அது?

    எத்தனை தடவை சொல்லிட்டேன்

    இப்பச் சொல்லுங்க. நம்ம காதலுக்கு வயசு ஆறு மாசம்

    "உனக்கு வேலையே பர்மனென்ட் ஆகல்லே. வானத்தை வில்லா வளைப்பேன்னு

    Enjoying the preview?
    Page 1 of 1