Nesam Marakavillai Nenjam!
()
About this ebook
Read more from Lakshmi Rajarathnam
Deivam Thantha Poove! Rating: 0 out of 5 stars0 ratingsBramma Mudichu Rating: 0 out of 5 stars0 ratingsAshtalakshmi Rating: 0 out of 5 stars0 ratingsEn Anni - En Manaivi? Rating: 0 out of 5 stars0 ratingsNilavai Thazhuvatha Mehangal! Rating: 0 out of 5 stars0 ratingsBhavishya Puranam Rating: 2 out of 5 stars2/5Arputha - Athisaya Aalayangal Rating: 5 out of 5 stars5/5Thevai Oru Snegithi Rating: 0 out of 5 stars0 ratingsVaana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsMarakkuma Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Niraintha Ragam! Rating: 0 out of 5 stars0 ratingsAnbe Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsOorariya Oru Maalai Rating: 0 out of 5 stars0 ratingsEzhu Swarangalukkul… Rating: 0 out of 5 stars0 ratingsPoochudum Naal Paarkkava Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyir Neethane Un Uyir Naanthane Rating: 1 out of 5 stars1/5Kolaiye Nee Vanangaai! Rating: 0 out of 5 stars0 ratingsNinaivalaigal Thodarnthu Vanthal... Rating: 0 out of 5 stars0 ratingsUnakkagave Naan Rating: 0 out of 5 stars0 ratingsThiruppugal Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsUravugal Thodarkathai Rating: 0 out of 5 stars0 ratingsNurse Madhavi Rating: 0 out of 5 stars0 ratingsEn Kaadhali… Ennai Kaadhali… Rating: 0 out of 5 stars0 ratingsOru Deivam Thantha Veedu…! Rating: 0 out of 5 stars0 ratingsKaatril Kalanthavale...! Rating: 0 out of 5 stars0 ratingsKaaviyama Nenjin Ooviyama Rating: 0 out of 5 stars0 ratingsMannil Vizhuntha Mazhaithuligal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Nesam Marakavillai Nenjam!
Related ebooks
Nishaptha Mozhigal Rating: 0 out of 5 stars0 ratingsAval Varuvala? Rating: 0 out of 5 stars0 ratingsAnthapura Raagangal Rating: 5 out of 5 stars5/5Ezhu Swarangalukkul… Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Thantha Poove Rating: 5 out of 5 stars5/5Paniyil Nanaintha Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsThunbam Nergaiyil… Rating: 5 out of 5 stars5/5Eppozhuthum Un Soppanangal…! Rating: 4 out of 5 stars4/5Thirumagal Thedi Vanthal Rating: 0 out of 5 stars0 ratingsChithirame…. Senthen Mazhaiye Rating: 0 out of 5 stars0 ratingsNee En Nila Rating: 0 out of 5 stars0 ratingsVannam Konda Vennilave Rating: 5 out of 5 stars5/5Vaanavil Jaalam Nee Rating: 0 out of 5 stars0 ratingsUnnodu Oru Nimidam Rating: 0 out of 5 stars0 ratingsMayanginean Solla Thayanginean Rating: 4 out of 5 stars4/5Nenjamellam Neeye Rating: 5 out of 5 stars5/5Vizhi Vaasal Vasanthangal Rating: 0 out of 5 stars0 ratingsஉன்னைக் கண் தேடுதே... Rating: 0 out of 5 stars0 ratingsNallathor Veenai Seithe...! - Part 1 Rating: 5 out of 5 stars5/5Pani Vizhum Malar Vanam! Rating: 0 out of 5 stars0 ratingsAndhi Nera Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsEnthanuyir Kaadhalaney! Rating: 5 out of 5 stars5/5Kannalaney Rating: 0 out of 5 stars0 ratingsIthu Enna Mayamo? Rating: 5 out of 5 stars5/5Neela Thiraikkadal Orathile! Rating: 0 out of 5 stars0 ratingsSollathaan Ninaikiren Rating: 5 out of 5 stars5/5Nee Ennai Neengathey Rating: 0 out of 5 stars0 ratingsKanmani Un Arugil Rating: 5 out of 5 stars5/5Celluloid Kanavugal Rating: 1 out of 5 stars1/5Nee Enthan Vaanam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Nesam Marakavillai Nenjam!
0 ratings0 reviews
Book preview
Nesam Marakavillai Nenjam! - Lakshmi Rajarathnam
http://www.pustaka.co.in
நேசம் மறக்கவில்லை நெஞ்சம்!
Nesam Marakavillai Nenjam!
Author:
லட்சுமி ராஜரத்னம்
Lakshmi Rajarathnam
For more books
http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
1
காவேரி தீரமு நன்னு பாவ நமகு ரங்கபுரி நீ
தோடி ராக தியாகராஜ கீர்த்தனை. காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. காவேரியைப் பற்றி யார்தான் எழுதவில்லை? கவிஞர்கள் மட்டுமா? சினிமா பாடலாசிரியர்களும் காவேரியை விடவில்லையே நடந்தாய் வாழி காவேரி
என்று சீர்காழி கோவிந்தராஜனின் கணீர்க் குரலை ரசிக்காதவர் யாராவது உண்டா?
சோழ வள நாட்டிற்குப் பெருமை சேர்ப்பது காவேரி தானே! சோழ மன்னனையே காவேரி நாடன் என்றும் காவேரி காதலன் என்றும் புகழ்ந்து போற்றுகிறார்களே. அகத்தியர் காவேரியைக் கமண்டலத்தில் கொண்டு வந்தார். சோழ வளநாட்டிற்கு நீர் வளம் தேவை. குடகில் அகத்தியர் தவமிருந்தார். கணநாதன் காக்கை வடிவெடுத்து கமண்டலத்தை தட்டி விட கமண்டலத்தில் இருந்த காவேரி பெருக்கெடுத்து சோழ வள நாட்டை வளப்படுத்தினாள்.
ரங்கபுரி என்று சொன்னது ஸ்ரீரங்கத்தை தான். விருப்பப்பட்டு ரங்கநாதர் காவேரிக் கரையில் கோயில் கொண்டார். காவேரியைப் பற்றி நினைக்க இன்னும் நிறையவே இருக்கிறது என்று நினைத்துக் கொண்டான் சித்தார்த். இவ்வளவு ஏன்? பொன்னியின் செல்வன் நாவலையே கல்கி ஆடிப் பதினெட்டாம் பெருக்கு பண்டிகையைக் காவேரியில் வைத்துத் தானே ஆரம்பித்திருப்பார்.
திருவையாறிலிருந்து பஸ்ஸில் தஞ்சைக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். விடாமல் தியாகராஜ ஆராதனைக்குச் சென்று வந்தான். இன்று பாடியவளோ ஒரு மேனாட்டுப் பெண்மணி. - பெயர் மோரீஸ். என்ன அழகான குரல்? தேன் மதுர இசை. தோடிக்கு நாதஸ்வர வித்வான் ராஜரத்னம் பிள்ளையைத்தான் சொல்லுவார்கள். ஸரீகா... என்று பிடித்து என்ன ஒரு மேல் ஸ்தாயி சஞ்சாரம். அனாயாசமா மேல எல்லாராலும் சஞ்சாரம் பண்ண முடியாது.
நாதத்தை உபாசிக்காவிட்டால் இத்தனை இனிமையான குரல் அமைந்திருக்கவே முடியாது. என்ன அழகாகப் பாடினாள். இது சாதகம் பண்ணிப் பண்ணி மெருகேறிய சாதனைக் குரல்.
தஞ்சையில் காவேரி ஓடுவதால் இதுவும் ரங்கபுரிதானோ! மோரீஸின் குரல் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருப்பது போலவே பிரமை. ஜன்னல் வழியே வீசி வரும் காற்று கூட அவள் கானத்தைச் சுமந்து கொண்டுதான் வருகிறதோ 'பதநிஸ தநிஸாஸஸரிஸஸரி ஸரிஸநி ஸநிதநிஸா' என்ற ஸ்வரப் பிர யோகத்தை வயலின் வித்வான் வாசிக்க அதை மோரீஸ் வாங்கிப் பாடிய பொழுது அது குரலா? வயலின் தந்தி ஈந்த நாதமா?
மோரீஸ் மேனாட்டுப் பெண்மணிதான் என்றாலும் இளையவள் இல்லை. சற்றே வயது முதிர்ந்தவள். அந்தக் குரலில் சிறிதும் தொய்வோ அயர்வோ இல்லை. கூட்டத்தைக் கட்டிப் போட்டு உட்கார வைக்கும் காந்த சக்தி அந்தக் குரலுக்கு இருந்தது. காற்றே வீசாமல் சற்றே ஸ்தம்பித்த நிலை. ஸஹானாவும், ஸாவேரியும் இரவின் மோனத்தில் சஞ்சலம் செய்து புல்லரிக்க வைத்தன. ஜோன்புரியில் பாருக்குள்ளே நல்ல நாடு என்ற பாரதி பாட்டு சோடையா போயிற்று? என்ன இல்லை இந்தத் திருநாட்டிலே என்றல்லவா கேட்க வைத்தது.
ஞானத்தில், கானத்தில் அன்னதானத்தில் கவிதையில் என்று சிறந்ததல்லவா இந்த நாடு. மோரீஸின் கச்சேரி ஏன் முடிந்தது என்று இருந்தது. அதுவும் இந்த நாட்டுக்குச் சொந்தமான நாதத்தை மேனாட்டுப் பெண்மணி உபாசித்து, அதை வழங்கும் பேற்றைப் பெற்றிருக்கும் பொழுது.... ‘ஓ... ராமா நீ நாம ஏமி ருசிரா? ஏமி ருசிரா ராமா எந்த ருசிரா ராமா’னுதானே கேட்கத் தோன்றுகிறது?
அதையும் ஒரு மேனாட்டுப் பெண் ருசித்து விட்டுப் பாடுவதைக் கேட்கும் பொழுது இந்த தஞ்சை மண்ணும் ஒரு ஸ்வர்க்கபுரியாக மாறி விட்டதே? அவள் இன்று நேற்று உபாசனை பண்ணிப் பாடுபவளாக இருக்க முடியாது. நாற்பதாண்டுக் காலமாக உபாசித்து உபாசித்து உரமேறிய குரல். எத்தனை பெருமைக்குரிய
