Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pani Vizhum Malar Vanam!
Pani Vizhum Malar Vanam!
Pani Vizhum Malar Vanam!
Ebook247 pages1 hour

Pani Vizhum Malar Vanam!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஹர்ஷினி, தன் இளமைப்பருவத்தில் தந்தையை இழந்து, வாழ்ந்த வந்த வீடு, சொந்தாமாய் வைத்திருந்த கடை, ஊர் மக்கள், அழகிய கிராமத்தை விட்டு வேலைக்காக நகரத்திற்கு வருகிறாள்.

நகர வாழ்க்கை அவளுக்கு நரக வாழ்க்கையாக மாறுகிறது, அவள் பணிபுரியும் இடத்தில் ஏற்படும் இடர்வுகள், சாவல்கள், இதற்கிடையில் தன்னில் மலரும் காதல், நட்பு வட்டாரங்கள் என்று தொடரும் அவள் வாழ்க்கை நகருகிறது.

இவ்வாறு நகரும் அவள் வாழ்வில் ஏற்பட்ட துயரம் என்ன? அவள் தந்தையின் தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை நுட்பமான அறிவினைக் கொண்டு எதிர்க்கொள்ளும் ஓர் பெண்ணின் சவாலான கதை பயணத்தில் நாமும் பயணிப்போமா… வாருங்கள்…

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580140906956
Pani Vizhum Malar Vanam!

Read more from Lakshmi Sudha

Related to Pani Vizhum Malar Vanam!

Related ebooks

Reviews for Pani Vizhum Malar Vanam!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pani Vizhum Malar Vanam! - Lakshmi Sudha

    https://www.pustaka.co.in

    பனி விழும் மலர் வனம்!

    Pani Vizhum Malar Vanam!

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    வானவில்

    படர்ந்து

    நீண்டு வளைந்து

    இருந்தது!

    பிறை நிலா

    எட்டிப் பார்த்தது

    வானில்!

    தூரத்தில் தெரிந்த

    ஜன்னல் பின்பு

    ஒரு நிலா முகம்

    தெரிந்தது எனக்கு!

    தோட்டத்தை ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள் ஹர்ஷினி. மாமரத்தில் ஒரு பெயர் தெரியாத பறவை கூடு கட்டிக் கொண்டிருந்தது.

    தன் அலகால் காய்ந்த குச்சிகளை எங்கிருந்தோ சேகரித்து வந்து அழகாக ஒரு ஓவல் ஷேப்பில் கூடு கட்டிய படி இருந்தது.

    காய்ந்த குச்சிகளால் கைதேர்ந்த கட்டடக் கலை நிபுணர் போல் அழகாக அது கட்டும் கூட்டைக் கவனித்துக் கொண்டு இருந்தாள் ஹர்ஷினி.

    யார் கற்றுத் தந்தார்கள், இதற்கு இப்படிப் பொறுமையாக ஒவ்வொரு குச்சியாக எடுத்து வந்து அழகாக ஒரு கூட்டைக் கட்டுவதற்கு?

    இயற்கை அதிசயமானது. குழந்தை பிறந்தவுடன் அழுவது, மீன் குஞ்சு நீந்துவது... இதெல்லாம் இயல்பாக,

    ‘ஜஸ்ட் லைக் தட்' எந்த முயற்சியும் இல்லாமல் தானாக நடக்கிறது.

    யோசனையில் மூழ்கியிருந்தவளைக் கலைத்தது அம்மாவின் குரல்.

    ஹர்ஷினி! இங்கே வா. யார் வந்திருக்கா பார்! என்று அம்மாவின் குரல் கேட்டது.

    இதோ வர்றேன் அம்மா! என்று சொல்லியபடியே ஹாலை நோக்கி நடந்தாள் ஹர்ஷினி.

    ஹாலில் அப்பாவின் நண்பர் டேவிட் இருந்தார். அவரைப் பார்த்தவுடன் ஏனோ துக்கம் ஒரு பந்து போல் அடி வயிற்றில் இருந்து எழுந்தது.

    தன்னைச் சமாளித்துக் கொண்டு முகத்தில் எதையும் வெளிக்காட்டாமல் அமைதியாக இருந்தாள் ஹர்ஷினி.

    ஹர்ஷினி! நான் பெங்களூர் போயிருந்தேன். இப்ப இன்னிக்குக் காலையிலதான் சென்னைக்கு வந்தேன். என்னால நம்பவே முடியலைம்மா...

    நல்லா இருந்தானேம்மா... சுறுசுறுப்பா, உற்சாகமா! அறுபது வயசு தானேம்மா ஆச்சு... சே! என அதற்கு மேல் அடக்க முடியாமல் அவர் குரல் உடைந்தது.

    "ம்... ம்... ஆமாம் அங்கிள்! எங்களுக்குமே இது பெரிய அதிர்ச்சிதான். எதுவுமே நம்ம கையில இல்லை. ஆனா அப்பாவிற்கு ஒரு கெட்ட பழக்கம்கூடக் கிடையாது.

    ஆர்மியிலிருந்தவர்... நல்ல கட்டுக்கோப்பான டிஸிப்பிளின் வாழ்க்கை. எந்த நோயும் இல்லை. ஒரு நாள்கூட அப்பா உடம்பு சரியில்லைன்னு படுத்ததா எனக்கு. ஞாபகம் இல்லை!" என்று ஹர்ஷினியும் கண்கலங்கினாள்.

    ஆமாம். ஆனா சமீப காலமா வைத்தி கொஞ்சம் டிஸ்டர்ப்டா இருந்தான். வாக்கிங் போறப்ப எப்பவும் இருக்கிற உற்சாகம் இல்லை.

    சட்டுன்னு ஏதோ யோசிக்க ஆரம்பிச்சிடுவான். எல்லாம் அந்த ஸூப்பர் மார்க்கெட்டால் வந்த வினைதான்! என்றார் டேவிட் சற்றே கோபமாக.

    அதைக் கேட்டவுடன் ஹர்ஷினியின் உடல் முழுவதும் கோபம் ஒரு புகை போல் பரவியது. அவள் கண்களிலும் ஒரு ஜ்வாலை போல் அது தெரிந்தது.

    ஆமாம் அங்கிள். அப்பாவுக்கு அது ஒரு பெரிய கவலைதான். மனதைப் போட்டு அரிச்சுக்கிட்டே இருந்திருக்கு. ஒருவேளை அதுதான் அவர் மாரடைப்புக்குக் காரணமான்னு தெரியலை! என்றாள் மெல்லிய குரலில்.

    ம்... ம்... சரி, ஹர்ஷினி! பேசுவதாலே ஏதும் ஆகப் போறது இல்லை. இனி நீங்க என்ன செய்யப் போறீங்க? எப்படியும் உங்க கடையை நீங்க வித்துடறதுதான் நல்லது.

    "தனியா இந்தக் கிராமத்தில் உங்க கடை மட்டும் இருந்தா ஓடறது கஷ்டம். இப்ப எல்லாம் சூப்பர் மார்க்கெட்டைத்தான் எல்லாரும் விரும்பறாங்க.

    காய், பழம், மளிகை, பிரெட், பால், தயிர் என எல்லா அத்தியாவசியப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைப்பதால் ஜனங்க எல்லாம் அங்கேதான் ஓடறாங்க!" என்று அங்கலாய்த்தார் டேவிட்.

    "ஆமாம் அண்ணா! கடையை வித்துட்டு நகர்ப்புறம் போகலாம்ன்னுதான் எனக்கும் விருப்பம். இவளுக்கும் கம்ப்யூட்டர் சம்பந்தமான வேலை அங்கே ஒண்ணு இருக்கு. அவ படிச்ச கம்ப்யூட்டர் கோர்ஸில் நல்ல மதிப்பெண் எடுத்ததால் அவளுக்கு இந்த வேலை கிடைச்சிருக்கு.

    இவளுக்குத்தான் இந்த இடத்தை விட்டுப் போக விருப்பம் இல்லை. நீங்க கொஞ்சம் சொல்லுங்க, அண்ணா!" என்று வாயைத் திறந்தாள் வேணி, ஹர்ஷினியின் அம்மா.

    அம்மா சொல்றது சரிதானேம்மா... நீ ஏன் தயங்கறே? உன் மனசில இருக்கிறதைத் தயங்காமச் சொல்லு. புது இடம், புது வேலை எல்லாம் மனசிற்கு நல்ல மாறுதலைத் தரும். யோசிச்சுப்பாரும்மா.

    வைத்திக்கு எப்பவும் உன் நினைப்புதான். நீ படிச்ச படிப்புக்குக் கடையில வேலை செய்யறது அவனுக்குத் துளிகூட இஷ்டம் இல்லை.

    இன்ஜினியரிங் படிச்சுட்டு நீ இங்க கிராமத்திலே கடையில அவனுக்கு ஒத்தாசையா இருக்கிறது ஏனோ மனசேகேட்கலை.

    அவனே இப்ப இல்லை! இனி நீ எதுக்கும்மா இங்க இருக்கணும்? என்னடா அங்கிள் நம்மளை இப்படித் துரத்தறதில குறியா இருக்காரேன்னு நினைக்காதே. என் மனசில தோணியதை நான் சொல்றேன், என்றார் டேவிட்.

    அங்கிள்! நீங்க சொல்றது எல்லாம் சரி. பட் அப்பாவின் ஆசை இந்த இடத்திலேயே இருக்கணும்ங்கிறதுதான்.

    இந்தக் கிராமத்தில் இருக்கிற ஒவ்வொருத்தருக்கும் அவரைப் பத்தி ரொம்ப நல்லாவே தெரியும். இந்த மண்மேல, இங்க இருக்கிறவங்க மேல அவருக்கு எவ்வளவு ஈடுபாடுன்னு எல்லாருக்கும் தெரியும்.

    அதனாலதான் தயக்கமா இருக்கு. அப்பாவோட ஆசையை மதிக்காமல், அவர் விருப்பத்திற்கு மாறாக அவர் இறந்தவுடன் சட்டுன்னு இந்த இடத்தை விட்டுப் போறது... ரொம்பத் தப்பாத் தெரியுது.

    சுயநலத்தோட எடுக்கிற முடிவு மாதிரி தெரியுது. அதான் குழப்பமாயிருக்கு... என்றாள் ஹர்ஷினி மெதுவாக.

    ம்... ம்... இருக்கும்போதே பெத்தவங்களைத் தவிக்க விடற பசங்க இருக்கிற காலத்தில... இந்த மாதிரி ஒரு பொண்ணு இருக்கிறது ரொம்ப அபூர்வம், ஹர்ஷினி.

    அதுதான் வைத்திக்கு எப்பவும் உன் மேல ரொம்ப அன்பு, பாசம். நீ இப்படி யோசிச்சுப் பார். வைத்திக்கு நீயோ, உன் அம்மாவோ கஷ்டப்படுவது கொஞ்சம்கூடப் பிடிக்காது.

    அவன் மறைவுக்குப் பிறகு நீயும், உன்னோட அம்மாவும் இங்கேயே இருந்து கஷ்டப்பட வேண்டுமா? நீ உன் படிப்புக்கு ஏற்ற வேலை பார்க்கணும்னு வைத்தி ரொம்ப ஆசைப்பட்டான்.

    அதை நிறைவேற்றுவது உன் கடமை இல்லையா? நீ இந்தக் கடையை விட்டுவிட்டு கம்ப்யூட்டரில் நல்ல வேலையில் சேர்ந்தால்தான் வைத்தியின் ஆன்மா சாந்த அடையும்! என்றார் டேவிட்.

    டேவிட் பேசுவதில் ரொம்ப திறமையானவர். கிராமத்தில் நடக்கும் வாய்ச் சண்டை, குடும்பப் பிரச்சனை இவற்றை எல்லாம் அழகாகப் பேசித் தீர்த்து வைப்பார்.

    இரண்டு தரப்பினருக்கான நியாய அநியாயத்தை எடுத்துச் சொல்லி, இது மாதிரி செய்யலாமே என ஒரு ரிகமென்டேஷனைத் தருவது அவரது ஸ்பெஷாலிடி.

    பேச்சு ஒரு அழகான ஆயுதம். குழந்தைகளுக்கு அழுவது எப்படி ஒரு ஆயுதமோ, அது போலவே பெரியவர்களுக்கு வளர்ந்த பின் பேச்சு ஒரு ஆயுதமாக இருக்கிறது.

    சிலர், அந்த ஆயுதத்தை நன்றாகப் பயன்படுத்துகிறார்கள். சிலர் எதிராளியைக் காயப்படுத்துகிறார்கள். காயப்பட்டவன் ஒதுங்கிப் போகலாம், இல்லை இன்னும் வன்மத்தோடு எதிராளியைத் தாக்கலாம்.

    இதில் டேவிட் எப்பவும் முதல் வகையைச் சார்ந்தவர். சட்டெனக் கோபம் வரும். அப்பாவுக்கும், டேவிட்டுக்கும் பத்து வருடத்திற்கு மேல் அழகான நட்புப் பூத்திருப்பதற்குக் காரணம் டேவிட்தான்.

    அவரின் பொறுமை, நிதானம், மென்மையான அணுகுமுறை எல்லாருக்கும் பிடிக்கும். ஹர்ஷினிக்கு இன்று அது நன்றாகவே புரிந்தது.

    என்னம்மா... ஏதோ யோசனை செய்யற மாதிரி தெரியுது. அங்கிளைத் திட்டறதுன்னா நேரடியா திட்டி விடு. மனசுக்குள்ள திட்டாதேம்மா... என்றார் லேசான புன்முறுவலோடு, டேவிட்.

    அச்சச்சோ... அங்கிள்! நீங்க சொல்றதுதான் எனக்குச் சரின்னுபடுது. அப்பா ஆசைப்பட்ட மாதிரியே நான் படிச்ச படிப்புக்குத் தகுந்த வேலை எனக்கு இப்ப கிடைச்சிருக்கு. பேசாமல் அந்த வேலையை ஒத்துக் கொள்றதுதான் சரி... என்றாள் ஹர்ஷினி.

    அண்ணா! உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை. இவ்வளவு நேரமா முரண்டு பிடிச்சிகிட்டு இருந்த இவ, இப்பத்தான் ஒழுங்கா நல்லபடியா யோசிச்சு நல்ல முடிவா எடுத்திருக்கா.

    இருங்க... ஒரு கப் காப்பி எடுத்துட்டு வர்றேன்! என்று சொல்லியபடியே உற்சாகமாகச் சமையல் அறை நோக்கிச் சென்றாள் வேணி.

    ம்... ம்... சர்க்கரை கொஞ்சம் கம்மியாவே போடு தங்கச்சி! என்றார் டேவிட் புன்முறுவலோடு."

    ஏன் அங்கிள்! உங்களுக்குச் சர்க்கரை நோய் இல்லையே... அப்புறம் எதற்குக் கட்டுப்பாடு? என்றாள் ஹர்ஷினி.

    ம்... ம்... இப்ப எந்த நோயும் இல்லை. பி.பி., சுகர், எல்லாம் நார்மலா இருக்கு. அதை அப்படியே மெயின்டெயின் செய்யணும். அதான் முன்ஜாக்கிரதையா இப்படி.

    சரி... உனக்கு எங்கே வேலை கிடைச்சிருக்கு? என்ன வேலை? சொல்லு... அங்கே போய்த் தங்கறதுக்கு ஏற்பாடு கம்பெனி செய்வாங்களா? இல்ல, நம்மதான் பார்த்துக்கணுமா? என்றார் டேவிட் அக்கறையாக.

    ம்... ம்... கிண்டி எஸ்டேட்டில்தான் வேலை, அங்கிள். ஹோம் நீட்ஸ் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் கேள்விப்பட்டிருப்பீங்களே... அங்கேதான் எனக்கு வேலை கிடைச்சிருக்கு.

    கம்ப்யூட்டர் பேகேஜ் மெயிண்டெயின் செய்வதுதான் என் வேலை. பத்துப் பேர் மொத்தம் இந்த டிபார்ட்மெண்டில்...

    தங்கறதுக்கு அவங்களே குவார்டர்ஸ் வசதி எல்லாம் கொடுக்கறாங்க. வேலை நல்லா இருக்கும்னு நம்பறேன்! என்றாள் ஹர்ஷினி.

    அண்ணா! காப்பி எடுத்துக்கோங்க. நீயும் குடிம்மா... என்றார் வேணி, ஒரு ட்ரேயில் காபிக் கோப்பைகளை ஏந்தியபடி.

    நன்றி தங்கச்சி! என்று சொல்லியபடியே காபியைக் குடிக்கத் தொடங்கினார்.

    ம்... ம்... கொஞ்ச நாள் வேலைக்குப் போகட்டும் இவ... அப்புறம் இருக்கவே இருக்கு கல்யாணம், குடும்பம்னு ஒரு வட்டம்... என்றாள் வேணி.

    அம்மா... போரடிக்காதே, ப்ளீஸ்! என்றாள் ஹர்ஷினி.

    "இந்தக் காலத்தில் பெண்கள் எல்லாம் எவ்வளவு முன்னேறி இருக்காங்க. முன்னாடி வெறும் டீச்சர், நர்ஸ் அப்படித்தான் பெண்கள் இருப்பாங்க. ஆனால் இப்ப எல்லா இடத்திலேயும் இருக்காங்க.

    கம்ப்யூட்டர், போலீஸ், டிரைவர் அதுவும் பஸ், டிரெயின், ஆட்டோ, விமானம்னு நினைச்சுப் பார்க்க முடியாத இடத்தை எல்லாம் ரொம்பத் திறமையா நிர்வகிக்கிறாங்க."

    ஆனால் பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம்தான் ஏனோ இந்தியாவில் குறைஞ்சுகிட்டே போகுது. இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா பெண் குழந்தைகளுக்கு ரொம்ப டிமாண்ட் ஆயிடும்! என்றார் டேவிட்.

    ஆனாலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையே, அங்கிள்! காந்தி சொன்னது போல் நடுராத்திரியில் ஒரு இளம் பெண் எப்பொழுது தனியாக நகை அலங்காரத் தோடு வீதியில் போக முடிகிறதோ, அப்பொழுதுதான் இந்தியாவிற்குச் சுதந்திரம் - பெண்களுக்குச் சுதந்திரம் எல்லாம் கிடைச்சதா அர்த்தம்! என்றாள் ஹர்ஷினி.

    ஆமாம்... நீ சொல்றது ரொம்பவே சரி. காலங்காலமாகப் பெண்கள் மேல் சுமத்தப்பட்டிருக்கற அடிமைத் தளையைச் சட்டுன்னு உடைச்சுகிட்டு வெளியே வர முடியாது.

    "ரொம்ப போராட வேண்டியிருக்கு பெண்கள். ஆண்கள் சிலர் உதவி புரியறாங்க, அதுக்கு. தன்னோட மனைவி, தன்னைவிடப் புத்திசாலியா, நல்ல வேலையில இருக்கிறதை நிறைய ஆண்கள் வரவேற்க ஆரம்பிச்சிட்டாங்க. இப்ப... காலம் மாறுது.

    அதுவே ஒரு நல்ல முன்னேற்றத்தின் ஆரம்பம்தான். ஆனால் கூண்டை விட்டு வெளியே வரும்போது ரொம்ப உயர உயர உடனே பறக்கணும்னு ஒரு ஆசை தோணும்.

    வெறி பிடிச்ச மாதிரிச் சில பெண்கள் அதான் சுதந்திரத்தைத் தவறாப் பயன்படுத்தறாங்க. ஆண்களுக்கு எல்லா விதத்திலும் சரிநிகர் நாங்கன்னு சிகரெட் பிடிக்கிறது, மது அருந்தறது இதிலெல்லாம் ஈடுபடறாங்க.

    அது தப்பாவே அவங்களுக்குத் தெரியலை. மேலை நாட்டின் கலாச்சாரம் மெதுவா இங்கேயும் பரவ ஆரம்பிச்சிருக்கு. இது நல்லது இல்லை..." என்றார் பெருமூச்சோடு டேவிட்.

    ம்... ம்... பெண்கள் மனதளவில் இன்னும் அதிக வலிமையோடு இருக்கணும் அங்கிள். இருந்தா இந்த மாதிரி பிரச்சனைகள் வராது.

    வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற தைரியம், மனப் பக்குவம் வேணும். சின்னப் பிள்ளை, கிரண்பேடி, இந்திராகாந்தி, தெரஸா என நிறைய எழுச்சிமிகு பெண்கள் இந்தியாவில்தான் இருந்திருக்காங்க. இன்னும் இருக்காங்க... என்றாள் ஹர்ஷினி.

    "ஆமாம் ஹர்ஷினி! தன்னம்பிக்கை, விடாமுயற்சி... இதெல்லாம் பெண்களுக்கு இருந்தா போதும். படிப்புகூட ரொம்ப முக்கியம் இல்லை.

    சாதிக்கணும்ங்கிற அந்த வெறி ஒரு தீ மாதிரி மனசுக்குள்ளே இருந்துகிட்டே இருக்கும். அந்த மாதிரி ஒரு வைராக்கியம் இருந்ததாலதான் ஒரு மூலையில் இருந்த சின்னப்பிள்ளையால் ஒரு புதிய உலகத்தை உருவாக்க முடிந்தது."

    ஒரு கிராமத்துக்கே அவரால வழி காட்ட முடிந்தது. சாதிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை! என்றார் டேவிட்.

    அதற்குள் அவர் கைபேசி சிணுங்கியது.

    மெர்ஸி! சொல்லு... நான் இங்கேதான் இருக்கேன். நம்ம ஹர்ஷினியோட பேசிக்கிட்டு இருக்கேன். வந்திடுவேன்... நீ அங்கேயே இரு! என்றார் டேவிட்.

    என்ன அங்கிள்! ஹோம் மினிஸ்ட்ரியிலிருந்து எமர் ஜென்ஸியா? என்றாள் ஹர்ஷினி குறும்பாக.

    ஆமாம்! அவளுக்குக் கண்ணுக்கு மருந்து விடணும். மெட்ராஸ்-ஐ அவளுக்கு. அதனாலதான் இங்கே வரலை. நான் கிளம்பறேன், தங்கச்சி!

    ஹர்ஷினி! பத்திரம். சீக்கிரமா சென்னைக்குப் போறதுக்கு ஒரு நல்ல நாளாப் பாருங்க. எனக்கு ஃபோன் பண்ணுங்க.

    பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்கிட்ட எனக்கு நல்ல பழக்கம். நல்லா வேலை செய்வாங்க. சாமான் எல்லாம் பத்திரமா ஏற்றி குவார்ட்டர்ஸில் நல்லா செட் செஞ்சிடுவாங்க! என்றார் டேவிட்.

    சரி அங்கிள்! என்றாள் ஹர்ஷினி, மெல்லிய குரலில்.

    2

    உன்னை

    முதல் முதலாகப்

    பார்த்த

    அந்த நதியோரத்தில்

    நான்!

    நதி சலனமில்லாமல்

    ஓடிக் கொண்டு இருக்கிறது!

    நிலா வானின்

    மடியில்

    தவழ்ந்தபடி

    அமுதைப்

    பொழிந்து கொண்டு இருக்கிறது!

    மலர்கள்

    அமுதைப் பருகியபடி

    செடி மேல்

    தலை சாய்ந்து தூங்குகின்றன!

    எதுவுமேமா

    மாறவில்லை!

    ஆனால் ரசிக்க இப்பொழுது

    என்னுடன் நீ இல்லை!

    ஹர்ஷினி அம்மாவுடன் சென்னைக்குக்

    Enjoying the preview?
    Page 1 of 1