Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kadambavana Kaadhal Devathai!
Kadambavana Kaadhal Devathai!
Kadambavana Kaadhal Devathai!
Ebook171 pages1 hour

Kadambavana Kaadhal Devathai!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆண் பெண் நட்பு அழகானது.
இது, அந்த நட்பு திருமணம் தாண்டியும் எப்படி நகர்ந்து உயிர்ப்பிக்கிறது என்பதை உணர்த்தும் கதை! உண்மையான  தோழியாக நண்பனின் குடும்ப துன்பத்தில் பங்கேற்று, சரியான வகையில் உதவி கரம் நீட்டுகிறாள்.

அவர்கள் இருவரும் தம் பிள்ளைகளுக்காக ஒரு முடிவு எடுக்கின்றனர். நாயகன் அதிவ் தாயின் விருப்பத்தை நிறைவேற்றினானா? நாயகி மெல்லினா நாயகன் மீது சில காரணத்தினால் ஊடல் கொள்கிறாள். அவன் அவளது மனதை மாற்ற முனைந்து வென்றானா? கதையைப் படித்தால் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். 

உங்கள் கருத்தை srigangaipriya@gmail.com என்னும் முகவரியில் சொல்லுங்கள்.
Languageதமிழ்
Release dateSep 6, 2020
ISBN6580136305785
Kadambavana Kaadhal Devathai!

Read more from Sri Gangaipriya

Related to Kadambavana Kaadhal Devathai!

Related ebooks

Reviews for Kadambavana Kaadhal Devathai!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kadambavana Kaadhal Devathai! - Sri Gangaipriya

    http://www.pustaka.co.in

    கடம்பவன காதல் தேவதை!

    Kadambavana Kaadhal Devathai!

    Author:

    ஸ்ரீ கங்கைபிரியா

    Sri Gangaipriya

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sri-gangaipriya

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    நேத்ரா அந்த கடம்ப மரத்தின் அருகே அமர்ந்திருந்தபோது மிகவும் உணர்வு மயமாக காணப்பட்டாள். உண்மையிலும் இது சாதாரண மரம் மட்டும் கிடையாதே! ஒரு நட்பிற்கான நெடுநாள் அடையாளமாக பரிசாக வழங்கப்பட்டது. தலையை உயர்த்தி அவள் கண்டபொழுது, மரம் முழுவதும் உருண்டை வடிவில் வெள்ளை நிறப் பூக்கள் பூத்து குலுங்கிக் கொண்டிருந்தன. அவைகள் ஏற்படுத்திய நறுமணத்தில் அவள் உடல் சிலிர்த்தது.

    கல்லூரி பயணத்தில் நேத்ராவிற்கு கிடைத்த அற்புதமான தோழன் ரஞ்சித். மிகவும் மனிதநேயம் கொண்ட ரஞ்சித் நேத்ராவிற்கு பல உதவிகள் புரிந்துள்ளான். அதே நட்போடு நேத்ராவின் திருமணத்திற்கு வந்தவன், இந்த கடம்ப செடியை அவளுக்கும் அவள் கணவனுக்கும் பரிசாய் அளித்தான்.

    நேத்ராவின் கணவன் கௌதமிற்கு ஆர்வமும் வியப்பும் ஏற்பட்டன.

    இவர்தான் ரஞ்சித்! நேத்ரா அறிமுகப்படுத்தினாள்.

    இருவரும் கை குலுக்கினர்.

    ரஞ்சித் செடியைப் பரிசாக நீட்ட கௌதம் இது என்ன செடி? எனக் கேட்டான் ஆர்வத்துடன்.

    இது கடம்பு செடி!

    இதை தர எதாவது காரணமிருக்கிறதா ரஞ்சித்?

    ம்! இருக்கு கௌதம்! இந்த கடம்ப மரம் மிகவும் பழமை வாய்ந்தது. நம்ம நாட்டோட பல மொழிகளிலும் இதை கடம்புதான் கூப்பிடுகிறார்கள். இதை ஒற்றுமைக்கு அடையாளமாய் சொல்வார்கள். நீங்கள் இருவரும் ஒற்றுமையாக வாழ இந்த கடம்பு எப்போதும் உங்களை வாழ்த்தட்டும் கௌதம்!

    பிரமாதம் ரஞ்சித்! மிக்க நன்றி!

    அதெல்லாம் ஒன்றும் கிடையாது கௌதம்! என்று நேத்ரா இடைபுகுந்தாள், சிறு குறும்புடன்.

    என்ன ஒண்ணும் கிடையாது நேத்ரா? ரஞ்சித் பரபரத்தான்.

    கௌதம்! ரஞ்சித்தின் பூர்வீகம் மதுரையையொட்டிய கிராமம்... அங்கே அவர்கள் தோட்டத்தில் நிறைய கடம்ப மரங்களை வளர்த்து வருகிறார்கள். அதில் ஒரு நாற்றை பிடுங்கி, அய்யா இங்கே கொண்டு வந்து நிற்கிறார்! அது தெரியாமல்...! என்று கேலிக் குரலில் நேத்ரா நிறுத்தினாள்.

    ஏதோ பெரிய வேடிக்கை நடந்ததைப் போல ரஞ்சித் சில கணங்கள் சிரித்து விட்டு பதில் அளிப்பதை கௌதம் ஆச்சரியமாய் இரசித்தான்.

    கந்தா! கடம்பா! நீ தான் காப்பாற்ற வேண்டும்! இந்த பெண்களின் திருவாய்கள் குறை கூறுவதற்காகவே படைக்கப்பட்டதோ? ஏன் நேத்ரா? அதற்காக தோட்டத்திலிருக்கும் அத்தனை மரங்களையும் பெயர்த்து எடுத்து வர நான் என்ன பீமனா அல்லது அனுமனா? நீயே சொல்? என்று அப்பாவி குரலில் கேட்க, மற்ற இருவரும் குபீரென சிரித்து விட்டனர்.

    பின்னே இது ஒன்று மட்டும் எதற்கு ரஞ்சித்? என்று நேத்ரா விடாமல் கேட்டால்.

    நேத்ரா! இது ஒன்றில் ஆயிரம் மரங்கள் அடங்கியுள்ளன! 'சிறியதில் பெரியதை காண வேண்டும்!' என்ற பழமொழியை நீ கேள்விப்பட்டது இல்லையா? உனக்கு ஒரு விசயம் தெரியுமா? ஒரு காலத்தில் மதுரை முழுவதுமே கடம்ப வனமாக தான் இருந்ததாம்! வனத்தை அழித்துதான் 'மதுரை' உருவானதாம்! எங்க மீனாட்சி அம்மன் கோவிலின் தல விருட்சமே இந்த 'கடம்ப மரம்' தான்! மீனாட்சி அம்மனை 'கடம்பவாசினி' என்ற பெயரிலும் சொல்வார்கள்! ஒருவேளை உங்கள் வீட்டுத் தோட்டத்தில் கடம்ப மரம் பெரியதாய் வளர்ந்து விட்டதென்று வை! அதை நீங்கள் வெட்ட நினைத்தாலும் புண்ணியம் தான்!

    என்ன புண்ணியமாம்? நேத்ரா கண்களை விரித்து கேட்டாள்.

    இந்த மரத்திலிருந்து கட்டில் தயாரித்துக் கொள்ளலாம்! அதில் படுத்தால் உடல் அசதி நீங்கி, நிம்மதியான உறக்கம் வரும்!

    இது சுத்தமான கதை...! ரஞ்... சித்! என்றாள் நம்பிக்கையில்லாமல்.

    இப்போது குரலை செறுமியபடி கௌதம், அவர் உண்மையைத்தான் சொல்கிறார் நேத்ரா! 'உடம்பை முறித்து கடம்பில் போடு' என்று ஒரு சொலவடையே உள்ளது! என்று கூறிவிட ரஞ்சித் சிரித்தான்.

    கௌதம்! நேத்ராவிற்கு அதெல்லாம் தெரியாது! ஏன்? கடம்ப மரத்திலிருந்து கரிக்கோல் கூட தயாரிக்கலாம் என்று சொல்லிப் பாருங்கள்! அவள் எந்த 'கரிகாலன்' என்று கேட்டு விழிப்பாள்! என்று இவன் சிரிக்காமல் பேசி முடிக்க மணமக்கள் இருவரும் கொள்ளென்று விழுந்து விழுந்து சிரித்தனர்.

    அது சமயம் ஒரு புகைப்படக் கலைஞர், அட! யாரப்பா இந்த பையன்? மேடையில் நின்று கொண்டு இப்படி பெண் மாப்பிள்ளையிடம் அரட்டையடித்துக் கொண்டிருக்கிறான்! அதோ வரிசையைப் பார்! என்று அதட்ட, ரஞ்சித்,

    அண்ணா...! மன்னிச்சுக்கோங்க... இதோ! இடத்தைக் காலி பண்ணிடறேன்...! என்று கும்பிடு போட்டபடி, தலையை அசைத்துவிட்டு நகர்ந்தான்.

    தன்னை மறந்து நேத்ரா இந்த பழைய நினைவுகளை யோசித்து சிரித்துக் கொண்டிருந்தாள். அதற்குள்ளாகவா இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்று ஆச்சரியப்பட்டுப் போனாள்.

    அவ்வப்போது இரு குடும்பங்களும் சந்தித்து கொண்டுதான் இருந்தன. ரஞ்சித்தின் மனைவி கனியுவதா, அவன் இரண்டு குழந்தைகள் என்று அவன் வீட்டில் அத்தனை பேர்களும் பழக இனிமையானவர்கள்.

    அவன் குடும்பம் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்து விட்டதால், அவர்களின் சந்திப்பு தடைபட்டு போய்விட்டிருந்தது. அது ஒரு பெரிய குறையாகவே நேத்ராவின் மனதில் இருந்தது. அவளிடத்தில் மிகுந்த அன்பு காட்டி வந்த உறவுகள் திடீரென விட்டுப் பிரிந்த மாதிரியான பிரம்மை கூட ஏற்பட்டது.

    இனி மீண்டும் அவர்களை எப்போது சந்திப்போம் என்று ஏங்கிக் கொண்டிருந்த நேத்ராவிற்கு நேற்றைய இரவுதான் ஒரு இன்ப அதிர்ச்சி கிடைத்தது. ரஞ்சித் அவளை அழைத்து பேசினான்.

    நேத்... ரா! எப்படி இருக்க? கௌதம், பையன் எல்லாம் நன்றாக இருக்கிறார்களா?

    ஓ! ரஞ்சித்! நாங்கள் நலமாக உள்ளோம்! நீ, கனி, மகன், மகள் எல்லோரும் எப்படி உள்ளீர்கள்?

    நேத்ரா! நன்றாக உள்ளோம். உங்களைப் பார்க்காதது மட்டும் தான் எனக்கு குறையாக உள்ளது!

    எனக்கும் அதே குறைதான் இருக்கிறது ரஞ்சித்!

    அதற்கு தான் அழைத்தேன்! ஒரு சந்தோஷமான தகவலைக் கூறவேண்டும்!

    என்... னது ரஞ்சித்? நேத்ரா பரபரத்தாள்.

    நாங்கள் மதுரை வரப்போகிறோம் நேத்ரா! நீ குடும்பத்தோடு வந்து எங்களுடன் தங்க வேண்டும். கௌதமிடம் நான் பேசிக் கொள்கிறேன். பையனுக்கு கல்லூரி அரைவருட தேர்வு முடிந்துவிட்டதா?

    அவனுக்கு இந்த மாதம் விடுமுறைதான் ரஞ்சித்! நான் தயார்!

    வேற..! தங்களின் வருகையால் 'கடம்பவனம்' புத்துணர்ச்சி அடையப் போகிறது! என்றான் ரஞ்சித் உற்சாக குரலில்.

    கடம்பவனமா?! என்னது ரஞ்சித்?

    மறந்து விட்டாயா? கல்யாணத்தன்று சொன்னேன்! அம்மா அறிவு ஜீவி நேத்ரா! புராணத்தில் மதுரைக்கு அதுதான் பெயர்!

    அட! ஆமாம்! ரஞ்சித் என்று நேத்ரா எதிர்முறையில் சிரித்தாள்.

    கடம்பவாசினி...! நீ தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும் இவளிடமிருந்து...! என்று ரஞ்சித் சோகமாய் கூற நேத்ரா மனம்விட்டு சிரித்தாள்.

    அந்த நினைவுகளில் மலர்ந்த முகத்தோடு இருந்தவளை, ஒரு வேகமான காலடி ஓசை களைத்தது.

    அ... திவ்...! என்றவளின் குரலில் உற்சாகம் கூடியிருந்தது.

    அந்த இளைஞனின் நீண்ட கரம் ஒன்று அவனது தாய் நேத்ராவின் தோளில் மென்மையாய் நீண்டு, விழுந்தது. நீண்ட புருவங்களில் அடர்த்தியான மயிர்கள் கருமையில் மின்னின. அதனடியில் இருந்த தீர்க்கமான கண்கள் கருணையின் இருப்பிடமாகவே திகழ்ந்தன. எடுப்பாய் விரிந்த நாசியின் கீழிருந்த உதடுகள் வசீகரமாய் திடீரென்று மலர இப்படியொரு பதின் பருவத்து இளைஞனை கண்கொண்டு காண கிடைப்பதுவே வரமாக தான் இருக்கக்கூடும். அப்படி இருக்க அவனைப் பெற்றவள் அந்த கணத்தில் எத்தனை உவகைக் கொண்டிருப்பாள்!

    அதன் வெளிப்படையாகவே அந்நிச்சையாக அவளது கரங்களில் ஒன்று அவனது அடர் கேசத்தை வாஞ்சையுடன் வருடியது.

    மா...! இங்கே என்ன பண்றீங்க? என்று அதிவ் மென்மையாய் வினவினான்.

    சும்மா தான் அதிவ்!

    இல்லை இல்லை மா! ஏதோ இருக்கு! நேத்ரா அம்மா தோட்டத்து மரப் பலகையில் உற்சாகமாய் அமர்ந்திருந்தால், ஏதாவது விசயம் உண்டு! என்றவன் அவளை ஆராய, நேத்ரா சிரித்தாள்.

    அதிவ்! நீ சரியான ஆள் தான்! பள்ளிக்கூடம் போகும் வரை அம்மா எது சொன்னாலும் நம்பிக் கொள்வாய். உனக்கு நினைவிருக்கிறதா? ஒருமுறை உன்னுடைய பிரியமான கப்பல் பொம்மை கீழே விழுந்து உடைந்து விட்டது! அப்போது நீ மிகவும் வருத்தப்பட்டாய்! அதை தடுப்பதற்கு நான் ஒரு காரணம் சொன்னேனே! என்று ஆர்வமாய் கேட்டாள்.

    லேசாய் சிரித்த அதிவ், தெரியும் மா! கடலில் இருந்து வந்த ஒரு துர்தேவதை என்னோடைய கப்பலை உடைத்திருப்பாள் என்று சொன்னீர்கள்! என்று சொன்னான்.

    ஹே! ஆமாம் அதிவ்! அதை நீயும் நம்பி விட்டாயே! இப்படி எத்தனை கதைகள் என்னால் இந்த செல்லத்துக்கு உருவாக்கப்பட்டு உள்ளது! என்றவள் கூறி சிரித்தாள்.

    தாயின் மலர்ச்சியை ரசித்தவன், மா! நான் ஒரு உண்மையைச் சொல்லட்டுமா? என்று நிறுத்தினான்.

    சிரிப்பதை நிறுத்தியவள், என்னது அதிவ்? என்று அவசரமாய் கேட்டாள்.

    மீசையில்லாத அந்த இளைஞனின் வதனத்தில் எஞ்சியிருந்த குழந்தை தன்மையை மீறி ஒரு பெரும் பணிவும் பக்குவமும் எட்டிப் பார்த்தன. அதை அப்படியே வெளிப்படுத்திய கரிசனமான குரலுடன், "மா! அதெல்லாம் சும்மா கதைகள் என்று எனக்கு அப்போதே தெரியும்! என் மனம் புண்படக் கூடாது என்றே நீங்கள் எனக்காகவே ஒவ்வொன்றை யோசித்து நடடந்து கொள்கிறீர்கள் என்பதை என்னால் எப்படி உணர்ந்து கொள்ளாமல் இருக்க முடியும் அ... ம்மா? நீங்கள் ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1