Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Chandra Pravaagam
Chandra Pravaagam
Chandra Pravaagam
Ebook196 pages1 hour

Chandra Pravaagam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எந்த எதிர்பார்ப்பும் இல்லாத லலிதாவின் நிச்சயம் நின்று விடுகிறது. அவள் துவண்டாளா? நிரஞ்சன் அவளது வாழ்வில் எப்படி நுழைந்தான்? அவனது கடந்த காலம் என்ன? லலிதாவின் அன்பு என்னும் சந்திர பிரவாகத்தில் நிரஞ்சனின் மனம் எப்படி நனைந்து, மாறியது? கதைக்குள் செல்லுங்கள்...

Languageதமிழ்
Release dateMay 6, 2023
ISBN6580136309818
Chandra Pravaagam

Read more from Sri Gangaipriya

Related to Chandra Pravaagam

Related ebooks

Reviews for Chandra Pravaagam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Chandra Pravaagam - Sri Gangaipriya

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    சந்திர பிரவாகம்

    Chandra Pravaagam

    Author :

    ஸ்ரீ கங்கைபிரியா

    Sri Gangaipriya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sri-gangaipriya

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 1

    மண் பானைகள் அங்கே அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சின்னதும் பெரியதுமாய் பல அளவுகள் அதில் அடங்கும். அதுபோக நிறையக் கைவினைப்பொருட்களும் வெட்கத்தோடு குளுகுளு தரையில் உட்கார்ந்திருந்தன.

    கடைக்காரி ஒரு வடக்கத்திய பெண்! அநேகமாக ராஜஸ்தானாக இருக்கக்கூடும். லலிதா அவளிடம் தனக்குத் தெரிந்த அரைகுறை ஹிந்தியில் எவ்வளவு என்று விசாரித்து, நான்கு நீளமான கழுத்து கொண்ட தண்ணீர் வடியாத சிறிய ரக பானைகளை வாங்கிக் கொண்டாள்.

    லலிதா வண்டியைக் கிளப்பிக் கொண்டு வீட்டிற்குச் சென்றாள். அங்கே மும்மரமான பேச்சு போய்க் கொண்டிருந்தது.

    தாய் வள்ளி,

    முந்தா நேத்து பெண் பார்த்துவிட்டு போன பூபாலனுக்கு லலிதாவ ரொம்ப பிடிச்சுடுச்சாம். இப்போதான் அவங்க அம்மா பார்வதி கூப்பிட்டு சொன்னாங்க. எப்போ நிச்சயம் வச்சுக்கலாம்னு கேக்கறாங்க? உடனேனாலும் பரவாலையாம்.

    என்று பெருமையாய் சொல்லிக் கொண்டிருந்தாள்.

    அப்படியா? ரொம்ப நல்லது. லலிதாவுக்கு நல்ல எடமா அமையணும்னு எத்தனை கடவுள்ட வேண்டி இருப்போம் வள்ளி! அதுக்கு பலன் வந்துடுச்சு.

    என்று கூறியபடி, அவள் தந்தை கோபால் நாட்காட்டியை எடுத்து உற்று உற்றுப் பார்த்தார். சில நொடிகளில் அவர் முகம் மலர்ந்தது.

    வள்ளி! அடுத்த வார ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த நாள்தான். அவங்களுக்கு சம்மதம்னா அன்னிக்கே நிச்சயத்த வச்சுடலாம்.

    இருவரின் கூற்றையும் வாசலில் நின்று கேட்ட லலிதாவிற்கு வெட்கமும் ஆனந்தமும் பொங்கிற்று. அவளைக் கவனித்த கோபால்,

    அடடே! லலிதாவே வந்துட்டா. என்று உற்சாகம் அடைந்தார்.

    நாங்க சொன்னத கேட்டீயா லலிதா? என்று அம்மா உற்சாகம் பொங்கக் கேட்டாள்.

    உம்! என்றவள் முகம் மலர சிரித்தாள்.

    நிச்சயதார்த்தம் இன்னும் ஒரு வாரத்துல வரப் போகுது. முன்னாடியே பள்ளிக்கூடத்துல விடுப்பு சொல்லிடு.

    சரிம்மா! சனிக்கிழமை விடுப்பு சொல்லிடறேன். சரிதானே?

    என்று மகிழ்ச்சி பொங்கும் குரலில் பேசினாள்.

    போதும் போதும் லலிதா! ஆனா எதுக்கும் வெள்ளிக்கிழமையும் சொல்லிடு.

    சரிம்மா!

    தேவையானது எல்லாம் பார்த்து ஏற்பாடு பண்ணிக்கோ லலிதா! நிச்சயத்த வீட்ல வைக்கறதா? மண்டபத்துல வைக்கறதானு தெரியலையேங்க.

    என்று வள்ளி சற்று யோசித்தாள்.

    ஆமா வள்ளி! நீ ஒரு தடவ போன் பண்ணி தேதிய பத்தியும் மத்த விவரத்த பத்தியும் உறுதியா பேசிடறயா?

    பேசிடறேங்க.

    வள்ளி தலையாட்டினாள்.

    ஆமா லலிதா! பையில என்ன?

    என்று மகளிடம் கேட்டாள்.

    இதுவாம்மா? பானை நாலு வாங்கினேன். என்று சொன்னபடி எடுத்துக் காட்டினாள்.

    எதுக்கும்மா?

    பள்ளிக்கூடத்துல ஒரு போட்டி வச்சேன்மா! அதுல சிறப்பா நாலு குழந்தைங்க பண்ணினாங்க. அவங்களுக்குப் பரிசு தந்து ஊக்கப்படுத்தணும் இல்லையா அம்மா?

    ஆமா ஊக்கம் ரொம்ப அவசியம்தான் லலிதா! இல்லாட்டி உற்சாகம் போயிடும்.

    ஆமா அம்மா!

    ஆனா அதுக்கு இந்தப் பானையா தரப் போற லலிதா?

    இத அப்படியே தர மாட்டேன்மா! அழகா சாயம் பூசி, கல் எல்லாம் ஒட்டி அலங்கரிச்சு அவங்க பேர் எழுதித் தருவேன்.

    அப்படியா? பண்ணு.

    ***

    தன் அறைக்கு வந்த லலிதா மென்மையான பருத்தி உடைக்கு மாறினாள். பின் ஊஞ்சலில் ஒரு புத்தகத்தோடு அமர்ந்து கொண்டாள்.

    பெண் பார்க்க வந்த அன்றைய நாள் அவளுக்கு நினைவு வந்தது. பூபாலன் சராசரியான உயரத்திலிருந்தான். மிகவும் அமைதியாகவே அமர்ந்திருந்தவன், லலிதாவிற்குத் தெரிந்த அளவு அங்கிருந்து செல்லும்வரை யாரிடமும் பேசவில்லை. மிகவும் வெள்ளை என்று சொல்ல முடியாவிட்டாலும் அவனை மாநிறத்தில் சேர்க்க முடியாது. வசீகரிக்கும் முகவெட்டு.

    லலிதா அவனது முகத்தை நேருக்கு நேராகச் சில நொடிகள் பார்த்தாள். அவளுக்குப் பிடித்திருந்தது. பக்கத்திலே அமர்ந்திருந்த அவனது பெற்றோர்கள் பார்வதி மற்றும் வீரப்பன், சகோதரி உதயா மற்றும் சகோதரன் மனோகரன் முதலானோர் அவளைக் குறுகுறுவெனப் பார்ப்பதாகப்பட, அவள் காபியைத் தந்ததும் திரும்பி நடந்தாள்.

    பெண்ணோட பேசணுமா? என்று கோபால் கேட்டார்.

    அதற்குப் பையனின் தாய், அதெல்லாம் அவசியம் இல்லைங்க. பூபாலன் கொஞ்சம் கூச்சப்படுவான். என்று கூறி நெளிந்தாள்.

    எங்களுக்குப் பெண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. வீட்ல போய் பையன்ட மேல கலந்து பேசிட்டு கூப்பிடறோம். என்று வீரப்பன் சொன்னார்.

    இதோ அன்று சென்றவர்கள் மூன்று நாட்கள் கழித்து, இன்று நல்ல தகவல் தந்துள்ளனர். லலிதாவின் ஊஞ்சல் வேகம் கூடியது. சிறிது நேரம் ஆடிவிட்டு, அவள் தன் அலைபேசியைக் கையில் எடுத்தாள். அவளுக்கு அவனிடம் பேச வேண்டும் போல இருந்தது. ஆனால் எண்களை யாரிடம் கேட்டுப் பெறுவது?

    எப்படியும் அடுத்த வார ஞாயிறுவரைப் பொறுக்க வேண்டியதுதான் என்று சொல்லி, மனதைத் தேற்றிக் கொண்டாள்.

    முகநூலில் அவனது பெயரைத் தட்டச்சு செய்து துழாவினாள். பல நபர்களின் பட்டியல் அதே பெயரில் நீளமாக விரிந்தது. சலித்தவள் அணைத்துவிட்டு, வெளியே வந்து விட்டாள்.

    நிச்சயத்திற்கு மாப்பிள்ளை வீட்டிலிருந்து சேலை வாங்கி தந்துவிடுவார்கள். அதற்கு முன் சிறிது நேரம், எந்த சேலையைக் கட்டிக் கொள்ளலாம்? என்று யோசித்தவளின் கவனம் அலமாரியின் மீது படர்ந்தது. அதைத் திறந்தவளின் கண்களில் வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சேலைகள் மீது பட்டன! அதிலும் பெரும்பாலான வரிசைகளில் பருத்தி புடவைகள் இருந்தன.

    பள்ளிக்குச் சேலைதான் உடுத்த வேண்டும். சுடிதாரும் கூட அணியலாம். அதில் அவள் மிகவும் சிறிய பெண்ணாகத் தெரிவாள். மாணவர்களைக் கண்டிக்க அந்தத் தோற்றம் கைகொடுக்காது என்பது அவள் எண்ணம். இது சின்ன உளவியல் காரணம்தான்! பொய்யாகக் கூட இருக்கலாம் என்றும் அவள் எண்ணுவது உண்டு.

    மேலே இருந்த சில பட்டுப்புடவைகளில் இராமர் நிற புடவை அவளுக்கு மிகவும் பிடிக்கும். அதையே நிச்சயத்தன்று கட்டிக் கொள்ளலாம் என்று மனதில் எண்ணி மகிழ்ந்து கொண்டாள்.

    ***

    வள்ளி பார்வதியை அழைத்துப் பேசினாள்.

    வர ஞாயிறு முகூர்த்த நாள்தான். அன்னிக்கே நிச்சயம் வச்சுக்கலாமாங்க? உங்க அபிப்பிராயம் என்ன?

    தாராளமா வச்சுக்கலாமே. கேப்பானேன்? எங்களுக்கு ரொம்ப சந்தோசம்.

    சரிங்க. மாப்பிள்ளைக்கிட்டேயும் ஒரு வார்த்த கேட்டுட்டு உறுதியா சொல்றீங்களா? எதுக்குனா மத்த விசயம் எ...ல்லாம் பாக்கணும் இல்ல?

    அதெல்லாம் கேக்க வேணாம். எங்க பூபாலன் நாங்க கிழிச்ச கோட்டத் தாண்ட மாட்டான்.

    சரிங்க. நிச்சயம் எங்க வைக்கலாம்னு சொல்லிட்டீங்கனா நல்லா இருக்கும்.

    மண்டப்பத்துலேயே வச்சுக்கலாமே! என்ன சொல்றீங்க?

    வச்சுக்கலாமே! அதுக்கென்ன?

    உம்! எங்க பக்கம் சொந்த அதிகம். இவரு அப்பாகூட பொறந்தவங்களே மொத்தம் அஞ்சு பேருனா பாருங்களேன். ஒருத்தர கூப்பிட்டு ஒருத்தர கூப்பிடலைனா சங்கடம் பாருங்க.

    சரிதாங்க. அப்போ வீடு வசதிப்படாது. நல்லதா மண்டபம் பாத்துடலாம். அப்ப சாப்பாடு மொத்தம் இருநூறு இலை சொல்லிடலாமா? என்று யோசனையுடன் கேட்டாள்.

    இருநூறா? முந்நூறு இருந்தா தேவலை.

    ஆகட்டும்ங்க.

    செலவு எல்லாம் பாதிப் பாதி போட்டுக்கலாம். ஒண்ணும் பிரச்சனை இல்லை. ஆனா எங்க ஆளுங்க எந்த குறையும் சொல்லாத மாதிரி சிறப்பா இருக்கணும்.

    கண்டிப்பா ஒரு குறையும் வராது. ரொம்ப சிறப்பா ஏற்பாடு பண்ணிடுறோம். சரிங்க அப்ப வச்சடடும்மா?

    இருங்க இருங்க.

    சொல்லுங்க?

    லலிதாவோட மோதிர விரல அளந்து அளவ எனக்கு அனுப்பி விடுங்க.

    ஓ! அதுக்கு என்ன? உடனே அனுப்பிடறேன்.

    உம்! நா எங்க ஆசாரிட்ட சொல்லி நல்லா அழகா மோதிரம் பண்ண சொல்லிடறேன்.

    கேட்டுக் கொண்டிருந்த வள்ளிக்குக் காதுகள் குளிர்ந்தன.

    அன்று முழுவதும் வள்ளி கணவனிடமும் மகளிடமும் இதையே சொல்லி மாய்ந்தாள்.

    மாப்பிள்ளையோட அம்மா நல்லா பேசறாங்க. மோதிரம் பண்ண ஏற்பாடு பண்றாங்களாம். சாப்பாடுதான் என்னென்ன வகை வைக்கலாம்னு கேக்க மறந்துட்டேன்.

    அதுக்கென்ன நாளைக்குக் கூப்பிட்டு கேட்டுக்கோ. இன்னும் ஒரு வாரம் இருக்கே. என்று சொல்லி, கோபால் சிரித்தார்.

    நீங்க சொல்றத பாத்தா ரொம்ப சாவகாசமா இருப்பீங்க போல. ஒரு வாரம் இப்படிங்கறதுக்குள்ள ஓடிடும். நாளைக்கே எல்லோரையும் கூப்பிட ஆரம்பிச்சுடலாம்.

    சரி சரி ஆரம்பிச்சுடலாம். ரொம்ப முக்கியமானவங்களுக்கு நேர்ல பாத்து சொல்லிடலாம். மத்தவங்களுக்கும் தூரத்துல இருக்கவங்களுக்கும் போன்ல அழைப்பு சொல்லிடலாம். சரிதானே வள்ளி?

    உம் சரிங்க! ஏங்க போன வாரம் ஊருக்கு வந்த உங்க அக்கா மணிமேகலை என்னலாம் சொன்னாங்க? லலிதாவுக்குக் குதிரை வயசு ஆகிடுச்சாம். இப்படியே ரெண்டு மூணு வருசமா பையன தேடிட்டு இருந்தா லலிதா மயிர் நரைச்சிடுமாம். இனி தாமாதிச்சா பல் போன கிழவன் எல்லாம் வந்துடுவாங்களாம். அதனால அவங்க மகன் குபேரனுக்கு லலிதாவ தரணுமாம். இருபத்தி ஏழு ஒரு பெரிய வயசா என்ன? பெண் வேணும்னா ஒழுங்கா நேரிடையா கேக்கணும். இது என்ன குதர்க்கமான பேச்சுங்கறேன்? சரியான விதத்துல கேட்டிருந்தா கூட யோசிச்சு இருப்பேன். இனி எக்காரணத்த கொண்டும் பெண் தர மாட்டேன். என்று சொல்லியவளுக்கு மூச்சு வாங்கியது.

    அடடே! இப்போ என்னத்துக்கு இந்தப் பேச்சு? அதான் மாப்பிள்ளையும் பாத்தாச்சு. நிச்சயமும் ஏற்பாடாகிடுச்சு. என்று கோபால் பதில் தந்தார்.

    உம் உம்! அதுவும் எவ்வளவு லட்சணமான பையனா நம்ம லலிதாவுக்குப் பாத்துட்டோம். முதல் அழைப்பு உங்க அக்காவுக்குத்தான். என்ற வள்ளியின் குரலில் பெருமை பொங்கியது.

    அழைச்சுடலாம். அழைச்சுடலாம் வள்ளி!

    அப்புறம் எங்க திருவானைக்காவல் சித்திய கண்டிப்பா அழைக்கணும். விசயத்த கேள்விப்பட்டா பூரிச்சு போயிடுவாங்க.

    வள்ளியின் குரல் உருகியது.

    அவங்களுக்கு ரொம்ப வயசு ஆகிடுச்சே வள்ளி! வர முடியுமா?

    எனக்கு அம்மா அப்பா இல்ல. எல்லோரும் போய் சேந்துட்டாங்க. இப்போ அம்மா ஸ்தானத்துல சித்திதான் இருங்காங்க. அவங்க ஆசீர்வாதம் குழந்தைக்கு வேணாமாங்க? என்று விட்டுக் கணவன் முகம் பார்த்தாள். அவர் அமைதியாய் யோசித்தார். வள்ளி கரகரப்பான குரலில் தொடர்ந்தாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1