Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maya Maan
Maya Maan
Maya Maan
Ebook71 pages24 minutes

Maya Maan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இது பரபரப்பான குற்றப் புதினம்.
'திகில்' மட்டுமே இந்த நாவலின் நோக்கமல்ல!
எந்த குற்றப் புதினத்தை எடுத்தாலும் அதில் புத்திசாலித்தனம், உணர்வுகளின் தாக்கம், சுயநலம் இருக்கும்.
பெண், பணம், பேராசை... இந்த மூன்றும்தானே குற்றங்களுக்கு வேர். அது இங்கே உணர்வுகள் கலந்து சொல்லப்பட்டிருக்கிறது. படியுங்கள்; ரசியுங்கள்!
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580100606556
Maya Maan

Read more from Devibala

Related to Maya Maan

Related ebooks

Reviews for Maya Maan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maya Maan - Devibala

    https://www.pustaka.co.in

    மாய மான்

    Maya Maan

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    என்னுரை

    இது பரபரப்பான குற்றப் புதினம்.

    'திகில்' மட்டுமே இந்த நாவலின் நோக்கமல்ல!

    எந்த குற்றப் புதினத்தை எடுத்தாலும் அதில் புத்திசாலித்தனம், உணர்வுகளின் தாக்கம், சுயநலம் இருக்கும்.

    பெண், பணம், பேராசை... இந்த மூன்றும்தானே குற்றங்களுக்கு வேர். அது இங்கே உணர்வுகள் கலந்து சொல்லப்பட்டிருக்கிறது. படியுங்கள்; ரசியுங்கள்!

    அன்புடன்...

    தேவிபாலா

    1

    சுனிதா கொஞ்சம் ஆத்திரத்துடன் நிமிர்ந்தாள்.

    என்னை என்ன செய்யச் சொல்றீங்க? நான் எந்திரமா? எனக்கும் மனித உணர்வுகள் இருக்காதா? 'நம்பர் ஒன்' நடிகையாக இருந்ததில் பெருமைப்பட்டேன். இப்ப நொந்து போய்க் கிடக்கேன்!

    அண்ணன் ஈஸ்வர் அருகில் வந்தான்.

    கோவப்படாதே சுனி. உன் நடிப்பு தனி என்றாலும் உன்னோட அழகுக்காக விளம்பரத்துல உன்னை உபயோகப்படுத்த நாலு பேர் வரத்தான் செய்வாங்க. எல்லாம் கண்ணியமான விளம்பரம். ஒத்துக்கறதுல என்ன தப்பு? வா... வெளியே வா!

    சுனி எரிச்சலுடன் எழுந்தாள்.

    சிரிச்சிக்கிட்டே வா. நீ நடிகையானதே இந்த முத்துப் பல் சிரிப்புலதான்!

    சுனிதா வெளிப்பட்டாள்.

    ஒரு பிரபல பட்டுப்புடவை நிறுவனம் வந்திருந்தது.

    அந்த வருடத்திய தீபாவளி பட்டுச் சேலை விளம்பரத்துக்கு சுனிதா நடித்துத் தர வேண்டும் என்றது.

    அவள் கேட்ட சம்பளத்தைத் தர தயாராக இருந்தது.

    சம்பளம் ஈஸ்வர்தான் பேசினான்.

    அவர்களே பயப்படும் அளவுக்கு மிகப் பெரிய தொகை.

    அவர்கள் 'செக்' எழுதித் தந்துவிட்டு, 'ஷூட்டிங்' தேதி வாங்கிக்கொண்டு சென்றார்கள்.

    அடுத்தது ஒரு 'ஷாம்பு கம்பெனி'.

    சுனிதா ‘நம்பர் ஒன்' நடிகையாகி ஒரு மாதம்தான் போயிருந்தது. அவளை பத்திரிகை, 'டிவி' என்று சகல தளங்களிலும் பிரமாதமாக விளம்பரப்படுத்திவிட்டான் ஈஸ்வர்.

    இப்போது அவளை வைத்துப் பணம் பண்ணிக்கொண்டிருக்கிறான்.

    முக்கியமான மூன்று நிறுவனங்களுக்கு மட்டும் தேதி தந்துவிட்டு சுனிதா உள்ளே வந்தாள்.

    போதும் அண்ணா!

    அதை நான் சொல்லணும். எதுக்காக இத்தனை கஷ்டப்படுறேன்? நிறைய பணம் சேர்த்து உன்னை 'ஜாம் ஜாம்'ன்னு கல்யாணம் செஞ்சு தர வேண்டாமா?

    அவள் பேசவில்லை!

    தாய், தகப்பனை இழந்து வளர்ந்த அவளை இந்த அளவுக்கு ஆளாக்கியது ஈஸ்வர்தான். இன்னும் கல்யாணம்கூடச் செய்துகொள்ளவில்லை. பத்து வயது மூத்தவன் வேறு.

    அவனை எதிர்க்கவும் முடியவில்லை.

    'நம்பர் ஒன்' நடிகை ஆனது முதல் அவளை

    Enjoying the preview?
    Page 1 of 1