Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vasantham Malarnthathu
Vasantham Malarnthathu
Vasantham Malarnthathu
Ebook101 pages1 hour

Vasantham Malarnthathu

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By V.Thamilzhagan
Languageதமிழ்
Release dateMay 15, 2019
ISBN9781043466572
Vasantham Malarnthathu

Read more from V.Thamilzhagan

Related authors

Related to Vasantham Malarnthathu

Related ebooks

Related categories

Reviews for Vasantham Malarnthathu

Rating: 4 out of 5 stars
4/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vasantham Malarnthathu - V.Thamilzhagan

    15

    1

    ‘முக்கிய நபர்களை அழைத்தும் கூட, கூட்டம் சேர்ந்துவிட்டது. ராகவியின் மாளிகை திறப்பு விழாவல்லவா!’

    இசையமைப்பாளர் கீதன் வந்திருந்தார். பிரபல நட்சத்திரங்கள் குழுமியிருந்தனர். திரையுலகின் முக்கிய பிரமுகர்களை வரவேற்று உபசரிப்பதற்குள் மிகவும் சிரமப்பட்டுப் போனாள்.

    ‘எல்லோரும் வந்துவிட்டனர். கவியை மட்டும் காணவில்லை. எல்லா வகையிலும் பார்த்துப் பார்த்து காரியம் செய்தவன் இந்த நேரத்தில் இல்லை. ஏன் தாமதமோ?’ என தவித்தாள்.

    ராகவி! என குரல் கேட்டது. திரும்பினாள். காந்தன் அவளை அழைத்தான். காந்தன் திரையுலகின் பெரிய நடிகன். பலர் நடுவே அமர்ந்திருந்தான்.

    என்ன சார்? என்றாள்.

    உங்கள் பாட்டிற்கு நாங்கள் வாயைத் திறக்கிறோம். உண்மையான உங்கள் வாய்சை ஒருசேர நாங்கள் பார்த்ததில்லை. பாடகியின் மனைவிழா. பாட்டு இல்லாட்டா எப்படி? ஒரு பாட்டு பாடுங்க

    - காந்தன் சொல்ல, அருகிலிருந்த அனைவரும்,

    ஆமா, பாடுங்க என்றனர், கோரசாய்.

    அவள் வாசலை நோக்கினாள்.

    அதோ... அங்கே வருவது? கவியேதான்...

    அலை புரளும் கடல்போல அவள் மனம் மகிழ்வில் முங்கிப்புரண்டது. தென்றல் தழுவும் மலரைப்போல பார்வை தவழ வருகிறான்.

    அவள் மனம் துள்ளுகிறது. உற்சாகம் பொங்குகிறது. ஏதோ தேவமலர். நெஞ்சுக்குள் சுகந்தம் பூத்து மலர... ராகவி பாடினாள்.

    ‘இல்லம் ஒரு கோவில்

    இறைவன் வரும் வேளை - என்

    உள்ளம் ஒரு தீபம்

    உறவைத்தரும் நாளை!

    என் வாழ்க்கை உன்னாலே சோலை - நான்

    ஏகாந்தம் எதிர்பார்க்கும் ஏழை...!’

    அவளின் ஆலாபனை அனைவரையும் தாலாட்டியது. எங்கோ மிதக்கவிட்டது. ‘கவி’ மெய்மறந்தான். பாடல் முடிவில் கரவொலியின் அலை.

    அனைவரும் வாழ்த்தி, பாராட்டி புகழ்ந்து விடை பெற்றனர்.

    வீடு தனிமைப் பட்டது.

    ஓடிவந்து கரம்பற்றி அழைத்துப் போகிறாள் ராகவி... சட்டென வெட்கப்பட்டவளாய் ‘கவி’யின் கையை விடுவித்தாள்.

    வராமப் போய்டுவீங்களோன்னு பயந்தேன். ஏன் தாமதம் கவி?

    நடிகை மௌனிகாவை ஒரு அரசியல் தலைவர் லவ் மேரேஜ் பண்ணிட்டாராம். போன் வந்தது. ‘ஆள் இல்லை. ஓடு ஓடு’ என்றார். ஓடினேன். தாமதமாயிற்று என்றான். ‘ஸாரி’ சொன்னான். தொழில் நிர்பந்தம் அவளுக்குப் புரிந்தது.

    அதற்காக இல்லை கவி. இங்கு வந்த எல்லோரிடமும் பர்சனலாய். தனித்தனியே அறிமுகப்படுத்த நினைத்தேன். இவர்களை அழைத்ததே அதற்காகத்தான் என்றாள்.

    அவன் சிரித்தான்.

    இங்கு வந்த ஒவ்வொருவருக்கும் என்னைத் தெரியும் ராகவி. பேட்டியின் போது அறிமுகம். ஒருவர்க்கு பல முகம். எல்லாம் பொய். மனிதர்கள் பொய். புன்னகை பொய். சிரிப்பு பொய். சமயத்திற்கு தக்கபடி மனிதன் தன் முகத்தில் வேஷத்தைப் பூட்டிக் கொள்கிறான் என்பதுதான் நிஜம்... பட்டினியோடு அணுகியபோது இவர்கள் யாரும் மனிதர்களாகவே இல்லை. யாரோ ஒருவர் கூட இன்முகத்துடன் தென்படவில்லை. இவர்களின் அறிமுகம் யாருக்கு வேண்டும்? உணர்ச்சி வசப்பட்டவனாய் கூறினான்.

    சாந்தம்மா வந்தாள்.

    வாங்க தம்பி என்று அழைத்தாள்.

    ராகவியும், கவியும் எதிர் எதிரே அமர்ந்து கொண்டனர்.

    அதுதான் காரணமா?

    அதுமட்டும் இல்லை. பல பொதுவர்கள் இருக்கின்ற இடத்தில் எனக்கு மிக முக்கியம் கொடுப்பதோ, உரிமை நாடுவதோ உனக்கல்லவா பாதிப்பை தரும்?

    ஐம் ஸாரி கவி. நான் இந்த கோணத்தில் பார்க்கவே இல்லை.

    அது போகட்டும். சற்று முன் நீ பாடிய பாடல் அமுதம். அடி மனதில் எவ்வளவு நெகிழ்ப்பு தெரியுமா?

    நீங்கள் எழுகிய பாடல்தானே கவி? பாடல் உங்களுடையது. ராகக் குரல் என்னுடையது. பாட்டும் ராகமும் சேரும்பொழுது எவ்வளவு சுகம். மகிழ்ச்சி, இன்பம் எழுகிறது பார்த்தீர்களா? என்றாள்.

    விழியகலப் பார்த்தாள். அதன் வாசல் வழியே வழிந்து வழிந்து நுழையும் வசந்தத்தை காண, இதயக் கதவுகளை திறந்து வைத்தாள். கள் நுரையாய் மனம் பொங்கியது. இதயத்தின் சுவர்த்தட்டில் பொதிகைப் பூக்கள். அவனும் அதைப் புரியாமலில்லை. எனினும்,

    உணர்வுகளின் உயிர்ப்புகள் தான் ராகம், ராகவி. பல்லவியோ சரணமோ பாடலுக்கு அலங்காரம். ஆனால், அது ராகத்திற்கு உகந்ததாக இருப்பது அவசியமல்லவா? என்றான். பிறகு,

    தான் கொண்டு வந்த எளிய பரிசு ஒன்றை அவளிடம் நீட்டினான். அதை வாங்கிக் கொள்ளும் பொழுது விரல் நுனி உரசியது. அதன் வாசலில் இதயம் துளும்பும் இனிமையான கனவுகள் அரும்பு விரித்து ஆசை மலர்ந்தது. காதல் கனிந்தது. கணங்களின் சந்தம் கோடி உள்ளம் கிளர்ந்து ஸ்தம்பிக்க...

    எவ்வளவோ உயர்ந்த பரிசுகள் வந்திருக்கும் ராகவி. என் எளிய பரிசு இதுதான் என்று கூறிய போதுதான் சட்டென உயிர்ப்புற்றாள்.

    பிரித்துப் பார்த்தாள். அது ஒரு படம். வானின் சிவப்புக் கதிர் கடலில் படர்ந்திருந்தது. கடல் அலை ஆவேசமாய் எழும்பியது. மலை முகடாய் எழுந்த அலை உச்சியில் ஒரு ஓடம். அதில் ஓர் மனிதக் கரு நிழல். கையில் துடுப்பு. மிக ரம்யமான கலைப்படம். அதன் கீழே –

    ‘நம் எண்ணங்களே

    நம்மை வழி நடத்துகிறது

    எனவே, அது

    ஏகாந்தமானதாக இருக்கட்டும்’

    - என்று, கவியின் பொன்மொழி ஒன்று எழுதப்பட்டிருந்தது.

    அற்புதம் கவி. வெரி ஃபன்ட்டாஸ்டிக். ஒருபடம். ஒருபொன் மொழி. வாழ்க்கை தத்துவத்தை இதைவிட யாராலும் சொல்ல முடியாது. எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு கவி...

    எதிர்நீச்சல் போடும் மனிதனின் உள்ளம், வாழ்க்கைவெற்றியின் - பிரதிபலிப்பை எவ்வளவு யதார்த்தமாய்

    Enjoying the preview?
    Page 1 of 1