Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vayalorak Kooyile
Vayalorak Kooyile
Vayalorak Kooyile
Ebook202 pages1 hour

Vayalorak Kooyile

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By V.Thamilzhagan
Languageதமிழ்
Release dateMay 15, 2019
ISBN9781043466589
Vayalorak Kooyile

Read more from V.Thamilzhagan

Related to Vayalorak Kooyile

Related ebooks

Related categories

Reviews for Vayalorak Kooyile

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vayalorak Kooyile - V.Thamilzhagan

    30

    1. சிலம்பெடுத்த பெண்!

    பால் நிறைந்து நுரை ததும்பியது. பசுவை ஒரு அதட்டல் போட்டு சொம்பை அலுங்காமல் எடுத்து நீட்டினாள் மயிலி.

    வாங்கிக் கொண்டார் வேலு. மனம் பொங்கியது. மகிழ்ச்சி பூத்தது. ஒவ்வொரு விடியற்காலையிலும் மனசு இந்த வாய்ப்பிற்கு ஏங்கும்.

    பால்போல் செல்வம் பெத்து பெருவாழ்வு வாழனும்மா! மகராசியா நீ வாழனும்! என்று வாழ்த்தினார் மகளை.

    அது அவர் வழக்கம். ஆரம்பத்தில் எவ்வளவோ கஷ்டப்பட்டவர். மகள் மயிலி பிறந்த நேரம் யோகம்! ஐந்து ஏக்கர் ஏரியோர நிலம் வாங்கினார். நாளடைவில் மாடு கன்று என்று பல வகையிலும் பெருகிவிட்டது.

    எதையும் மகள் கையால் துவங்கினால் ராசி என நினைத்தார். எனவே மகளைப் பால் கறக்க வைத்து, நிறைந்த சொம்பை பெற்றுக்கொண்டு நிறைவோடு நாட்களைத் துவங்குவது வாடிக்கையாயிற்று...

    நிறைஞ்ச மனசோட நீங்க வாழ்த்துற இந்த நாட்கள் எனக்கு எப்பவும் கிடைச்சா... அதுவே எனக்குப் போதும்பா... அதுதான் என் பாக்யம்

    என்று காலில் சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கினாள் மயிலி, இன்று அவள் பிறந்தநாள். எட்டு பட்டியும் வாய் பிளக்குமளவு கொண்டாட நினைத்தார். அவள்தான் மறுத்துவிட்டாள்.

    என்னடா, இது! எழுந்திரு என்று செல்ல மகளை எழ வைத்துவிட்டு பால் சொம்பை உள்ளே எடுத்துப்போக,

    பசுவைப் பிடித்துக்கொண்டு மயிலி பக்கத்திலிருந்த ஏரிக்குப் போனாள்.

    ஏரி.

    கடல் போலப் பரந்திருந்தது. நீருக்குள் பசுவை நிற்கவைத்திருந்தாள். நீரள்ளித் தெளித்துக் கழுவினாள் மயிலி.

    பனி, இளங்காலையின் குளிர் இரண்டிலும் உடம்பு சிலுசிலுத்தது. ஏரிக்குப் பின்னாலிருந்த மலையிலிருந்து பொழுது எட்டிப்பார்த்தது.

    கதிர்கள் தண்ணீரைப் பொன்மயமாக்கின. இருளும் வெளிச்சமும் கலந்திருந்தது. குமிழ் உயர்ந்த ஊட்டமான பசுவும், முன்புறப் பாவாடையை உயர்த்திச் செருகியிருந்த மயிலியும் இப்பொழுது உயிரோவியமாய் அழகு சிந்தினார்கள். பறவைகள் கதம்பக் குரல் எழுப்பின,

    ஏரியின் பின்னால் கிழக்கிலும் தெற்கிலும் மலைகள், இதன் இடதுபுறம் குமரகிரி தண்டாயுதபாணி கோவில். பழனியைப் போலவே இருந்தது. இங்கிருந்து பார்க்க சாம்பிராணிப் புகை போட்டமாதிரி பனியின் நடுவே எழிலாய் தெரிந்தது.

    இந்த குமரகிரிப் பேட்டையில் ஏழாயிரம் மக்கள் வசிக்கிறார்கள். விவசாயம் முக்கிய தொழில், எனவே, இந்த ஏரி முக்கிய தேவையாக இருந்தது,

    பசுவிற்கு மஞ்சள் குங்குமம் வைத்து மயிலி கரைக்கு அழைத்து வந்தாள். மலைப்பாம்பு மாதிரி தார்சாலை வளைந்து நெளிந்திருந்தது. மேற்குப்புறம் பனைமரங்கள் சாரிசாரியாய் நின்றன. அதற்குக் கீழுள்ள பகுதிகள் முழுக்க பச்சை விரிந்திருந்தது. அனைத்தும் நெல் வயல்கள்.

    இந்த எழில் மிகு கிராமம் சேலம் நகரின் கடைசி பகுதியில் இருந்தது.

    பசு அவளைப் பின்தொடர மயிலி முன் நடந்தாள்.

    யக்கோவ்... மயிலிக்கோவ்... என்று குரல் வந்தது. திரும்பினாள். சித்தாயி ஓடிவந்தாள்.

    அவள் அனாதை. பேச்சு இழுத்துப் பேசுவாள், பார்க்க பைத்தியம் போலிருப்பாள். யார் எந்த வேலையைச் சொன்னாலும் கேட்டுவிட்டு அங்கே சாப்பிட்டுவிடுவாள். அதுதான் அவள் ஜீவனம்.

    என்ன சித்தாயி?

    மீனு... அங்க... ஏலம்... என்று மூச்சுமுட்ட வார்த்தைகளைத் துண்டுதுண்டாய்ச் சொன்னாள்.

    சட்டென புரிந்தது. இவர்கள் இல்லாமலேயே ஏரி மீனை ஒட்டு மொத்தக் குத்தகைக்கு விடுகிறார்கள்...

    சித்தாயி! மாட்டைப் பிடிச்சிட்டுப்போ. நான் வர்றேன் என்று கூறிவிட்டு, ஏரிக்கரையின் கடைசிக் கோடிக்கு ஓடினாள்.

    "நிறுத்துங்க" என்றாள் மயிலி...

    கூட்டம் முழுக்க திரும்பிப் பார்த்தது.

    மீன் குத்தகை ஏலம் விடனும்னா துடும்பு போடனும், இல்லே பஞ்சாயத்துக்காரங்க நோட்டீசு போடனும். எதுவுமே இல்லாம யாரோ ஒருத்தனுக்காக திடீர்னு ஏலம் விட்டா எப்படி?

    தலைவர் விதிர்த்துப் போனார். ஏலத்தை சீக்கிரம் முடிக்கத் துரிதப்படுத்திய வேம்பனும், அவனது தூரத்து உறவினன் வேலனும் கொதித்தனர்.

    வேம்பன்போல ஒரு உறவு இருப்பதே வேலனுக்கு தற்சமயம்தான் தெரியும், வேலை தேடி தோற்றுப்போன நிலையில் இங்கே வந்து விட்டான். அவன் எப்படிப் பட்டவன் என்பது போகப்போகத்தானே தெரியும்!

    இதபார்! ஏழாயிரத்துக்கு ஏலம் முடியப்போகுது. எகிறிப்பேசற வேலை எங்கிட்டே வேணாம். போயிடு. என்று முன் வந்தான் வேலன்.

    வேஷ்டிச் சட்டையில் உடல் பெருத்திருக்க, தலைப்பாகை கட்டியிருந்தான், மாநிறம், சிறிய சாந்தமான கண்கள், அளவான மீசை. எஜமானனின் சொந்தக்காரன் என்னும் அதிகாரத்தில் தனக்கும் பங்குண்டு என்பதுபோல நின்றான். அவன் மீதிருந்த பார்வையை விலக்கியவள்,

    அதையேதான் நானும் சொல்றேன். ஏலத்தை மறுபடியும் ஆரம்பியுங்க, வருஷா வருஷம் நீங்களே குத்தகைக்கு எடுக்க இது ஒண்ணும் பாரம்பரியச் சொத்து இல்லே என்றாள் கொதிப்போடு.

    த. பொட்டச்சியாச்சேன்னு பொறுத்துப் போனா சும்மா துள்றியே? மரியாதையா இங்கிருந்து போயிடு, இல்லே... என்றபடி வேலியிலிருந்த மூங்கில் கம்பை உருவிக்கொண்டு வந்தான் வேலன்!

    கூட்டத்தில் உட்கார்ந்திருந்த ஒரு பெரியவரின் மூங்கில் தடியை எடுத்துக்கொண்டாள் மயிலி. மாறாப்பை இழுத்து செருகிக்கொண்டு,

    மிரட்டலுக்குப் பயந்துபோக நான் ஒண்ணும் மிருகமில்லே, நீயா நானான்னு நேருக்கு நேர் சந்திக்கலாம் வா... என்று ஆம்பிள்ளைக்குச் சமமாய் தடியைச் சுழற்றிக்கொண்டு நின்றாள்.

    இது கௌரவப் பிரச்சினை. எனவே இருவரும் துள்ளிக்கொண்டு புறப்பட்டனர்.

    மயிலியின் துணிச்சலையும் வீரத்தையும் கண்டு வியக்காதவர்கள் யாரும் இல்லை. மயிலி தன் தாத்தாவிடம் தடிவரிசை பழகியிருந்தாள். யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

    என்றாலும் சண்டை போடுவது ஆணும் ஆணுமாக இருந்தால் பிரச்சினை இல்லை. ஆணும் பெண்ணும் என்கிறபோது... அனைவருக்குள்ளும் ஒரு திகில் பரவத்தான் செய்தது.

    மயிலி- வேலன் இருவரது கம்புகளும் டனாங் டனாங் என மோதிக்கொண்டன...

    2. அமைதி பிறந்த நேரம்...

    பெண்ணுக்கு வீரம் வேண்டும். ஆனால் அதுவே வீண் பகையை வளர்த்துவிடக்கூடாது.

    பதற்றத்தோடு ஓடிவந்தார் வேலு. மகள் மயிலியை இழுத்து நிறுத்தினார். வேம்பன் வேலனை இழுத்து நிறுத்தினார். இருவரும் திமிறிக்கொண்டு நின்றனர்.

    ஊர் பிரமுகர்களில் வேம்பனும் ஒருவர். அவருக்கும் நிலபுலன் உண்டு. மதிப்பு மரியாதை உண்டு. பஞ்சாயத்து கூடும் பொழுது இவரும் தீர்ப்பு சொல்வார். இவர் ஏலம் எடுக்கிறார் என்று தெரிந்தும் இவள் இந்தப் போடு போடுகிறாளே என்று சிலர் வியந்தனர்.

    வேலா...! நில்லு. அவசரப்படாதே... அந்த காலத்திலேருந்தே நானு, வேலு எல்லாம் ஒன்னா இருந்தவங்க. இந்த காசுக்கும், மீனுக்கும் ஆசப்பட்டு... கசந்துக்கலாமா?

    எனக்கேட்டு நிறுத்தினார் வேம்பன்.

    உண்மைதான். பக்கம் பக்கத்தில் தோட்டமிருந்தும் இதுவரை எந்தவித பிரச்சினையும் ஏற்பட்டதில்லை.

    ஊர்ப் பெரியவங்க முன்னாலே இப்படியெல்லாம் துடுக்குத்தனமா நடந்துக்கக் கூடாது மயிலி. பொறு. நியாயம் இன்னதுன்னு சொல்லலாம். உணர்ந்தா மேற்கொண்டு பேசலாம். மொதல்ல மன்னிப்பு கேளு என்றார் வேலு.

    எதையும் அன்பால் சாதிக்க நினைக்கும் ரகம் அவர். அடாவடி அறவே பிடிக்காது.

    நான் மன்னிப்பு கேட்கனும்னா, மொதல்லே கம்பெடுத்த வேலனை மன்னிப்பு கேட்கச் சொல்லுங்கப்பா என்றாள் மயிலி.

    வேலன் உர்ரென முறைத்தான். வேம்பன் பார்வையால் அடக்கினார்!

    அடடா... இப்ப என்ன நடந்து போச்சு வேலு? மன்னிப்பு கின்னிப்புன்னுட்டு! ரெண்டு பேரும் எளரத்தம். அவசரப்பட்டுட்டாக. நாமதான் சேர்ந்துட்டமே. நமக்குள்ள பேசி முடிப்பமா...?

    - என முற்றுப்புள்ளியும் தொடர்ச்சியும் கலந்த தொனியில் நிறுத்த, வேலு தொடர்ந்து மௌனித்தார்.

    போன வருஷமே இருவருக்குள்ளும் போட்டி வந்தது. வேம்பன் விரும்பி கேட்கவே வேலு விட்டுக் கொடுத்து விட்டார்.

    அடுத்த வருஷம் உங்களுக்குத்தான் என்று இதே பஞ்சாயத்து போர்டு தலைவர் முன்னால்தான் சொன்னார். ஆசை யாரை விட்டது? இந்த ஆண்டும் போட்டிக்கு வந்துவிட்டார்.

    வளவளன்னு பேசிட்டிருக்காதீங்க. நியாயத்தைப் பாருங்க! நம்ம வேலு... பள்ளிக்கூடம் கட்ட நிலம் வாங்கி தந்திருக்காரு. கோவில் கமிட்டியை அரசாங்கம் எடுக்கறதுக்கு முன்னமே கோபுரம் கட்ட நிதி உதவி செய்திருக்காரு. இப்போ கல்யாணமண்டபம் கட்டித்தர முடிவு செய்திருக்காரு. லாபம் எந்த வழியிலே வந்தாலும் அத பொது நன்மைக்கு ஒதுக்குகிற வேலுவுக்குதான் இந்த வருஷ குத்தகையை விடனும்னு நான் சொல்றேன் என்னங்கறீங்க?

    என்று உண்மை பூர்வமாகப் பேசியபடி தீர்மானத்தையும் அதேசமயம் அங்கீகாரத்தையும் எதிர்பார்த்தபடி கேட்டு நி றுத்தினார் பொது நபர் ஒருவர்

    "செய்ததை சொல்றதைவிட, செய்யப்போறதைப் பத்திப் பேசறது உசிதம். நம்ம குமரகிரி கோவில்லே நிறைய மண்டபம் இருக்கு. ஆனாலும் வசதி இல்லாத ஏழைங்க வாடகை தரமுடியாமே அரசமரத்தடி புள்ளையார்கிட்டே உட்கார வச்சு தாலி கட்டிட்டு போறாங்க.

    வயலோரக்குயிலே சொந்த செலவிலே ஒரு பொது மண்டபம் கட்டிவிட்டா எல்லா ஏழைபாழைகளுக்கும் உபயோகமா இருக்கும் அதனாலே, இந்த வருஷ குத்தகைத் தொகையோட, கிடைக்கிற லாபத்தையும் அப்படியே மண்டபம் கட்ட தரப்போறதா முடிவு செஞ்சிருக்கேன்."

    என வேலு பேசப்பேச கூட்டம் மகிழ்ச்சிக்குரல் எழுப்பியது. அவரது நல்ல செய்கைகளை வாழ்த்தியது.

    நல்லது செய்ற மவராசனுக்குத்தான் இந்த வருஷம் குத்தகை தரணும் நடக்க முடியாத பெரியவர் உட்பட பலர் குரல் கொடுத்தனர்.

    நீ வரலையே. உனக்கு விருப்பமில்லையோ என்னமோன்னுதான் நான் ஏலம்பேச வந்தேன். மத்தபடி தப்பா நினைச்சுக்காதே வேலு. மறு ஏலமே தேவையில்லை. பணத்தை கட்டுங்க. என்றார் வேம்பன்.

    வேலன் புரியாமையோடு நின்றான். அவனை அணுகிய வேலு,

    ஆம்பிள்ளைப் பிள்ளை இல்லன்னு செல்லம் குடுத்து வளத்திட்டேன். கொஞ்சம் துடுக்குத்தனம் அதிகமா போச்சு. வருத்தப்பட்டுக்காதே... என்றார். சிரித்துக் கொண்டான்.

    பிரச்சினை முடிந்த மாதிரி அனைவரும் கலையத்துவங்கினர்.

    ஒரு மாலைப் பொழுது வந்தது. ஏரிகரை பனை மரங்களில் மரம் ஏறும் தொழிலாளர்கள் பதனீர் இறக்குவதற்காக பனைமரத்தில் ஏறிக்கொண்டிருந்தார்கள்.

    வருத்தப்பட்டுக்காதே, கோவப்பட்டுக்காதேன்னு சொல்லிட்டு சும்மா அனுப்பலாம்னு பார்க்கிறியா வேலு? மொதோ வியாபாரமே நான்தான் பண்ணுவேன். மொத மீனு எனக்குத்தான் தரணும். வெறுங்கைய வீசிக்கிட்டுப் போவேன்னு பாத்தியா?

    சிரித்தபடி உரிமையோடு வேம்பன் கேட்க, அட புடிச்சித்தந்தா போகுது? என்றார் வேலு.

    பரிசல்போடும் கூலி ஆளை கூப்பிட்டார். வலைபோடச் சொன்னார்.

    ஒரே சுழற்று சுழற்றி வலையை இழுத்துவர, அவுரி மீன்கள் துள்ளிக்கொண்டு வந்தன...

    மகள் கையில் முதன் முதலில் பணம் வாங்கிக் கொண்டார்.

    அஞ்சு கிலோ அவுரி குடுங்க என்று வாடிக்கையாளர் தோரணையில் மயிலி கேட்க,

    கிலோ இருவத்தெட்டுக்குக் குறைச்சலா அஞ்சி பைசான்னாலும் தரமாட்டேன், இஷ்டமா? என்று அதிகார அபிநயத்தோடு வேலு பேச,

    அப்பா, மகளின் வியாபாரத்தைப் பார்த்து கூடியிருந்தவர்கள் சிரித்தார்கள்.

    சரி, சரி... எங்களையும் கொஞ்சம் கவனிச்சா தேவலை... என்று வேம்பன் சிரிப்பினிடையே குறுக்கிட

    இரண்டு கிலோ அவுரியை உயிரோடு எடைபோட்டு மகள் கையால் தரவைத்தார் வேலு. வேலன் அதை வாங்கிக் கொண்டான்.

    அப்பொழுது...

    ஒரு ஆபத்தைச் சுமந்துகொண்டு சித்தாயி அவர்களை

    Enjoying the preview?
    Page 1 of 1