Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sevanthi Sittu
Sevanthi Sittu
Sevanthi Sittu
Ebook185 pages1 hour

Sevanthi Sittu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By V.Thamilzhagan
Languageதமிழ்
Release dateMay 15, 2019
ISBN9781043466572
Sevanthi Sittu

Read more from V.Thamilzhagan

Related to Sevanthi Sittu

Related ebooks

Related categories

Reviews for Sevanthi Sittu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sevanthi Sittu - V.Thamilzhagan

    25

    1. ஆலயமணி!

    பாரியூர் அம்மன் கோவிலின் மணியோசை ஒலித்தது. புறாக்கள் விழித்தன. கோபுரத்தின் மேலிருந்து குபீரென பறந்தன. குதூகலமாய் குரல் கொடுத்தன.

    கோபுரத்தை நிமிர்ந்து நோக்கியபடி உள்ளே நுழைந்தார் கென்டியார். நல்ல தோற்றம். நரைக்க தொடங்கியிருந்தது. சால்வை போர்த்தியிருந்தார்.

    அவரைத் தொடர்ந்து வனந்தாயி, அவருடைய தங்கை. தங்கை மகள் சிட்டு. அவள் வெறும் சிட்டு அல்ல; பருவச்சிட்டு. அழகுச்சிட்டு.

    மூவரும் சந்நிதியில் நின்றனர். நாயணம் ஒலித்தது. அதிகாலை நேரம். அமைதியான சூழல். அதில் நாயண ஓசை மட்டும் காற்றில் மிதந்து வந்து... நெஞ்சை சிலிர்க்க வைத்தது.

    நெறைஞ்ச வெளைச்சலை கொடுத்தே. நிம்மதிய கொடுத்தே. நெரந்தரமா எல்லோரையும் சந்தோஷப்படுத்தணும் தாயே... எல்லாம் உன் சித்தம்... என கரம் குவித்தார் கென்டியார்.

    பாரியூர் அம்மனின் ஆற்றல் அவருக்குத் தெரியும். அவர் மட்டுமல்ல. அந்த வாகரையே அம்மனைத் தொழுது விட்டுதான் உழவு தொடங்கும். அறுவடை செய்யும். இன்று கென்டியார் குடும்பத்து வயலில் அறுவடை. நேற்றே சேலத்துக்கு ஆளனுப்பியாயிற்று. அறுவடைக்கு ஆட்கள் வந்து கொண்டிருப்பார்கள். அதற்குள் பூஜையை முடித்துக் கொள்ளும் பொருட்டுதான் கோவிலுக்கு வந்தனர். தீபத்தட்டுடன் வந்தார் பூசாரி. தீபக் கொழுந்தை கண்ணில் ஒற்றிக் கொண்டு பிரசாதம் பெற்றுக் கொண்டு மூவரும் வெளியே வந்தனர்.

    மார்கழிக் குளிரில் பற்கள் வெட வெடத்தன. காலை இருள் இன்னும் விலகவில்லை. சிலுசிலுவென ஈரக்காற்று.

    அண்ணா... - சேலைத் தலைப்பை இழுத்து போர்த்தியபடி அழைத்தாள் வனந்தாயி.

    என்ன வனந்தாயி?

    பனி மழையா ஊத்துது. கொட்டுற பனியிலேயும் கும்மிருட்டிலேயும் கள்ளிப்பட்டியிலிருந்து இங்க வரோணுமா?

    ஏந்தாயி அப்படி கேக்குற?

    இல்ல, ஒமக்கே ஒடம்புக்கு சொவமில்லே. ஆளைவுட்டா அறுவடை பண்ணிட்டு போறாக. நீங்க எதுக்கு ஒடம்பை கெடுத்துக்கணும்னு தாங் கேட்டேன்.

    எம் மச்சினன் அதாங் உன் வீட்டுக்காரன் இருக்குறவரைக்கும் முதல் பிடி நெல்லை அறுத்து தொடங்கி வைப்பான். கைராசிக்காரன். உன்னையும், சிட்டுவையும் விட்டுட்டுதான் போய் சேர்ந்துட்டானே. ஒரு நாள் பனிக்கெல்லாம் அசையுற ஒடம்பில்லே இது. ஆள் வரட்டும். அறுவடைய தொடங்கிட்டு புறப்படுறேன் என்றார் கென்டியார்.

    அந்த காலத்தில் கென்டிக்கு போனார். அவ்வப்போது இங்கு வந்தார். குடும்பமும் அங்கு இருந்தது. நிலபுலன் வாங்கினார். நல்ல மாதிரியாய் பிழைத்தார். மீண்டும் தமிழ்நாட்டிற்கே திரும்பும்படி பல நிகழ்ச்சிகள் நடந்தன வந்தார். அங்கே சொத்துக்களை விற்றுவிட்டு இங்கே வயல் பிடித்தார். நெல் நட்டார். அமோகமாய் விளைந்தது. கென்டிக்கு போய் திரும்பியதால் கென்டியார் என்ற பட்டப்பெயர் அவருக்கு நிலைத்தது. அம்மன் கோவிலின் பின்புறமிருந்து கள்ளிப்பட்டி வரையில் அண்ணன் - தங்கை இருவரின் வயல்களும் படர்ந்திருந்தன. வயலுக்கு பாதுகாப்பு இருக்குமென்றுதான் அம்மன் கோவிலருகே வனந்தாயும், கள்ளிப்பட்டியில் கென்டியாருமாக குடியிருந்தனர்.

    இவர்கள் பேசியபடி நடக்க, சிட்டு அமைதியாக வந்தாள். கென்டியாரின் ரேக்லா வண்டி நின்றிருந்தது. இளங்காளை. கூர்கொம்புடன் கழுத்தை அசைக்க... சலங்கை... கலகலத்தன. மாட்டைத் தட்டிக் கொடுத்து, திரும்பி பார்த்த போது...

    மண் சாலையில் லாரி வந்து நின்றது. அதிலிருந்து ஆட்கள். ஆண்களும் பெண்களுமாய் இறங்கினர். ஆரவாரமும் மகிழ்ச்சியுமாய் அவர்களை நெருங்கினார்.

    கூட்டத்தின் முன் வந்த ஒருவன் கென்டியாரை நெருங்கி. ஐயா, வணக்கம். நாங்கள்லாம் சேலத்திலிருந்து வர்றோமுங்க. அறுவடைக்கு வந்தவங்க. வலுவுல வேலைய ஆரம்பிச்சிடுறோம்..." என்றான்.

    பேசியவன் செங்கான். இளைஞன், ரேக்லா காளையை போலிருந்தான். கரு கருவென்ற முடியும், கட்டான உடலும் பொலிவு கூட்டின.

    "எல்லாரும் வாங்க. வந்ததுல சந்தோசம். ஒங்களத்தான் எதிர்பார்த்திட்டிருந்தோம். எவ்வளவு பேர் வந்திருக்கீங்க!

    ஆணும் பொண்ணுமா சேர்த்து நூத்தம்பது எரணூறு பேர் இருப்போங்க...

    அவர்களை அழைத்து போவது போல் கென்டியார், வனந்தாயி, சிட்டு மூவரும் முன்னால் நடக்க... கூட்டம் பின் தொடர்ந்து.

    சலசலப்புடன் கண்ணாடியாய் தண்ணீர் ஒடியது. எட்டிய தூரம் வரை பசுமை, பால் வெள்ளமாய் பனித்தூறல், குமரிப் பெண்களை போல் குனிந்து நின்ற நெற்கதிர்கள்.

    வழக்கப்படி, பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வரப்பு மீது வைத்து... அதில் அருகம்புல் சொருகி மஞ்சள் குங்குமம் தூவி... எலுமிச்சை அறுத்து சிவப்புபூசி காவு கொடுத்து பூசை முடிந்தது.

    கண்டகத்திற்கு ஆறு வள்ளம் எனும் ஒப்பந்தத்திற்கு அறுவடை ஆட்கள் சம்மதிக்க... முதல்பிடி நெல் கதிரை அறுத்து வைத்து கென்டியார் தொடங்கி வைக்க...

    ஆட்கள் வயலில் இறங்கினர். அதுதான் தாமதம். எங்கிருந்தோ ஆட்கள், திபுதிபுவென ஓடிவந்தனர். ஒவ்வொருவர் கையிலும் கம்பு, அரிவாள்.

    "டாய்... எவனாவது வயலுக்குள்ள காலை வைச்சீங்க... மவனுங்களா... தொலைச்சிப்புடுவேந்தொலைச்சு... உறுமியபடி வந்தான் கரடுமுரடான ஒருவன்.

    அறுவடையாட்கள் அனைவரும் திடுக்கிட்டனர். பீதியுடன் பார்த்தனர்.

    2.புது நாத்து புது நெல்லு

    பேசியவன் கருடமுத்து, கறுப்பு நிறம். பாறை உடம்பு. பெரிய மீசை. அவனுக்குப் பக்கபலமாய் அடியாட்கள். சிவப்பு விழியை உருட்டிக்காட்டி வாங்களா வெளியே... என உறுமினான். கடூரமான குரலில்,

    அவனைப் பார்த்ததும் கென்டியாருக்கு புரிந்துபோயிற்று. அவன் கோட்டையனின் ஆள்.

    கோட்டையனும் அவரைப் போல காடுகரை உள்ளவன். வசதியானவன். பாரியூரில் பெரிய மாளிகை அவனதுதான். அவ்வப்பொழுது பிறருக்கு தொல்லை கொடுப்பதும், துயரப்படுத்துவதும்தான் அவனுக்குப் பொழுதுபோக்கு இப்பொழுது கருடமுத்துவை தூண்டிவிட்டிருக்கிறான்.

    சிட்டு தன் தாயின் பின்புறம் மறைந்து நின்றாள். காலைப்பனி உருகிக் கொண்டிருந்தது. தகதகவென கீழ்வானம் சிவந்தது.

    இந்தாப்பா... ஒழைக்கணும்னு நெனச்சி தெம்போட வந்திருக்கோம். இப்படி நீ கம்போட வந்து காலவெக்காதீங்கன்ன... என்ன அர்த்தம்? பொழுது வந்திருச்சி. பொழப்ப பாக்கணும். போப்பா! என்ற செங்கான் வயல் ஆட்களைப்பார்த்து... உம் வேலையை கவனிங்க... என்றான்,

    அறுவடை தொடங்கியது.

    என்ன பாத்துகிட்டு நிக்கிறீங்க... அடிங்கடா அந்த நாய்கள… கருடமுத்து கத்தினான்.

    "அடியாட்கள் வயலுக்குள் பாய்ந்தனர். அறுவடை ஆட்களும் எதிர்த்து நின்றனர். இடைபுகுந்தான் செங்கான்.

    நிறுத்துங்க... என குரல் கொடுக்க அதற்குக்கட்டுப்பட்டதுபோல், அவனுடன் லாரியில் வந்திறங்கிய ஆட்கள் அப்படியே நின்றனர்.

    இந்த பாருங்க... ஊருவுட்டு ஊருவந்திருக்கோம். ஒங்களுக்கும் எங்களுக்கும் எந்த விதத்துலயும் பாத்தியமில்லே. பரிட்சயமில்லை. வீந்தகராறுக்கு ஏன் வர்ரீங்க? என்றான்.

    டாய்... அதையேதான் நானுஞ் சொல்லுதேன். உங்களுக்கும் இந்த ஊருக்கும் எந்தவித பாத்தியமுமில்ல. ஒண்ட வந்த சனங்க. ஒடிபோயிருங்க. இல்லே... வெத நெல்லு கொண்டாற அனுப்பிருவோம்... ஆமா...

    ஒண்டவந்த சனங்கதான். ஆனா, ஒடம்ப வளக்கறவங்க இல்லை. ஒழைச்சி திங்கறவங்க. எங்களை வேலை செய்ய வேணாங்க நீங்க யாரு?

    இந்த ஊருக்காரங்க

    இந்த நெலத்துக்காரரு இல்லியே? காட்டுக்காரரு கூப்பிட்டாக. கதிரறுக்க வந்திருக்கோம். எங்களை வெரட்டி அனுப்பறதுல அப்படி என்ன லாவசேவம்?

    எங்க லாவ சேவத்தப்பத்தி உங்கட்ட சொல்ல வேண்டிய அவசியமில்லே. மொதல்லே வயலவிட்டு மேல ஏறு

    சொல்றவங்க சொல்லாம, நாங்க யாரும் அசையமாட்டம். பொழப்ப கெடுக்காதே, அந்தப்பக்கம்... போப்பா...

    செங்கான் சொல்லிக் கொண்டிருக்க கருடமுத்து தடியை ஓங்கினான். செங்கானின் தலைமீது இறங்க, தன் கழுத்திலிருந்தி சிவப்புத்துண்டை உருவி, அதை தடுத்தான். தடுத்தபடியே காலை வீசி. பக்கத்திலிருந்தவனின் கம்பைப் பிடுங்கினான்.

    வரப்பிலும், வயலிலுமாக காலடி போட்டு வீடுகட்டி கம்பை வீசினான்., செங்கான். விளைந்த நெற்கதிர்கள் காலடியில் மிதிபட்டுக்கொட்டின.

    இருதரப்பு ஆட்களும் ஆவலோடு, பார்த்துக்கொண்டிருந்தனர். காற்றை கிழித்துக் கொண்டு சுழலும், கம்பையும், அதைச் சுழற்றும் கைலாவகத்தையும் ஆச்சரியத்துடன் பார்த்தாள் சிட்டு. கோழி இறகிலிருந்து எட்டிப்பார்க்கும் கோழிக்குஞ்சுபோல, தாயின் முதுகுப்பக்கமிருந்து எட்டிப் பார்த்தாள்.

    அதுவரையில் திக் பிரம்மையுடன் நின்றிருந்த கென்டியார் எலே கருடமுத்து...! என்றார் கர்ச்சனை குரல்.

    கம்பு சுழற்றியவன் ஓங்கியது ஓங்கியபடி அப்படியே திரும்பினான்

    என்ன?

    மொதல்ல வயலவிட்டு மேல ஏறு... வேட்டியை மடித்துக்கட்டியபடி அருகே வந்தார்.

    எதுக்கு?

    எதுக்குன்னு தெரிஞ்சிக்கறதுக்கு

    என்ன தெரிஞ்சிக்கறதுக்கு?

    நீ வந்திருக்கறது அகராதிக்குன்னு தெரிஞ்சிக்கிறதுக்கு

    நான் வந்தது அகராதியா. நீங்க பண்றது அகராதியா?

    டாய்... என்ன அகராதியடா கண்டுகிட்டே? யாருகிட்டே பேசறோம்கறத ஞாபகம் வச்சுக்க. சுத்துப்பட்டி கிராமத்துல... இந்த கென்டியான எதுத்தவன் எவனுமில்லே... வுட்டுப்புடிச்சிப் பார்க்கலான்னு கமயா நின்னா...வூடுகட்டி விளையாடுறியா? நீயா நானா பார்க்கலாம். வாடா இப்படி... வனந்தாயி... எடுத்தாபுள்ள... அந்த தடிய...

    எகிறியபடி கருடமுத்துவை நோக்கிப் போனார். வனந்தாயி ஒடிவந்தாள்.

    அண்ணா...! வாணாம். கென்டியான் அறுக்க தொடங்கினான். கெட்டதா நடந்து போச்சுன்னு நாலுபேரு பேசுவாக. நம்மத்தாவுல இப்படி நடக்கவேணாம். அவனேதான் சூரப்புலியா இருந்துட்டுப் போவட்டும் என்று அண்ணனை அடக்கின வனந்தாயி.

    எலே, கருடமுத்து இப்ப ஒனக்கு என்னாவேணும்? ஏன் இப்படி அகராதிக்கு நிக்குற?

    அப்படிக்கேளு உத்தசனம் உள்ளூர் சனமெல்லாம் இங்க இருக்கப்ப... அசலூர்ல இருக்கவங்க அறுவடக்கி வந்திருக்கிறது எந்த ஊரு நியாயம்?

    உள்ளவுட மாட்டம்னு சொல்லல. உத்த கூலிய குடுக்க மாட்டம்னுதான் சொன்னீங்க. கூலி கட்டுப்படியாகல கூட்டிப்போட்டுக்கொடுங்கன்னா... - கூலி ஆளுங்கள கூட்டங்கூட்டமா கூட்டி வந்திருக்கீங்க... என்று வயலில் நின்றவர்களைக் காட்டிப் பேசினான் கருடமுத்து.

    அவன் சொன்னதுபோல உள்ளூர்காரர்களை கூப்பிடாமல் இல்லை. வனந்தாயிதான் கூப்பிட்டாள். வந்தார்கள். கூலி பேசினர். நெல் அறுவடை செய்து, அடித்து, தூற்றி அளந்து... நெல்லத்தாளை குத்தாரி போடுவதுவரை சேர்த்து பேசினார்கள்.

    நெல்லை வள்ளத்தில் அளப்பார்கள். நாற்பது வள்ளம் கொண்டது ஒரு கண்டகம். ஒரு வள்ளம் என்பது நான்கு படி நெல்.

    நாற்பது வள்ளம் நெல் அளந்ததும், நான்கு வள்ளம் நெல்லை கூலியாய் அளந்து போடுவார்கள். பத்து கண்டம் நெல்லானால், ஒரு கண்டம் கூலியாய் கிடைக்கும். எவ்வளவு பேர் வேலை செய்கிறார்களோ அவர்கள் அதை சமமாய் பிரித்துக் கொள்வார்கள்.

    உள்ளூர் ஆட்களிடம் இதில்தான் முரண்பாடு.

    கண்டகத்திற்கு நான்கு வள்ளம் நெல்தான் தருவோம். அதுதான் நடப்பு, அதுக்கு மேல ஒரு மணி நெல் கூடத்தரமாட்டம், ஆமா... என்றாள், வனந்தாயி.

    "அதெல்லாம்... அப்பவே போச்சு தாயி...! காடு ஒரெடத்தில களம் ஒரெடத்துல இருக்குது. நாலுவள்ளம் நெல்லு பத்தாது. கண்டகத்துக்கு ஆறுவள்ளம் தர்றதானா சொல்லு. இல்லியா இந்த போவம் அறுப்புக்கு வர எங்களால்

    Enjoying the preview?
    Page 1 of 1