Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சமாதி ஆக சம்மதி..!
சமாதி ஆக சம்மதி..!
சமாதி ஆக சம்மதி..!
Ebook76 pages24 minutes

சமாதி ஆக சம்மதி..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ட்யூப்லைட் வெளிச்சத்தில் சிகரெட் புகை திட்டுத்திட்டாய் - அறை பூராவும் பரவியிருக்க - அந்த புகை மண்டலத்தின் நடுவே 'ரம்மி' மும்முரமாய் நடந்து கொண்டிருந்தது. மொத்தம் ஐந்து பேர். ஐந்து பேர்களின் உதடுகளிலும் பீடி நெருப்பு கண்ணோடு தெரிந்தது.
 வெள்ளிங்கிரி. உள்ளே நுழைந்தான்: கழுத்துக்கு மப்ளரைச் சுற்றி பரட்டைத் தலையோடு தெரிந்த ஒரு ஆசாமியின் தோளைத் தொட்டான்.
 "ஜெயபாலு..."
 அவன் திரும்பிப் பார்த்து - பீடி முன்பற்களால் கடித்துக்கொண்டு - "அடே வெள்ளிங்கிரியா... வா... வா..." என்றான்!
 "சீட்டை கவுத்துட்டு ஒரு நிமிஷம் எந்திரி வா... ஜெயபாலு..."
 "என்ன விஷயம்..."
 "வா சொல்றேன்"
 ஜெயபால் கையிலிருந்த சீட்டுக்கன கவிழ்த்து வைத்துவிட்டு - அவிழ்ந்து போன லுங்கியை சரியாய் கட்டிக்கொண்டு எழுந்தான்.
 "ம்... வா... என்ன சமாச்சாரம்...?"
 வெளியே வந்தார்கள்.
 வெள்ளிங்கிரி சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துக்கொண்டு குரலைத் தாழ்த்தினான். "பங்களாவுக்கு புது ஜோடி வந்திருக்கு..."
 "பொண்ணு... எப்படி...?"அம்சம்... இல்லேன்னா நான் வருவேனா?"
 "புருஷன் பொஞ்சாதி ரெண்டே ரெண்டு பேர் மட்டுந்தானே...?"
 "ஆமா..."
 "புருஷன் எப்படி... பலசாலியா?"
 "உனக்கும் எனக்கும் தாக்கு பிடிக்கமாட்டான்...?"
 "சரி... நான் எத்தனை மணிக்கு வரட்டும்?"
 "இப்ப மணி எட்டு...! அவங்க டிபன் வங்கிட்டு வரச் சொன்னாங்க. வாங்கிட்டு போயிட்டிருக்கேன். சாப்பிட்டு முடிச்சு படுக்க எப்படியும் பத்து மணி ஆயிடும்... நீ ஒரு பதினோரு மணிக்கு மேல வா..."
 "மயக்க மருந்தை பால்லதானே கலந்து கொடுக்கப்போறே?".
 "ஆமா..."
 "கொஞ்சம் அதிகமாவே கலந்துடு. போன தடவை வந்து தங்கின - ஒரு பொண்ணுக்கு பாதியில முழிப்பு வந்து பேஜரா போச்சே...?"
 "நாம அவளை நாசம் பண்றது... அவளுக்கு தெரியக்கூடாது அவ்வளவுதானே...?"
 "ஆமா! அதே மாதிரி புருஷன் காரனுக்கும் விடிகிற வரைக்கும் ஞாபகம் இருக்கக்கூடாது"
 "அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்... நீயோ பதினோரு மணிக்கு வந்துடு... ஜெயபால்."
 "லேட் பண்ணிடாதே..."
 "விருந்துக்கு கூப்பிட்றே... வராம இருப்பேனா? பத்தே முக்கால் மணிக்கெல்லாம் ஆஜராயிருவேன்... போ..."
 ஜெயபால் சொல்லிச் சிரித்துக்கொண்டே மறுபடியும் ரம்மி விளையாடப் போனான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 15, 2023
ISBN9798223148692
சமாதி ஆக சம்மதி..!

Read more from Rajeshkumar

Related to சமாதி ஆக சம்மதி..!

Related ebooks

Related categories

Reviews for சமாதி ஆக சம்மதி..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சமாதி ஆக சம்மதி..! - Rajeshkumar

    1

    தேக்கடி

    நேரம் சாயந்தரம் ஆறு மணி. சிவப்பாய் முகம் கன்றிப்போன சூரியன் மலையிடுக்கில் நசுங்கிப்போய் தெரிய இருட்டு தன் கொடியை ஏற்ற நேரம் பார்த்துக்கொண்டிருந்தது. தில்கா காட்டேஜின் வாசலில் தன் மாருதி காரை கொண்டு போய் நிறுத்தினான் சூர்யகாந்தன். அருகே தமயந்தி அவன் தோளோடு ஒண்டியிருந்தாள். கழுத்தில் புதுத்தாலி மின்னியது.

    என்னாங்க... நீங்களே இறங்கிப் போய் காட்டேஜ் கிடைக்குமான்னு கேட்டுட்டு வந்துடுங்க...

    இந்த காட்டேஜ் காலியாத்தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன். சொல்லிக்கொண்டே சூர்யகாந்தன் இறங்கினான், காம்பௌண்ட் கேட்டைத் தள்ளிக்கொண்டு உள்ளே போனான். காட்டேஜின் முன்புற வாசலில் - கனமான ஸ்வெட்டரும் குல்லாவும் அணிந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த நபரை நெருங்கினான்.

    எக்ஸ்க்யூஸ்மீ.

    அவன் சிகரெட் தொங்கும் உதடுகளோடு திரும்பினான். பார்வையை இடுக்கிக் கொண்டு கேட்டான்

    என்ன ஸார் வேணும்...?

    காட்டேஜ் கிடைக்குமா...?

    இதுல ஆள் இருக்காங்களே... ஸார்... வேற பக்கம் விசாரிச்சு பாருங்க...

    கடந்த ஒரு மணி நேரமா காட்டேஜிக்காக அலையறோம். எங்கே போனலும் காலி இல்லேன்னு சொல்றாங்க...

    அவன் புகை வழியும் வாயோடு நிறுத்தினான்.

    சீஸன் அப்படி ஸார்.

    கூட்டம் கூட்டமா ‘யானைகள் இறங்கி வர்ற சீசன்... இது. இனியொரு - ரெண்டு மாசத்துக்கு அப்படித்தான் இருக்கும். குமுதா காட்டேஜை கேட்டுப் பார்த்தீங்களா...?

    கேட்டுப் பார்த்தோம்

    என்ன சொன்னாங்க...?

    யார்க்கோ ரிசர்வ் பண்ணியிருக்காங்களாம்

    நீங்க மொத்தம் எத்தனை பேரு...

    நானும் என்னோட ஒய்ப்பும் மட்டுத்தான்

    அப்போ ரோட்ல புதுசா ஒரு லாட்ஜ் கட்டியிருக்காங்க... அங்கே உங்களுக்கு ரூம்ஸ் கிடைக்குமே...?

    லாட்ஜோட பேரு...?

    ஹெல்த்தி ஹோம்...

    ரூம்ஸ் கிடைக்குமா...?

    கிடைக்கலாம்... ட்ரை பண்ணி பாருங்க

    சூர்யகாந்தன் கார்க்கு திரும்பினான்.

    தமயந்தி மோவாயைத் தாங்கிக்கொண்டு கண்ணாடி வழியே அவனையே பார்த்தாள்.

    என்ன அங்கேயும் நஹியா...?

    ஆமா...

    நாம மதுரையிலிருந்து புறப்பட்ட நேரம் சரியில்லை போலிருக்கு

    அப்பர் ரோட்ல ‘ஏதோ லாட்ஜ் கட்டியிருக்காங்களாம்... அங்கே போனா ரூம் கிடைக்கும்ன்னு... சொல்றான்...

    அங்கேயும் ரூம் கிடைக்கலைன்னா...?

    பேசாமே கம்பத்துக்கு போய் அங்கே ஹால்ட் பண்ணிக்கு வேண்டியதுதான்... சொல்லிக்கொண்டே காரைக் கிளப்பினான் சூர்யகாந்தன்.

    இரண்டு நிமிஷ நேரத்தில் அப்பர் ரோடு வந்தது. ரோட்டின் வளைவில் அந்த லாட்ஜ் முளைத்திருந்தது. புது லாட்ஜ் என்பது பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது. பெரியதாகவும் இருந்தது. கீழே போர்டிங் செக்ஷனில் டூரிஸ்ட்களின் கூட்டம் கசகசத்தது.

    காரை ஓரம் கட்டி நிறுத்தினான்.

    நீயும் வா... தமயந்தி... ரெண்டு பேருமா போய் கேட்டா ஒரு வேளை மனமிரங்கி ரூம் தந்தாலும் தருவாங்க...

    கும்பலைப் பார்த்தா எனக்கு நம்பிக்கையில்லீங்க...

    கேட்டுத்தான் பார்க்கலாம் வாயேன்.

    சூர்யகாந்தனும் தமயந்தியும் இறங்கி லாட்ஜுக்குள் நுழைந்தார்கள்.

    ரிசப்ஷன் கௌண்டரில் உட்கார்ந்திருந்த-நடுத்தர வயது நபரை நெருங்கினார்கள்.

    ரூம் வேணும்...

    அவன் புன்னகைத்தார்.

    நீங்க நியூலி மேரீட் கப்புள்ன்னு பார்த்தாலே தெரியுது. பட்... ஸாரி ஸே தீஸ். ஒரு வாரத்துக்கு ரூம். எதுவும் காலியாகாது... நீங்க காட்டேஜ் லட்ரை பண்ணுங்க...

    சூர்யகாந்தன் ஏமாத்தமாய் நெற்றியைக் கீறிக்கொண்டே சொன்னான். எல்லா காட்டேஜஸ்லேயும் கேட்டுப் பார்த்துட்டோம்... எல்லாமே ஃபுல்.

    உங்களுக்கு எந்த ஊர்?

    மதுரை.

    லாட்ஜுக்கு ஒரு போன் போட்டு கன்பர்ம் பண்ணிகிட்டு வந்திருக்கலாமே...?

    தேக்கடியில கூட்டம் இருக்காதுன்னு நினைச்சு வந்துட்டோம். இன்னிக்கு ராத்திரிக்கு மட்டும் தங்கிப் போக ரூம் கிடைக்குமா?

    "ஸாரி - எல்லா ரூமும் ஃபுல்... பாட்னா காலேஜிலிருந்து-நூறு

    Enjoying the preview?
    Page 1 of 1