Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மின்சாரப் புன்னகை
மின்சாரப் புன்னகை
மின்சாரப் புன்னகை
Ebook93 pages29 minutes

மின்சாரப் புன்னகை

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கோடம்பாக்கம் மேம்பாலத்துக்கு கீழே அந்த சின்ன கும்பல் கூடியிருக்க ஒரு திட்டின் மேல் ஏறி நின்றுக் கொண்டு கையில் இருந்த கரிக்கட்டியால் சுவரின் வெள்ளையான பகுதிகளில் அந்த இளைஞன் கிறுக்கிக் கொண்டிருந்தான்.
 'சினிமா ஒழிக...!'
 'சினிமா ஒரு சாக்கடை!'
 'அரசாங்கமே சினிமா தொழிலை முடக்கு...!"
 கரிக்கட்டையால் வேகவேகமாய் எழுதிக் கொண்டிருந்த அந்த இளைஞனுக்கு வயது இருபத்தைந்து இருக்கலாம். குளிக்க வைத்து சவரம் செய்து சுத்தமான ட்ரஸ்ஸை மாட்டிவிட்டால் அழகாய் இருப்பான் போல் தோன்றியது.
 சுவரில் சினிமா. எதிர்ப்பு ஸ்லோகங்களை எழுதி முடித்தவன் நின்றிருந்த கும்பலிடம் திருப்பினான். இடது கை முஷ்டியை உயர்த்தி மைக்காக பாவித்துக் கொண்டு கரகரப்பான குரலில் பேசினான்.
 "பெரியோர்களே! தாய்மார்களே! உங்கள் எல்லோர்க்கும் என் வணக்கம். நீங்கள் எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பதுபோல் நான் பைத்தியம் இல்லை. இந்தத் தங்கத் தமிழ்நாட்டினிலே தவறிப் பிறந்துவிட்டவன் நான். உங்களுக்கெல்லாம் ஒரு அன்பான கோரிக்கை. யாரும் சினிமா பார்க்காதீர்கள். சினிமா முழுவதுமாய் நீங்கள் புறக்கணிக்க வேண்டும். சினிமா சம்பந்தப்பட்டவர்களுக்கோ மன்றம் வைப்பதோ... அவர்களை துதி பாடுவதோ வேண்டாம். நான் இப்போது சொல்லப் போகிற எல்லா சங்கதிகளும் உண்மையானவை. சினிமா உலகத்தில் இருப்பவர்கள் யாருமே யோக்ய சிகாமணிகள் கிடையாது. எந்த நடிகருக்குமே ஒழுக்கம் கிடையாது.நடிகர்களே அப்படியென்றால், நடிகைகளைப் பற்றி கேட்க வேண்டாம்! நம் நாட்டில் உள்ள இன்றைய குடும்பப் பெண்கள் சிவப்பு விளக்குப் பெண்களாக மாறுவது இந்த சினிமா காரணமாய் தான்..."
 வீட்டிலிருந்து ஸ்டேஷனுக்குப் போய்க் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் கனகராஜ் மேம்பாலத்துக்கு கீழே கூடியிருந்த கும்பலைப்பார்த்துவிட்டு பைக்கை ஓரம் கட்டி நிறுத்தியிருந்தனர். அங்கிருந்த ட்ராஃபிக் கான்ஸ்டபிளை கையசைத்து கூப்பிட அவர் ஓடி வந்தார்.
 "ஸார்."
 சல்யூட் வைத்து நின்றார்.
 "அங்கே என்னய்யா கும்பல்?"
 "கடந்த நாலைஞ்சு மாசமாகவே... ஒவ்வொரு ஞாயித்துக் கிழமையும் அந்த கிறுக்குப் பய வந்து... சினிமாவைப் பத்தியும் சினி பீப்பிள்ஸ் பத்தியும் சுவத்துல கண்டபடி எழுதிட்டு வாய்க்கு வந்தபடி உளறிட்டு போவான் ஸார். ஏதோ மெண்டல் கேஸ் போலிருக்கு. ஒரு பத்து நிமிஷம்தான் பேசுவான் ஸார்... அப்புறம் போயிடுவான்..."
 "மென்டலா..."
 "ஆமா ஸார்."
 "பேச்சைப் பார்த்தா அப்படி தெரியலையே..."
 "பையன் படிச்சவன் ஸார்..."
 இன்ஸ்பெக்டர் கனகராஜ் தன் தொப்பியைக் கழற்றி கையில் வைத்துக் கொண்டு அவன் பேச்சை செவிமடுத்தார்.
 "சிகரெட் குடிப்பது, மது அருந்துவது, போதை மருந்துகள் சாப்பிடுவது உடம்புக்கு எவ்வளவு கெடுதலோ... அவைகளைக் காட்டிலும் கெடுதலானது இந்த சினிமா. அவைகள் உடம்பைத்தான் கெடுக்கும். சினிமா நல்ல மனதையே சீரழித்துவிடும். நம்மை சீரழிக்கிற பாழ் படுத்துகிற சினிமா தேவைதானா...? எனக்கு மட்டும்அதிகாரம் இருந்தால், இந்த நாட்டில் உள்ள எல்லா சினிமா ஸ்டூடியோக்களையும், சினிமா தியேட்டர்களையும் இடித்துவிட்டு இந்த இடத்தில் தொழிற்சாலைகளைக் கட்டச் சொல்வேன். தயாரித்து வைத்திருக்கிற அத்தனை சினிமா படங்களையும் நாற்சந்தியில் போட்டு கொளுத்துவேன்..."
 "தட்டுத் தடங்கல் இல்லாமே... நல்லா பேசறானே...? பையனோட பேரு ஊரு என்னான்னு தெரியுமா...?"
 "தெரியாது சார்..."
 "விசாரிச்சு வை..."
 "எஸ்... சார்."
 கனகராஜ் பைக்கை உதைத்துக் கொண்டிருந்த போது, அவன் முஷ்டியை உயர்த்தி ஆவேசமாய் கத்திக் கொண்டிருந்தான்.
 "சினிமா எப்படி நிஜம் இல்லையோ... அதேபோல்தான் அதைத் தொழிலாகக் கொண்டிருக்கிறவர்களின் பேச்சும், நடத்தையும் நிஜம் இல்லை. எல்லாம் பொய். அவர்கள் காட்டுகிற அன்பு பொய். அவர்கள் சிந்துகிற புன்னகையில் ஆளைக் கொல்லும் மின்சாரம் இருக்கிறது. அங்கே நிஜப் புன்னகை கிடையாது. மின்சாரப் புன்னகைதான். அந்த மின்சாரப் புன்னகைகளுக்கு பலியானவர்களை கணக்கெடுக்க அரசாங்கம் ஒரு ஸாடிஸ்டிக்கில் டிபார்ட்மெண்ட்டையே உருவாக்க வேண்டும்."
 அவன் பேசுவதை காதில் வாங்கிக் கொண்டே பைக்கின் ஆக்ஸிலேட்டரை முறுக்கினார் இன்ஸ்பெக்டர் கனகராஜ்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 14, 2023
ISBN9798223240143
மின்சாரப் புன்னகை

Read more from Rajeshkumar

Related to மின்சாரப் புன்னகை

Related ebooks

Related categories

Reviews for மின்சாரப் புன்னகை

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மின்சாரப் புன்னகை - Rajeshkumar

    1

    "ஹிட்... சூப்பர் ஹிட்!"

    ரிஸீவரை கீழே வைத்துவிட்டு சோபாவுக்கு சாய்ந்தபடி பத்திரிகை ஒன்றை படித்துக் கொண்டிருந்த பவித்ராவிடம் திரும்பினான் வனராஜ்.

    பவித்ரா.

    நேத்து ரிலீஸான உன்னோட படம் ‘என்னுடைய ஆகாயம்’ எல்லா சென்டர்லேயும் சூப்பர் ஹிட்டாம்...

    அண்ணன் வனராஜை புன்னகையோடு ஏறிட்டாள் பவித்ரா. தன் பெரிய கண்களை படபடத்தபடியே சொன்னாள்.

    அந்தப்படம். பூஜை போட்ட அன்னிக்கே எனக்குத் தெரியும், படம் சூப்பர் ஹிட்டாகப் போகுதுன்னு...!

    அந்தப் படத்துக்கே உன்னோட நடிப்புத்தான் ஜீவன்.

    இது கப்ஸா. படத்தோட டைரக்டர் சசிராஜ் பாலச்சந்தர் கிட்டே பத்து வருஷம் அஸிஸ்டெண்டா இருந்தவர். டைரக்ஷனோட நுணுக்கங்களையெல்லாம் துல்லியமா கத்துகிட்டு ஒரு வலுவான கதையை கையில் எடுத்துகிட்டு படம் பண்ணினார். ஹிட்டாயிடுச்சு. என்னை மாதிரியே யார் நடிச்சிருந்தாலும் சரி. அந்தப் படம் கண்டிப்பா ஹிட்டாயிருக்கும்.

    வனராஜ் இடுப்பில் கை வைத்துக் கொண்டு அவளை முறைத்தான். இதோ பார்... பவித்ரா... நம்ம திறமையை நாம்பளே குறைச்சு எடை போட்டுக்கக் கூடாது. இனிமே பாரு. உனக்குப் படம் குவியப் போகுது...

    வனராஜ் சொல்லிக் கொண்டிருக்கும் போதே –

    டெலிபோன் கூப்பாடு போட்டது.

    எவனோ ப்ரொட்யூசர் தான்... கையைச் சொடுக்கியவன் வேகமாய்... போய் ரிஸீவரை எடுத்தான்.

    ஹலோ...

    பவித்ரா வீடா...?

    ஆமா...

    நாங்க தாயகம் பிக்சர்ஸ் சார்பா பேசறோம்...! நீங்க பவித்ராவுக்கு அண்ணனா...?

    ஆமா.

    எங்க தாயகம் பிக்சர்ஸ் சார்பா பவித்ராவை ஹிரோயினா போட்டு ஒரு படம் பண்ணலாம்ன்னு இருக்கோம்.

    அப்படியா... வீட்டுக்கு வாங்களேன் பேசிக்கலாம்.

    எப்ப வரட்டும்...?

    இப்பவே வாங்களேன்...

    வனராஜ் ரிஸீவரை வைத்துவிட்டு பவித்ராவிடம் திரும்பினான். தாயகம் பிக்சரிலிருந்து உன்னை புக் பண்ண வர்றாங்களாம். ‘என்னுடைய ஆகாயம்’ படத்தை பார்த்திருப்பாங்க... உன்னோட ரேட் ஏறிடறதுக்குள்ளே ஓடி வர்றாங்க.

    தாயகம் பிக்சர்ஸ் நல்ல கம்பெனி தானே...?

    அருமையான கம்பெனி... போன வருஷம் மட்டும் கன்டினியூஸா ரெண்டு நூறு நாள் படங்களை குடுத்திருக்காங்க... அதுல ஒண்ணு ஷங்கர் டைரக்ஷன்...

    ஷங்கர் டைரக்ட் பண்ணியிருக்காரா...? அப்படீன்னா அது ஜெனியூன் கம்பெனி தான்.

    டெலிபோன் மறுபடியும் கூப்பிட்டது.

    இது யார்ன்னு தெரியலையே?

    ரிஸீவரை எடுத்தான்.

    ஹலோ...

    பவித்ரா இருக்காங்களா? ஒரு ஆண் குரல் கேட்டது.

    நீங்க யாரு?

    கோல்ட் காய்ன் மூவிஸிலிருந்து பேசறோம்... ப்ரொட்யூசர் நைனாமலையோட தம்பி நான். பவித்ரா கூட பேசணுமே...?

    பவித்ரா இப்ப ஒரு பிரஸ் மீட்டிங்கை அட்டெண்ட் பட்ணிட்டிருக்கிறதுனாலே விஷயம்... என்னான்னு என்கிட்டேயே சொல்லிடுங்களேன்.

    நீங்க...?

    நான் பவித்ராவோட ப்ரதர்... வனராஜ்.

    விஷயமெல்லாம் நல்ல விஷயம் தாங்க...! என்னுடைய ஆகாயம் படத்துல பவித்ராவோட நடிப்பைப் பார்த்ததிலிருந்து, அண்ணன் அசந்து போயிருக்கார். நாங்க எடுக்கப் போற அடுத்தப் படத்துக்கு பவித்ரா தான் ஹிரோயின்ங்கறதை முடிவு பண்ணிட்டோம்... டைரக்ஷன் யார் தெரியுங்களா...? மணிரத்னம். ம்யூசிக் ஏ.ஆர். ரஹ்மான்...

    வனராஜ் சந்தோஷத்தில் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் போதே மறுமுனையில் அவர் தொடர்ந்தார்.

    எங்க கம்பெனியோட ப்ரொடக்ஷன் மேனேஜரை ஒரு அட்வான்ஸ் தொகையோட அனுப்பிச்சி வைக்கிறோம். வாங்கிட்டு பவித்ராவை, அக்ரிமெண்ட் பாரத்துல ஒரு கையெழுத்தைப் போடச் சொல்லுங்க...

    அட்வான்ஸ் தொகை எவ்வளவுன்னு சொன்னா பரவாயில்லை?

    அம்பதாயிரம்.

    கம்மியா தெரியுதுங்களே.

    அட...! இது அட்வான்ஸ்தான் படத்தோட ரேட்டை நாளைக்குப் பேசிக்கலாம்.

    ஸாரிங்க...! நாளைக்கு பேசறதெல்லாம் லேட்...! இன்னிக்கே பேசிட்டா பரவாயில்ல...

    என்னங்க ஒரேயடியா மேல ஏர்றீங்க. உங்க தங்கச்சி நடிச்சு ஒரு படம்தான் வெளியே வந்திருக்கு... அதுக்குள்ள இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்றீங்களே...?

    இது ஆர்ப்பாட்டமில்லைங்க...! ஒரு முன்னெச்சரிக்கையான நடவடிக்கை, ‘என்னுடைய ஆகாயம்’ படம் ரிலீஸான நிமிஷத்திலிருந்து எங்க வீட்டு டெலிபோன் விடாமே அடிச்சிட்டிருக்கு... தமிழ்நாட்டுல இருக்கிற அத்தனை ரெப்யூட்டட் கம்பெனியும். பவித்ராவை அவங்களோட அடுத்தப் படத்துல ஹிரோயினா புக் பண்றதுக்கு ஆசைப்படறாங்க. நாங்க, என்ன பண்ண முடியும்...?

    சரி, ரேட் என்ன்...?

    உங்க கையில் எத்தனை விரல் இருக்கோ... அத்தினி லட்சம்.

    பத்தா...?

    எஸ்.

    ரொம்ப அதிகம்...

    இன்னொரு படம் வந்து பவித்ராவோட மார்க்கெட் ஏறினதும் இப்ப நான் கேட்ட ரேட் குறைச்சலாய் இருக்கும்.

    சரி... சரி... ஐந்து ரூபாய் போட்டுக்கலாம்.

    "நோ... நோ. பத்துக்குக்

    Enjoying the preview?
    Page 1 of 1