Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சஸ்பென்ஸ்
சஸ்பென்ஸ்
சஸ்பென்ஸ்
Ebook76 pages26 minutes

சஸ்பென்ஸ்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"சாந்தா... சாந்தா...
 அந்த ராத்திரி நேரத்தில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு பாயில் படுத்துக் கண்களை மூடியிருந்தவள் எழுந்து போய்க் கதவை திறந்தாள்.
 அரிக்கேன் விளக்கை கையில் பிடித்தபடி பண்ணையாள் ரெங்கன் நின்றிருந்தான்.
 "என்ன ரெங்கா?"
 "பண்ணையார் உன்னை கூட்டிட்டு வரச்சொன்னார்."
 "மணி எவ்வளவு..."
 "பதினொண்ணு..."
 "இந்த நேரத்துக்கு எதுக்கு இப்ப வரச்சொன்னார்?"
 "தெரியலை. உடனே கையோட கூட்டிட்டு வரச்சொன்னார்."
 "வண்டி கட்டிக்கிட்டு வந்திருக்கிறாயா...?"
 "ஆமா..."
 "சரி நீ வண்டியிலே போய் உட்கார். நான் இப்போ வந்துடறேன்" அவன் வாசலில் நின்றிருந்த வண்டிக்குப் போனதும் சாந்தா சேலையை மாற்றிக் கொள்ள ஆரம்பித்து மேக்கப்பில் நிமிஷங்களைப் போக்கி வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியே வந்தாள்.
 இருட்டில் மாட்டு வண்டியின் அசைவுகள் தெரிந்தது. ரெங்கன் தலைக்கு முண்டாசைக் கட்டிக்கொண்டு தார் குச்சியோடு வண்டியின் நுனியில் உட்கார்ந்திருந்தான்."என்ன சாந்தா போலாமா?"
 "ம்...''
 வண்டிக்குள் ஏறி உட்கார்ந்தாள். உட்கார்ந்து கொண்டே மறுபடியும் கேட்டாள்.
 "பண்ணையார் எதுக்காக கூட்டிட்டு வரச்சொன்னார்ன்னு நிஜமாகவே உனக்குத் தெரியாதா ரெங்கா...?"
 "தெரியாது."
 "வண்டி இப்போ எங்கே போகுது... அவரோட தோட்டத்து பங்களாவுக்கா... இல்லே தோப்பு பங்களாவுக்கா...?"
 "தோப்பு பங்களாவுக்குத்தான்."
 சாந்தா குழப்பமாய் முழங்காலைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்க.
 வண்டி பூசாரிப்பட்டி கிராமத்தின் மண் பாறையில் வேகமாய் ஓட ஆரம்பித்தது.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 10, 2023
ISBN9798223724889
சஸ்பென்ஸ்

Read more from Rajeshkumar

Related to சஸ்பென்ஸ்

Related ebooks

Related categories

Reviews for சஸ்பென்ஸ்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சஸ்பென்ஸ் - Rajeshkumar

    1

    சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன்.

    காலை ஆறு மணி.

    ஐந்தாவது பிளாட்பாரத்தில் வந்து நின்ற பாஸஞ்சர் ட்ரெயினிலிருந்து ஒரு சின்ன சூட்கேஸோடு கீழே இறங்கிய மீனாவுக்கு சென்னை சென்ட்ரலின் பிரம்மாண்டம் பிரமிப்பாய் இருந்தது. மொலுமொலுவென்ற எறும்புக் கூட்டம் மாதிரி அலைகிற ஜனங்களைப் பார்க்கும்போது மனசுக்குள் வியப்பு ஊர்வலம் போனது. உருளும் ட்ராலிகள், புத்தகக் கடைகள், குளிர்பான ஸ்டால்கள், டெலிவிஷன் பெட்டியில் பாடும் எம்.ஆர்.விஜயா. எல்லாமே அவளுக்குப் பிரமிப்பாய் இருந்தது.

    ஜனங்களோடு ஜனமாய் கலந்து ஸ்டேஷனை விட்டு வெளியே வந்த மீனாவுக்கு இருபத்தி ஐந்து வயதிருக்கலாம். மாநிறத்துக்கும் கொஞ்சம் கூடுதலான நிறம். திருத்தமான முகம். சேலை கட்டியிருந்த நேர்த்தியில் உடம்பில் வளைவுகள் அம்சமாய்த் தெரிந்தது. கையில் வைத்திருந்த சூட்கேஸ் பெட்டி சாயம் போய் தன்னுடைய மதிப்பை இழந்திருந்தது.

    மீனா டிக்கெட் கலெக்டரிடம் டிக்கெட்டைக் கொடுத்துவிட்டுச் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு வெளியே வந்தாள்.

    ஒரு ஆட்டோ டிரைவர் அவளை நெருங்கி வந்தார்.

    எங்கம்மா போவணும்...?

    சூளைமேடு...

    சூளைமேட்ல எங்கே போவணும்...

    ‘‘கெங்கையம்மன் கோயில் வீதி..."

    அவளுடைய கையிலிருந்து சூட்கேஸை வாங்கிக் கொண்டு ஆட்டோவை நோக்கி நடந்தார் டிரைவர். மீனா ஒன்றும் பேசத் தோன்றாமல் பின்தொடர்ந்தாள்.

    உட்காரம்மா...

    மீனா ஏறி உட்கார்ந்ததும் ஆட்டோவைக் கிளப்பினார் டிரைவர். ஸ்டேஷனின் நெரிசலினின்றும் ஆட்டோவை சாதுர்யமாய் நகர்த்திக் கொண்டு ரோட்டுக்கு வந்தார். மீனா குனிந்து குனிந்து ரோட்டின் இரண்டு பக்கங்களையும் பார்த்துக் கொண்டே வந்தாள். லேசாய் வெளிச்சம் விழுந்திருந்த சென்னை நகர ரோடுகளில் இன்னமும் ப்ளோரஸண்ட் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அந்த வளைவில் திரும்பும்போது டிரைவர் அவளைப் பார்த்தார்.

    "ஏம்மா... நான் கேக்கறேன்னு தப்பா நினைச்சுக்காதே... நீ இப்பத்தான் மொத தடவையா சென்னை வர்றியா...?’’

    ஆ... மா...

    "கண்ணுக்கு லட்சணமா இருக்கற நீ... இப்படித் தனியா புறப்பட்டு வரலாமா...? கூட யாரையாவது கூட்டிட்டு வர வேண்டாம்...?’’

    "எ... எ... எனக்கு யாருமில்ல...’’

    யாருமில்லையா...? அப்பா... அம்மா?

    எப்பவோ காலமாயிட்டாங்க...

    "கூடப்பொறந்தவங்க...?’’

    நான் ஒரே பொண்ணுதான்.

    சென்னைக்கு எதுக்காக வந்தே...? இங்கே யார் இருக்காங்க...?

    என் கூடப் படிச்ச ப்ரெண்ட் ஒருத்தி சூளைமேட்ல இருக்கா. அவளைப் பார்க்கத்தான் வந்தேன்...

    சென்னை மோசமான ஊரம்மா... ஒரு பொண்ணு தனியாப் பொறப்பட்டு இந்த ஊருக்கு வரக்கூடாது... ஆமா உனக்கு எந்த ஊரு...?

    துடியலூர்.

    அது... அது எங்கேயிருக்கு...?

    "கோயமுத்தூர்க்கு பக்கத்துல...’’

    ஆட்டோ இப்போது மவுண்ட் ரோட்டின் அகலத்தில் ஓடிக் கொண்டிருக்க, அவள் கேட்டாள்.

    சூளைமேட்டுக்கு ரொம்ப தூரம் போகணுமா...?

    ஆமா.

    எவ்வளவு நேரமாகும்...?

    இருபது நிமிஷமாகும்...

    சொன்னபடியே ஆட்டோ இருபது நிமிஷம் ஓடி ராம் தியேட்டர்க்கு எதிரேயிருந்த கெங்கையம்மன் கோயில் வீதிக்குள் நுழைந்தது.

    வீட்டு நெம்பர் எவ்வளவும்மா...?

    முந்நூத்தி ரெண்டு...

    அப்போ... உள்ளே போகணும்... சொல்லிக் கொண்டே ஆட்டோவின் ஆக்ஸிலேட்டரை முறுக்கினார். குண்டும் குழியுமான சாலையில் ஆட்டோ குதித்துக் குதித்து ஓடி அந்த முன்னூத்தி ரெண்டாம் நெம்பர் வீட்டு முன்னால் வந்து நின்றது.

    மீனா இறங்கிக் கொண்டு டிரைவருக்கு பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டு சூட்கேஸோடு அந்த வீட்டை ஏறிட்டுப் பார்த்தாள்.

    அந்த நீளமான வீடு நான்கைந்து போர்ஷன்களாகத் தடுக்கப்பட்டு வாசலில் கோலங்கள் மலர்ந்திருந்தது.

    மீனா தயக்கமாய் உள்ளே போனாள்...

    கை பம்பில் டொங்கு டொங்கென்று தண்ணீர் அடித்துக் கொண்டிருந்த அந்த அம்மாள் இன்னும் தூக்கம் கலைந்து எழுந்து வராத மருமகளை கண்டமேனிக்குத் திட்டிக் கொண்டிருக்க அவளருகே போய் நின்றாள் மீனா.

    அந்த அம்மாள் திரும்பினாள்.

    யாரு...?

    "புவனேஸ்வரி இந்த வீட்லதானே இருக்கா...’’

    புவனேஸ்வரியா...? என்று நெற்றியைச் சுருக்கியவள் ஓ... புவனாவைக் கேக்கறியா...? என்றாள்.

    "ஆமா புவனாதான்’’

    "அவ அந்தக் கடைசி

    Enjoying the preview?
    Page 1 of 1