Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தப்பு தாரணி தப்பு
தப்பு தாரணி தப்பு
தப்பு தாரணி தப்பு
Ebook114 pages55 minutes

தப்பு தாரணி தப்பு

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பதினொரு மணி. விசாரணைக் கெளண்டரில் இயங்கிக் கொண்டிருந்தாள் தாரிணி. டேபிளுக்குக் கீழே இருந்த ப்ரீஃப்கேஸை அடிக்கடி பார்த்துக் கொண்டால் நிறைய பேர் வந்து போய்க் கொண்டிருந்தார்கள் தாரிணியிடம் விசிட்டிங் கார்டுகளை நீட்ட எப்.எம்.மையும் ஸ்டோர் பர்சேஸ் டிபார்ட்மென்ட்டையும் கேட்டு உள்ளே போய் வெளியே வந்து கொண்டிருந்தார்கள் வேறு கம்பெனிகளைச் சேர்ந்து, எக்ஸிக்யூட்டிவ்கள்.
 பதினொன்று ஐந்துக்கு சங்கீத்குமாரிடமிருந்து இன்டர்காம் வந்தது. மெல்லிய குரலில் கூப்பிட்டான்.
 "தாரிணி..."
 "சொல்லுங்க ஸார்..."
 "மோனிகா பார்ட்டி?"
 "இன்னும் வரலை!"
 சில விநாடிகள் மவுனித்து விட்டுச் சொன்னான்.
 "ஜாக்ரதை தாரிணி! நாம பண்ணிட்டிருக்கிற நிழலான காரியங்கள்ல போலீசுக்கு லேசா சந்தேகம் வந்திருச்சு. ஸோ உனக்கு கொஞ்சம் அதிகப்படியான அலர்ட்னஸ் வேணும்..."
 "நீங்க கவலைப்பட வேண்டாம் ஸார்."
 "தட்ஸ் குட்..."
 மறுமுனையில் அவன் ரிஸீவரைச் சாத்த தாரிணியும் ரிஸீவரைக் கவிழ்த்து விட்டு நிமிர்ந்தாள். எதிரே கல்யாண் நின்றிருந்தான்.
 ஸ்டோன் வாஷில் தன் தொண்ணுறு கிலோ உடம்பை சிரமப்பட்டு திணித்திருந்தான். மார்பில் பயிரான ரோமக்காட்டுக்கு மத்தியில் இருந்த ஸ்வஸ்திக் சில்வர் டாலர் திறந்து, விட்ட மேல் பட்டன்களுக்கிடையில்தெரிந்தது. மாதத்தில் பத்து நாள் தாடி வைத்திருப்பான். பதினோராம் நாள் மீசை மட்டும் இருக்கும். மாத இறுதியில் அதுவும் இல்லாமல் வழவழா. திடீரென்று மறுபடியும் தாடியோடு ஹலோ சொல்லுவான்.
 "தாரிணி இன்னும் பார்ட்டி வரலையா?" பான்கறை ஏறிய பல்வரிசை தெரிய கேட்டான் கல்யாண்.
 உதட்டைப் பிதுக்கினாள் தாரிணி.
 "ம்ஹூம்..."
 கல்யாண் மேஜையில் கையூன்றிக் கொண்டு திரும்பி எதிர் சோபாவைப் பார்த்தான். பவல் கண்ணாடி போட்ட ஒல்லியான ஆசாமி ஒருவர் தலையைக் குனிந்து டைரியைப் புரட்டிக் கொண்டிந்தார். தாரிணியிடம் திரும்பிக் கேட்டான் கல்யாண்.
 "அது யாரு தாரிணி?"
 "கிர்லாஸ்கர் கமின்ஸ்லேல்ஸ் ஆபீஸர் மிஸ்டர் பூபேந்திரன். கனக்டிங் ராடு சாம்பிள்ஸ் சம்பந்தமா எம்.டி.யைப் பார்க்க வந்திருந்தார்."
 தாரிணி சொல்லிக் கொண்டிருக்க அதே விநாடி
 ரிஸப்ஷன் ஹாலுக்குள் பிரவேசித்தனர் வெள்ளை சர்ட், வெள்ளை பேண்டில் உயரமாய் பொதிந்திருந்த அந்த இரண்டுபேர். ஒருத்தன் கையில் கறுப்பு நிற ப்ரீப்கேஸ், மேஜையை சமீபித்து தாரிணியைப் பார்த்துப் புன்னகைத்தான்.
 "எக்ஸ்கியூஸ் மீ."
 "யெஸ் ப்ளீஸ்..."
 "வி ஆர் ஃப்ரம் மோனிகா..."
 "வெல்கம்..."
 புன்னகையோடு தாரிணி சொல்ல -
 கொண்டு வந்த ப்ரீஃப்கேஸை தாரிணியின் மேஜையோரம் வைத்தார்கள்.வீ வாண்ட் டு ஸீ யுவர் எம்.டி."
 இண்டர்காம் பட்டனைத் தட்டி சங்கீத்குமாரிடம் விபரம் சொன்னாள். ரிஸீவரைச் சாத்திவிட்டு அவர்களிடம் திரும்பினாள்.
 "ஹி ஈஸ் வெயிட்டிங் ஃபார் யூ ஸார்..."
 "தேங்க்யூ..." இரண்டு பேரும் புன்னகைகளை உதிர்த்துவிட்டு நகர்ந்தார்கள்.
 அவர்கள் போன ஐந்தாவது நிமிஷம் மேஜையோரம் வைக்கப்பட்டிருந்த அவர்கள் கொண்டு வந்திருந்த ப்ரீஃப்கேஸை உள்ளே இழுத்துக் கொண்டாள், தாரிணி. மேஜையைச் சுற்றி வந்த கல்யாண் சொன்னான்.
 "தாரிணி அவங்க கொண்டு வந்த சூட்கேஸை எதுக்கும் ஒரு தரம் கரன்ஸியை செக் பண்ணிக்க..."
 தாரிணி சின்னதாய் புன்னகைத்தாள்.
 "மோனிகா ரொம்பவும் நம்பிக்கை பார்ட்டி கல்யாண்..."
 "எதுக்கும் பார்த்துடு...."
 கல்யாண் பிடிவாதிக்க –
 குனிந்து ப்ரீஃப்கேஸைத் திறந்தாள் தாரிணி.
 நாசிக்கில் அச்சான கரன்ஸிகள் நாப்தலின் வாசனையோடு கட்டு கட்டாய் வரிசையாய் தெரிய -
 கண்கள் பெரிதாகிப்போய் கல்யாண் சொன்னான்.
 "அப்பா... மூச்சு முட்டுது."
 புன்னகை மாறாமல் ப்ரீஃப்கேஸை சாத்தினாள் தாரிணி. அபின் நிரப்பின ப்ரீஃப்கேஸை மேஜையோரத்துக்கு மாற்றினாள்.
 ஐந்தே நிமிஷம்!
 அவர்கள் திரும்பி வந்தார்கள்மேஜையை நெருங்கியதும் ஒருவன் கேட்டான்.
 "எவ்ரிதிங் ஓகே...?"
 தலையாட்டினாள் தாரிணி.
 "ம்..."
 சிரிப்போடு ப்ரீஃப்கேஸை எடுத்துக் கொள்ள அவன் குனிந்த அதே விநாடி -
 வாசலில் சர்ர்ர்ரென்று ஒரு சத்தம்,

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 8, 2023
ISBN9798223935186
தப்பு தாரணி தப்பு

Read more from Rajeshkumar

Related to தப்பு தாரணி தப்பு

Related ebooks

Related categories

Reviews for தப்பு தாரணி தப்பு

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தப்பு தாரணி தப்பு - Rajeshkumar

    1

    சந்தனக் கிண்ணத்துக்குள் நடுவிரலையும், மோதிர விரலையும் கொஞ்சமாய் நனைத்துக் கொண்டுவிட்டு குங்குமத்தை நெற்றிக்கும், கழுத்துக்கும் சின்னப்புள்ளியாய் பரிச்சயமாக்கினாள் தாரிணி. மஞ்சள் நிற தாம்பூல பாக்கெட்டைப் புன்னகைச் சிந்தலோடு பெற்றுக் கொண்டபின் வாழைக் கம்பங்களோடும், வெளிர் என விடிந்தததும் அணைக்கப்படாத ஸீரியல் விளக்குகளோடும் இன்னமும் நல்வரவு என்று சொல்லிக் கொண்டிருந்த சைன் போர்டோடும் இருந்த கல்யாணப் பந்தலைத் தாண்டி வெளியே வந்தாள். பந்தலோடு ஐக்கியப்பட்டிருந்த ராகிணி சவுண்ட் சர்வீஸின் பெயிண்ட் உதிர்ந்து போன ஸ்பீக்கர் ‘மன்மதராசா மன்மதராசா’ என்று மாலதியின் குரலை கீச்சென்று இழைத்துக் கொண்டிருக்க -

    சாலைக்கு வந்தாள் தாரிணி

    சாலைக்கு வந்த தாரிணி இளம்பச்சை பாரஸ் பட்டுப் புடவையில் உடலைச் சாத்தியிருந்தாள். ஒரு சின்ன மின்னலாய் மல்லிகைச் சரம் அவள் கூந்தல் பிரதேசத்தில் நெளிந்திருந்தது. நடக்கிறபோது உதயமாகிய அசைவுகளுக்கு ஏற்ப கழுத்தில் புரண்ட தங்கச் செயின் தொண்ணூற்றி ஐந்து சதவீதம் அவள் நிறத்திலிருந்தது. லான்சர் கார் டாப்பின் வளைவோடு புருவங்கள். அதற்கும் கீழே, பார்க்கிறவர்களுக்கு இன்ஸ்டண்ட் மின் ஈர்ப்பை வினியோகிக்கும் கண்கள். தக்காளி ஜாம் நிற உதடுகள். போனமாதம் டீன் ஏஜை முடித்துக் கொண்ட சாலையின் மறுகோடிக்குப் போய்விட்ட தாரிணிக்கு இப்போது வயது இனிக்கும் இருபது.

    மணிக்கட்டை உயர்த்தி மணி பார்த்தாள்.

    ஆபீஸ்க்கு டயமாச்சு என்று சொன்னது டாடாவின் சொனாட்டா வாட்ச்.

    நடையை வேகமாய் எட்டிப் போட்டாள். தெருமுனையை அடைந்து திரும்பின ஐம்பதாவது அடியில் பஸ் ஸ்டாப்பிங் சொற்ப காத்திருப்பவர்களோடு தெரிய அவர்களோடு ஒன்றாய் இணைந்து கொண்டாள் தாரிணி.

    பக்கத்திலிருந்த ஒரு பிந்துகோஷ் சைஸ் பெண்ணை நெருங்கிய தாரிணி கேட்டாள்.

    ட்வென்ட்டி நைன் என் இப்ப வருமா?

    தாரிணி அழகாயிருப்பதை பொறாமையோடு பார்த்தவள் -

    ம்ஹூம்... எட்டு பத்துக்குத்தான் என்றாள் உதட்டுச் சுழிப்போடு.

    முப்பத்தெட்டு?

    அதற்கும் ‘உச்’ கொட்டினாள்.

    எட்டு பத்துக்கு மேல்தான் எல்லா பஸ்ஸுமே வரும்.

    அவள் சொன்னதும் தவிப்புக்குள் விழுந்தாள் தாரிணி.

    அடக் கடவுளே... இந்த ஸ்டாப்பிலிருந்து பஸ் பிடிச்சு ஆபீஸ் போய்ச் சேரவே முப்பது நிமிஷங்களுக்கு மேலாயிடும். என்ன செய்யலாம்?

    யோசிப்பதோடு தலையை திருப்பிய அதே விநாடி -

    சட்டென முகத்தில் பிரகாசம் பற்றிக்கொள்ள நிமிர்ந்தாள். தூரத்து பைக்கில் படபடத்தபடி வந்து கொண்டிருந்த பாரத் தெரிந்தான். பைக் பக்கத்தில் நெருங்க நெருங்க சாலைக்கு வந்து அவனை எதிர் கொண்டாள் தாரிணி.

    பாரத் பிரேக் பிடித்து அவளை உரசி நிறுத்தினான்.

    பைக்கில் புன்னகையோடு பரவியிருந்த பாரத் குளிர் கண்ணாடியைக் கழற்றியபடியே அவளைப் பார்த்து அட தாரிணி... என்றான்.

    இருபத்தெட்டு வயது இந்தியனான பாரத்துக்கு தேக்கு நிறம், சதுர முகத்தில் கொஞ்சம் சின்ன சைஸ் கண்கள். மணிக்கொருதரம் நிகோடினோடு கைகுலுக்கும் உதடுகளுக்கு மேல் கறுப்படித்துப் படர்ந்திருந்த அடர்த்தியான மீசை. மோவாய்ப்பிரதேசம் தினசரி ஷேவிங்கில் பச்சை வாங்கியிருந்தது. கறுப்பு வெள்ளையில் பட்டை கோடுகளோடு தெரிந்த காட்டன் சட்டையை அதே நிற ஜீன்ஸுக்குள் திணிய விட்டிருந்தான்.

    என்ன தாரிணி பட்டுப்புடவையில் இன்னிக்கு ஒரே அமர்க்களமா நிக்கறே?

    ஆச்சர்யம் பரவின முகத்தோடு கேட்டான். தாரிணி பைக்கை நெருங்கி வந்து பில்லியனில் பரவியபடியே சொன்னாள்.

    மொதல்ல பைக்க கிளப்பி என்னோட ஆஃபீசுக்கு விடுங்க... போகப் போக சொல்றேன்.

    உத்தரவு தாரிணி அம்மையாரே! என்றவன் கண்களுக்கு குளிர் கண்ணாடியைத் திரும்பக் கொடுத்தபடி, ஆக்ஸிலேட்டரைப் பற்றினான். திருகத் தொடங்க... வண்டி உருண்டது.

    எதிர்ப்புறமாய் பயணப்பட்டு வரும் காற்று அவர்களை ஜிலீர் என்று உரசிக் கொண்டு போயிற்று. அலைந்து சிலும்பும் கேசங்களை ஒரு கையால் ஒதுக்கிவிட்டுக் கொண்டு மறுகையால் பாரத்தின் தோளைப் பற்றிக் கொண்டிருந்தாள் தாரிணி.

    திவான் பகதூர் சாலையைத் தொட்ட பின்னால் கேட்டான் பாரத்.

    என்ன பதிலைக் காணோம்?

    மயூரா கல்யாண மண்டபத்தில் என்னோட ஃப்ரெண்ட் மீனலோசனிக்கு மேரேஜ். சாப்பிடாமே அவங்க விடலை. ஆஃபீசுக்கு ஏகப்பட்ட லேட். நல்ல வேளையா நீங்க வந்து சேர்ந்தீங்க. நான் பிழைச்சேன் என்றவள் ஒரு விஷயம் என்றாள்.

    தலையைத் திருப்பி என்னது? என்றான் பாரத்.

    பைக்கை ஒரு வளைச்சலுக்கு உட்படுத்தி எதிரே வந்த காரைத் தவிர்த்துக் கொண்டபின் மறுபடியும் கேட்டான் பாரத்.

    என்ன விஷயம்?

    ஆமா... நீங்க எங்கே இந்தப் பக்கம்? தாரிணி கேட்டாள்.

    பிரேமா தெரியுமா உனக்கு?

    திக்கென நிமிர்ந்தாள் தாரிணி. தோளில் ஒரு கோப் இடிப்பை வெளியிட்டுவிட்டு முறைத்தாள்.

    பைக்கை ஸ்லோ பண்ணுங்க. நான் இப்படியே இறங்கிக்கிறேன்.

    ஏன் தாரிணி... ஆஃபீசுக்குப் போக வேண்டாமா? புன்னகையோடு கேட்டான் பாரத்.

    நான் எப்படியோ போய்க்கறேன். பிரேமாவையும், மேனகாவையும் கட்டிட்டு அழுங்க...

    ச்சை, ரொம்ப மோசம் நீ... முழுசும் சொல்றதுக்குள்ள அவசரப்படறியே... அந்தப் பிரேமாவோட அண்ணன் ஹரிகுமாரைப் பார்க்கப் போனேன்னு சொல்ல வந்தேன். அதுக்குள்ள உனக்கு கோபம் வந்துடுச்சு...

    எனக்கொண்ணும் கோபமில்லை. உங்க மூஞ்சிய என்னைத் தவிர வேற எவ காதலிப்பா?

    சிரித்தபடியே தாரிணி சொன்னபோது காலை நேர டிராஃபிக் இல்லாத தாமுநகர் ஏரியவைக் கடந்து, கொண்டிருந்தது வண்டி.

    ரியர்வியூ மிரர் வழியாக தாரிணியைப் பார்த்து பாரத் கேட்டான்.

    "இப்படியே எத்தனை நாளைக்குத்தான் எல்லாரோட

    Enjoying the preview?
    Page 1 of 1