Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இனி நீ இறக்கலாம்
இனி நீ இறக்கலாம்
இனி நீ இறக்கலாம்
Ebook104 pages35 minutes

இனி நீ இறக்கலாம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"ஷ்யாம்..." என்றாள் அதி அழகான - அந்தப் பெண்.
 இடம்: மெரீனா பீச்.
 நேரம்: இருட்டிக் 'கொண்டுவருகிற சாயந்திரஏழு மணி.
 தொலைவில் கடல் பெண் நீலச் சேலையினின்றும் கறுப்புச் சேலைக்கு மாறிக் கொண்டிருந்தாள். கலங்கரை விளக்கத்தின் வெளிச்சங்கள் சுற்றியது.
 "என் ஆர்த்திக் குட்டிக்கு என்னவாம்...?" என்றான் ஷ்யாம். வயது இருபத்தியாறு. ஸ்லாக் சட்டைக்குள் தினமும் தேகாப்பியாசம் செய்கிற உடம்பு திமிறியது.
 "நா... ஒண்ணு சொல்வேன்... நீங்க கேக்கணும்"
 "கேட்டுட்டா போகுது... சொல்லு... சொல்லு..."
 "நீங்க. அந்த... மலையேறுகிற கோஷ்டியோடு போய்த்தான் ஆகணுமா?"
 "ஓ! நீ அந்த நந்திதா பர்வதம் சிகரத்துக்குப் போறதைப் பத்தி - சொல்றியா?"
 "ஆமா..."
 "ஏன்? போனா என்ன...?"
 "எனக்குப் பிடிக்கலை..."
 "பிடிக்கலைன்னு ஒற்றை வார்த்தையிலே சொல்லிட்டா எப்படி? ஏன் பிடிக்கலை...?"
 "நம்ம கல்யாணத்துக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கு?"
 "சரியா அறுபத்தொரு நாள்"இவ்வளவு பக்கத்துல கல்யாணத்தை வெச்சுகிட்டு அந்த நந்திதா பர்வதம் சிகரத்துக்குப் போய்த்தான் ஆகணுமா...?"
 "அதெல்லாம் ஒரு அட்வென்ச்சர். இதுக்கு முந்தி கல்பா பர்வத சிகரத்துக்கு போயிட்டு வரலையா என்ன...? நீ கூட ஹில்ஸ் அடிவாரம் வரைக்கும் வந்து டாட்டா காட்டிட்டு போனியே?"
 "அது அப்ப. ரெண்டு வருஷத்துக்கு முந்தி..."
 "ஏன், இப்ப மட்டும் என்னவாம்..."
 "இந்த நந்திதா பர்வதம் சிகரத்துக்குப் போறது ரொம்பவும் கஷ்டம்ன்னு சொன்னாங்களே...?"
 "யார் சொன்னது...?"
 "ஒருத்தர் சொன்னாங்க... கிட்டத்தட்ட ஏழாயிரம் மீட்டர் உயரமாம். பத்து செகண்ட் ஆக்ஸிஜன் இல்லன்னாலும்... இதயம் அடைச்சு... செத்துப் போயிடுவாங்களாம். செங்குத்தான பனிப் பாறைகள்ல ஏர்றது ரொம்ப ரிஸ்க்காம்"
 "அப்புறம்..."
 "அங்கே பனிக்கரடிங்க அதிகமாம். ஆள் கண்ணுல பட்டுட்டா விடாதாம்..."
 "அப்புறம்...?"
 "டென்ட் போட்டு தங்கினா... ராத்திரி நேரங்கள்ல பனி எலிகள் கூட்டம் கூட்டமா வந்து - தூங்கறவங்க உடம்புல துளைகளைப் போட்டு ரத்தத்தை குடிச்சுடுமாம்"
 "என் ஃப்ரெண்ட் காபிரியேல் சொன்னானா...?"
 "சேச்சே! அவரில்லை..."
 "எனக்குத் தெரியும். அவன் தான் சொல்லியிருப்பான்"
 "யாரோ சொன்னதா இருக்கட்டும்... அதெல்லாம் உண்மையா இல்லையா...?"உண்மைதான். அதுக்காக மலை ஏறுகிற அட்வென்ச்சரை கைவிட்டுட முடியுமா...? ஆபத்து எங்கே தான் இல்லாம இருக்கு...? இந்த நந்திதா பர்வதம், எங்க மவுண்டேரியன் கிளப்ல ஒரு முக்கியமான குறிக்கோள். இதை வெற்றிகரமா தொட்டுட்டோம்ன்னா அடுத்தது எவரெஸ்ட்தான்..."
 ஆர்த்தி அவனுடைய அடர்த்தியான, தலைக் கேசத்துக்குள் கையை நுழைத்து அளைந்தபடியே கொஞ்சலாக சொன்னாள். "அதெல்லாம் உங்களுக்குத் தேவைதானா...? ஒரு பெரிய கம்பெனியில் எக்ஸிக்யூடிவ் ஆபீஸரா வேலை பார்க்ற உங்களுக்கு வெட்டித்தனமா மலை ஏறுகிற வேலையெல்லாம் எதுக்கு...?"
 "மண்டு! நீ நினைக்கிற மாதிரி இந்த மலை ஏர்றது ஒரு வெட்டித்தனமான வேலையில்லை... அரசாங்கமே இதை ஒரு வீரச்செயலா அங்கீகாரம் பண்ணியிருக்கு... வருஷா வருஷம் குடியரசு நாளன்னிக்கு இந்தத் துறையில் இருக்கிற எமினென்ட்ஸுக்கு அவார்டும், ரிவார்டும் தர்றாங்க. கவர்ன்மெண்ட் ஜாப்கள்ல... முன்னுரிமை தர்றாங்க... வயசான காலத்துல... உதவி பணம்... கிடைக்கிறதுக்கும் ஏற்பாடு பண்றாங்க..."
 "உங்களுக்கு இந்த அவார்டு, ரிவார்டெல்லாம் தேவை தானா? உயிரை பணயம் வெச்சு ஏழாயிரம் மீட்டர் உயரத்தில் இருக்கிற நந்திதா பர்வதச் சிகரத்துக்கு போய்ட்டு வந்தா... பத்து கிராம்ல ஒரு சில்வர் மெடல் குடுப்பாங்க. அரை தூர அடி பரப்புல ஒரு சர்ட்டிபிகேட்டை தருவாங்க... அதை வாங்கி வெச்சுகிட்டு என்ன பண்றதாம்...?"
 ஷ்யாம் சிரித்தான். "ஆர்த்தி! கடந்த முணு வருஷ காலமா நீயும் நானும் ஒருத்தரையொருத்தர் விரும்பிட்டு வர்றோம். மலை ஏறுகிற என்னுடைய அட்வென்ச்சரைப் பத்தி இது நாள் வரைக்கும் நீ பெருமையாத்தான் பேசிட்டு வந்திருக்கே... என்னோட அட்வென்ச்சருக்காக நான் ஹிமாலயன் ஹில்ஸ் போகும் போது என் கையை குலுக்கி – நெத்தியிலே முத்தம் வெச்சு, கங்கிராட்ஸ் சொல்லியிருக்கே... "நீங்க சீக்கிரமே எவரெஸ்ட்டைத் தொடணும்ன்னு... ஆசைப்பட்டிருக்கே, ஆனா, இன்னிக்கு என்னடான்னா... கிராமத்துப் பொண்ணு மாதிரி 'நை... நை...'ன்னு முனகறியே...?
 என்ன விஷயம்...?

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 4, 2024
ISBN9798223909552
இனி நீ இறக்கலாம்

Read more from Rajeshkumar

Related to இனி நீ இறக்கலாம்

Related ebooks

Related categories

Reviews for இனி நீ இறக்கலாம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இனி நீ இறக்கலாம் - Rajeshkumar

    2

    "ஷ்யாம்..." என்றாள் அதி அழகான - அந்தப் பெண்.

    இடம்: மெரீனா பீச்.

    நேரம்: இருட்டிக் ‘கொண்டுவருகிற சாயந்திரஏழு மணி.

    தொலைவில் கடல் பெண் நீலச் சேலையினின்றும் கறுப்புச் சேலைக்கு மாறிக் கொண்டிருந்தாள். கலங்கரை விளக்கத்தின் வெளிச்சங்கள் சுற்றியது.

    என் ஆர்த்திக் குட்டிக்கு என்னவாம்...? என்றான் ஷ்யாம். வயது இருபத்தியாறு. ஸ்லாக் சட்டைக்குள் தினமும் தேகாப்பியாசம் செய்கிற உடம்பு திமிறியது.

    நா... ஒண்ணு சொல்வேன்... நீங்க கேக்கணும்

    கேட்டுட்டா போகுது... சொல்லு... சொல்லு...

    நீங்க. அந்த... மலையேறுகிற கோஷ்டியோடு போய்த்தான் ஆகணுமா?

    ஓ! நீ அந்த நந்திதா பர்வதம் சிகரத்துக்குப் போறதைப் பத்தி - சொல்றியா?

    ஆமா...

    ஏன்? போனா என்ன...?

    எனக்குப் பிடிக்கலை...

    பிடிக்கலைன்னு ஒற்றை வார்த்தையிலே சொல்லிட்டா எப்படி? ஏன் பிடிக்கலை...?

    நம்ம கல்யாணத்துக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கு?

    சரியா அறுபத்தொரு நாள்

    இவ்வளவு பக்கத்துல கல்யாணத்தை வெச்சுகிட்டு அந்த நந்திதா பர்வதம் சிகரத்துக்குப் போய்த்தான் ஆகணுமா...?

    அதெல்லாம் ஒரு அட்வென்ச்சர். இதுக்கு முந்தி கல்பா பர்வத சிகரத்துக்கு போயிட்டு வரலையா என்ன...? நீ கூட ஹில்ஸ் அடிவாரம் வரைக்கும் வந்து டாட்டா காட்டிட்டு போனியே?

    அது அப்ப. ரெண்டு வருஷத்துக்கு முந்தி...

    ஏன், இப்ப மட்டும் என்னவாம்...

    இந்த நந்திதா பர்வதம் சிகரத்துக்குப் போறது ரொம்பவும் கஷ்டம்ன்னு சொன்னாங்களே...?

    யார் சொன்னது...?

    ஒருத்தர் சொன்னாங்க... கிட்டத்தட்ட ஏழாயிரம் மீட்டர் உயரமாம். பத்து செகண்ட் ஆக்ஸிஜன் இல்லன்னாலும்... இதயம் அடைச்சு... செத்துப் போயிடுவாங்களாம். செங்குத்தான பனிப் பாறைகள்ல ஏர்றது ரொம்ப ரிஸ்க்காம்

    அப்புறம்...

    அங்கே பனிக்கரடிங்க அதிகமாம். ஆள் கண்ணுல பட்டுட்டா விடாதாம்...

    அப்புறம்...?

    டென்ட் போட்டு தங்கினா... ராத்திரி நேரங்கள்ல பனி எலிகள் கூட்டம் கூட்டமா வந்து - தூங்கறவங்க உடம்புல துளைகளைப் போட்டு ரத்தத்தை குடிச்சுடுமாம்

    என் ஃப்ரெண்ட் காபிரியேல் சொன்னானா...?

    சேச்சே! அவரில்லை...

    எனக்குத் தெரியும். அவன் தான் சொல்லியிருப்பான்

    யாரோ சொன்னதா இருக்கட்டும்... அதெல்லாம் உண்மையா இல்லையா...?

    உண்மைதான். அதுக்காக மலை ஏறுகிற அட்வென்ச்சரை கைவிட்டுட முடியுமா...? ஆபத்து எங்கே தான் இல்லாம இருக்கு...? இந்த நந்திதா பர்வதம், எங்க மவுண்டேரியன் கிளப்ல ஒரு முக்கியமான குறிக்கோள். இதை வெற்றிகரமா தொட்டுட்டோம்ன்னா அடுத்தது எவரெஸ்ட்தான்...

    ஆர்த்தி அவனுடைய அடர்த்தியான, தலைக் கேசத்துக்குள் கையை நுழைத்து அளைந்தபடியே கொஞ்சலாக சொன்னாள். அதெல்லாம் உங்களுக்குத் தேவைதானா...? ஒரு பெரிய கம்பெனியில் எக்ஸிக்யூடிவ் ஆபீஸரா வேலை பார்க்ற உங்களுக்கு வெட்டித்தனமா மலை ஏறுகிற வேலையெல்லாம் எதுக்கு...?

    மண்டு! நீ நினைக்கிற மாதிரி இந்த மலை ஏர்றது ஒரு வெட்டித்தனமான வேலையில்லை... அரசாங்கமே இதை ஒரு வீரச்செயலா அங்கீகாரம் பண்ணியிருக்கு... வருஷா வருஷம் குடியரசு நாளன்னிக்கு இந்தத் துறையில் இருக்கிற எமினென்ட்ஸுக்கு அவார்டும், ரிவார்டும் தர்றாங்க. கவர்ன்மெண்ட் ஜாப்கள்ல... முன்னுரிமை தர்றாங்க... வயசான காலத்துல... உதவி பணம்... கிடைக்கிறதுக்கும் ஏற்பாடு பண்றாங்க...

    உங்களுக்கு இந்த அவார்டு, ரிவார்டெல்லாம் தேவை தானா? உயிரை பணயம் வெச்சு ஏழாயிரம் மீட்டர் உயரத்தில் இருக்கிற நந்திதா பர்வதச் சிகரத்துக்கு போய்ட்டு வந்தா... பத்து கிராம்ல ஒரு சில்வர் மெடல் குடுப்பாங்க. அரை தூர அடி பரப்புல ஒரு சர்ட்டிபிகேட்டை தருவாங்க... அதை வாங்கி வெச்சுகிட்டு என்ன பண்றதாம்...?

    ஷ்யாம் சிரித்தான். ஆர்த்தி! கடந்த முணு வருஷ காலமா நீயும் நானும் ஒருத்தரையொருத்தர் விரும்பிட்டு வர்றோம். மலை ஏறுகிற என்னுடைய அட்வென்ச்சரைப் பத்தி இது நாள் வரைக்கும் நீ பெருமையாத்தான் பேசிட்டு வந்திருக்கே... என்னோட அட்வென்ச்சருக்காக நான் ஹிமாலயன் ஹில்ஸ் போகும் போது என் கையை குலுக்கி – நெத்தியிலே முத்தம் வெச்சு, கங்கிராட்ஸ் சொல்லியிருக்கே... நீங்க சீக்கிரமே எவரெஸ்ட்டைத் தொடணும்ன்னு... ஆசைப்பட்டிருக்கே, ஆனா, இன்னிக்கு என்னடான்னா... கிராமத்துப் பொண்ணு மாதிரி ‘நை... நை...’ன்னு முனகறியே...?

    என்ன விஷயம்...?"

    வந்து... வந்து...

    என்ன சொல்லு...?

    எங்கப்பாவும்... அம்மாவும் பயப்படறாங்க...

    அவங்க பயப்பட்டா எடுத்துச் சொல்ல வேண்டியதுதானே?

    சொன்னேன். அவங்க கேட்கலை... இனிமே இந்த மலைக்குப்போகிற வேலையெல்லாம் வேண்டாம்ன்னு மாப்பிள்ளைகிட்டே சொல்லிடம்மான்னு சொன்னாங்க.

    போய் சொல்லிட்டேன்னு சொல்லிடு

    என்னங்க... நீங்க... ஆர்த்தி ஏதோ பேச முயன்ற அந்த விநாடி பின்பக்கம் அந்தக் குரல் கேட்டது. பெண்குரல்.

    ஹல்லோ... ஷ்யாம்...

    திரும்பிய ஷ்யாம் மலர்ந்தான். பாப் தலையில் - அழகாய் – சிரித்துக் கொண்டு அந்தப் பெண் தெரிந்தாள்.

    ஓ... மிஸ் டெய்ஸி... நீங்களா...? எங்கே இந்தப் பக்கம்? கேட்டுக் கொண்டே எழுந்தான்.

    ஏன், இந்த பீச்சுக்காத்து உங்களுக்கு மட்டும்தான் சொந்தமா? நான் காத்து வாங்க வரக்கூடாதா...? மேக்ஸியில் இருந்த டெய்ஸி சிரித்துக் கொண்டே கேட்டாள்.

    வரலாம்... வரலாம். தாராளமா வரலாம்... தோள்களை குலுக்கிய ஷ்யாம் ஆர்த்தியிடம் திரும்பினான்.

    ஆர்த்தி! ஸி ஈஸ் மிஸ் டெய்ஸி... எங்க மவுண்டேரியன் கிளப்பில் ஒரு மெம்பர்

    வணக்கம்...

    "வணக்கம்! ஷ்யாம்!

    Enjoying the preview?
    Page 1 of 1