Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நீலம் என்பது நிறமல்ல...
நீலம் என்பது நிறமல்ல...
நீலம் என்பது நிறமல்ல...
Ebook79 pages27 minutes

நீலம் என்பது நிறமல்ல...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கண்ணாடி அணிந்து உயரமாய் இருந்த இந்தியத் தலைவர், ஆதர்ஷின் கையைப் பற்றி அழுத்தமில்லாமல் குலுக்கினார். "வாருங்கள் ஆதர்ஷ்..." என்றார். விழாமல் இருந்த பல் வரிசையில் சிரித்துக் கொண்டே.
 ஆதர்ஷ் உட்கார்ந்தான்.
 "ஏதாவது முக்கியப் பணியில் இருந்தீர்களா ஆதர்ஷ்?"
 "இல்லை... பீனாவோடு அறிவுக்கூடம் பார்க்க 17-ஆவது மார்க்கத்தில் போய்க்கொண்டிருந்தேன். டெலிவிஷனில் நீங்கள் என்னைக் கூப்பிட்டீர்கள். உடனடியாய் வருகிறேன்."
 இந்தியத் தலைவர் தன் வழுக்கையை வலது கை விரல்களால் தடவிக்கொண்டபடியே ஆதர்ஷை ஏறிட்டார்.
 "ஆதர்ஷ்! உலக விஞ்ஞானத் தலைவர் சாங்கோ எட்வின் நேற்றைக்கு ருஷ்யாவில் வான இயல் வல்லுநர்கள் மாநாட்டில் ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார். அந்தக் கருத்தைக் குறித்து விவாதிக்கவே உங்களை உடனடியாய் வரச்சொன்னேன்."
 ஆதர்ஷ் குழப்பமாய் இந்தியத் தலைவரைப் பார்த்தான். அவர் மெல்ல எழுந்து போய் அறையின் மூலையிலிருந்த டெலிவிஷனை இயக்கினார். –
 டெலிவிஷன் திரை சில நிமிஷம் வெளிச்சக்கோடுகளைத் தின்றுவிட்டு உயிர் பெற்றது. அடர்த்தியான நிற பேதங்களில் ஒரு மாநாட்டுக்குரிய லட்சணம் திரையில் தெரிந்தது. Space என்ற ஆங்கில எழுத்துக்கள் மேடையின் பின்புறம் பெரிது பெரிதாய்த் தெரிய, அரங்கம் பூராவும் வல்லுநர்கள் நரையோடிப் போன தலைகளிலும், வழுக்கைத் தலைகளிலும்அரைவட்ட வரிசையில் உட்கார்ந்திருந்தார்கள்.காமிரா மேடையை நோக்கிப் போக விஞ்ஞானத் தலைவர் சாங்கோ எட்வின் சாய்வாய் நின்றபடி மைக்கில் பேசிக்கொண்டிருந்தார். கடுமையான ஆங்கிலத்தை டெலிவிஷன் டெக்கில் இருந்த இன்டர்ப்ரெட்டர் கம்ப்யூட்டர் உடனுக்குடன் தமிழில் தாரை வார்த்தது.
 "உலகத்தில் தோன்றிய எந்தப் பொருளுக்குமே அழிவு உண்டு என்பது நாம் கண்ணால் பார்க்கிற உண்மை. அப்படியானால் இந்த உலகத்துக்கு ஒரு அழிவு வர வேண்டுமல்லவா? அந்த அழிவு என்றைக்கு நேரும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. ஆனால் என்னுடைய கடுமையான ஆய்வின் பலனாய் இந்த உலகத்தின் அழிவு நாளை என்னால் நிர்ணயம் பண்ண முடிகிறது. நான் சொல்லப் போவது வெறும் புரளியல்ல. என் விஞ்ஞான நண்பர்களே! உலகம் முழுவதும் வேரோடிப் போயிருக்கும் அணுக்கதிர் வீச்சுக்களால் பூமியின் காற்று மண்டலம் வெகுவாய் பாதிக்கப்பட்டிருக்கிறது. காற்று மண்டலத்தில் எதிர்வினை சக்திகளோடு கிரியை புரிந்து அணுக்கதிர்கள் மாபெரும் சக்தியோடு இயங்கி வருகின்றன. அந்த சக்தி பூமியின் வலம் வரும் பாதையைக் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றிக் கொண்டேபோகிறது. இன்னும் தெளிவாய் சொல்லப்போனால், நமது பூமிப் பந்து கொஞ்சம் கொஞ்சமாய் சூரியனை நோக்கி நகர்த்தப்பட்டு வருகிறது. இந்த விபரீதப் போக்கு தொடருமானால் இன்னும் இருபதே வருடங்களில் சூரியன் பூமியை விழுங்கி விடும் பேரபாயம் நிகழப்போகிறது. அதாவது 2100 - ஆவது ஆண்டின் இறுதிக்குள்ளாக இந்தப் பூமி அழியப் போகிறது..."
 ஆதர்ஷ் அதிர்ந்து போய் இந்தியத்தலைவரைப் பார்த்தான். இந்தியத் தலைவர் ஒரு கவலையான புன்னகை யோடு சொன்னார்."ஆதர்ஷ்! அவர் சொல்லுவதில்நூற்றுக்கு நூறு உண்மை இருக்கிறது. அவர் பேச்சை இன்னமும் கவனியுங்கள்...''
 ஆதர்ஷ் டெலிவிஷன் திரையைப் பார்த்தான்.
 உலக விஞ்ஞானத் தலைவர் சாங்கோ எட்வின் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். "இது வெறும் புரளியல்ல. என்னருமை விஞ்ஞான நண்பர்களே! கடந்த நாலு வருஷ கால இயற்கையை உன்னிப்பாய் கவனித்துப்பாருங்கள். 1984-ஆம் வருஷம் பெய்தமழையின் அளவு இந்த 2085-ஆம் வருஷம் பெய்கிறதா...? சென்ற 2084-ஆம் வருஷம் பூராவும் உலகம் முழுவதும் இரண்டே மணி நேரந்தான் மழை பெய்திருக்கிறதுதண்ணீர்த் தேவைகளைச் சமாளிக்க ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் ம மத்திரைகளைத் தயாரிக்க ஆரம்பித்துள்ளன. விஞ்ஞான அறிவில் எவ்வளவோ தேறிவிட்டோம்... ஆனால் இயற்கையை வெகுவாக – மோசமாகப் பகைத்துக் கொண்டோம்.''
 பார்வையாளர்கள் பக்கமாய் காமிரா நகர, ஒருவர் எழுந்து சாங்கோ எட்வினிடம் கேள்வியொன்றைக் கேட்டார்.
 "இந்தப் பூமியின் சிதைவைத் தடுத்து நிறுத்தும் வகையில் தாங்கள் ஏதேனும் மாற்று யோசனை வைத்திருக்கிறீர்களா என்று அறிய விரும்புகிறேன்.'

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 4, 2024
ISBN9798224145935
நீலம் என்பது நிறமல்ல...

Read more from Rajeshkumar

Related to நீலம் என்பது நிறமல்ல...

Related ebooks

Related categories

Reviews for நீலம் என்பது நிறமல்ல...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நீலம் என்பது நிறமல்ல... - Rajeshkumar

    1

    அந்தச் சதுர வடிவக் கார் மணிக்கு முன்னூறு மைல் வேகத்தில் பீறிட்டுக்கொண்டிருக்க - காரின் உள் முகப்பில் இருந்த டெலிவிஷன் திரையில் அந்த எழுத்துக்கள் ரத்தச் சிவப்பில் மின்னி, ‘பீப்... பீப்...’ என்றது.

    காரைக் கையாண்டு கொண்டிருந்த ஆதர்ஷும், அவன் தோளையொட்டினாற் போல் உட்கார்ந்திருந்த பீனாவும் டெலிவிஷன் திரையை ஏறிட்டார்கள்.

    "குடிமகன்: ஆதர்ஷ், எண் 7876139. பணி: விண்வெளிப் பயணப் பிரிவு. உடனடியாய் இந்தியத் தலைவரால் அழைக்கப்படுகிறார். நிமித்தம் அரசுப்பணி.’’

    காரின் வேகத்தைக் குறைத்து சாலையோரம் ஒதுக்கினான் ஆதர்ஷ். பின்னால் வந்த ஒரு கார் ‘சீய்க்க்க்’என்று காற்றை உஷ்ணப்படுத்திக் கொண்டு போனது.

    பீனா கவலையாய் ஆதார்ஷை ஏறிட்டாள்.

    என்ன ஆதர்ஷ்... திடீரென்று இந்தியத் தலைவர் அழைப்பு?

    "அதுதான் யோசிக்கிறேன் பீனா...’’ ஆதர்ஷும், பீனாவும் 2085-ஆம் வருஷத்திய தம்பதிகள். போன மாதம் கம்ப்யூட்டரால் திருமணப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு - இரண்டு மணி நேரம் கம்ப்யூட்டரால் பிறந்த மேனியாய் அலசப்பட்டு, ‘திருமணம் செய்து கொள்ளத்தகுதியானவர்கள்; சண்டை சச்சரவுகள் வர வாய்ப்பில்லை’யென்று பரிந்துரைக்கப்பட்டவர்கள். இரண்டு பேருக்குமே செம்பொன் நிறம். ஆதர்ஷுக்கு நாவல் பழநிறக் கண்களும், பீனாவுக்குப் பழுப்பு நிறக் கண்களும் விசேஷமான அமைப்பு. அந்த 2085-ஆம் வருஷத்தில் தமிழ் சுத்தமடைந்திருந்தது. சென்னை பாஷையும் கோயமுத்தூர் கொங்கு பாஷையும் காணமல் போயிருந்தன. எல்லோருமே சுத்தத் தமிழ் பேசினார்கள்.

    ஆதர்ஷ் காரிலிருந்த குட்டி கம்ப்யூட்டரை இயக்கி, மைக் மாதிரி இருந்த சாதனத்தை எடுத்துப் பேசினான்.

    "போக்குவரத்துப் பிரிவுத் தலைவர்க்கு என் வந்தனம். நான் 7876139-ஆவது எண்ணுள்ள குடிமகன். அரசு நியமித்த விண்வெளி ஆய்வாளன். சென்ற நிமிஷம் இந்தியத் தலைவரிடமிருந்து எனக்கு அவசர அழைப்பு வந்தது. அரசு மாளிகைக்கு எதிரே இருக்கும் சாலைப்போக்குவரத்தில் நான் கலந்து கொள்ள முடியுமா?’’

    ஆதர்ஷ் கேட்க - மறுமுனை அமர்த்தலாய் கரகரத்தது.

    நிச்சயமான அழைப்புதானா?

    "ஆமாம்...’’

    "பொய் சொன்னால் கண்டுபிடித்து விடுவோம்...’’

    "இல்லை... அழைப்பு உண்டு... சந்தேகம் இருந்தால் அரசு மாளிகையில் விசாரித்துக் கொள்ளலாம்.’’

    இப்போது நீங்கள் எங்கிருந்து பேசுகிறீர்கள்?

    17-ஆவது மார்க்கம், 56-ஆவது பிரிவு சாலை...

    "அப்படியானால் நீங்கள் போகலாம். சரியாய் ஏழு மணி பதினாறாவது நிமிஷம் போக்குவரத்தில் கலந்து கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் விபத்து ஏற்படும்.’’

    "இல்லை... நீங்கள் சொன்ன நேரத்துக்குப் போய்விடுவோம்.’’

    உங்களோடு யார் வருகிறார்கள்?

    "என் மனைவி பீனா...’’

    எண்?

    209881.

    "நீங்கள் புறப்படலாம்...’’

    காரை இயக்கினான் ஆதர்ஷ். பட்டனைத் தட்டி, கியரை மாற்றி, உச்சபட்ச வேகத்திற்கு வந்தான். சதுரக் கார் ஹம்மென்று காற்றைச் சீய்த்தது. ஐந்தே நிமிஷம்! பதினேழாவது மார்க்கம் முடிந்து - அரசு மாளிகையின் பிரதான சாலைக்குக் கார் வந்து, போக்குவரத்துத் துறை சொன்ன அந்த 7.16-ஆவது நிமிஷத்திற்காகக் காத்திருந்தது.

    ஆதர்ஷ் தன் மணிக்கட்டில் இருந்த எலக்ட்ரானிக் வாட்சைப் பார்த்தான்.

    7.14.

    பீனா அவன் தோளில் சாய்ந்தாள்.

    இந்தியத் தலைவர் எதற்காகக் கூப்பிட்டிருப்பார் ஆதர்ஷ்? ஏதாவது தவறு செய்தீர்களா?

    ஆதர்ஷ் சிரித்தான். என்னுடைய சேவைப்பதிவேட்டில் முதல் தரம் என்று எழுதி இந்தியத்தலைவரே கையெழுத்திட்டிருக்கிறார் பீனா.

    பின் என்னவாக இருக்கும்?

    "போய்ப் பார்ப்போம்.’’

    வாட்ச்சில் 7.16 மின்ன, காரை, ஆயிரக்கணக்கான கார்கள் நீந்தும் அந்தச் சாலையில் நுழைத்தான் ஆதர்ஷ்.

    சில மில்லிமீட்டர் இடைவெளிகளில் கார்கள் கும்பல் கும்பலாய் சீறிக்கொண்டே விரைய, நடுவில் ஆதர்ஷின் கார் எதன்மீதும் மோதிக்கொள்ளாமல் பறந்தது.

    முக்கிய சந்திப்புக்களில் நின்றிருந்த கம்ப்யூட்டர்கள் கார்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தி அவை விரும்பும் திசைக்கு வழி கொடுத்தன.

    "7.20-க்கு அரசு மாளிகையின் வாசல் வந்தது.

    செக்யூரிட்டி பிரிவில் நின்றிருந்த சிவப்பு உடை அதிகாரிகள் ஆதர்ஷின் காரை மொய்த்தார்கள்.

    "ஆதர்ஷ்... விண்வெளிப் பிரிவு?’’

    நான்தான்.

    வந்தனம்... இந்தியத் தலைவர் உங்களுக்காகக் காத்திருக்கிறார். உங்கள் மனைவி செல்ல அனுமதியில்லை.

    தெரியும். அவள் வரவேற்பறையில் இருப்பாள். காரோடு உள்ளே போனான் ஆதர்ஷ். காரை விட்டு இறங்கி பாலிமர்

    Enjoying the preview?
    Page 1 of 1