Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

உன் பார்வை நான் அறிவேன்!
உன் பார்வை நான் அறிவேன்!
உன் பார்வை நான் அறிவேன்!
Ebook100 pages23 minutes

உன் பார்வை நான் அறிவேன்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இன்பசாகருக்கு ஆச்சரியமாய் இருந்தது.
 'அதற்குள் அந்தப் பெண் எங்கே போனாள்?' சுற்றும் முற்றும் பார்வையை துரத்தினார். அவள் தட்டுப்படவில்லை.
 பெட்டிக்கடையை நெருங்கினார். காலை நேர பேப்பர்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த பெட்டிக்கடை ஆள் இன்பசாகரை பார்வையில் வாங்கியதும் மிரண்டான்.
 "வணக்கம் சாரே!"
 குரலில் மலையாள வாசனை.
 "ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு முந்தி உன் கடை வாசல்ல ஒரு பொண்ணு நின்னுட்டிருந்தாளே?"
 "ஆமா சாரே..."
 "அவ எங்கே?"
 "போயிட்டா சாரே...!"
 "எந்தப் பக்கம் போனா...?"
 பக்கத்து சந்தைக் காட்டினான் அவன். "அதுல போன மாதிரி இருந்தது சாரே..."
 "அவளை உனக்கு முன்னாடியே தெரியுமா?"
 "தெரியாது சாரே..."
 "பொய் சொல்லாதே."சத்தியமா தெரியாது சாரே."
 "உன் கடையில என்ன வாங்கினா...?"
 "ஒரு பாக்கு பொட்டலம், தினத்தந்தி பேப்பர் வாங்கினா சாரே."
 இன்பசாகர் பக்கத்து சந்துக்குள் பாய்ந்தார் குறுகலான சந்து. மூத்திர நாற்றம். சுவரில் சினிமா போஸ்டர்கள். ஆள் நடமாட்டம் அறவே இல்லை. தெரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
 ஐம்பதடி தூரம் போனதுமே - அந்த சந்து இரண்டு கிளைகளை விட்டு பிரிந்தது.
 இன்பசாகர் நின்று யோசித்தார்.
 'எந்தப் பக்கம் போயிருப்பாள்?'
 'நான் கட்டிடத்திலிருந்து வெளியே வருவதை அவள் பார்த்திருக்க வேண்டும்...!'
 'உடனே தப்பிவிட்டாள்.'
 'அவளிடம் ஏதோ தப்பு இருக்கிறது...!'
 'இல்லாவிட்டால் ஓடி ஒளிய வேண்டிய அவசியம் இல்லையே.'
 இன்பசாகர் யோசித்துக் கொண்டிருக்கும்போதே இடது பக்க கிளை சந்திலிருந்து - சைக்கிள் மணிச்சத்தம் கேட்டது.
 நிமிர்ந்தார்.
 மப்ளரால் முண்டாசு கட்டிய பால்காரன்.
 இன்பசாகர் அவனை மறிக்க - அவன் சட்டென்று சைக்கிளிலிருந்து இறங்கினான்.
 "சார்."
 "ஒரு பொண்ணு உனக்கு எதிர்பட்டாளா?"
 "பொ... பொண்ணா?ம்... ரோஸ் கலர் சேலை கட்டியிருப்பா. தோள்ல ஒரு பை மாட்டியிருப்பா."
 "பா... பார்க்கலை சார்."
 இன்பசாகர் ஒரு முடிவுக்கு வந்தார்.
 அப்படியானால் அவள் இந்த சந்தில்தான் போயிருக்க வேண்டும்.
 பாய்ந்தார்.
 நூறு மீட்டர் தூரம் இருந்த அந்த சந்து - ஒரு நிமிஷ நடைக்குள்ளாகவே மெயின் ரோட்டில் போய் முட்டிக் கொண்டது.
 அந்த அகலமான மெயின் ரோட்டில் போக்குவரத்து ஆரம்பமாயிருக்க... ரோஸ் கலர் சேலை கட்டிய அந்தப் பெண்ணைத் தேடினார் இன்பசாகர்.
 அவள் தட்டுப்படவில்லை

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 9, 2023
ISBN9798223021520
உன் பார்வை நான் அறிவேன்!

Read more from Rajeshkumar

Related to உன் பார்வை நான் அறிவேன்!

Related ebooks

Related categories

Reviews for உன் பார்வை நான் அறிவேன்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    உன் பார்வை நான் அறிவேன்! - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    க்ரைம் ப்ராஞ்ச் கருங்கல் கட்டிடம்.

    விடியற்காலையின் கிழக்கு திசை சூரியனை பெற்றெடுக்கும் முயற்சியில் இருந்தது. கட்டிட வளாகத்தில் இருந்த வேப்ப மரங்களில் காகங்கள் கரைந்து கொண்டிருக்க - க்ரைம் ப்ராஞ்ச் ஆபீஸர் இன்பசாகர் தன் புல்லட்டில் தடதடத்து - உள்ளே நுழைந்து - ஓரமாய் நிறுத்தி ஸ்டாண்ட் இட்டார்.

    செண்ட்ரி கான்ஸ்டபிள்கள் அடித்த சல்யூட்டை பொருட்படுத்தாமல் - வராந்தாவில் வேக நடை போட்ட இன்பசாகர்க்கு முப்பது வயது இருக்கலாம். சதை பிடிப்பான சதுர முகம். அரட்சியான உடம்புக்கு ஏற்ற உயரம். யூனிஃபார்முக்கு மிகச் சரியாய் பொருந்தினார். வராந்தாவின் பாதி வழியிலேயே இன்ஸ்பெக்டர் பிலிப்ஸ் எதிர்கொண்டார்.

    குட்மார்னிங் சார்.

    ஸாரி மிஸ்டர் பிலிப்ஸ்! இது எனக்கு குட்மார்னிங் இல்லை. பேட் மார்னிங்... போன்ல விஷயத்தைக் கேட்டதும் அதிர்ந்து போயிட்டேன். நம்ம கஷ்டடியில் இருந்த விசாரணைக் கைதி கெளதம் தற்கொலை பண்ணிட்டு சாகிற வரைக்கும் நீங்க பண்ணிட்டிருந்தீங்க?

    அது வந்து சார்.

    ஐ டோண்ட் வாண்ட் எனி அக்னி எக்ஸ்ப்ளனேஷன் ஃப்ரம் யூ.

    ப்ளீஸ் ஹியர்... மீ... சார்.

    சொல்லுங்க இன்பசாகர் நடந்து கொண்டே இருக்க இன்ஸ்பெக்டர் பிலிப்ஸ் தொடர்ந்தார்.

    அந்த விசாரணைக் கைதி கௌதமோட கைக்கு ஒரு துரு பிடிச்ச பிளேடோட பாதி பகுதி கிடைச்சிருக்கு சார்.

    எப்படி கிடைக்கும்?

    தெரியலை சார்... அவனே உடம்பில் எங்கேயாவது மறைச்சு கொண்டு வந்திருக்கலாம்.

    இன்பசாகர் எரிச்சலானார். இதோ பாருங்க பிலிப்ஸ் ஏதாவது சொல்லணுமேங்கிறதுக்காக எதை வேணுமின்னாலும் சொல்லாதீங்க. அந்த கௌதமை ரெண்டு நாளா நிர்வாணமா நிக்க வைச்சுதான் விசாரணை பண்ணிட்டிருக்கோம். பாதி பிளேடு அவனால எப்படி மறைச்சு கொண்டு வந்திருக்க முடியும்.

    பிலிப்ஸ் மெளனமாய் தொடர்ந்தார்.

    இன்பசாகர் கேட்டார்.

    சம்பவம் நடந்தபோது மணி எவ்வளவு?

    சரியா அஞ்சு பத்து சார்.

    செண்ட்ரீஸ் எவ்வளவு பேர் இருந்தாங்க?

    ரெண்டு பேர்.

    கெளதம் அந்த துரு பிடிச்ச பிளேடால தன் மணிக்கட்டு ரத்த குழாயை அறுத்துகிட்டு மண்டையை போடற வரைக்கும் யாரு கவனிக்கலை...?

    அவன் அறுத்துக்கிட்டதே தெரியலை சார். ரத்தம் ஏராளமா மிஞ்சு போறதைப் பார்த்த பின்னாடிதான்... ரத்தக்குழாயை அறுத்துகிட்ட விஷயம் தெரிஞ்சுது.

    ராத்திரி கடைசியா கௌதமை மீட் பண்ணினது யாரு?

    நான்தான் சார்.

    அதுக்குப் பின்னாடி அவனைப் பார்க்க யாரும் வரலை?

    Enjoying the preview?
    Page 1 of 1