Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

போகப் போகத் தெரியும் or ஊதா நிற தேவதை
போகப் போகத் தெரியும் or ஊதா நிற தேவதை
போகப் போகத் தெரியும் or ஊதா நிற தேவதை
Ebook229 pages53 minutes

போகப் போகத் தெரியும் or ஊதா நிற தேவதை

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நேரம் நடுநிசி 2.35 மணி.
 பாலப்பம்பட்டிக்கு பக்கத்தில் அந்த திடீர் செக்போஸ்ட் உதயமாகியிருந்தது. அடர்ந்த இருட்டுக்கு இடையே குறுக்கு கம்பம். சில காக்கி சட்டைகள். டார்ச் லைட்டின் வெளிச்ச வட்டங்கள். கறுப்பு உருவங்களாய் நிற்கிற மரங்களை அசைத்தபடி குளிர்ந்த காற்று.
 அந்த வழியாகப் போகிற எந்த வாகனமாக இருந்தாலும் நிறுத்தி சல்லடை போட்டுப் பார்த்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அந்த காக்கி கும்பலில் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் மையமாய் நின்றிருந்தார். அவருக்கு அருகில் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தெரிந்தார். இளம் வயது. அந்த இராத்திரியிலும் ட்ரிம்மாக டியூட்டி நேர தீவிரம் குறையாமல் இருந்தார்.
 "எதுவும் மாட்டலையே சார்?"
 "மாட்டும்... மாட்டும். இரண்டரை மணிக்கு மேல்தான் பட்சிகள் கூண்டைவிட்டு வெளியே வரும்."
 தூரத்தில் ஹெட்லைட் வெளிச்சம் தெரிந்தது.
 "காரா?" 
 பக்கத்தில் வந்ததும் அது 'வேன்' என்று தெரிந்தது.
 "கான்ஸ்டபிள்! வேனை சோதனை பண்ணுங்க."
 "சரி சார்..."
 இரண்டு கான்ஸ்டபிள்கள் வேனுக்குள் நுழைய, பன்னீர்செல்வம் டிரைவர் இருக்கையோரமாய் வந்து நின்றார்டிரைவர் பயத்துடன் சல்யூட் அடித்து - சீட்டைவிட்டு இறங்கிக் கைகட்டி நின்றான்.
 பன்னீர்செல்வத்தின் பார்வை எக்ஸ்ரேத்தனத்தோடு வேனுக்குள் இருந்த நபர்களை ஊடுருவிற்று. பெரும்பாலும் இளைஞர்கள். தவிர ஒன்றிரண்டு இளம் பெண்களும், ஒரு வயதான அம்மாளும் கடைசி இருக்கையில் தெரிந்தார்கள்.
 "வேன் எங்கே போகுது...?" 
 டிரைவர் அவசரமாய்ப் பதில் சொன்னான்.
 "பழனி சார்..."
 "எதுக்காக பழனி போறீங்க...?"
 "கல்யாணம் சார்..."
 "கல்யாணம் என்னிக்கு...?"
 வேனுக்குள் இருந்து ஒருவன் இறங்கிவந்து பதிலளித்தான்.
 "கல்யாண பார்ட்டி சார் நாங்க... நாளைக்குக் காலைல கல்யாணம்."
 அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கான்ஸ்டபிள்கள் இறங்கி வந்து 'ஒன்றுமில்லை' என்று சைகை காட்டினார்கள்.
 சம்பிரதாயமாய் அவர்களை விசாரித்து விட்டு - "போகலாம்..." என்றார் பன்னீர்செல்வம்.
 பின்பு - இன்ஸ்பெக்டர் கஜேந்திரனைப் பார்த்துச் சொன்னார்.
 "சார்... பனிரெண்டு மணியிலிருந்து இதுவரைக்கும் நாற்பது வண்டிகளை சலிச்சு அனுப்பியாச்சு. நமக்குக் கிடைச்ச தகவல் சரிதானா...?"
 கஜேந்திரன் உறுதியாகத் தலையசைத்தார்.நம்பகமான ஒருவர்கிட்டே இருந்துதான் தகவல் வந்திருக்கு பன்னீர்செல்வம். மாவட்ட கலெக்டர் ஸ்பெஷலா போன் பண்ணி நம்மகிட்டே விசாரிக்கச் சொல்லியிருக்கார். இடைத்தேர்தல் சமயத்தில் கள்ளச்சாராயத்தை உள்ளே விடக் கூடாதுன்னு கடுமையான உத்தரவிட்டிருக்கார்..."
 "போகாது சார்... இந்த வழியா கள்ளச்சாராயம் நிச்சயமா உள்ளே போகாது. அந்தக் காரை நிறுத்துங்க..."
 வேகமாய் வந்துகொண்டிருந்த அந்தக் கார் செக்போஸ்ட்டின் குறுக்குக் கம்பத்தை திடீரெனச் சந்தித்து 'கிறீச்' சென்று பிரேக் அடித்து நின்றது.
 டிரைவிங் இருக்கையில் வெள்ளை உடையில் டிரைவர் தெரிந்தார். பின்சீட்டில் நாற்பத்தைந்து வயது நபர் பட்டை கண்ணாடியுடன் சாய்ந்து உட்கார்ந்திருந்தார்.
 மென்மையான குரலில்-
 "டிரைவர்... என்னாச்சு...?" என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
 "செக்போஸ்ட் சார்..."
 ஒரு கான்ஸ்டபிள் காருக்குள் டார்ச் அடித்துப் பார்த்தார். பன்னீர்செல்வம் டிரைவரைப் பார்த்து -
 "டிக்கியைத் திறந்து காட்டுங்க..." என்றார்.
 பின்சீட் நபர் காரின் ஜன்னல் கண்ணாடியைக் கீழிறக்கி கூப்பிட்டார்.
 "இன்ஸ்பெக்டர்... ஒரு நிமிடம் இங்கே வாங்க..."
 பன்னீர்செல்வம் பின்சீட்டை ஏறிட்டார்.
 "என்ன?"
 "என்ன பிரச்சினை...? எதுக்காக எங்க காரை சோதனை போடறீங்க...?"
 "கள்ளச்சாராயம் இந்த வழியா கடத்தப்படப் போறதா எங்களுக்கு தகவல் கிடைச்சிருக்கு..."
 "அதனாலதான் இந்தக் காரை சோதனை பண்றீங்களா...?ஆமா..."
 அந்த மனிதரின் முகத்தில் லேசான புன்னகை உற்பத்தியானது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 20, 2023
ISBN9798223099246
போகப் போகத் தெரியும் or ஊதா நிற தேவதை

Read more from Rajeshkumar

Related to போகப் போகத் தெரியும் or ஊதா நிற தேவதை

Related ebooks

Related categories

Reviews for போகப் போகத் தெரியும் or ஊதா நிற தேவதை

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    போகப் போகத் தெரியும் or ஊதா நிற தேவதை - Rajeshkumar

    1

    இரவு ஒன்பதே முக்கால் மணி.

    வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் கோவை இரயில் நிலையத்துக்குள் இரைச்சலோடு நுழைந்தது. அதுவரையிலும் அழுது வடிந்துகொண்டிருந்த இரயில் நிலையம் டியூப்லைட் வெளிச்சத்தில் நிரம்பியது. பெஞ்சுகளிலும், ஓய்வு அறைகளிலும் சாவகாசமாய் உட்கார்ந்து இருந்தவர்கள் பரபரப்போடு - மூட்டை முடிச்சுகளை அள்ளிக்கொண்டு, வசதியான இரயில் பெட்டிகளைத் தேடினார்கள். காப்பியும் டீயும் கண்ணாடி தம்ளர்களில் சன்னல்கள் அருகே நகர்ந்தன. அடுத்த பிளாட்பாரத்தில் சேரன் எக்ஸ்பிரஸ் சென்னை போகக் காத்திருந்தது.

    ஏர்பேக்குகளை தோளில் மாட்டிக் கொண்டு - விநோத்தும் ரவிச்சந்திரனும் கீழே இறங்கினார்கள். இரண்டு பேரும் இளைஞர்கள். இருபத்தைந்து வயதிலிருந்து முப்பது வயதுக்குள் இருந்தார்கள். ஜீன்ஸ் பேண்ட்டிலும் முரட்டு சட்டையிலும் திடகாத்திரமாய் தெரிந்தார்கள்.

    இருவரும் முட்டி மோதும் கும்பலை சிரமப்பட்டு விலக்கிக்கொண்டு பிளாட் பாரத்தில் நடந்தார்கள்.

    மணிக்கட்டில் நேரம் பார்த்தான் விநோத்.

    9.50.

    இரயில் ஒரு மணி நேரம் தாமதம்...

    ஒரு காப்பி சாப்ட்டுட்டு போலாமா? ரவிச்சந்திரன் கேட்க, விநோத் தலையாட்டினான்.

    மாமாவோட கிராமம் பொள்ளாச்சியிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்துல இருக்கு. இங்கிருந்து பஸ் பிடிச்சு பொள்ளாச்சி போய் சேரவே பதினோரு மணியாயிடும். அங்கேயிருந்து கிராமத்துக்கு கடைசி பஸ் சரியா பதினோரு மணிக்கு இருக்கு. ஒரு விநாடியைக்கூட வேஸ்ட் பண்ணாமே பொள்ளாச்சி பஸ்சை நாம பிடிச்சாகணும். காப்பி சாப்ட்டுட்டு இருந்தால் கிராமம் போய் சேரமுடியாது.

    அப்ப காப்பி வேண்டாங்கிறே?

    வேண்டாம்.

    இருவரும் வேக நடையில் தடதடவென்று படிகளில் சரிந்து டிக்கெட்டை பரிசோதகரிடம் கொடுத்துவிட்டு வெளியே வந்தார்கள். வெளியே கோவை - சோடியம் வேபர் வெளிச்சத்தில் குளித்துக் கொண்டிருக்க - காத்திருந்த ஆட்டோ வரிசைக்கு வந்தார்கள்.

    டிரைவர் ஒருவர் கேட்டார்.

    எங்கே சார் போகணும்?

    உக்கடம் பஸ் ஸ்டாண்ட்...

    பதினஞ்சு ரூபா ஆகும்.

    ஏம்பா இப்படி கொள்ளையடிக்கறீங்க?

    இதோ பார் சார்... ஏறப் பிரியம் இருந்தால் ஏறுங்க. இல்லே போயிட்டிருங்க. நாட்டுல எம்.எல்.ஏ.க்களும், மந்திரிகளும் கொள்ளையடிச்சா கண்டுக்க மாட்டீங்க. ஒரு ஆட்டோ டிரைவர் ரெண்டு ரூபா அதிகமா கேட்டுட்டா போதும்... பொங்கி எழுந்துடுவீங்க. இந்தியா உருப்படாமே போயிட்டிருக்கிறதுக்கு காரணம் இதான் சார்...

    வேறு வழியில்லாமல் ஆட்டோவுக்குள் ஏறி உட்கார்ந்தார்கள். டிரைவர் தலைக்கு மப்ளரை சுற்றிக்கொண்டு - கிக்கரை உதைத்தார்.

    ஆட்டோ கிளம்பி வேகம் பிடித்தது.

    ஊரைப் பார்த்தாயா... ஏ.சி. பண்ணின மாதிரி இருக்கு.

    அதான் கோயமுத்தூர். எல்லாருக்கும் இலவச ஏ.சி.

    ஆட்டோ போக்குவரத்து குறைந்த ரோட்டில் வேகம் பிடித்து உக்கடம் பஸ் நிலையத்தை நெருங்கியபோது - பொள்ளாச்சி போகும் பஸ் ஒன்று வெளியே வந்து கொண்டிருந்தது.

    ஆட்டோவை நிறுத்தி பணத்தைக் கொடுத்துவிட்டு ஓடிப்போய் - அந்த பஸ்சில் ஏறிக்கொண்டார்கள்.

    இருக்கைகள் காலியாகவே இருந்தன.

    வசதியான இருக்கைகளை தேடிப் பிடித்து உட்கார்ந்தார்கள். மெதுவாய் ஊர்ந்து கொண்டிருந்த பஸ் வேகம் பிடித்தது.

    ரவிச்சந்திரன் கேட்டான்.

    விநோத்! உன்னோட மாமா இருக்கிற கிராமத்துக்கு கடைசியா எப்ப வந்தே?

    ஏழெட்டு வருஷமாவது இருக்கும்.

    அடேங்கப்பா... அப்படின்னா கிராமம் ரொம்ப மாறியிருக்கும்.

    கண்டிப்பா.

    பெரிய கிராமமா?

    சின்ன கிராமம்தான். எனக்கு அந்த தாழையூர் கிராமத்தையே பிடிக்காது. அம்மாவோட கட்டாயத்துக்காக வேண்டா வெறுப்பா அங்கே போவேன். போன மறுநாளே ஏதாவது ஒரு காரணத்தை சொல்லிட்டு திரும்பி வந்துடுவேன். அம்மா இறந்த பின்னாடி ‘கிராமத்துக்கு போ’ன்னு கட்டாயப்படுத்த யாருமில்லை. அதனால கடந்த ஏழெட்டு வருடமா அந்த கிராமத்துக்கு போகாமே இருந்தேன். ஆனால் இப்ப அந்த கிராமத்துக்கு போய் பத்து நாளாவது இருந்துட்டு வரணும் போல் மனசுக்குள் ஒரு ஆசை...

    அதுக்கு என்ன காரணம்?

    சார்... டிக்கெட்...

    ரெண்டு பொள்ளாச்சி கொடுங்க.

    கண்டக்டர் டிக்கெட்டை கொடுத்துவிட்டு நகர, ரவிச்சந்திரன் மறுபடியும் கேட்டான்.

    கிராமத்துக்கு இவ்வளவு ஆசையா போக என்ன காரணம்?

    சொல்லட்டுமா?

    உம்.

    முதல் காரணம் என்னோட மாமா பொண்ணு ராஜேசுவரி. மூக்கை உறிஞ்சு கிட்டு கில்லி விளையாடிட்டிருந்த அவளை எனக்கு ஆரம்பத்துல பிடிக்காமே இருந்தது. சமீபத்துல ஒரு கல்யாண ஆல்பத்தில் அந்த ராஜேசுவரியைப் பார்த்ததும் அப்படியே அசந்துட்டேன். செதுக்கி வைச்ச சிலை மாதிரி இருக்கா...

    ஜொள்ளு விட்டியா? சரி ரெண்டாவது காரணம்?

    அடுத்த காரணம்... நம்ம தொல்பொருள் இலாகா சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி. அதுக்காகத்தான் உன்னையும் கூட்டிட்டு வந்திருக்கேன்.

    ரவிச்சந்திரன் நிமிர்ந்தான்.

    ஏண்டா... இவ்வளவு நேரமும் நீ அதைச் சொல்லவே இல்லையே. ‘மாமாவோட கிராமத்துக்கு போறேன். நீயும் வாடா’ன்னு கூப்பிட்டே. விடுமுறை இருக்கேன்னு நானும் உன் கூட புறப்பட்டு வந்தேன். இப்ப என்னடான்னா, தொல்பொருள் ஆராய்ச்சின்னு சொல்றே... நாம ஆராய்ச்சி பண்ற அளவுக்கு அங்கே தீனி இருக்கா?

    இருக்கு. அந்த தாழையூர் கிராமத்தில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமையான ஒரு கோயில் இருக்கு. அந்தக் கோயிலுக்கு என்னோட மாமாதான் குருக்கள். மாமாவுக்கு அந்தக் கோயிலைப் பத்தி நல்லா தெரியும்.

    சுவாரசியமாக இருக்கிறதே...

    ஒரு விஷயம் சொல்றேன் கேட்டுக்கோ.

    என்ன?

    இப்ப நாம பண்ணப் போற ஆராய்ச்சியை சாதாரணமா நினைச்சுடாதே. அதுல ஒரு சிக்கல் இருக்கு...

    சிக்கலா...? என்ன சிக்கல்? - கேட்ட ரவிச்சந்திரன், விநோத்தின் முகம் ஒரு சின்னக் கலவரத்தில் விழுந்ததை கவனிக்கத் தவறவில்லை.

    பஸ் தலைதெறிக்க பொள்ளாச்சியை நோக்கி போய்க்கொண்டு இருந்தது.

    2

    நேரம் நடுநிசி 2.35 மணி.

    பாலப்பம்பட்டிக்கு பக்கத்தில் அந்த திடீர் செக்போஸ்ட் உதயமாகியிருந்தது. அடர்ந்த இருட்டுக்கு இடையே குறுக்கு கம்பம். சில காக்கி சட்டைகள். டார்ச் லைட்டின் வெளிச்ச வட்டங்கள். கறுப்பு உருவங்களாய் நிற்கிற மரங்களை அசைத்தபடி குளிர்ந்த காற்று.

    அந்த வழியாகப் போகிற எந்த வாகனமாக இருந்தாலும் நிறுத்தி சல்லடை போட்டுப் பார்த்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அந்த காக்கி கும்பலில் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் மையமாய் நின்றிருந்தார். அவருக்கு அருகில் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தெரிந்தார். இளம் வயது. அந்த இராத்திரியிலும் ட்ரிம்மாக டியூட்டி நேர தீவிரம் குறையாமல் இருந்தார்.

    எதுவும் மாட்டலையே சார்?

    மாட்டும்... மாட்டும். இரண்டரை மணிக்கு மேல்தான் பட்சிகள் கூண்டைவிட்டு வெளியே வரும்.

    தூரத்தில் ஹெட்லைட் வெளிச்சம் தெரிந்தது.

    காரா?

    பக்கத்தில் வந்ததும் அது ‘வேன்’ என்று தெரிந்தது.

    கான்ஸ்டபிள்! வேனை சோதனை பண்ணுங்க.

    சரி சார்...

    இரண்டு கான்ஸ்டபிள்கள் வேனுக்குள் நுழைய, பன்னீர்செல்வம் டிரைவர் இருக்கையோரமாய் வந்து நின்றார்.

    டிரைவர் பயத்துடன் சல்யூட் அடித்து - சீட்டைவிட்டு இறங்கிக் கைகட்டி நின்றான்.

    பன்னீர்செல்வத்தின் பார்வை எக்ஸ்ரேத்தனத்தோடு வேனுக்குள் இருந்த நபர்களை ஊடுருவிற்று. பெரும்பாலும் இளைஞர்கள். தவிர ஒன்றிரண்டு இளம் பெண்களும், ஒரு வயதான அம்மாளும் கடைசி இருக்கையில் தெரிந்தார்கள்.

    வேன் எங்கே போகுது...?

    டிரைவர் அவசரமாய்ப் பதில் சொன்னான்.

    பழனி சார்...

    எதுக்காக பழனி போறீங்க...?

    கல்யாணம் சார்...

    கல்யாணம் என்னிக்கு...?

    வேனுக்குள் இருந்து ஒருவன் இறங்கிவந்து பதிலளித்தான்.

    கல்யாண பார்ட்டி சார் நாங்க... நாளைக்குக் காலைல கல்யாணம்.

    அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கான்ஸ்டபிள்கள் இறங்கி வந்து ‘ஒன்றுமில்லை’ என்று சைகை காட்டினார்கள்.

    சம்பிரதாயமாய் அவர்களை விசாரித்து விட்டு - போகலாம்... என்றார் பன்னீர்செல்வம்.

    பின்பு - இன்ஸ்பெக்டர் கஜேந்திரனைப் பார்த்துச் சொன்னார்.

    சார்... பனிரெண்டு மணியிலிருந்து இதுவரைக்கும் நாற்பது வண்டிகளை சலிச்சு அனுப்பியாச்சு. நமக்குக் கிடைச்ச தகவல் சரிதானா...?

    கஜேந்திரன் உறுதியாகத் தலையசைத்தார்.

    நம்பகமான ஒருவர்கிட்டே இருந்துதான் தகவல் வந்திருக்கு பன்னீர்செல்வம். மாவட்ட கலெக்டர் ஸ்பெஷலா போன் பண்ணி நம்மகிட்டே விசாரிக்கச் சொல்லியிருக்கார். இடைத்தேர்தல் சமயத்தில் கள்ளச்சாராயத்தை உள்ளே விடக் கூடாதுன்னு கடுமையான உத்தரவிட்டிருக்கார்...

    "போகாது சார்...

    Enjoying the preview?
    Page 1 of 1