Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தப்பு + தப்பு = சரி
தப்பு + தப்பு = சரி
தப்பு + தப்பு = சரி
Ebook146 pages47 minutes

தப்பு + தப்பு = சரி

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“திலகா...!”
“என்ன ஷாம்...?”
“வர்ற சண்டே கோவளம் போய்ட்டு வரலாமா?”
“வர்ற சண்டேவா...?”
“முடியாதே...!”
“ஏன் முடியாது... அன்னிக்கு லீவுதானே...?”
“லீவா...! லீவு என்கிற வார்த்தையே எங்க கம்ப்யூட்டர் லேப்ல கிடையாது. ரொம்பவும் அர்ஜெண்ட்ன்னா ஒருமணி நேரம் பர்மிஷன் போட்டுட்டு வெளியே போய்ட்டு வரலாம்.”
“இது உலக மகா அநியாயம்...”
“ஷாம்...! நான் இந்த கம்ப்யூட்டர் லேப்பில் வேலைக்கு சேர்ந்த அன்னிக்கே இங்கே இருக்கிற காலண்டர்களை புரட்டிப் பார்த்தேன். சனி, ஞாயிறு நாட்களே கிடையாது... இங்கே வேலை நேரம் ஹவர்ஸ் கணக்குத் தான்...! எனக்கு இங்கே இருபதாயிரம் மணி நேரம் வேலை...”
“அப்படீன்னா... நீ வெளியே வரவே முடியாதா?”
“வரலாம்... ஆனா உன் கூட சேர்த்து ஜாலியா சுத்த முடியாது...”
“அதாவது காதலிக்க முடியாதுன்னு சொல்றே...?”
“ஷாம்...! ஜாலியா சுத்தினாத்தான் காதலா...? இப்ப போன்ல பேசிக்கறோமே இது கூட காதல்தான்...!“திலகா...!”
“ம்…”
“உன்னை 24 மணி நேரமும் பார்த்துக்கிட்டே இருக்கணும் போலிருக்கு”
“நான் பாத்ரூம்கூட போக வேண்டாமா?”
“ஜோக் அடிக்க இது நேரம் இல்லை திலகா. நீ அந்த கம்ப்யூட்டர் கம்பெனியில் போய் வேலைக்கு சேர்ந்து ரெண்டு நாள்தான் ஆகியிருக்கு. ஆனா 20 வருஷம் ஆன மாதிரி ஒரு ஃபீலிங்...! உன்னைப் பார்க்காமே இருக்க முடியலை.”
“ஷாம்...! பேத்தாதே... நான் ஒரு க்ளார்க் உத்தியோகமோ... முன்சீஃப் கோர்ட் குமாஸ்தா உத்தியோகமோ பார்க்க வரலை... மத்திய அரசு சம்பந்தப்பட்ட ஒரு ரெப்யூட்டட் கம்ப்யூட்டர் லேப்பில் எக்ஸிக்யூட்டிவ் ட்ரெய்னியாக, இருபத்தைந்தாயிரம் சம்பளத்தில் வேலை பார்த்துகிட்டு இருக்கேன். 20,000 மணி நேரம் வேலை பார்த்த பிறகுதான் நீயும் நானும் ஜாலியா வெளியே போக முடியும்...!”
“ஒழிக...!”
“யாரு...”
“கம்ப்யூட்டரைக் கண்டுபிடிச்சவன்...!”
திலகா சிரித்துக் கொண்டிருக்கும்போதே கம்ப்யூட்டர்க்குப் பக்கத்தில் இருந்த இண்ட்டர்காம் கூப்பிட்டது.
“ஷாம்...! எனக்கு என்னோட எம்.டி.கிட்டயிருந்து போன். நான் நாளைக்கு மறுபடியும் உனக்கு போன் பண்றேன்.”
“அந்த எம்.டி.யும் ஒழிக...!”
திலகா பலமாய் சிரித்து ரிசீவரை வைத்துவிட்டு இண்ட்டர்காம் ரிசீவரை எடுத்து காதுக்குக் கொடுத்தாள். மறுமுனையில் எம்.டி. மஹாதேவ் குரல் கேட்டது.
“திலகா...“ஸார்...”
“அந்த எஸ்.க்யூ சர்க்யூட்டை பார்த்து முடிச்சுட்டியா?”
“பார்த்துட்டிருக்கேன் ஸார்!”
“அதுல ஒரு சின்ன கரெக்ஷன் பண்ண வேண்டியிருக்கு. பத்து நிமிஷம் என்னோட கேபினுக்கு வந்துட்டு போ. வரும்போது சர்க்யூட் சார்ட்டை கொண்டு வந்துடு...”
“எஸ்... ஸார்...!” சொன்ன திலகா கம்ப்யூட்டர் சமாச்சாரங்கள் நிறைந்த அந்த ஏ.ஸி. அறையின் கதவைத் திறந்து கொண்டு வெளிப்பட்டாள்.
சல்வார் கம்மீஸுக்குள் ஒரு சந்தன சிலையாய் தெரிந்த திலகாவுக்கு சற்றே நீள்வட்டமான சதைபிடிப்பு முகம். புருவம் மழித்த இடத்தில் வளையல் துண்டுகளாய் ‘ஐ’ப்ரோ பென்சிலின் உபயத்தில் தீற்றல்கள். சின்ன உதடுகளில் உறுத்தாத லிப்ஸ்டிக் பூச்சு. கழுத்தில் வெள்ளி சங்கிலி. லேசாய் உயர்த்திப் போட்ட கொண்டை. சென்னை நகர்க்குள் அழகிப் போட்டி நடத்தினால் சுலபமாய் மிஸ் சென்னை பட்டத்தை தட்டிக் கொண்டு வந்து விடுவாள். ரொம்ப நாட்களாய் ஆண்களை வெறுத்துக் கொண்டிருந்தவள் கடைசியில் ‘ஷாம்’ என்ற அழகான இளைஞனுக்கு தன் இதயத்தைத் தூக்கிக் கொடுத்தாள்.
ஷாம்...?
முழுப்பெயர் சாம்ராஜ். வயது 25. எம்.பி.ஏ. படித்துவிட்டு ஒரு நல்ல வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவன். பிடிக்காத மூன்று விஷயங்கள். 1. அரசியல். 2. பெரிய திரை. 3. சின்னத்திரை. பிடித்த மூன்று விஷயங்கள். 1. திலகா. 2. திலகா. 3, திலகா.
தன்னுடைய கம்ப்யூட்டர் அறையிலிருந்து வெளிப்பட்ட திலகா ப்ளைவுட் தடுப்புகளாலான பல அறைகளைக் கடந்து கடைசியில் இருந்த எம்.டி.யின் அறைக்கதவுக்கு முன்பாய் நின்றாள். கதவை மெல்லத் தட்ட உள்ளேயிருந்து மஹாதேவ் குரல் கொடுத்தார்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 8, 2024
தப்பு + தப்பு = சரி

Read more from ராஜேஷ்குமார்

Related to தப்பு + தப்பு = சரி

Related ebooks

Related categories

Reviews for தப்பு + தப்பு = சரி

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தப்பு + தப்பு = சரி - ராஜேஷ்குமார்

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    சென்னை - பெங்களூர் ஹைவேஸ் ரோடு.

    நள்ளிரவைத் தாண்டிய நேரம்.

    ரோட்டின் குறுக்கே நீளமான மூங்கில் கம்பைக் கட்டி - அதற்குப் பக்கத்தில் தார் டின்களை வைத்து - சிவப்புக் காகிதம் ஒட்டிய அரிக்கேன் விளக்கை தொங்கவிட்டு - அந்த இடம் ஒரு தற்காலிக சோதனை சாவடியாக மாறியிருக்க, ஏழு பேர் கொண்ட ஒரு போலீஸ் ஸ்க்வாட் கைகளில் டார்ச்களோடு வாகனங்களை சோதனையிட்டுக் கொண்டிருந்தது.

    அஸிஸ்டண்ட் கமிஷனர் மேகவர்ணன் அந்த லான்ஸர் கார்க்குப் பக்கத்தில் குனிந்து ஸ்டீயரிங் பிடித்திருந்த சஃபாரி நபரிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

    உங்க பேரு...?

    ராமானந்தம் ஸார்...

    ஷோ... மீ... யுவர் ஆர்.சி.புக்...

    அவர் எடுத்துக் காட்டினார். மேகவர்ணன் அதை டார்ச் அடித்துப் பார்த்துக் கொண்டே கேட்டார்.

    நீங்க எங்கே போய்ட்டு வர்றீங்க...?

    பெங்களூர்க்கு...

    பர்ப்பஸ் ஆப் விஸிட்?

    பிசினஸ்

    கார்ல வேற யாரெல்லாம் இருக்காங்க?

    நான் மட்டும்தான் ஸார்...

    டிக்கியை கொஞ்சம் ஓப்பன் பண்ணுங்க.

    அந்த ராமானந்தம் எரிச்சலாய் கீழே இறங்கி சாவியுடன் காரின் பின்பக்கம் போய் டிக்கியைத் திறந்தார்.

    மேகவர்ணன் டிக்கிக்குள் தலையை நுழைத்து அதற்குள் இருந்த ஸ்டெப்னியைப் பார்த்துவிட்டு தலையாட்டினார்.

    சரி... நீங்க போலாம்...

    எதுக்கு ஸார்... இந்த சோதனை...?

    சட்டசபைக்குள்ளே நாலு தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தப் போறதாக உளவுத்துறைக்கு செய்தி கிடைச்சிருக்கு. அந்தத் தீவிரவாதிகளைப் பிடிக்கத்தான் ஸ்டேட்டோட எல்லா எல்லையிலேயும் செக் போஸ்ட் போட்டு சோதனை பண்ணிக்கிட்டு இருக்கோம்...

    ராமானந்தம் புன்னகைத்தார்.

    ஸார்... நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. இந்த ஹைவேஸ் ரோட்ல ஒரு போலீஸ் ஸ்குவாடை வெச்சுகிட்டு, உங்க தூக்கத்தையும் கெடுத்துகிட்டு, ஒவ்வொரு வண்டியா சோதனை போடுறதுல ஒரு பிரயோஜனமும் கிடையாது ஸார். நான் சொல்ற இடங்கள்ல சோதனை போட்டீங்கன்னா நிச்சயமா அந்த தீவிரவாதிகளைப் பத்தின தடயங்கள் கிடைக்கலாம்...

    மேகவர்ணன் ஆர்வமானார்.

    சொல்லுங்க எந்த இடங்கள்...?

    ஸார்...! முள்ளை முள்ளால் எடுக்கணும். வைரத்தை வைரத்தால் அறுக்கணும்ன்னு சொல்லுவாங்க. அதே மாதிரி சட்டசபைக்குள்ளே தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தப் போறாங்கன்னா... சட்டசபையிலேயே இருக்கிற நடப்பு எம்.எல்.ஏ.க்களில் யாரோ உதவி பண்ணப் போறாங்கன்னு அர்த்தம். நீங்க மேலிடத்துல பர்மிஷன் வாங்கிகிட்டு எல்லா அரசியல் கட்சிகளையும் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் வீட்ல சோதனை நடத்திப் பாருங்க. யாராவது ஒரு எம்.எல்.ஏ. மாட்டுவாரு... அவர் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வாகவும் இருக்கலாம். ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வாகவும் இருக்கலாம்...

    அப்படியெல்லாம் எம்.எல்.ஏ.க்கள் வீட்ல புகுந்து சோதனை போட முடியாது. நீங்க மொதல்ல புறப்படுங்க… வெட்டிப் பேச்சு பேசிட்டிருக்க நேரம் இல்லை… லைன்ல வண்டிகள் காத்திட்டிருக்கு...

    லான்ஸர் புறப்பட்டு போனதும் ஒரு ஆம்னி மாருதி வேன் மெல்ல ஊர்ந்து வந்தது.

    டிரைவிங் சீட்டில் ஸ்வெட்டர் அணிந்த அந்த அழகான இளைஞன். தமிழ் தெரியவில்லை. ஆங்கிலம் பேசினான்.

    ஸார்...! உங்கள் சோதனையை சீக்கிரம் முடித்துக் கொண்டால் பரவாயில்லை. என் மனைவிக்கு உடல்நலம் சரியில்லை. பின்சீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறாள்.

    கார் கதவைத் தள்ளி உள்ளே பார்த்தார் அஸிஸ்டண்ட் கமிஷனர் மேகவர்ணன். இருட்டாய் இருந்தது.

    விளக்கைப் போடுங்கள்...

    அவன் ஸ்விட்ச்சைத் தட்ட கார்க்குள் வெளிச்சம். பின்சீட்டில் ஒரு இளம்பெண் உல்லன் சால்வையால் கழுத்து வரைக்கும் போர்த்திக் கொண்டு மல்லாந்து படுத்தபடி தூங்கிக் கொண்டிருந்தாள். சீரான சுவாசத்தில் அவளுடைய மார்புகள் ஏறி இறங்கிக் கொண்டிருந்தன.

    உங்கள் மனைவிக்கு என்ன உடம்பு...?

    அவள் ஒரு ஆஸ்துமா நோயாளி ஸார்...

    விளக்கை அணைத்து விடுங்கள்...

    அணைக்கப்பட்டது

    உங்களுடைய ஆர்.சி. புக் ப்ளீஸ்...?

    எடுத்துக் கொடுத்தான். மேகவர்ணன் பார்த்தார். பெயர் விஷ்ணு ஜித்தன். பெங்களூர் ரெஜிஸ்ட்ரேஷன்.

    சொந்த ஊர் பெங்களூரா?

    எஸ்...

    என்ன வேலை பார்க்கிறீர்கள்...?

    என்ஜினியர். ஹைடெக் சொல்யூஷன்ஸ் கம்பெனியில் வேலை...!

    சென்னைக்கு எதற்காக போகிறீர்கள்...?

    பெங்களூர் க்ளைமேட் என் மனைவிக்கு ஒத்துக் கொள்ளவில்லை. சென்னையில் உள்ள அவளுடைய அக்கா வீட்டில் சில நாட்கள் இருக்கட்டுமே என்று கூட்டி வந்தேன்...!

    உங்கள் டிக்கியை கொஞ்சம் ஓப்பன் செய்யுங்கள்.

    ஸார்...! தீவிரவாதிகளைப் பிடிக்கப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு எங்களைப் போன்றவர்களை ரொம்பவும்தான் படுத்துகிறீர்கள். நீங்கள் தேடுகிற தீவிரவாதிகள் இந்நேரத்திற்கு சென்னையில் உள்ள ஏதாவது ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் நிம்மதியாக படுத்து தூங்கிக் கொண்டிருப்பார்கள்.

    Enjoying the preview?
    Page 1 of 1