Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கொலைவிழும் மலர்வனம்
கொலைவிழும் மலர்வனம்
கொலைவிழும் மலர்வனம்
Ebook156 pages54 minutes

கொலைவிழும் மலர்வனம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நித்யா ஆச்சரியமாய் நாகலட்சுமியைப் பார்த்தாள். புன்சிரிப்போடு கேட்டாள்.
“ஏன் அத்தை அப்படிச் சொன்னீங்க?”
“இந்த சம்பந்தம் எனக்குப் பிடிக்கலை”
“உங்களுக்கு இந்த சம்பந்தம் பிடிச்சிருக்கிறதா மாமா சொன்னாரே!” ‘‘அவர் பொய் சொல்லியிருக்கார்.”
“அவர் ஏன் பொய் சொல்லணும்?”
“நித்தி! உனக்கு வரப்போற மாப்பிள்ளையைப் பத்தி நான் ஒரு ஸ்கெட்ச் போட்டிருக்கேன். உன்னோட குணத்துக்கும் அழகுக்கும் இந்த பெங்களூர் மாப்பிள்ளை கட்டுப்படியாக மாட்டான். உங்க மாமா உனக்கு எப்படியாவது ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சு உயிலோட வாசகத்தை நிறைவேத்திடனும்னு நினைக்கிறார். உன்னைத்தேடி ஒரு ராஜகுமாரன் வர்றதுக்குள்ளே ஒரு சிப்பாயைப் பார்த்துக் கட்டி வெக்க ஆசைப்படறார்”
நித்யா சிரித்தாள்.
“அத்தை! மாமா எனக்கு என்னிக்குமே நல்லதைத்தான் பண்ணுவார். உங்களுக்கு நல்லாவே தெரியும். எனக்கு ரெண்டு வயசோ, மூணு வயசோ இருந்தப்ப அம்மாவும், அப்பாவும் இறந்துட்டாங்க. கிட்டத்தட்ட அம்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்தை இந்தப் பதினேழு வருஷமா கட்டிக் காத்து ஒரு கார்டியனா இருந்து, ஒரு சல்லிக் காசுக்குக்கூட ஆசைப்படாமே என்கிட்ட மாமா குடுத்திருக்கிறார். இந்தப் பதினேழு வருஷத்துல அவர் நினைச்சிருந்தா என்னை எமாத்தியிருக்க முடியும் ஆனால் அவர் என்னை ஏமாத்தலை. எல்லாகாரியத்துக்குமே அவர் எனக்கு அப்பாவா, நீங்க அம்மாவா இருந்திருக்கீங்க. மாமா எனக்குப் பார்த்திருக்கிற இந்த மாப்பிள்ளை நல்லவரோ கெட்டவரோ எனக்குத் தெரியாது. அவர் முடிவு பண்ணிட்டார். நான் கழுத்தை நீட்டப் போறேன்”
நாகலட்சுமி ‘உச்’ கொட்டினாள்உன்னோட மாமா மாதிரியே நீயும் அவசரப்படறே நித்தி. இப்போ பார்த்திருக்கிற பெங்களூர் மாப்பிள்ளையைப் பத்தி நான் எந்தக் குறையும் சொல்லத் தயாராயில்லை, என்னோட தம்பி கோபிநாத் பெங்களூர் போய் ஒரு வாரம் இருந்து மாப்பிள்ளையைப் பத்தின. சகல விஷயங்களையும் சேகரிச்சுட்டு வந்திருக்கான். அவனுடைய ரிப்போர்ட்படி மாப்பிள்ளைக்கு நூற்றுக்குத் தொண்ணூறு மார்க் தரலாம். இருந்தாலும் என் மனசுக்குப் பிடிக்கலை. இதைக் காட்டிலும் ஒரு நல்ல இடம் வரும். அது வரைக்கும் வெயிட் பண்ணு நித்தி”
நித்யா பார்வையைக் கீழே தாழ்த்தி ஒரு ரோஜா மோக்கைக் கை விரலால் தடவிக் கொண்டே சொன்னாள். “ஸாரி அத்தை. நான் பெங்களூர் வரப்போறதா மாமாகிட்டே சொல்லிட்டேன். எல்லாத்துக்கும் மேலா எனக்கு அந்த மாப்பிள்ளை பிடிச்சிருக்கு...”
நாகலட்சுமி நித்யாவின் கன்னத்தை தட்டினாள்.
சிரித்தாள்.
“ஒகே நித்தி... உனக்குப் பிடிச்சிருந்தா சரிதான்... உன்கூட பெங்களூர் வரணும்ன்னு எனக்கும் ஆசைதான். ஆனா இந்த நொண்டியாலே வர முடியாது... பங்க்‌ஷனை வீடியோ எடுத்தா கேஸட்டைக் கையோட வாங்கிட்டு வா. போட்டுப் பார்க்கலாம்...”
நித்யா நாகலட்சுமியின் மின்சாரம் பாய்ந்து சாம்பல் நிறமாகிப் போன கால்களைக் கழிவிரக்கத்தோடு பார்த்தாள்.
நாம கார்லதானே போறோம் அத்தை. வீல்சேரை காரோட டாப் காரியரில் கட்டி பெங்களூர் கொண்டு போயிடலாமே...!”
“வேண்டாம் நித்தி... நான் வரலை. ஒரு சுப காரியம் நடக்கறப்போ நான் நாற்காலியை உருட்டிக்கிட்டு அலைஞ்சா அது பார்க்கிறதுக்கு நல்லா இருக்காது. மாமாவே வர வேண்டாம்ன்னு சொல்லிட்டார். சொர்ணம் இருக்கா. என்னைப் பார்த்துக்குவா...”
“ஓ.கே… அத்தை நான் குளிச்சுட்டு வந்துடறேன்நித்யா நகர, நாகலட்சுமி மறுபடியும் கூப்பிட்டாள்.
“நித்தி”
“ம்...”
நந்த கோபாலின் மனைவி லட்சுமியும், மகள் ஷோபனாவும் பக்கத்து அறையிலிருந்து ஒன்றாய் வெளிப்பட்டுப் புன்னகைத்துக் கொண்டே நித்யாவின் தோளைப் பற்றினார்கள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 8, 2024
கொலைவிழும் மலர்வனம்

Read more from ராஜேஷ்குமார்

Related to கொலைவிழும் மலர்வனம்

Related ebooks

Related categories

Reviews for கொலைவிழும் மலர்வனம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கொலைவிழும் மலர்வனம் - ராஜேஷ்குமார்

    1

    அந்த ஏப்ரல் மாதத்தின் ஞாயிற்றுக்கிழமை சூரியன் பிறக்கிற போதே சூடாய் இருப்பது போல் நித்யாவுக்குத் தோன்றியது. ஆறு மணிக்கே கண்ணை வெளிச்சம் குத்தியது.

    கண்ணாடி ஜன்னல் வழியே தொலைவில் தெரிந்த செளடேஸ்வரியின் கோவில் சோபுரத்தைப் பார்த்துத் தன் நீண்ட மெல்லிய விரல்களால், கன்னங்களில் போட்டுக் கொண்ட நித்யா கட்டிலின் கொசுவலையை விலக்கிக் கொண்டு கீழே இறங்கினாள்.

    கருநீல நிற நைட் கவுனின் நாடாவை இறக்கிக் கொண்டாள். வலைக்காரி சொர்ணம் அறை வாசல் அருகே நின்று எட்டிப் பார்த்தாள். நித்யாம்மா! காபி கொண்டாரட்டுமா?

    சொர்ணம்? ஒரு நிமிஷம் உள்ளே வா

    என்னம்மா? இமிடேஷன் கல் மூக்குத்தியும், தோடும் பகட்டாய் டாலடிக்க உள்ளே வந்தாள் சொர்ணம்.

    நித்யா தன் சிறிய வாயைத் திறந்து மெலிதாய்க் கொட்டாவி விட்டபடி சொர்ணத்தை ஏறிட்டாள்.

    மாமா எந்திரிச்சுட்டாரா?

    "எந்திரிச்சுட்டாரம்மா. காபியைக் குடிச்சிட்டு யாருக்கோ போன் போட்டிட்டிருக்கார், ரொம்பநேரமா போனைச் சுத்தறார்.

    நாகலட்சுமி அத்தை?

    அஞ்சு மணிக்கு எந்திரிச்சு குளிச்சாச்சி. நான் குளிப்பாட்டி விட்டேன். தோட்டத்துல உட்கார்ந்திட்டிருக்காங்க.

    கோபிநாத்?

    அவரும் அஞ்சு மணிக்கே குளிச்சாச்சம்மா. இன்னிக்குப் பங்குனி உத்திரமாம். பேரூர் கோவிலுக்குப் போயிருக்கார்.

    வாஷ்பேசினில் வாயைக் கொப்பளித்த நித்யா சிரிப்போடு நிமிர்ந்தாள். கோவில் குளத்துக்குப் போறதுன்னாலே கோபிநாத்துக்கு அல்வா சாப்பிடற மாதிரிதான்! ஒரு பி.காம் படிச்சவர் இப்படி இருக்கார்ன்னா ஆச்சரியம் தான்!

    அதையேம்மா கேக்கறே? ஒரு அமாவாசை, பௌர்ணமி வரக்கூடாது. ரெண்டு நேரம் குளிச்சு ஒரு நேரம் உபவாசம் இருந்து பூஜை ரூம்ல உட்கார்ந்துகிட்டு ஏதோ பாட்டுப் படிக்கிறார். நாகலட்சுமி ஒருநாள் சாமியாராத்தான் போவான்னு சொன்னாங்க‘.

    சரி நீ போய் காப்பியைக் கொண்டா. அப்படியே பேப்பர் வந்திருந்தா எடுத்துட்டு வந்துரு

    சரிம்மா.

    சொர்ணம் அறையை விட்டு வெளியேறி மாடிப் படிகளில் இறங்கிப் போனாள். நித்யா ஜன்னல் கதவுக்கு வந்தாள்.

    சூரியனின் புதிதான மஞ்சள் வெளிச்சம் முகத்தில் அறைந்தது. இந்தத் தொடர் கதையின் முக்கிய நாயகியான நித்யாவின் முழுப்பெயர் நித்ய கல்யாணி.

    வயசுக்கு வந்தபோது, தன் பெயரின் பின்னால் இருந்து ‘கல்யாணி’ கொஞ்சம் கர்நாடகமாய்த் தெரியவே அதை கத்தரித்துக் கொண்டாள். ‘நித்ய கல்யாணி’ என்று நீளமாய் கூப்பிட்டுக் கொண்டிருந்த மாமா சங்கமேஸ்வரனும் நாகலட்சுமியும் ‘நித்யா’ என்று கூப்பிடப் பழகிக் கொண்டார்கள்

    ‘நித்யாவுக்கு வருகிற ஜூலையில் இருபதாவது பிறந்தநாள் வருகிறது. ஒரிஜினல் தேன் நிறம். கண்களில் நிஜமாகவே நாவல் பழ நிறம் தெரிந்தது. அம்மா ஞான சௌந்தரியையும், அப்பா குமாரஸ்வாமியையும் போட்டோவில்தான் பார்த்திருக்கிறாள். போட்டோவில் நேர் பார்வை பார்த்துக் கொண்டு நிற்கும் தன் அப்பாவையும், அம்மாவையும் யாரோ இவர்கள்’ என்கிற மாதிரிதான் பார்த்தாள், பாசம் வர மறுத்தது. காரணம் மாமா சங்கமேஸ்வரன் வளர்த்த விதம் அப்படி.

    அம்மா... காப்பி.

    சொர்ணத்தின் குரல் கேட்டு ஜன்னல் அருகே நின்றிருந்த நித்யா மெல்லத் திரும்பினாள். டீபாயின் மேல் காப்பி மெல்ல மூச்சு விட்டது.

    எடுத்துக் கொண்டு மெல்ல உறுஞ்சினாள்.

    மாடிப் படிகளில் யாரோ ஏறிவரும் சத்தம் கேட்டது.

    யார் வர்றாங்க சொர்ணம்?

    சொர்ணம் எட்டிப் பார்த்து விட்டுச் சொன்னாள்.

    மாமா வர்றாங்கம்மா

    சரி... நீ போ! முக்கியமான விஷயம் ஏதாவது இருந்தாத்தான். மாமா என்னோட ரூமுக்கு வருவார்

    காப்பியை வேகவேகமாய் உறிஞ்சிவிட்டு டம்ளரைக் கீழே வைத்தாள். மாமா சங்கமேஸ்வரன் உள்ளே நுழைந்தார்.

    சங்கமேஸ்வரன் கிட்டத்தட்ட காலம் சென்ற நடிகர் எஸ்.வி. ரங்காராவ் அளவில் இருந்தார். உயரம் மட்டும் கொஞ்சம் உதைத்தது. இரண்டு கண்களில் ஒரு கண்ணுக்கு மட்டும் பவர். கிளாஸ் மாட்டியிருந்தார். அந்த ஐம்பத்தைந்து வயசிலும் பேண்ட் போட ஆசைபட்டுத் துணியை விரயம் செய்திருந்தார். பேண்ட்டின் ரெண்டு பக்கங்களிலும் வாரை வைத்துத் தைத்து தோள்பட்டையின் இரு பக்கங்களிலும் மாட்டியிருந்தார்.

    அம்மா... நித்யா. குரல் கூட ரங்காராவ் குரல்தான்.

    வாங்க மாமா நித்யா முறுவளித்தாள்.

    ‘‘இப்பத்தான் எந்திரிச்சியாம்மா?"

    ஆமா மாமா

    உன் கூடக் கொஞ்சம் பேசனுமேம்மா...

    உட்காருங்க மாமா

    சங்கமேஸ்வரன் உட்கார்ந்து தன்னுடைய பவர் கிளாசைக் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்.

    நாளைக்குக் காலையில் நாம பெங்களூருக்குப் போக வேண்டியிருக்கும் நித்யா.

    எதுக்கு மாமா?"

    ‘‘உன்னோட கல்யாண விஷயமாத்தான்"

    நித்யா மௌனமானாள்.

    சங்கமேஸ்வரன் தொடர்ந்தார்.

    ‘‘என்னோட ப்ரண்ட் நந்தகோபாலுக்குக் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் போன் பண்ணிப் பேசினேன். நித்யா! மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சம்மதம்ன்னு சொல்லிட்டாங்களாம். நிச்சயதார்த்தத்தை கிராண்டா செலிபரேட் பண்ணப் போறாங்களாம். பெண்ணையும் பெண் வீட்டைச் சேர்ந்தவங்களையும் பெங்களுருக்கே வரச் சொல்றாங்களாம்.

    ‘‘மாமா..."

    என்னம்மா...?

    "எனக்கு இப்ப கல்யாணம் ரொம்ப அவசியமா? இன்னும் ஒரு ரெண்டு வருஷம் ப்ரீயா இருக்கேன்.

    சங்கமேஸ்வரன் சிரித்தார்.

    கல்யாணத்தைப் பண்ணிகிட்டு புருஷன் கூட ப்ரீயா இரும்மா! உன்னோட வயசுல இருக்கிற, ஒவ்வொரு பெண்ணுக்கும் கல்யாணம் ஒரு அத்யாவசியம். உங்கப்பா எழுதி வெச்ச உயில் வாசகப்படி ஒவ்வொரு காரியமா பண்ணிட்டு வர்றேம்மா. உனக்குப் பதினெட்டு வயசானதும் சொத்து பூராவையும் உன்கிட்ட ஒப்படைக்கணும்ன்னு எழுதியிருந்தார் நம்ம சொந்த ஜனம், ஊர் ஜனம், குடும்ப டாக்டர், குடும்ப வக்கீல் எல்லாரையும் கூட்டி வெச்சு அவங்க முன்னாடி உங்கப்பா சொத்தை உன்கிட்ட ஒப்படைச்சேன். சொத்தை ஒப்படைச்சி ரெண்டு வருஷத்துக்கப்புறம் - உன்னோட இருபதாவது வயசுல கல்யாணத்தை செஞ்சு வெக்கணும்ங்கிறது. உயிலோ ரெண்டாவது வாசகம்... அந்த வாசகத்தைத்தான் இப்போ நிறைவேத்தப் போறேன். மாப்பிள்ளை நம்ம அந்தஸ்துக்கு ஈடு கொடுக்கக்கூடிய இடம். எக்கச்சக்கமான பணம்.

    நித்யா குறுக்கிட்டாள்.

    மாப்பிள்ளையோட பேமிலியைப் பத்தி விசாரிச்சீங்களா மாமா?

    அட்சர சுத்தமா விசாரிச்சிருக்கேன்

    மாப்பிள்ளையைப் பத்தித் தனிப்பட்ட முறையில் விசாரிச்சீங்களா? கோபிநாத்தையே பெங்களூருக்கு அனுப்பிச்சு வெச்சேம்மா

    ஒரு வாரம் கோபிநாத் மாப்பிள்ளையை ஃபாலோ பண்ணி அக்கம் பக்கம் விசாரிச்சுட்டு வந்திருக்கான். மாப்பிள்ளைக்கு சிகரெட் பழக்கம் மட்டும் தான் உண்டாம்.

    நித்யா சிரித்தாள்.

    "உங்களுக்கு மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கா மாமா...?’

    பிடிச்சிருக்கு

    நாகலட்சுமி அத்தைக்கு...?

    அவளுக்கும் பிடிச்சிருக்கு

    அப்போ எனக்கும் சம்மதம்

    சங்கமேஸ்வரன் கண்ணாடியை மாட்டிக் கொண்டு எழுந்தார். பெங்களூர் புறப்பட ஏற்பாடு பண்ணட்டுமாம்மா?

    ம்…

    பெங்களூருக்குப் போனா நாம லாட்ஜ்ல தங்க வேண்டிய அவசியம் இல்லேம்மா. என்னோட ஃப்ரண்ட் நந்தகோபால் யஷ்வந்த் பூர்ல டாக்டரா ப்ராக்டீஸ் பண்ணிட்டிருக்கான். அவனோட வீடும் பங்களா டைப்தான். நாம் அங்கேயே தங்கிகிட்டு நிச்சதார்த்த ஃபங்க்ஷனுக்குப் போயிட்டு வந்துடலாம்

    சரி மாமா

    சங்கமேஸ்வரன் நகர்ந்தார்.

    "மாமா.’’

    நித்யா மறுபடியும் கூப்பிட்டாள்.

    என்னம்மா...? என்று கேட்டார்.

    நாகலட்சுமி அத்தையும் வர்றாங்களா?

    அவளை எப்படியம்மா பெங்களூருக்குக் கூட்டிட்டுப் போக முடியும்? அப்படியே கூட்டிட்டுப் போனாலும், வர்றவங்களுக்கும் போறவங்களுக்கும் அவ ஒரு கண்காட்சி ஆயிடுவாளே. அவ இங்கேயே இருக்கட்டும். சொர்ணம்தான் துணைக்கு இருக்காளே, பார்த்துக்குவா... நீயும் நானும் கோபிநாத்தும் நம்ம டாக்டரும் நாளைக்குக் காலையில கார்ல கிளம்பறோம்

    தலையாட்டினாள் நித்யா.

    சங்கமேஸ்வரன் பேண்ட்டின் தோள்பட்டை வாரை இழுத்துவிட்டுக் கொண்டே மாடிப்படிகளில் இறங்கினார். நித்யா குளிக்க ஆயத்தப்பட்டு பாத்ரூமை நோக்கி நடக்க, எதிர்புற ஜன்னலின் வழியே கீழே தோட்டம் தெரிந்தது.

    ஜன்னல் அருகே போனாள்.

    ஏராளமான ரோஜாப் பதியன்களுக்கு மத்தியில் லாவகமாக சக்கர நாற்காலியை உருட்டிக் கொண்டு அதில் உட்கார்ந்தபடி நாகலட்சுமி அத்தை தெரிந்தாள். தலைக்குக் குளித்த ஈரம் போவதற்காக தேங்காய்ப்பூ துவாலையைத் தலையில் சுற்றியிருந்த நாகலட்சுமிக்கு மிஞ்சிப் போனால் முப்பது வயதுதான் இருக்கும். சங்கமேஸ்வரனின் இரண்டாவது சம்சாரம். முதல் மனைவி பர்வதம் தவறியபோது சங்கமேஸ்வரனுக்கு நாற்பத்தைந்து வயது. அந்த வயதில் உடம்பு இம்சைப் படுத்துகிறதே என்பதற்காக டீச்சர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது இருபது வயது நாகலட்சுமியைக் கல்யாணம் செய்து கொண்டார். இரண்டு மாதங்களுக்கு முன்னால்வரை நித்யாவுக்கு சரிசமமாய்க் குதித்து பூப்பந்து விளையாடிய நாகலட்சுமிக்குக் கால்கள் இரண்டும் செயலிழந்து போனது பெரிய துரதிர்ஷ்டம்.

    மழை பெய்து கொண்டிருந்த ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1