Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

முள் நிலவு and மற்றொரு நாள்
முள் நிலவு and மற்றொரு நாள்
முள் நிலவு and மற்றொரு நாள்
Ebook298 pages1 hour

முள் நிலவு and மற்றொரு நாள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நானும் என் மனைவியும் ஸ்கூட்டரில் புறப்பட்டு அந்த - மனநோய் நலவிடுதிக்குப் போய்ச் சேர்ந்தபோது மாலை ஐந்து மணி.
 ஹாஸ்பிடல் ஒரு வேண்டாத நிசப்தத்துக்கு உட்பட்டிருந்தது. தொலைவில் பச்சை பெயிண்ட் அடிக்கப்பட்ட கதவுகள் ஒரே யூனிஃபார்மாய் சாத்திக் கிடந்தன. ரிசப்ஷன் அறைக்குள் நுழைந்தோம். அழகாய் கொண்டை போட்டு டெலிபோனில் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த அந்த ரிசப்ஷனிஸ்ட் எங்களைப் பார்த்ததும் பேச்சை அவசர அவசரமாய் முடித்துக் கொண்டு ரிஸீவரை சாத்தினாள்.
 "'எஸ்..."
 "ஒரு பேஷண்ட்டைப் பார்க்கணும்."
 "பேரு...?"
 "நிலா..."
 "அந்தப் பொண்ணுக்கு நீங்க என்ன வேணும்...?"
 "நிலா எதிர்வீட்ல நாங்க குடியிருக்கோம்... பார்த்துட்டு போலாம்னு வந்தோம்..."
 "ஸாரி..."
 "எதுக்கு ஸாரி...?" நிலாவைப் பார்க்க யாருக்கும் அனுமதி கிடையாது."
 "ஒரு ரெண்டு நிமிஷம் பார்த்துட்டு போயிடறோம்."
 "பக்கத்து ரூம்ல டாக்டர் இருக்கார். அவர் கிட்ட கேட்டுப் பாருங்க. அவர் அலவ் பண்ணினா போய்ப் பாருங்க...நானும் என்னுடைய மனைவியும் பக்கத்து அறைக்குப் போய் மெல்ல எட்டிப் பார்த்தோம்.
 ஒருடாக்டரம்மாள் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து ஃபைல் ஒன்றைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
 எங்களைப் பார்த்ததும் "ப்ளீஸ்! கம் இன்..." என்றார். உள்ளே போனோம்.
 டாக்டரம்மாளின் முகம் என்னைப் பார்த்ததும் லேசான ஒருமலர்ச்சிக்குப் போயிற்று...!
 "ஸார்... நீங்க எழுத்தாளர் ஆர்.கே. தானே...?"
 "ஆமா..." டாக்டரம்மாள் எழுந்து விட்டார். சந்தோஷம் குரலில் சிதறக்கேட்டார்.
 "என்ன ஸார்...! எங்க ஹாஸ்பிடல் பக்கம் வந்திருக்கீங்க...?"
 "நிலான்னு ஒரு பேஷண்ட், என்னோட வீட்டுக்கு எதிர்வீடு. இந்த ஹாஸ்பிடல்ல அட்மிட்டாயிருக்கா. பார்த்துட்டு போலாம்னு வந்தோம்..."
 "பொதுவா, அந்தப் பொண்ணைப் பார்க்க நாங்க யாரையுமே அனுமதிக்கிறதில்லை. கொஞ்ச நாளைக்கு வஸோலேட் பண்ணி ட்ரீட்மெண்ட் கொடுக்கவேண்டிய கேஸ் அது."
 "ஒரே ஒரு நிமிஷம் பார்த்துட்டு போயிடுவோம்."
 "சரி... வாங்க..."
 டாக்டரம்மாள் முன்னால் நடக்க, நாங்கள் பின் தொடர்ந்தோம். நீளமான வராந்தா எங்களைக் கூட்டிக் கொண்டு போயிற்று.
 "அந்தப் பொண்ணோட நிலைமை இப்போ எப்படியிருக்கு டாக்டர்...?"
 "அஷ்டானிஷ்ட் சிச்சுவேஷன்... தமிழ்ல சொல்லணும்னா ஸ்தம்பித்த நிலை..."
 "நிலா பழைய நிலைமைக்குத் திரும்புவாளா டாக்டர்?"
 "எங்க ட்ரீட்மெண்ட்களை இனிமேத்தான் ஆரம்பிக்கப்போறோம். அது எப்படி பலனளிக்கும்னு இப்பவே சொல்லமுடியாது. இட் வில் டேக் டைம் டு ரெக்கவர்...பச்சை பெயிண்ட் அடித்த கதவுகளைத் தாண்டி 'நோ ஹார்ம்' செல்களுக்கு வந்தோம்.
 "உங்க எழுத்துப் பணி எப்படியிருக்கு மிஸ்டர் ஆர்.கே...?"
 "ஃபைன்"
 "கொஞ்ச நாளா எதையும் நான் படிக்கிறதில்லை. ரீசண்டா என்ன எழுதியிருக்கீங்க...?"
 "கண்ணுக்குள் நீதான் என்கிற நாவல்."
 "ஆரம்பகாலத்துல நீங்க எழுதின பல நாவல்கள் இன்னும் என் மனசுக்குள்ளே இருக்கு..."
 "தேங்க்...யூ..." டாக்டரம்மாள் இப்போது வராந்தா வளைவில் திரும்பி ஒரு அறைக்கு முன்பாய் நின்றார்.
 "இதுதான் நிலா இருக்கிற ரூம்..."
 நான் கதவைப் பார்த்தேன். பெரிய பூட்டு ஒன்று பித்தளை உடம்போடு தொங்கியது. வலதுபக்க கதவு ஓரத்தில் பேஷண்ட் பற்றிய விவரங்கள் டைப் அடித்த சதுரப்பேப்பர் ஒன்றில் ஒட்டப்பட்டிருந்தது.
 டாக்டரம்மாள் கதவை நெருங்கி கதவின் இடதுபக்கம் தெரிந்த அரைசதுர அடிப் பரப்புள்ள சிறிய விக்கெட் டோர் ஒன்றின் கொக்கியை விடுவித்து திறந்தார். உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு என்னை ஏறிட்டார்.
 "சத்தம் காட்டாமே இப்படி வந்து பாருங்க... ஸார்"
 நான் விக்கெட் டோரை நெருங்கி உள்ளே பார்வையைப் போட்டேன்.
 குழல் விளக்கு வெளிச்சத்தில் அந்த அறை நிரம்பியிருக்க அறையின் மூலையில் நிலா ஒண்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். இரண்டு கைகளாலும் காதுகளைப் பொத்திக் கொண்டு மருட்சியான விழிகளோடு ஒரே திசையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 18, 2023
ISBN9798223714996
முள் நிலவு and மற்றொரு நாள்

Read more from Rajeshkumar

Related to முள் நிலவு and மற்றொரு நாள்

Related ebooks

Related categories

Reviews for முள் நிலவு and மற்றொரு நாள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    முள் நிலவு and மற்றொரு நாள் - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    நிலா கண்ணாடிக்கு முன்பாய் நின்று ஸ்டிக்கர் பொட்டை நெற்றியின் மையம் பார்த்துப் பொருத்திக் கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டு ப்ரியா ஒரு கன்றுக்குட்டியின் துள்ளலோடு உள்ளே வந்தாள்.

    ஏய்... நிலா... நான் கேள்விப்பட்ட நியூஸ் உண்மையா...? இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னைப் பெண்பார்க்க வரப் போறாங்களாமே...?

    பட்டுப் புடவையில், நடமாடும் சொர்க்கம் போல இருந்த நிலா, ஸ்டிக்கரைச் சரியாய்ப் பொருத்திக்கொண்டு கண்ணாடியினின்றும் திரும்பினாள்.

    ஆமா... ஆமா...

    மாப்பிள்ளைக்கு ஸ்டேட்ஸ்ல நல்ல வேலையாமே?

    ஆமா... ஆமா...

    மாப்பிள்ளையோட அம்மாவும் அப்பாவும்தான் இன்னிக்கு உன்னைப் பார்க்க வரப் போறாங்களாமே...?

    ஆமா... ஆமா...

    உங்கம்மா வந்து சொல்லித்தான் எனக்கே தெரியும். பார்த்துட்டிருந்த வேலையை எல்லாம் அப்படியே போட்டுட்டு ஓடி வர்றேன்... ஏன்டி, விஷயம் என்னன்னு சொல்லி ஒரு குரல் கொடுக்கக் கூடாதா எனக்கு?

    ஸாரிடி... ப்ரியா...! கல்யாணத் தரகர் அரைமணி நேரத்துக்கு முன்னாடிதான் போன் பண்ணி விஷயத்தைச் சொன்னார். எந்தப் பட்டுப்புடவையைக் கட்டிகிறதுன்னு யோசனை பண்ணி முடிவு எடுக்கவே பதினைஞ்சு நிமிஷம் ஆயிடுச்சு...

    மாப்பிள்ளைக்கு ஸ்டேட்ஸ்ல என்ன வேலை...?

    ஏதோ ஒரு கம்ப்யூட்டர் கம்பெனியில் சீஃப் ப்ரோக்ராமராம்.

    அப்படின்னா சம்பளம் எக்கச்சக்க டாலர்ல இருக்கும்!

    பின்னே...?

    அவர் பேர் என்னவாம்...?

    கிருஷ்ணகாந்த்...

    ஆள் எப்படி...? போட்டோவைப் பார்த்தியா...?

    இன்னும் பார்க்கலை...

    ஏய்... பொய் சொல்லாதே...

    அட... நிஜமாத்தான்... நிலா உதட்டைச் சுழித்துச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே நிலாவின் அம்மா பாக்யம் உள்ளே வந்தாள்.

    நிலா...! மாப்பிள்ளையோட அம்மாவும் அப்பாவும் வந்துட்டாங்க... நீ ரெடியா...?

    நான் எப்பவோ ரெடி...

    இதோ பார்... உன்னோட வாய்த்துடுக்கை எல்லாம் மூட்டை கட்டிட்டு அவங்க கேட்கிற கேள்விகளுக்கு மட்டும் பதிலைச் சொல்லணும்.

    சரி...

    மாப்பிளையோட அப்பா கொஞ்சம் பழங்கால டைப். நீ அடக்க ஒடுக்கமா இருந்தாத்தான் அவங்களுக்குப் பிடிக்கும், தெரிஞ்சுக்கோ.

    சரி...

    நான் குரல் கொடுக்கும்போது நீ தாம்பூலத் தட்டை எடுத்துக்கிட்டு ஹாலுக்கு வந்தாப் போதும்...

    அம்மாக்காரி போய்விட நிலா அறையில் அடுத்த ஜன்னல் பக்கமாய் போய் - ஓரமாய் நின்று க்ரில் கம்பிகளின் வழியே ஹாலுக்குப் பார்வையைத் துரத்தினாள்.

    மாப்பிள்ளையின் அப்பா வெங்கடேஷ்வரனும் அம்மா செளந்தரமும் சோபாவில் சாய்ந்திருக்க எதிரே நிலாவின் அப்பா சிவராஜன் உரத்த குரலில் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். ப்ரியா நிலாவின் தோளைத் தட்டினாள்.

    நிலா...

    ம்...

    என்னடி இது... மாப்பிள்ளையோட அப்பா எள்ளுருண்டை கலர்ல குண்டா இருக்கார். அந்தம்மா சிவப்பா ஒட்டடைக் குச்சியாட்டம் இருக்காங்க... மாப்பிள்ளை இவங்கள்ல யார் ஜாடையா இருப்பார்னு தெரியலையே! மொதல்ல போட்டோவை வாங்கிப்பாரு... திருவண்ணாமலை ஜோதி மாதிரி இருக்கிற உனக்கு எவனாவது கரிக்கட்டை மாதிரி வந்து வாய்ச்சுடப் போறான்...

    கொஞ்சநேரம் புலம்பாம இருக்கியா...?

    சரி... நான் போய்ட்டு அப்புறமா வர்றேன். மாப்பிள்ளை ட போட்டோவைக் கேட்டு வாங்கிவை. நான் பார்த்துட்டு ஓ.கே. சொன்னாத்தான் கல்யாணத்துக்குச் சரின்னு சொல்லணும்...

    ம்...ம்...

    ப்ரியா பின்பக்க வழியாய் அவளுடைய வீட்டுக்குப் போய்விட, நிலா அம்மாவின் குரலுக்காகக் காத்திருந்தாள். பத்து நிமிடம் கழித்து பாக்யத்தின் குரல் ஜன்னல் அருகே கேட்டது.

    தாம்பூலத்தட்டை எடுத்துக்கிட்டு வா நிலா...

    கனமான பட்டுப் புடவைக்குள் சிக்கியிருந்த நிலா தாம்பூலத் தட்டோடு மெல்ல நடந்து ஹாலுக்குள் நுழைந்தாள்.

    கையில் இருந்த தாம்பூலத்தட்டை டீப்பாயின் மேல் வைத்துவிட்டு நமஸ்கரித்த பின்னர், பாக்யத்துக்குப் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள்.

    மாப்பிள்ளையின் அப்பா வெங்கடேஷ்வரன் ஒரு பெரிய புன்னகையோடு நிலாவை ஏறிட்டார்,

    இதோ பாரம்மா, பெரியவங்க நாங்க இந்தக் கல்யாணத்தைப் பத்திப் பேசி முடிவு எடுக்கிறதுக்கு முந்தி உன்னோட முடிவைத் தெரிஞ்சுக்க நாங்க விரும்பறோம். என் னபயன் கிருஷ்ணகாந்த் அடுத்த மாதம்தான் ஸ்டேட்ஸிலிருந்து வருவான். இப்போதைக்கு என் பையனை போட்டோவில் தான் பார்க்க முடியும். அதே மாதிரி அவனும் உன்னை போட்டோவில்தான் பார்க்க முடியும். நேத்தைக்கு என் பையன்கிட்ட ஃபோன்ல பேசும் போது நிலாவோட போட்டோவை வாங்கி அனுப்பட்டுமான்னு கேட்டேன். அதுக்கு அவன் வேண்டாம்பா... நான் பொண்ணைக் கல்யாணத்தன்னிக்கு மணமேடையிலேயே முதல்முதலாப் பார்க்க ஆசைப்படறேன். அது எனக்கு தரில்லிங்காவும் இருக்கும். பொண்ணுக்கு வேண்டுமானால் என் போட்டோவைக் குடுங்க. நான் இருக்கிற வீடியோ காசட்டைக் குடுத்து டெக்கில் போட்டுப் பார்க்கச் சொல்லுங்க. என்னைப் பொண்ணுக்குப் பிடிச்சிருந்தா கல்யாணத்தேதியை நிச்சயம் பண்ணுங்க... வர்றேன்னு சொன்னான். நிலா வியப்போடு நிமிர, அவர் ஒரு பையை நீட்டி, தொடர்ந்தார்.

    இந்தப் பைக்குள்ளே என் மகனோட போட்டோ ஆல்பமும், வீடியோ காஸட்டும் இருக்கு. ரெண்டையும் பாரம்மா பாத்துட்டு என் பையனைப் பிடிச்சிருக்கா இல்லையான்னு சொல்லு..."

    நிலா தயக்கமாய் வெங்கடேஷ்வரனை ஏறிட்டாள்.

    வேண்டாங்க...

    அங்கே ஆச்சர்யப் பார்வைகள் கலந்தன.

    ஏம்மா வேண்டாங்கிறே...?

    உங்க மகன் என்னோட போட்டோவைப் பார்க்காமலேயே கல்யாணத்துக்கு சம்மதம் கொடுத்திருக்கார். என்னை மணமேடையில்தான் முதல் முதலாப் பார்க்கிறதுக்குப் பிரியப்பட்டிருக்கார். அதே பிரியம் எனக்கும் இருக்கக்கூடாதா என்ன? நானும் அவரைக் கல்யாண நாள் அன்னிக்கே மணமேடையில் பார்க்க ஆசைப்படறேன்.

    மாப்பிள்ளையின் அம்மா செளந்தரம் குறுக்கிட்டாள்.

    நீ சொல்றது சரியில்லேம்மா... எதுக்கும் என் பையனோட போட்டோவை ஒருதடவை பார்த்துடு...

    நிலா புன்னகைத்தாள்.

    வேண்டியதில்லை...

    இது என்னம்மா பிடிவாதம்?

    உங்க மகனோட பிடிவாதத்தை மட்டும் ஒத்துக்கிட்டீங்களே?

    வெங்கடேஷ்வரன் பெருமிதம் கலந்த சிரிப்போடு சிவராஜனைப் பார்த்தார்.

    இனி உங்க பொண்ணுக்கு நீங்கதான் சொல்லணும். சிவராஜன் மகளை ஏறிட்டார்.

    பாரம்மா, கல்யாணம்கிறது சாதாரண விஷயமில்லை. ரெண்டு காதையும் கண்ணையும் அகலமா திறந்து வெச்சுகிட்டு யோசனை பண்ணவேண்டிய விஷயம்... மாப்பிள்ளை உன்னோட போட்டோவைப் பார்க்கலைங்கிற காரணத்துக்காக நீயும் பார்க்கமாட்டேன்னு சொல்றது சரியில்லை...

    அப்பா, நீங்களும் அம்மாவும் வேணும்ன்னா மாப்பிள்ளையோட போட்டோவைப் பாருங்க... உங்களுக்குப் பிடிச்சா ஓ.கே. சொல்லுங்க, பிடிக்கலையா... வேண்டாம்ன்னு சொல்லிடுங்க...

    நானும் அம்மாவும் மாப்பிள்ளையோட போட்டோவைப் பார்த்துட்டோம் நிலா...

    உங்களுக்குப் பிடிச்சிருக்கா?

    பிடிச்சிருக்கு.

    அது போதும்.

    இருந்தாலும் நாங்க பார்க்கிற பார்வைக்கும் நீ பார்க்கிற பார்வைக்கும் வித்தியாசம் நிறைய இருக்கும். இது ஆயிரங்காலத்துப் பயிர். வாழ்நாள் பூராவும் வாழ்க்கை நடத்த வேண்டிய பந்தம்...

    அதெல்லாம் எனக்குத்தெரியாதா என்ன?

    பின்னே ஏம்மா அதை விளையாட்டா எடுத்துக்கிறே?

    இது விளையாட்டில்லை. ஒரு நல்ல அனுபவம்.

    பின்னாடி பிரச்னையாயிட்டா?

    பிரச்னையாகாதுன்னு ஒரு நம்பிக்கைதான்...

    எங்க திருப்திக்காகவாவது ஒரு தடவை மாப்பிள்ளையோட போட்டோவை...

    ஸாரி...

    எழுந்து கொண்டாள் நிலா. வெங்கடேஷ்வரனையும் செளந்திரத்தையும் புன்னகையோடு பார்த்தபடி சொன்னாள்.

    இந்த நிமிஷத்திலிருந்து நீங்க ரெண்டு பேரும் எனக்கு மாமா அத்தை. கல்யாண ஏற்பாடுகளை ஆரம்பிச்சுடலாம். எனக்கு இந்தக் கல்யாணத்தில் பரிபூர்ண சம்மதம்.

    சொல்லிவிட்டுத் தன்னுடைய அறை நோக்கிப் போகும் நிலாவையே நான்கு பேரும் வியப்போடு வெறித்தார்கள்.

    முதல் அத்தியாயத்தை எழுதி முடித்து, 'தொடரும்’ போட்டுவிட்டுப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த என் மனைவியைப்பார்த்தேன்.

    நீ சொன்ன எதிர் வீட்டு 'நிலா' கதையைத் தொடரா எழுத ஆரம்பிச்சு, முதல் அத்தியாயத்தை முடிச்சிருக்கேன். மீதிக்கதையை அத்தியாயங்களா எழுதி முடிக்கிறதுக்கு முந்தி...

    முந்தி...?

    அந்த நிலாவை நான் பார்க்கணும்.

    அது முடியாதுங்க...

    ஏன்...?

    அவ அட்மிட் ஆகியிருக்கிற மன நோய் நல ஹாஸ்பிடலில் டாக்டர்ஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்... நிலாவைப் பார்க்கிறதுக்கு அவளோட அப்பா, அம்மாவைத் தவிர யாரையும் 'அலவ்' பண்றதில்லை...

    நான் ஒரு எழுத்தாளன். ஒருவேளை டாக்டர்கள் என்னை அனுமதிக்கலாம். கிளம்பு!

    கிளம்பினோம்.

    2

    நானும் என் மனைவியும் ஸ்கூட்டரில் புறப்பட்டு அந்த - மனநோய் நலவிடுதிக்குப் போய்ச் சேர்ந்தபோது மாலை ஐந்து மணி.

    ஹாஸ்பிடல் ஒரு வேண்டாத நிசப்தத்துக்கு உட்பட்டிருந்தது. தொலைவில் பச்சை பெயிண்ட் அடிக்கப்பட்ட கதவுகள் ஒரே யூனிஃபார்மாய் சாத்திக் கிடந்தன. ரிசப்ஷன் அறைக்குள் நுழைந்தோம். அழகாய் கொண்டை போட்டு டெலிபோனில் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த அந்த ரிசப்ஷனிஸ்ட் எங்களைப் பார்த்ததும் பேச்சை அவசர அவசரமாய் முடித்துக் கொண்டு ரிஸீவரை சாத்தினாள்.

    'எஸ்...

    ஒரு பேஷண்ட்டைப் பார்க்கணும்.

    பேரு...?

    நிலா...

    அந்தப் பொண்ணுக்கு நீங்க என்ன வேணும்...?

    நிலா எதிர்வீட்ல நாங்க குடியிருக்கோம்... பார்த்துட்டு போலாம்னு வந்தோம்...

    ஸாரி...

    எதுக்கு ஸாரி...? நிலாவைப் பார்க்க யாருக்கும் அனுமதி கிடையாது."

    ஒரு ரெண்டு நிமிஷம் பார்த்துட்டு போயிடறோம்.

    பக்கத்து ரூம்ல டாக்டர் இருக்கார். அவர் கிட்ட கேட்டுப் பாருங்க. அவர் அலவ் பண்ணினா போய்ப் பாருங்க...

    நானும் என்னுடைய மனைவியும் பக்கத்து அறைக்குப் போய் மெல்ல எட்டிப் பார்த்தோம்.

    ஒருடாக்டரம்மாள் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து ஃபைல் ஒன்றைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

    எங்களைப் பார்த்ததும் ப்ளீஸ்! கம் இன்... என்றார். உள்ளே போனோம்.

    டாக்டரம்மாளின் முகம் என்னைப் பார்த்ததும் லேசான ஒருமலர்ச்சிக்குப் போயிற்று...!

    ஸார்... நீங்க எழுத்தாளர் ஆர்.கே. தானே...?

    ஆமா... டாக்டரம்மாள் எழுந்து விட்டார். சந்தோஷம் குரலில் சிதறக்கேட்டார்.

    என்ன ஸார்...! எங்க ஹாஸ்பிடல் பக்கம் வந்திருக்கீங்க...?

    நிலான்னு ஒரு பேஷண்ட், என்னோட வீட்டுக்கு எதிர்வீடு. இந்த ஹாஸ்பிடல்ல அட்மிட்டாயிருக்கா. பார்த்துட்டு போலாம்னு வந்தோம்...

    பொதுவா, அந்தப் பொண்ணைப் பார்க்க நாங்க யாரையுமே அனுமதிக்கிறதில்லை. கொஞ்ச நாளைக்கு வஸோலேட் பண்ணி ட்ரீட்மெண்ட் கொடுக்கவேண்டிய கேஸ் அது.

    ஒரே ஒரு நிமிஷம் பார்த்துட்டு போயிடுவோம்.

    சரி... வாங்க...

    டாக்டரம்மாள் முன்னால் நடக்க, நாங்கள் பின் தொடர்ந்தோம். நீளமான வராந்தா எங்களைக் கூட்டிக் கொண்டு போயிற்று.

    அந்தப் பொண்ணோட நிலைமை இப்போ எப்படியிருக்கு டாக்டர்...?

    அஷ்டானிஷ்ட் சிச்சுவேஷன்... தமிழ்ல சொல்லணும்னா ஸ்தம்பித்த நிலை...

    நிலா பழைய நிலைமைக்குத் திரும்புவாளா டாக்டர்?

    எங்க ட்ரீட்மெண்ட்களை இனிமேத்தான் ஆரம்பிக்கப்போறோம். அது எப்படி பலனளிக்கும்னு இப்பவே சொல்லமுடியாது. இட் வில் டேக் டைம் டு ரெக்கவர்...

    பச்சை பெயிண்ட் அடித்த கதவுகளைத் தாண்டி ‘நோ ஹார்ம்' செல்களுக்கு வந்தோம்.

    உங்க எழுத்துப் பணி எப்படியிருக்கு மிஸ்டர் ஆர்.கே...?

    Enjoying the preview?
    Page 1 of 1