Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

என்னைக் கொலையாவது செய் கண்ணே!
என்னைக் கொலையாவது செய் கண்ணே!
என்னைக் கொலையாவது செய் கண்ணே!
Ebook151 pages35 minutes

என்னைக் கொலையாவது செய் கண்ணே!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

புது டெல்லி.
 ஹோட்டல் சாணக்யா இன்டர்நேஷ்னலின் ஏழாவது மாடியில் நூற்றி ஐம்பது பேர் மட்டுமே அமரக்கூடிய அந்தச் சிறிய ஹாலில் அந்த செமினார் நடந்து கொண்டிருந்தது. மேடையின் பின் புலத்தில் 'FINANCE CRISIS IN AMERICA... WHY?'  என்ற டிஜிட்டல் போர்டு எழுத்துக்கள் ஃப்ளட் லைட் வெளிச்சத்தில் பளபளத்தன.
 மேடையில் கரு நீல ஃபுல் சூட்டில் வைஷ்ணவ் உருண்டை மைக்குக்கு முன்பாய் நின்றபடி சரளமான ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தான். இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் வந்து இருந்த பொருளாதார நிபுணர்கள் அவனுடைய பேச்சை கவனித்துக் கொண்டிருந்தார்கள்அமெரிக்காவில் இப்போது நடந்து கொண்டிருக்கிற பொருளாதாரப் பிரளயத்துக்கு என்ன காரணம் என்பதை நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். கடந்த சில வருஷங்களாய் அமெரிக்க வங்கிகள் என்ன செய்து கொண்டிருந்தன? ரியல் எஸ்டேட்டில் பணம் போடு; ஒன்று போட்டால் நூறு ஆகும். பங்குச் சந்தையில் பணம் போடு; நூறு போட்டால் ஆயிரம் என்று போதை ஊட்டினார்கள். எல்லோரும் உட்கார்ந்து தின்றால் உழைப்பது யார்...? எல்லோரும் வட்டித் தொகையில் வாழ வேண்டுமென்றால் வட்டி கட்டுவது யார்? என்ற எளிய கேள்வி கூட அந்த போதை மயக்கத்தில் அமெரிக்க மக்களுக்கு உறைக்கவில்லை. இன்றோ இல்லாத வீட்டுக்குத் தவணை கட்டும் ஏமாளிகளாக தெருவில் நிற்கிறார்கள் அமெரிக்க மக்கள். உழைப்பே இல்லாமல் உட்கார்ந்து தின்றவனின் உடலில் சேர்ந்த கொழுப்பால் அமெரிக்காவுக்கு இப்போது நேர்ந்து இருப்பது முதல் ஹார்ட் அட்டாக். அமெரிக்காவுக்கு ஹார்ட் அட்டாக் என்றவுடன் உலகத்தில் உள்ள பல நாடுகளுக்கும் வேர்த்துக் கொட்டுகிறது. லேமன் பிரதர்ஸ், மெரில்லின்ச், கோல்ட்மேன் சாக்ஸ், வாஷிங்டன் மியூச்சுவல் போன்ற வளமான, பலமான நிறுவனங்கள் எல்லாம் அமெரிக்காவில் நாளுக்கொன்றாக கவிழ்ந்து கொண்டு இருக்கின்றன. அமெரிக்காவின் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி ஐ.டி. தொழிலின் மையமான கலிபோர்னியா மாநிலமே கவிழ்ந்து படுத்துக் கொண்டது. பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் என்ற பிரபல நிறுவனத்தின் நிதி ஆலோசகரான கார்த்திக் ராஜாராம் என்பவர் ஒரு என்.ஆர்.ஐ. இந்தியர். அவர் தனது மனைவி மூன்று குழந்தைகள், மாமியார் அனைவரையும் சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ரியல் எஸ்டேட் சூதாட்டத்தில் அவர் குவித்த பல கோடிகள் ஒரே நாளில் காணாமல் போயின. கடனை அடைக்க முடியாமல் தவணைப் பணம் கட்டாததால் பறிமுதல் செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 50 லட்சம் என்று அமெரிக்க நிதியமைச்சர் பால்சன் அறிவித்திருக்கிறார். அமெரிக்காவில் நேர்த்துள்ள இந்தப் பொருளாதார அவலம் நம் நாட்டில் நேர்ந்துவிடக் கூடாது. இந்த விஷயத்தில் நாம் கவனமாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும்."
 வைஷ்ணவ் தனது கருத்தைச் சொல்லி முடித்து விட்டு இருக்கையை நோக்கிப் போக - அரங்கில் கைத்தட்டல் எழுந்தது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 8, 2024
ISBN9798224946594
என்னைக் கொலையாவது செய் கண்ணே!

Read more from Rajeshkumar

Related to என்னைக் கொலையாவது செய் கண்ணே!

Related ebooks

Related categories

Reviews for என்னைக் கொலையாவது செய் கண்ணே!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    என்னைக் கொலையாவது செய் கண்ணே! - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    கண்ணே!

    உன் பெயரைக்கூட நான்

    எழுதுவது இல்லை -

    பேனா முனை

    உன்னைக் குத்துமே

    என்று!

    காரட் நிற கதிரவன் கிழக்கில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். கடற்கரைச் சாலையில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தவர்களில் நடுவில் ஜாக்கிங் சூட் அணிந்த நீலகண்டன் தன் மெய்க்காப்பாளர்களோடு வேகமாய் நடந்தபடி செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். ஐம்பது வயது உடம்பு தேகப் பயிற்சி காரணமாய் பத்து வயதைக் குறைத்துக் காட்டியது. கழுத்தில் தங்கம் கலந்த உருத்திராட்சக் கொட்டை மின்னியது.

    இதோ பாருங்க பரசுராமன்...! கோயில் கும்பாபிஷேகத் தேதியை மாத்த முடியாது. அந்த நாள் ரொம்பவும் நல்ல நாள்ன்னு எல்லா ஜோஸியர்களும் சொல்லியிருக்காங்க. இனிமேல் அப்படி ஒரு நாள் அமையறது ரொம்பவும் சிரமம்ன்னும் சொல்லியிருக்காங்க. நீங்க என்னடான்னா நடுவுல பூந்து மந்திரியோட வசதிக்காக கும்பாபிஷேக தேதியை மாத்துன்னு சொல்றீங்க. இது எந்த விதத்துல நியாயம்ன்னு எனக்குத் தெரியலை!

    மறுமுனையில் பேசிக் கொண்டிருந்த இந்து அறநிலையத்துறை ஆணையர் கெஞ்சினார்.

    ஸார்...! மந்திரி அந்தக் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துக்கணும்ன்னு ரொம்பவும் ஆசைப்படறார். பட் நீங்க கும்பாபிஷேகம் வெச்சு இருக்கிற தேதியில் அவர்க்கு டெல்லியில் ஏதோ வேலை இருக்கிறதாலதான் தேதியை மாத்தி வைக்கச் சொல்றார். அடுத்த மாசத்துல ஏதாவது ஒரு தேதியைப் பாருங்க.

    அதெல்லாம் பார்க்க முடியாது பரசுராமன். எது எது எந்த எந்த நேரத்துல நடக்கணும்ன்னு ஒரு விதிமுறை இருக்கு. அதையெல்லாம் ஒரு மந்திரிக்காக மாத்த முடியாது.

    ஸார்... கொஞ்சம் யோசனை பண்ணி...!

    இதுல யோசனை பண்ண என்ன இருக்கு...? ஏதோ ஒரு கல்யாண விஷயம்ன்னா கூட தேதியை மாத்திக்கலாம். இது கோயில் கும்பாபிஷேகம்...! ஒண்ணும் பண்ண முடியாது பரசுராமன்... நீங்க மினிஸ்டர்கிட்டே எப்படி சொல்லணுமோ அப்படி சொல்லிருங்க...!

    ஸார்...!

    வேண்டாம் பரசுராமன்...! காலங்கார்த்தாலே என்னைக் கெட்ட வார்த்தை பேச வெச்சிடாதீங்க... செல்போனை ஆஃப் பண்ணிட்டு வேற வேலை ஏதாவது இருந்தா பார்க்கப் போங்க...! செல்போனை ஆஃப் பண்ணி தனக்குப் பக்கத்தில் இருந்த ஒரு மெய்க்காப்பாளனிடம் கொடுத்தார்.

    நாகராஜ்!

    அய்யா...!

    இனிமேல் இந்த பரசுராம் போன் பண்ணினா எனக்குக் கொடுக்காதே! கோயில் கும்பாபிஷேகத்தைக் காட்டிலும் அவனுக்கு மந்திரி வர்றதுதான் முக்கியமாப்படுது. அடிவருடிப் பசங்க...!

    அய்யா...!

    என்னடா?

    நா... ஒண்ணு சொன்னா கோபிச்சுக்க மாட்டீங்களே...!

    ஒண்ணு என்னடா... ஒன்பது சொல்லு...! அதுக்குத்தானே உன்னையெல்லாம் கூடவே வெச்சுட்டு இருக்கேன்...

    அய்யா...! பரசுராம் சொன்ன மாதிரி கும்பாபிஷேகத் தேதியைத் தள்ளிப் போடறதுதான் உத்தமம்!

    ஏண்டா... அப்படி சொல்றே?

    அய்யா! ஆண்டவனைப் பகைச்சுகிட்டாலும் பரவாயில்லை. ஒரு அரசியல்வாதியைப் பகைச்சுக்கக்கூடாதுன்னு சொல்லுவாங்க!

    டேய்! என்னைப் பார்த்துதான் ஒரு அரசியல்வாதி பயப்படணும். நான் யார்க்கும் பயப்பட மாட்டேன். கும்பாபிஷேகத்தேதியை யார்க்காகவும் நான் மாத்த முடியாது. நீலகண்டன் பேசிக் கொண்டே ரோட்டின் ஓரமாய் நிறுத்தியிருந்த தன் கார்க்கு வந்தார்.

    ட்ரைவர் முருகப்பன் ஓட்டமும் நடையுமாய் வந்தான். அய்யா! அருகம்புல் ஜூஸ் கொண்டாரட்டுமா?

    ஒரு அரை டம்ளர் கொடு... போதும்...

    ட்ரைவர் காரின் பின்சீட்டில் இருந்த பிளாஸ்கை எடுக்கப் போக நீலகண்டன் வியர்த்துப் போன முகத்தை டவலால் ஒற்றிக் கொண்டு ரோட்டோரமாய் இருந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தார். இளநீல சபாரி உடையில் இருந்த மெய்க்காப்பாளர்கள் நான்கு பேரும் நான்கு திசைகளையும் பார்த்தபடி நின்றார்கள்.

    ட்ரைவர் கொண்டு வந்து கொடுத்த அருகம்புல் ஜூஸ் டம்ளரை வாங்கிக் கொண்ட நீலகண்டன் ஒரு வாய் பருகிவிட்டு நிமிர்ந்தார்.

    முருகா...!

    அய்யா...

    உன்னோட தங்கச்சிக்கு கல்யாணம்ன்னு சொன்னியே? முகூர்த்த தேதியைக் குறிச்சுட்டியா...?

    இல்லீங்கய்யா...

    ஏண்டா...?

    பையன் வீட்ல கொஞ்சம் கெடுபிடி பண்ணினாங்க... கையில ரொக்கத்தையும் கொடுத்து இருபத்தஞ்சு பவுன் நகையையும் போடச் சொன்னாங்க. நான் வேண்டாம்ன்னுட்டேன்.

    பையன் என்ன பண்றான்?

    செக்ரட்டேரியட்டுல க்ளார்க் உத்யோகம். ரெவின்யூ டிபார்ட்மெண்ட்...!

    அட...! ஏதோ முன்னே பின்னே பேசி முடிக்க வேண்டியதுதானே...!

    பணம் காசை எதிர்பார்க்கிறவங்க வேண்டாங்கய்யா...! வேற ஒரு வரன் வராமலா போயிடும்? முருகப்பன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே பின்பக்கம் அந்த சத்தம் கேட்டது.

    அதெல்லாம் பார்க்க முடியாது...!

    அவர்கிட்டே கொஞ்சம் பேசணும்.

    பேச முடியாது... போய்யா... அந்தப் பக்கம்...!

    நீலகண்டன் அருகம்புல் டம்ளரோடு திரும்பிப் பார்த்தார். ஒரு இளைஞன் மெய்க்காப்பாளனிடம் வாக்குவாதம் செய்து கொண்டு இருந்தான். மாநிறத்தோடு உயரமாய் இருந்தான். முப்பது வயது இருக்கலாம். தலைக்

    Enjoying the preview?
    Page 1 of 1