Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pennendral...
Pennendral...
Pennendral...
Ebook43 pages15 minutes

Pennendral...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகாசிரியர், கட்டுரையாளர் என்ற அறிமுகத்தைவிட, அப்புசாமி - சீதாப்பாட்டி நகைச்சுவைப் பாத்திரங்களை சிருஷ்டித்த பாக்கியம் ராமசாமி என்றால் திரு. ஜ.ரா. சுந்தரேசனைச் சட்டென்று வாசக உலகுக்குப் புரியும்.

37 ஆண்டுகள் குமுதம் பத்திரிகையில் உதவி ஆசிரியர், துணை ஆசிரியர் ஆகிய பதவிகளை வகித்துவிட்டு 1990'ம் ஆண்டு ஓய்வு​பெற்றார்.

ஜ.ரா. சுந்தரேசன் என்ற அசல் ​பெயரில் நிறைய நாவல்கள் எழுதியுள்ளார். பூங்காற்று, குங்குமம், மனஸ், கதம்பாவின் எதிரி, நெருங்கி ​நெருங்கி வருகிறாள், பாசாங்கு, பொன்னியின் புன்னகை போன்ற நாவல்கள் எழுதியுள்ளார்.

இவரது புனைப் பெயர்கள் அனேகம்... அப்புசாமி கதைகளுக்கு பாக்கியம் ராமசாமி என்ற பெயரையே பயன்படுத்துகிறார். மற்ற புனைப் ​பெயர்களில் குறிப்பிடத்தக்கவை: யோகேஷ், வனமாலி, செல்வமணி, மிருணாளினி, இரா. சிதம்பரம், உதங்கர், சிவதணல், ஜ்வாலாமாலினி.

சிறந்த நகைச்சுவைப் பேச்சாளர் என்ற பாராட்டுப் ​பெற்றவர். அனேக அரிமா சங்கங்களிலும், ரோட்டரி கிளப்புகளிலும், ஹ்யூமர் கிளப்புகளிலும், தனியார் இலக்கிய கூட்டங்களிலும் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் நிறையத் தடவை​ பேசியிருக்கிறார். தமிழ் எழுத்தாளர் சங்கம், இலக்கிய சிந்தனை போன்ற பல அமைப்புகளில் இவரது எழுத்துக்களுக்குப் பாராட்டு கிடைத்திருக்கின்றன. 'ஞானபாரதி' 'எழுத்துச் செம்மல்' போன்ற பாராட்டுக்களைப் பெற்றவர். நகைச்சுவை என்றாலும் ஆன்மீகத்தில் ஆழமான நாட்டம் ​கொண்டவர். இரு ரிக்‌ஷாக்காரர்கள் பேசிக் ​கொள்வது ​போன்ற பாணியில் ஸ்ரீமத் பகவத் கீ​தையில் கூறப்பட்ட கருத்துக்க​ளை 'பாமர கீதை' என்னும் சிறு நூலில் விரிவாக விளக்கியிருக்கிறார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124103248
Pennendral...

Read more from Ja. Ra. Sundaresan

Related to Pennendral...

Related ebooks

Reviews for Pennendral...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pennendral... - Ja. Ra. Sundaresan

    http://www.pustaka.co.in

    பெண்ணென்றால்...

    Pennendral…

    Author:

    ஜ.ரா.சுந்தரேசன்

    Ja. Ra. Sundaresan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jarasu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    1

    செந்தில்ராஜ் கிளாஸை லொட்டென்று வைத்தார்.

    கிளப் மெயின் பில்டிங்கின் மாடியிலிருந்த பார் ரூமில் அனேகமாக எல்லாரும் போய்விட்டிருந்தனர். அழகிய கிண்ணத்திலிருந்த மூன்றாவது 'ஸ்மாலை' உறிஞ்சியபடி, சுறுசுறுவென்ற போதை உடம்புக்குச் சுறுசுறுப்பேற்ற செந்தில்ராஜும் பாண்டித்துரையும் சாவகாசமாக பிரிட்ஜ் ஆடிக்கொண்டிருந்தனர், ஜிம்கானா ஏ.ஸி. 'பட்டரி பார்' மாதிரி. இங்கேயும் ஏ ஸி.. பண்ணிடப் போறாங்க போலிருக்கு. என்றார் பாண்டித்துரை - சீட்டில் ஒரு கவனமும் பேச்சில் ஒரு கவனமுமாய்,

    மதுவிலக்கு என்ஃபார்ஸ் ஆன பிறகு லானில் ஹாயாக இயற்கைக் காற்றை அனுபவித்தவாறு உட்கார்ந்து பெக் போடவில்லையே என்று அவர்களுக்கு வருத்தமாயிருந்தது.

    பார் ரூமில் தான் கூட்டமில்லையே தவிர கீழ் ஹாலில் கும்பலாயிருந்தது.

    "பாய்! ஏ பாய்!' என்று கூவும் அதிகாரக் குரல்களின் ஒலிகளும் அவ்வப் பொழுது புறப்படும் கார்களின் ஓசையும் அவர்கள் காதில் விழுந்து கொண்டிருந்தது.

    லைப்ரரிக்கு அடுத்திருந்த நான்-வெஜ் டைனிங் ஹாலிலிருந்து ஒருத்தர் குடும்பத்துடன் சாப்பிட்டுவிட்டு வந்து கொண்டிருப்பது அவர்கள் கண்ணில் பட்டது. மிக்ஸட் கிளப்பாதலால் பெண்களும் வருவதுண்டு. ஆறு. வருஷங்களுக்கு முன் வரை இவர்களுக்கு அங்கே அனுமதியில்லை,

    செந்தில்ராஜுக்குப் பெண்கள் என்றால் கண்ணைக் கட்டுப் படுத்திக்கொள்ளத் தெரியாது. குடும்பப் பெண் போலிருக்கிறது என்ற நினைவு வந்தாலும் லேசாகக் கீழே விழுந்த சீட்டை எடுப்பதுபோல் ஓரப் பார்வை பார்த்துவிட்டு, 'அப்படி ஒன்றும்

    Enjoying the preview?
    Page 1 of 1