Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nizhalin Kural
Nizhalin Kural
Nizhalin Kural
Ebook141 pages1 hour

Nizhalin Kural

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'நிழலின் குரல்' நிஜம் ஒன்று வெளிச்சத்தில் நடக்கும்போது நிழல் உற்பத்தியாகி நிஜத்தை பின் தொடர்வது இயற்கை. நிஜம் பேசும், நிழல் பேசுமோ? ஆனால் இந்த நாவலில் நிழல் பேசுகிறது. பேசுவது மட்டும் இல்லை. சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்கிறது. அந்த நிழல் யார் என்பதுதான் சஸ்பென்ஸ். இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான முறையில் மரணத்தை தழுவும் போது, கொலையாளி யாராக இருக்கும் என்ற மலைப்பு படிக்கும் வாசகர்களுக்கு ஏற்படுவது உறுதி. கொலையாளியைக் கண்டுபிடிக்க விவேக்கும், இன்ஸ்பெக்டர் கோகுல்நாத்தும் எடுக்கின்ற முயற்சிகள் கடைசியில் வெற்றி பெற்று கொலையாளி யார் என்பதைக் காட்டும்போது வாசகர்கள் 'அட!' என்று சொல்லி திகைக்கபோவது உறுதி. உண்மையான குற்றவாளிகளை போலீஸ் தண்டிக்காமல் விட்டால், அந்த தண்டிக்கும் வேலையை வேறு யாராவது எடுத்துக் கொண்டு செயல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது. சட்டம் இந்த செயலைக் கடுமையாய்ப் பார்த்தாலும், நியாயமும் தர்மமும் கனிவேடு பார்க்கும். சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வது தவறு என்று சொல்பவர்கள் வைரத்தை வைரத்தால்தன் அறுக்க முடியும் என்கிற உண்மையை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். மேற்சொன்ன வாசகர்களைத்தான் 'நிழலின் குரல்' நாவல் சம்பவங்களாக்கி காட்டுகின்றது.

- ராஜேஷ்குமார்

Languageதமிழ்
Release dateApr 22, 2018
ISBN6580100400175
Nizhalin Kural

Read more from Rajesh Kumar

Related to Nizhalin Kural

Related ebooks

Reviews for Nizhalin Kural

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nizhalin Kural - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    நிழலின் குரல்

    Nizhalin Kural

    Author :

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    இண்டர்காம் ரிஸீவர் அடித்தது.

    இடது கை விரல்களில் சிகரெட் புகைய ஃபைலைப் புரட்டிக் கொண்டிருந்த சேகர் கிருஷ்ணா இண்டர்காம் கூப்பிடுவதை உணர்ந்ததும் சிகரெட்டின் உடம்பை ஆஷ்ட்ரேயில் இட்டு நசுக்கி விட்டு ரிஸீவரை எடுத்தான்.

    ஹலோ…

    ரிசப்ஷனிஸ்ட் பேசினாள்.

    ஸார்… ஒன் மினிட் சுகன்யா வாண்ட்ஸ் டூ ஸீயூ… ஷீ ஈஸ் இன் த அப்பாயிண்ட்மெண்ட் லிஸ்ட்…

    உடனடியா என்னோட ரூமுக்கு அனுப்பு… ரிஸீவரை வைத்து விட்டு கழுத்திலிருந்த டையை இறுக்கிக் கொண்டு காத்திருந்தான் சேகர் கிருஷ்ணா.

    அரை நிமிட அவகாசத்திற்குப் பிறகு –

    சுகன்யா உள்ளே நுழைந்தாள். அழகாய் புன்னகைத்து குட்மார்னிங்… என்றாள்.

    சேகர் கிருஷ்ணா சிரித்தான்.

    குட்மார்னிங்…! இந்தக் காலை நேரம் இவ்வளவு அழகான ஆச்சர்யத்தோடு அமையும்ன்னு நான் நினைக்கலை…

    எதுக்கு ஆச்சர்யம்…?

    கல்யாணத்துக்கு முன்னாடிப் பெண்ணே மாப்பிள்ளையைத் தேடி வர்றது ஆச்சர்யமில்லையா?

    இதுல ஆச்சர்யப்படறதுக்கு ஒண்ணுமேயில்லை. அரை மணி நேரத்துக்கு முன்னாடி கோயில்ல இருந்தேன். முதல் பத்திரிகையை அம்மனுக்கு வெச்சு அர்ச்சனை பண்ணினேன். அப்ப குருக்கள் ரெண்டாவது பத்திரிகையை ‘உனக்கு பிரியமான ஒருத்தர்க்கு கொடுன்னு’ சொன்னார். போன வாரத்திலிருந்து எனக்குப் பிரியமானவர் நீங்கதான். ஆதான் பத்திரிகையைக் குடுத்துட்டு போலாம்னு வந்தேன்.

    மாப்பிள்ளைக்கே பத்திரிகையா? அதுவும் கல்யாணப் பெண்ணோட கையாலே! இந்த மாதிரி திரில்லான அனுபவம் எத்தனை மாப்பிள்ளைக்குக் கிடைக்கும்?

    சுகன்யா வெட்கத்தோடு முறுவலித்தாள். பத்திரிகையை வாங்கிக்கறீங்களா?

    ம்… குடு…

    கொடுத்தாள்.

    தாங்க் யூ… சொல்லிவிட்டு உறையைப் பிரித்தவன் கண்களை விரித்தான். ஃபெண்டாஸ்டிக். பத்திரிகையை உங்கப்பா எங்கே பிரிண்ட் பண்ணினார்.

    சிவகாசியில்.

    எங்க வீட்டுப் பத்திரிகை சாயந்திரந்தான் பிரிண்டர்ஸிடமிருந்து வரும். ஆனா இவ்வளவு ஆர்ப்பாட்டமா இருக்காது. பை… த… பை… என்னோட ஆபீஸ_க்கு முதல் தடவையா வந்திருக்கே. என்ன சாப்பிடறே?

    ஒண்ணும் வேண்டாம்.

    ஒண்ணும் வேண்டாமா? ஐ வோண்ட் அக்ரி.

    சொன்னவன் இண்டர்காம் ரிஸீவரை எடுத்து பட்டனைத் தட்டிவிட்டுப் பேசினான். ‘கேடரிங் செக்ஷனா? ரெண்டு மில்க் ஸ்வீட், கொஞ்சம் கேஸ்யூ நட்ஸ்… ரெண்டு காபி… பத்து நிமிஷத்துக்குள்ளே என்னோட ரூமுக்கு வரணும்."

    பேசிவிட்டு ரிஸீவரை வைத்தான்.

    ஆபீஸ் பிடிச்சிருக்கா சுகன்யா…

    ரொம்ப…

    இவ்வளவு ஜோவியலா இருப்பேன்னு நினைக்கவேயில்லை. அன்னிக்குப் பெண் பார்க்க வந்தப்ப… மூடி டைப் மாதிரி தெரிஞ்சது…

    அன்னிக்கு பெரியவங்களெல்லாம் இருந்தாங்க… அடக்க ஒடுக்கத்தைக் காட்ட வேண்டாமா?

    நீ இவ்வளவு ஜோவியலா இருக்கிறதனால… ஒரு ரெக்வெஸ்ட்.

    என்ன…?

    நாளைக்கு என்னோட பிறந்த நாள். காலையில ஏழு மணிக்கு வீட்ல சின்னதா ஒரு ஃபங்ஷன். எனக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல நீயும் உன்னோட அப்பாவும் வரணும்…

    சுகன்யா நெற்றியைக் கீறினாள்,அப்பா என்ன… சொல்வார்ன்னு தெரியலையே…?

    நான் வேணும்ன்னா…அவர்க்குப் போன் பண்ணி…

    வேண்டாம் நானே சொல்லிக்கிறேன்.

    நாளைக்கு கண்டிப்பா வரணும்…

    வர்றேன்.

    நீ வந்தாதான் கேக்கையே வெட்டுவேன்.

    மறுநாள் காலை ஆறு மணி முப்பது நிமிடம்.

    சுகன்யா தன்னுடைய அப்பாவின் அறைக்குள் நுழைந்தாள்.

    என்னம்மா… ரெடியா…?

    தலைக்கு மப்ளரைச் சுற்றிக் கொண்டு உட்கார்ந்திருந்த ராமமூர்த்தி மகளை ஏறிட்டார். கல்யாணம் முடியறதுக்கு முந்தி… மாப்பிள்ளை வீட்டுக்கு இப்படியெல்லாம் அனாவசியமாப் போகக்கூடாதம்மா…! நேத்திக்கு நீ பத்திரிகையைக் கொடுக்கப்போனதே தப்பு… மாப்பிள்ளையோட வீட்ல என்ன நினைப்பாங்க…?

    ஒண்ணும் நினைக்க மாட்டாங்க… அவங்க கல்ச்சர்ட் ஃபேமிலி. நாம ஃபங்ஷனுக்கு போனா சந்தோஷப்படுவாங்க…

    அம்மா…! நான் என்ன சொல்ல வர்றேன்னா…?

    நீங்க ஒண்ணையும் சொல்லவேண்டாம்… கால் மணி நேரத்துக்குள்ளே ரெடியாகி… நீங்க ஃபோர்டிகோவுக்கு வரணும். வரலை… நான் பாட்டுக்குப் போய்க்கிட்டே இருப்பேன்…

    சொல்லிட்டு வெளியே வந்தாள் சுகன்யா. போர்டிகோ படிகளில் அன்றைய காலை பேப்பர் விழுந்திருந்தது.

    எடுத்தாள். தலைப்புச் செய்தியின் மேல் பார்வை படிந்தது.

    ஆறு எம்.பிக்களுக்கு மனநிலை பாதிப்பு.

    எந்தக் கட்சியில் இருக்கிறோம் என்பதைத் தீவிரமாக யோசித்ததே காரணம்.

    சுகன்யா சிரித்துக்கொண்டே பார்வையை – பத்திரிகையின் வலது பக்கக் கார்னருக்கு கொண்டு போனாள். விழிகள் சட்டென்று நிலைத்துப் போக அதிர்ந்தாள்.

    காலமானார் என்று அடிக்கோடிட்ட வாசகத்துக்குக் கீழே சேகர் கிருஷ்ணாவின் போட்டோ.

    2

    அறையை விட்டு வெளியே வந்த ராமமூர்த்தி மகளைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போய் வேகவேகமாய் அவளை நெருங்கினார்.

    என்னம்மா… சுகன்யா… பேப்பரையே வெறித்து பார்த்துட்டு என்னவோ மாதிரி உட்கார்ந்திருக்கே… ஏதாவது ஷாக் நியூஸா…?

    அ… அப்பா…! இ… இதைப் பாருங்க… சுகன்யா உலர்ந்து போன குரலில் சொல்ல… ராமமூர்த்தி பத்திரிகையை வாங்கிக் கண்ணாடியைச் சரியாய்ப் பொருத்திக் கொண்டு பார்த்தார். பார்த்தவர் ஸ்தம்பித்தார்.

    எ… என்னம்மா… இது…? பதட்டமாய்க் கத்தியவர் காலமானார் தலைப்புக்குக் கீழே இருந்த அறிவிப்பு வாசகத்தை படித்தார்.

    பிரபல ‘மம்மி’ குழந்தை உணவுத் தயாரிப்பாளர் ஐராவதம் அவர்களின் மூத்த குமாரர் சேகர் கிருஷ்ணா நேற்று இரவு அகால மரணமடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுகிறோம் - இப்படிக்கு குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், மம்மி குழந்தை உணவுத் தொழிற்சாலை ஊழியர்கள்.

    ராமமூர்த்தியின் கையிலிருந்த செய்தித்தாள் உதிர்ந்தது. என்னம்மா… இது நம்பவே முடியலையே… நேத்திக்கு ராத்திரி சம்பவம் நடந்திருக்கு… மாப்பிள்ளை வீட்டுக்காரங்க… நமக்குத் தகவலே தெரிவிக்கலையே…

    சுகன்யா இன்னமும் அதிர்ச்சியிலேயே இருக்க – ராமமூர்த்தி டெலிபோனை நோக்கி ஓடினார். ரிஸீவரை எடுத்து சேகர் கிருஷ்ணாவின் வீட்டுக்கு டயலைச் சழற்றினார்.

    மறுமுனையில் என்கேஜ்ட் டோன்.

    மீண்டும் டயலைச் சுழற்றினார்.

    அதே என்கேஜ்ட் டோன்.

    ஒரு ஐந்து நிமிட நேரம் டயலைச் சுழற்றிச் சுழற்றி – அலுத்துப் போனவர் – எக்சேஞ்சைத் தொடர்பு கொண்டார். நெம்பரைக் குறிப்பிட்டு விட்டுச் சொன்னார்.

    இந்த நெம்பர் கிடைக்கலை. கொஞ்சம் ட்ரை பண்ணிக் குடுங்க… எக்சேஞ்சில் முயற்சி செய்து விட்டு அந்தப் பெண் சொன்னாள்.

    போன் அவுட் ஆஃப் ஆர்டர்…

    ராமமூர்த்தி ரிஸீவரை வைத்துவிட்டு சுகன்யாவிடம் வந்தார். புறப்படம்மா… நேர்லேயே போய்ட்டு வந்துடலாம்…

    அ… அப்பா…

    என்னம்மா…?

    எனக்கு நெஞ்சு ‘திக் திக்’ன்னு இருக்கு… இந்த முடிவு அவர்க்கு எப்படிப்பா… வந்திருக்க முடியும்…?

    சுகன்யா அழுத குரலில் கேட்டுக் கொண்டிருக்கும் போதே உள்ளே டெலிபோன் அடித்தது. ராமமூர்த்தி வேகமாய் ரிஸீவரை எடுத்தார்.

    ஹலோ…?

    ராமமூர்த்தி வீடுங்களா…?

    ஆமா…

    Enjoying the preview?
    Page 1 of 1