Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Blue Blood
Blue Blood
Blue Blood
Ebook79 pages28 minutes

Blue Blood

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100604281
Blue Blood

Read more from Devibala

Related to Blue Blood

Related ebooks

Reviews for Blue Blood

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Blue Blood - Devibala

    http://www.pustaka.co.in

    ப்ளு ப்ளட்

    Blue Blood

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    டாக்டரின் நெற்றியில் வியர்வை முத்துக்கள் பொடிப் பொடியாக சேர்ந்திருக்க, அந்த ஏர்கண்டிஷன் அறையிலும் ஏகமாக நனைந்திருந்தார்.

    சுற்றிலும் சோதனைச்சாலை உபகரணங்கள்.

    லாமினேஷன் தடவப்பட்ட நேர்த்தியான மேஜைகள்.

    சற்று தூரத்தில், நாலைந்து கம்ப்யூட்டர் டெர்மினல்கள், பச்சையும், நீலமுமாக எழுத்துக்களைப் பிரசவித்துக் கொண்டிருக்க –

    பிப்ஃபெட்டில் இருந்த அந்த ஊதா நிற திரவத்தை கண்ணாடி பீக்கரில் சொட்டுச் சொட்டாக ஊற்றத் தொடங்கினார் டாக்டர். ஏற்கனவே பீக்கரில் நிறமில்லாத திரவம் ஒன்று இருந்தது. இது கீழே விழ, அந்த நிறமில்லாத திரவம் மெல்ல மாறிக் கொண்டே வந்து, நீல நிறத்தை அடைய அடைய, டாக்டரின் முகம் வெளிச்சத்துக்கு வந்தது.

    குறிப்பிட்ட அளவில் நிறுத்திக் கொண்ட டாக்டர், அதை ஒரு முறை கையால் அசைத்துக் கலக்க, அடர் நீல திரவம் அவரைப் பார்த்துச் சிரித்தது.

    ஃபன்டாஸ்டிக்! தன்னை மறந்து உரக்கக் கூவினார்.

    "தம்பு! குரல் கொடுத்தார்.

    கதவு திறந்து அந்த தம்பு என்று சொல்லப்பட்டவன் எட்டிப் பார்த்தான்.

    கேஜ்-7ல புதுசா முயல் இருக்கே. அதை எடுத்துட்டு வா!

    முயல் வருவதற்குள், நாம் டாக்டரைப் பற்றித் தெரிந்து கொண்டு விடலாமா?

    டாக்டர் சுராஜுக்கு அதிகப்பட்சம் போனால் இன்றைக்கெல்லாம் நாற்பது வயது இருக்கலாம். தோற்றத்தில், சத்தியம் செய்தால் கூட முப்பத்தி ரெண்டுக்கு மேல் சொல்லமாட்டார்கள். அடத்தியான முடியை உயர்த்தி விடுவதில், நெற்றியின் அகலம் பளிச்.

    நிறம்: நல்ல வெள்ளை கோதுமை.

    மீசையில்லாத, சற்றே பெண்மை கலந்த முகம். ஐந்தடி உயரம் இருக்கக் கூடும். மீடியமான உடம்பு. ஒரு கல்லூரி மாணவன் போன்ற தோற்றம்.

    மற்ற அவரது விவரங்கள் அப்புறம்.

    முயல் வந்து விட்டது.

    ஏற்கனவே மயக்க நிலையில் இருந்த முயல் மேஜையின் மேல் கிடத்தப்பட

    தயாரிக்கப்பட்ட திரவத்தை ஒரு பாட்டிலில் சேகரித்துக் கொண்டார் முதலில்.

    அதிலிருந்து சில துளிகளைக் கணக்கிட்டு சிரிஞ்சில் சேமித்தவர், மீதியை குளிர்பதனப் பெட்டியில் வைத்து மூடிவிட்டு –

    முயலை நெருங்கினார்.

    அதன் உடலுக்குள் ஊசி நுழைய, மருந்து செலுத்தப்பட்டது.

    மேல் பக்கம் வாய் திறந்த ஒரு கண்ணாடிப் பெட்டி ஒன்றை எடுத்து வந்து, தலை கீழாக்கி முயலை மூடினார். அது இப்போது கூண்டுக்குள் வர -

    தன் மேஜைக்கு வந்து குறிப்புகள் எழுத ஆரம்பித்தார்.

    இன்டர்காம் ஒலித்தது.

    பட்டனை அழுத்தி, ரிசீவரை உயர்த்தி, யெஸ் ப்ளீஸ்!

    டாக்டர், கால் ஃப்ரம் டான்சேனியா!

    தோ வர்றன்!

    சோதனைச் சாலையை விட்டு வெளியே வந்து, லிஃப்டுக்குள் நுழைந்தார். சரேலென வழுக்கி, தளத்தை அடைந்தார். ரிசப்ஷனில் ரீசிவரோடு அந்த ஆங்கிலோ-இந்தியப் பெண் காத்திருக்க

    உரத்த குரலில் –

    டாக்டர் சுராஜ்!

    ...

    தெளிவான ஆங்கிலத்தில், குரல் உயர்த்திப் பேச ஆரம்பித்தார்.

    "நோ... இன்னும் பதினைஞ்சு நாள் ஆகும். ராபிட்டை இப்பத்தான் ஆப்ஸர் வேஷன்ல வெச்சிருக்கேன். அது வெற்றியடைஞ்சா, அடுத்த கட்டத்துக்கு வரணும். நோ போன்ல பேச வேண்டாம். உங்க 'ரெப்' ஒருத்தரை

    Enjoying the preview?
    Page 1 of 1