Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ilanthai Mara Ilaigalai Ennukiravan
Ilanthai Mara Ilaigalai Ennukiravan
Ilanthai Mara Ilaigalai Ennukiravan
Ebook163 pages57 minutes

Ilanthai Mara Ilaigalai Ennukiravan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'கடவுளின் குரல் ' _ இது ஓர் இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்ற சிறுகதை.சுகம் பெற வேண்டி ஒரு மருத்துவ மனையில் 'காசு' கட்டி ' ப் பெற்ற துயரம் ததும்பும் அனுபவங்களின் கோர்வை.

'முதல் பலி' இதுவும் பரிசுக் கதைதான்.காவிரி நதியின் பூர்விக இடமான தலைக் காவிரிக்குச் சென்று விட்டு வந்த வேகத்தில் புனையப்பட்ட _கிட்டத்தட்ட பெருந்தொற்றைப் பிரதிபலிக்கும் ஒரு பயணக் கதை.

என் தந்தையின் இறுதிக் காலத்தைத் தொட்டுத் தழுவும் __ஏறக்குறைய ஓர் உண்மைக் கதை வடிவம்.எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய ' கடலும் கிழவனும் ' புதினத்தின் செறிவான பகுதியை இக்கதையில் செருகியிருக்கிறேன் .

'கருமேகம்' __நான் ஓர் அரசுப் பணியாளராக இருந்ததால் , கொஞ்சம் கற்பனையும் கலந்து... மற்றபடி யதார்த்தமாய் நடப்பதுதானே...!

'தெரியாதவள் ' ' ஏன் சார் நேசிக்கிறீங்க..' இந்தக் கதைகள் ரொமாண்டிக் வாசனையுடன் ! 'இலந்தை மர இலைகளை எண்ணுகிறவன் '--என் இல்லத்தையொட்டி செறிந்து கிடக்கும் இலந்தை மரத்தின் தாக்கத்தில்... புனைவு தான்.

Languageதமிழ்
Release dateJan 6, 2024
ISBN6580171910517
Ilanthai Mara Ilaigalai Ennukiravan

Related to Ilanthai Mara Ilaigalai Ennukiravan

Related ebooks

Reviews for Ilanthai Mara Ilaigalai Ennukiravan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ilanthai Mara Ilaigalai Ennukiravan - N. Manoharan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இலந்தை மர இலைகளை எண்ணுகிறவன்

    (சிறுகதைகள்)

    Ilanthai Mara Ilaigalai Ennukiravan

    (Sirukadhaigal)

    Author:

    சந்திரா மனோகரன்

    N. Manoharan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/n-manoharan

    பொருளடக்கம்

    என்னுரை

    1. கடவுளின் குரல்

    2. முதல் பலி

    3. மீட்சி

    4. ஏன் சார் நேசிக்கிறீங்க...?

    5. உடைவு

    6. கருமேகம்

    7. அப்பா எழுதிய நாட்குறிப்பு

    8. சாதுயர்

    9. கையறவு

    10. வைதேகி நினைவு

    11. தெரியாதவள்

    12. எப்போதும் இருக்க முடியாது!

    13. வேறொருவன்

    14. குட்டி குயின்

    15. இலந்தைமர இலைகளை எண்ணுகிறவன்

    என்னுரை

    நான் கதைகளை எண்ணுகிறவன்!

    பொதுவாக சிறுகதைகள் பெருகிவரும் காலம் இது. எத்தனை உத்திகள்!

    புதிய புதிய வடிவங்களில் எழுதித் தள்ளுகிறார்கள். படிப்போரை

    வியக்கவும் வைக்கிறது; சிந்திக்கவும் வைக்கிறது. அடுத்த நகர்வுக்குத்

    தாவவும் தூண்டுகிறது!

    இத்தொகுப்பில் மொத்தம் 15 கதைகள் உள்ளன. பழைய பாணிதான்! உண்மையை உரைக்கப் போனால்,எந்தக் கதையும் எந்தத் தாக்கத்தையும் உண்டு பண்ணப் போவதில்லை!

    ஆனால், எனக்கேற்பட்ட சில அனுபவங்கள் எனக்குள் சொல்லும்படியான

    கிளர்ச்சியை உண்டுபண்ணியிருக்கிறது.

    எடுத்துக்காட்டாக:-

    ‘கடவுளின் குரல் - பரிசு பெற்ற முதல் கதை. சில ஆண்டுகளுக்கு முன்பு,ஏதோ அற்ப சொற்பமான காரணத்துக்காக ஒரு மருத்துவமனைக்குள் நுழைந்தவன், அங்கு ஒரு வார காலத்துக்கு ‘தங்க ‘ வேண்டியதாய்ப் போயிற்று. அதுவும் நல்லதாகப் போயிற்று. சில அனுபவங்களைக் காசு கொடுத்துத்தான் பெற வேண்டியிருக்கிறது!. எண்பது விழுக்காடு மெய்ம்மையும், இருபது விழுக்காடு புனைவும் கொண்ட கதைதான் அது.

    இரண்டாவது கதை ‘முதல் பலி’. இதற்கும் பரிசு கிடைத்தது. இது கர்நாடகா மாநிலம் - காவிரி நதியின் பூர்விக இடமான தலைக்காவிரிக்குச் சென்று வந்த வேகத்தில் புனையப்பட்ட - கிட்டத்தட்ட

    ஒரு பயணக்கதை. முடிவில் பெருந்தொற்றின் பிரதிபலிப்பு.

    மூன்றாவது கதை - ‘மீட்சி’. என் தந்தையின் இறுதிக் காலத்தைத் தொட்டுத் தழுவும் உண்மைக் கதை. நோபல் பரிசு பெற்ற எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய - இல்லை, இல்லை ‘வாழ்ந்த’ கிழவனும் கடலும்’ புதினத்தின் செறிவான பகுதியை, இக்கதையில் செருகியிருக்கிறேன். என் மனதை நெருடும் ஓர் ‘உண்மை’ இதில் இருக்கிறது. அதிகமாக நிராகரிக்கப்பட்ட கதை இது!

    ‘கருமேகம்’ என்ற சிறுகதை. நான் அரசுப் பணியாளனாக இருந்ததால்

    கொஞ்சம் கறபனையும் கலந்து... மற்றபடி யதார்த்தமாய் நடப்பதுதானே!

    அப்புறம்... அப்புறம் ‘தெரியாதவள்’, ஏன் சார் நேசிக்கிறீங்க’, எப்போதும் இருக்க முடியாது ‘...இவை எல்லாமே சில அனுபவங்களின் கோர்வைதான்.

    சில கதைகளை சில இதழ்கள் அங்கீகரித்திருக்கின்றன. அவைகளுக்கு

    நன்றி சொல்ல வேண்டாமா? இலக்கிய பீடம், தமிழ்ப் பல்லவி, இனிய நந்தவனம், நால்வர், தமிழ்த் தாராமதி, பாவையர் மலர்.

    இதிலுள்ள கதைகளைக் கோர்த்து தட்டச்சு செய்த ஜெனோ ஃப்ராங்க்ளின்

    மற்றும் அழகிய நூலாகிய அவர்களுக்கும் என் நன்றிகள்.

    சந்திரா மனோகரன்

    எழுத்தாளர்/இதழாளர்/பதிப்பாளர்.

    45 A, டெலிகாம் சிட்டி,

    செங்கோடம்பாளையம்,

    தண்டல் அஞ்சல்,

    ஈரோடு - 638 012

    94438 41122

    96559 20002

    மின்னஞ்சல் :- chandramanoharan.n@gmail.com

    1. கடவுளின் குரல்

    இரவு இரண்டு மணி இருக்கும். ரகுவரன் பாதி உறக்கத்தில் பிதற்றிக்கொண்டிருந்தான்.

    அருகேயிருந்த சுசீலா-அவன் மனைவி பயத்தில் உறைந்துபோனாள்.

    என்னங்க, கண்டதையும் நெனச்சு உடம்பையும் மனசையும் கெடுக்கிறீக்க... உங்களுக்கு என்னாச்சு?

    அவன் நெற்றியைத் தொட்டு டெம்ப்ரேச்சர் பார்த்தாள். இலேசாக சுடுகிற மாதிரியிருந்தது.ஏங்க கெளதமனையே நெனைச்சிடிருக்கீங்க... பாவம் போயிட்டாரு... என்ன செய்யறது?

    செத்துப்போற வயசா அவனுக்கு... அநியாயமா ஆஸ்பத்திரியிலே வச்சுக் கொன்னுடானுக! இவனும் படிச்சு சேவை செய்யறதுக்கா வர்றானுக... ச்சே... !நாங்க எத்தனை வருசமாப் பழகினோம்... அவனுக்குப் போயி இப்படியொரு சாவா? அவன் வாழ்க்கையைச் சிதைத்துபோட்ட கொடூர உலகம்!

    ரகுவரன் நினைத்துப் பொருமினான். மிகப்பெரிய ஃபர்னிச்சர் மார்ட் அது. ரகுவரனும் கெளதமனும் சேலஸ் ரெப். தமிழ்நாடு, கேரளா, கர்னாடகா என்று அவர்கள் பணி சார்ந்த பயணம் அலுப்பு நிறைந்தது. வார்டுரோப், ட்ரெஸ்ஸர், நைட் ஸ்டேண்ட், எக்ஸ்சியூட்டிவ் மேசைகள், டைனிங் ஸெட், ஃபோம் மெத்தைகள் என்று ஃபர்னிச்சர் மார்ட் தயாரிப்புகளை விற்பனை செய்ய, புதிதாக ஆர்டர் வாங்க... ஒரு சேலஞ் நிறைந்த வேலைதான்.

    கம்பெனி சொல்கிற வெவ்வேறு ஊர்களுக்கு டூர் போகவேண்டும். அப்படி, பத்து நாட்களுக்கு முன்பு ஒசூர்-பெங்களூரு ஏரியாவுக்கும் சென்ற கெளதமன் வீட்டுக்கு சடலமாக வர நேர்ந்த அவலம். பெங்களூரு-மடிவாலா பகுதியிலிருந்து ஓசூர் வரும்போது, அவனும் கம்பெனி ஸ்டாஃப் ஒருவனும் பைக் ஆக்ஸிடெண்ட்டில் மாட்டிக்கொண்டனர். மாண்டியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த டிப்பர் லாரி மோத, இருவரும் சாலைக்கு வெளியே தூக்கியெறிப்பட்டனர். இருட்டும் ஊசித்தூறலும் விபத்துக்குக் காரணம் என்றார்கள். ஒரு பூதம்போல் வந்த லாரிக்காரன் படுவேகத்தில் மறைந்துவிட்டான்.

    பைக்கை ஓட்டிக்கொண்டுவந்த கெளதமனுக்குத் தலையில் பலத்த அடி. பில்லியனில் இருந்த கம்பெனி ஊழியன் லிங்கனுக்கு இலேசான காயம்தான். சுதாரித்துகொண்டு எழுந்தான் லிங்கன். மயங்கிக்கிடந்த கெளதமனை சிலர் உதவியுடன் மருத்துவமனைக்கு அள்ளிக்கொண்டு போனான். ஒசூருக்கு அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனை. அட்மிஷன் கிடைக்கவில்லை. தலையில் பலத்த அடி. ஆப்ரேஷன் தியேட்டரில் ஸ்டாஃப் இல்லையென்று மறுத்துவிட்டார்கள். வேறு வழியில்லை. ஆம்புலன்ஸ் கிருஷ்ணகிரி பறந்தது. அங்கே இருபத்து நான்கு மணிநேரமும் இயங்கும் சிட்டிகேர் ஆஸ்பிட்டல் இருக்கிறது. அங்கும் கைவிரிப்பு. சம்பந்தப்பட்ட சர்ஜன் லீவு. என்ன கொடுமையோ?

    எல்லோரும் குழம்பிகொண்டிருக்க... நேரம் கடந்துகொண்லேயிருந்தது. இரவும், அச்சமும் அவர்களை உலுக்கிற்று.

    கெளதமன் சுய உணர்வற்றுக்கிடந்தான். இரத்தம் தலை, பிடரி என்று பாசிபோல் அப்பிகிடந்தது. டிரைவர்... என்ன செய்யலாம்?

    கிருஷ்ணகிரிலேருந்து வேலூர் போற ரோட்ல ஒரு ஆஸ்பித்திரி இருக்குசார்... மெடிக்கேர் ஆஸ்பிடல்... என்னோட ரிலேட்டிவ் ஒருத்தரை அங்கே கொண்டுயிருந்தோம்...

    சரிப்பா... சீக்கிரம் போ... எப்படியாச்சும் அங்கே அட்மிஷன் வாங்கிறனும்...

    ஆம்புலன்ஸ் அலறும் சைரன் ஒலியுடன் இருளைக் கிழித்துக்கொண்டு அந்த என்.எச். ரோட்டில் சீறிப்பாய்ந்தது.

    சார், அந்த பெட்ரோல் பங்க் ஆப்போஸிட்லே இருக்கு பாருங்க... அதுதான் மெடிக்கேர் ஆஸ்பிடல் தொலைவில் ‘மினுக் மினுக்’ என்று எரிகிற லைட் வெளிச்சத்தைப் பார்த்துச் சொன்னான் டிரைவர்.

    பெரிய இரும்பு கேட் திறக்க சாம்பல்நிற யூனிஃபார்மில் இருந்த செக்யூரிட்டி நேரா வலதுபுறமா போங்க... காஸுவால்ட்டி அங்க இருக்கு என்று வழிகாட்டினான்.

    டிரைவர் சொன்னதுபோல் பன்மாடிக்கட்டிடம். வெராந்தாவில் சில பல்புகள் எரிந்துகொண்டிருந்தன.

    ரிசப்ஷனிலிருந்த ஒருவன், போர்டிகோவில் மூச்சுவாங்கிக் கொண்டிருந்த ஆம்புலன்ஸ் நோக்கி நடந்தான்.

    என்ன சார்... ஆக்ஸிடெண்ட் கேஸா?

    ஆமாம்பா... எமர்ஜென்ஸி

    டிரைவர் கீழே இறங்கி, ஆம்ப்லன்ஸின் பின்புறம் ஷட்டரைத் திறந்துவிட்டான்.

    அதற்குள் காஸுவாலிட்டிக்குத் தகவல் போக, இரண்டுபேர் ஸ்ட்ரெச்சரைத் தூக்கிக்கொண்டு ஓடிவந்தனர்.

    சார்... இப்படியே இடதுபக்கமாப் போனீங்கன்னா, அங்க டூட்டி டாக்டர் இருக்காரு... போயிப் பாருங்க என்றான் வார்டுபாய்.

    டாக்டர் ஆர்.கோதண்டராமன் எம்.எஸ்., போர்டை பார்த்ததும், லிங்கன் உள்ளே நுழைந்து விபரம் சொன்னான்.

    நடந்ததை புரிந்துகொண்ட டாக்டர், உடனே ஐ.சி.யு. வில் கெளதமனை அட்மிட் பண்ண, நைட் டூட்டி சிஸ்டர்ஸ் ‘மடமட’வென்று முதல்கட்ட வேலையைத் தொடங்கினார்கள்.

    பச்சைப் போர்வை விரிக்கப்பட்ட கட்டிலில் சரிந்து கிடந்த கெளதமனின் பல்ஸ் பார்த்த டாக்டரின் முகம் சடுதியில் இருண்டு போயிற்று.

    சிஸ்டர்... உடனே ஆப்ரேசனுக்கு ரெடி பண்ணுங்க

    வெளியே வந்த டாக்டர் லிங்கனை அழைத்து பிளட் லாஸ் நிறைய... தலைல ஆப்ரேஷன் செய்யணும் என்றார்.

    டாக்டர்... உடனே ஆகவேண்டியதைப் பாருங்க... எப்படியாவது காப்பாத்திருங்க டாக்டர்!

    கவலைப்படாதீங்க... பார்த்துக்கலாம்... கேஷ் கெளண்டருக்குப் போயி அட்வான்ஸ் கட்டிட்டு வாங்க... பணம் கொஞ்சம் செலவாகும்... பார்த்துக்குங்க

    லிங்கனும், உடன் வந்த சிலரும் விழித்தார்கள்.

    நானும் கெளதமன் சாரும் ஒரே கம்பெனிதான்... அவர் மதுரை பிராஞ்ச்... பணத்துக்கு நான் கேரண்டி டாக்டர்... காலைலே ரெடி பண்ணிக் கட்டிரறோம்... கொஞ்சம் தயவு பண்ணிக்குங்க டாக்டர்

    லிங்கன் கெஞ்சிக் கேட்டுக்கொண்டான். டாக்டர் உதட்டைப் பிதுக்கியவாறு தயக்கத்துடன் சொன்னார்:

    அதுக்கில்லே... உங்களை நம்பறேன்... ஒரு சின்ன அட்வான்ஸாவது...

    லிங்கனிடம் கம்பெனி பணம் எட்டாயிரம் இருந்தது.பரவாயில்லை... எட்டாயிரத்தைக் கட்டிட்டு ரசீது வாங்கிக்குங்க... மூணு நாளைக்கு ஐ.சி.யூ.விலே இருக்கணும்... நீங்க கவலைபடாம போயிட்டு அப்புறமா வாங்க

    டாக்டர் கோதண்டராமன் சொன்ன வார்த்தைகள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையைக் கொடுத்தது.

    அடுத்த நாள் காலையில ஆக்ஸிடெண்டில் சிக்கிக்கொண்ட விஷயம்,

    Enjoying the preview?
    Page 1 of 1