Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tharkaliga Unnathangal
Tharkaliga Unnathangal
Tharkaliga Unnathangal
Ebook257 pages1 hour

Tharkaliga Unnathangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாழ்க்கையில் நமக்கு நேரடியாகக் கிடைக்கும் அனுபவங்கள், ஒரு பார்வையாளராக மற்றவர்கள் வாழ்க்கையில் நாம் காண்பவை, இதைத்தவிர நாம் படித்து, கேட்டுத் தெரிந்து கொள்ளும் விஷயங்களே ஒரு சிறுகதைக்கு வித்தாக அமைகிறது. அந்த வகையில் இந்தத் தொகுப்பில் அமைந்துள்ள சிறுகதைகளை இன்னொரு முறை சேர்ந்தாற் போல படித்துப் பார்க்கும் போது என் மனதை பாதித்த விஷயங்கள் சரியாக பதிவு செய்யப்பட்ட நிறைவு ஏற்படுகிறது. இந்த தொகுப்பிற்கு அழகுற அணிந்துரை கொடுத்த ‘கலைமகள்' ஆசிரியர் திரு. கீழாம்பூர் அவர்களுக்கும் மிகச் சிறப்பான முறையில் பதிப்பித்திருக்கும் பதிப்பாளருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

- அன்புடன்,
ரேவதி பாலு.

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580128704674
Tharkaliga Unnathangal

Read more from Revathy Balu

Related to Tharkaliga Unnathangal

Related ebooks

Reviews for Tharkaliga Unnathangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tharkaliga Unnathangal - Revathy Balu

    http://www.pustaka.co.in

    தற்காலிக உன்னதங்கள்

    (சிறுகதைகள்)

    Tharkaliga Unnathangal

    (Sirukathaigal)

    Author:

    ரேவதி பாலு

    Revathy Balu

    For more books

    http://pustaka.co.in/home/author/revathy-balu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    என்னுரை

    1. இனியவளே

    2. கீற்றாக ஒரு வெளிச்சம்

    3. கண்ணாமூச்சி

    4. அதை மறந்திட்டீங்களேய்யா!

    5. நானிருக்க பயமேன்

    6. தற்காலிக உன்னதங்கள்

    7. பிரிவு

    8. காலம் செய்த கோலமடி....

    9. மகளிர் தினம்

    10. எது உண்மையான கௌரவம்?

    11. இழந்ததும் பெற்றதும்

    12. அம்மா நான் பாஸ்!

    13. தீர்வு புலப்பட்டபோது...

    14. சின்ன முள்ளும் பெரிய முள்ளும்

    15. அனு அப்படித்தான்!

    16. மனம் ஒரு குரங்கு!

    17. சின்னஞ்சிறு பெண் போலே...

    18. கறுப்பு வெள்ளை புகைப்படமும் வண்ணப் புகைப்படமும்

    19. பெண் பாவம்

    20. அப்போதைக்கு இப்போதே...

    21. ஜான்சி ராணிகள்

    22. விஷுக்கணி கண்டல்லோ கண்டல்லோ

    23. அன்பினால் ஓர் ஆக்கிரமிப்பு.....

    24. பிரியங்கள் ஓய்வதில்லை

    25. தவம்

    26. எங்கள் வீட்டுக்கெதிரே ஒரு சத்திரம் இருக்கிறது

    27. மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே!

    28. அதுதான் வைஜு

    அணிந்துரை

    சிறுகதைத் தொகுப்பு நூலாக திருமதி ரேவதி பாலு இந்நூலை உன்னதமான முறையில் கொண்டு வந்துள்ளார். எல்லா சிறுகதைகளும் படிக்கப் படிக்க நம்மை மெய்மறக்கச் செய்கின்றன. என்னுடைய நண்பர் சொல்வார், எழுத்தாளன் ஆவதோ, திரைப்படத்துறையில் பரிமளிப்பதோ, ஓவியம் தீட்டுவதோ ரத்தத்திலேயே ஊறிப்போய் இருக்க வேண்டும். அறிவியல் ரீதியான உண்மையாகக்கூட இது இருக்கும் என்று.

    ரேவதி பாலு எழுத்தாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர். ரஸவாதியின் மகள். ரசனையும் உயிர்துடிப்பும் பொருள் செறிவும் இவர்களுடைய கதைகளில் இருப்பதின் ரகசியமே இந்த ரஸவாத வித்தைதான் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

    இவர்களுடைய கதைகள் யதார்த்தமாக இருக்கின்றன. சமூக அவலங்களை, சமூக சந்தோஷங்களை இவருடைய பேனா மனம் போன போக்கில் விமர்சிக்காமல், சமூகத்தை ஒட்டியே, அதன் போக்கிலேயே தெளிந்த நீரோடைபோல் நமக்கு ஓவியமாகக் காட்டுகிறது.

    மௌனமாக ஒரு ராகம், இழந்ததும் பெற்றதும், சின்னஞ்சிறு பெண்போலே இக்கதை மாந்தர்கள் நாம் தினசரி சந்திக்கின்றவர்கள்தான். இவருடைய எழுத்தில் இந்த பாத்திரங்கள் மீது நமக்கு பரிவு மட்டுமல்ல. ஒருவித இனம் புரியாத நட்பும் ஏற்படுகிறது. சிலபேரை வாழ்க்கையில் இழக்கிறோம். சிலபேரை புதிய வரவாகப் பெறுகிறோம். பகவான் கிருஷ்ணன் கீதையில் சொல்கிறான். கோபத்தைக் குறைத்து, சாப்பாட்டை முறைப்படுத்தி, நம்மையே நாம் கேள்வி கேட்டுக் கொள்ளும் போது ஒருவிதப் புத்துணர்ச்சி ஏற்படும் என்று, இக்கதைகளைப் படிக்கும்போதும் நமக்கு புத்துணர்ச்சி ஏற்படுகிறது.

    சார்! நீங்க குடுத்த மருந்தில் ஒடம்பு நல்லா ஆயிடுச்சு! என்று நேரிலோ, ஃபோனிலோ நன்றி தெரிவிப்பவர்களின் சந்தோஷத்தில் ஏற்படும் மனநிறைவுதான் அவருக்கு கிடைக்கும் ஃபீஸ்! - இப்படி ஒரு சிறுகதையில் ரேவதி பாலு எழுதியுள்ளது நிஜமானது. ஆறுதலான வார்த்தைகள்தான் மனிதத்தை தவறு இழைக்காமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

    இந்தக் கதைகள் ஒவ்வொன்றையும் நான் விமர்சிக்க ஆரம்பித்தால் பக்கம் காணாது. காரணம் சிறுகதைகள் படித்து உணரப்பட வேண்டியவை. மேலோட்டமாக என் கருத்துகளைச் சொல்லியுள்ளேன். இந்தத் தொகுப்பைப் படித்து முடித்ததும் உங்களிடம் ஏற்படும் எண்ணம், உருப்படியான ஒரு எழுத்தை ரஸனையுடன் படித்தோம் - என்று அமைந்தால் அதுவே ரேவதி பாலுவின் வெற்றியாகும். அந்த வெற்றி அவருக்கு கிடைக்கும். எழுத்தில் நேர்மையும், கற்பனை வளமும் நாம் தினசரி சந்திக்கின்ற பாத்திரங்களும் மிளிர்வதால் ரேவதி பாலுவின் இப்படைப்பு பலராலும் பாராட்டப்படும் என்பது திண்ணம்.

    - கீழாம்பூர்.

    என்னுரை

    வாழ்க்கையில் நமக்கு நேரடியாகக் கிடைக்கும் அனுபவங்கள், ஒரு பார்வையாளராக மற்றவர்கள் வாழ்க்கையில் நாம் காண்பவை, இதைத்தவிர நாம் படித்து, கேட்டுத் தெரிந்து கொள்ளும் விஷயங்களே ஒரு சிறுகதைக்கு வித்தாக அமைகிறது. அந்த வகையில் இந்தத் தொகுப்பில் அமைந்துள்ள சிறுகதைகளை இன்னொரு முறை சேர்ந்தாற் போல படித்துப் பார்க்கும் போது என் மனதை பாதித்த விஷயங்கள் சரியாக பதிவு செய்யப்பட்ட நிறைவு ஏற்படுகிறது. இந்த தொகுப்பிற்கு அழகுற அணிந்துரை கொடுத்த ‘கலைமகள்' ஆசிரியர் திரு. கீழாம்பூர் அவர்களுக்கும் மிகச் சிறப்பான முறையில் பதிப்பித்திருக்கும் பதிப்பாளருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    -அன்புடன்,

    ரேவதி பாலு.

    1. இனியவளே

    எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள் அவரை.

    ஒருவாரமாய் அவர் மனைவி ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள்.

    ரெண்டு நாள் முன்புகூட இந்தப் பிரிவில் வேலை செய்பவர்களில் சிலர் ஆஸ்பத்திரிக்குச் சென்று பார்த்து வந்தனர்.

    நிலைமையில் ஒருவிதமான முன்னேற்றமுமில்லை. பிழைப்பதே துர்லபம் என்றுதான் பரவலாக அபிப்ராயப்பட்டார்கள். பாதி நேரம் நினைவே வேறு இல்லை என்று சொன்னார்கள்.

    மனைவி நிலைமை அப்படியிருக்க இவர்பாட்டுக்கு ஆபீசுக்கு வந்து கொண்டிருக்கிறார், இன்றும்கூட.

    எங்க வூடு ஆஸ்பத்திரிக்குப் பக்கத்தாலதான் சார் இருக்குது. நேத்தி நைட்டுகூட ஒரு தபா எட்டிப் பார்த்தேன் சார். இவரில்ல. பிள்ளைங்கதான் இருந்தாங்க. டாக்டருங்க இருவத்தி நாலு மணி நேர கெடு வச்சிட்டாங்கன்னு பேசிக்கினாங்க.

    ப்யூன் மருதாசலம் டைப்பிஸ்டிடம் கிசுகிசுத்துக்கொண்டிருந்தான். கெடு வச்சிட்டாங்களா? அட கஷ்ட காலமே! ஆமாம் இவுரு ஏன் இங்கே வந்து உக்காந்துக்கிட்டிருக்காரு. அந்தம்மா பக்கத்தில் இல்லாம?

    டைப்பிஸ்ட் முகவாயைக் கைகளில் தாங்கியபடி யோசித்தான்.

    அந்தப் பிரிவில் அனைவரும் தங்களுக்குள் தங்கள் வியப்பையும் சந்தேகத்தையும் பரிமாறிக் கொண்டிருந்தபோது, அலுவலகத்திற்கு சற்றே தாமதமாக வந்த சுரேஷ் அவரைக் கண்டதும் வியப்புடன் நேரே அவரிடம் போனான்.

    என்ன ஹெட்கிளார்க் சார்? ஆபீசுக்கு வந்திட்டீங்க? உடம்பு சரியாகி மேடம் வீட்டுக்கு வந்துட்டாங்களா?

    வந்துடுவாங்க! சீக்கிரமே வீட்டுக்கு வந்துடுவாங்க!

    அவர் குரல் அவருக்கே வினோதமாக ஒலித்திருக்குமோ? தொண்டையை பலமாகச் செருமிக் கொண்டார்.

    உங்க வீட்டுக்கு நான் வந்தப்போ எல்லாம் அவுங்க எவ்வளவு அன்பாய் உபசரிப்பாங்க சார்! கூடிய சீக்கிரம் அவங்க கையால ஃபர்ஸ்ட் க்ளாஸ் காப்பி ஒரு கப் சாப்பிடணும் போல இருக்கு சார்! அந்தக் கை மணம்..... ஆஹா...

    சுரேஷ் பேசப் பேச அவர் முகத்தில் ஒளிகூட ஆரம்பித்தது.

    காபி மட்டுமா? கற்பகம் கையால செஞ்ச எது சோடை போகும்? அவ நமக்காகத் தயாரிச்சுக் குடுக்கிற எல்லாத்திலேயும் அவ அன்பும் பிரியமும் கூடவே கலந்திருக்குமே? அதை நீ கவனிச்சிருக்கியா சுரேஷ்?

    கணீரென்ற குரலில் தொடர்ந்தார் அவர். பேரன் பேத்தி எடுத்த வயசுன்னுதான் பேரு. இந்த வயசிலும் என்ன சுறுசுறுப்பு தெரியுமா?

    போன வருஷம் உங்க பேரனோட ஆண்டு நிறைவுக்கு வந்தோமே? அப்ப அவங்க ஓடி ஓடி வேலை செஞ்சது என் கண் முன்னாலேயே நிக்கிறது சார்! நிர்மலா பேசியவாறே மெல்ல வந்து அவர் மேசைக்கருகே நின்று கொண்டாள்.

    கொஞ்சம் கொஞ்சமாய் மேசையருகே கூட்டம் சேர ஆரம்பித்தது.

    அவுங்க சுறுசுறுப்புக்கு எப்படி ஆஸ்பத்திரியில் படுத்திருங்காங்கன்னே ஆச்சரியமா இருக்கு சார்! பிரமீளா அங்கலாய்த்தாள்.

    கல்யாணமான இந்த முப்பத்தஞ்சு வருஷத்தில் ஒருநாள்கூட அவ சோம்பிப்படுத்து நா பார்த்ததேயில்லேம்மா. எப்பவும் உற்சாகந்தான், ஓட்டந்தான்.

    போன மாசம் என் சிஸ்டர் கல்யாணத்துக்கு அழைக்க சார் வீட்டுக்குப் போயிருந்தேனில்ல, அப்பத்தான் சார் மிஸஸ்ஸை மொதன் மொதலாப் பார்த்தேன். யாரோ ஆபீசிலகூட, வேலை செய்யறவர்தானேன்னே நெனைக்காம, கல்யாணத்தைப் பத்தி அத்தனை விஷயங்களையும் எவ்வளவு அக்கறையா விசாரிச்சுத் தெரிஞ்சுக்கிட்டாங்க தெரியுமா? அக்கவுண்டண்ட் நடராஜன் சொன்னார்.

    ஏன்? கொஞ்ச நாள் முன்னால் எங்கம்மா உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியில் படுத்திருங்காங்கன்னு கேள்விப்பட்டு சாரோட அவுங்களும் கூட வந்து பார்த்தாங்களே? என்றான் சுரேஷ்.

    அந்த அன்பையும் பரிவையும் யாரால் மறக்க முடியும்?

    ஆளாளுக்குப் பேச ஆரம்பிக்க அவர் மனக்கண் முன்னால் அவர் மனைவி கற்பகம் ஜீவனுடன் நடமாடிக் கொண்டிருந்தாள். அவர் முகத்தில் பெருமிதம் தாண்டவமாடியது.

    ஒருநாள் அஞ்சு நிமிஷம் வீட்டுக்கு லேட்டா போயிட்டாக்கூட, 'ஏங்க லேட்டு'ன்னு வாசல்லேயே நிப்பாளே.

    அவர் தனக்குள்ளேயே பேசிக் கொள்கிறாரோ என்று சந்தேகமாய் சுரேஷ் அவரை ஏறிட்டான்.

    களையான அந்த சிரிச்ச முகம் அப்படியே மனசிலேயே நிக்கறது சட்டென்று நிர்மலா நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

    'ஏதோ இல்லாதவங்களை நினைவு கூறுவது போல பேசிட்டேனோ?'

    பிரமீளா மேசைக்கடியில் அவள் கையைப் பற்றி ‘பேசாமல் இரு' என்று ஜாடை கூறி அழுத்தினாள்.

    திடீரென்று சூழ்நிலையில் மௌனம் கனமாக வந்து அமர்ந்து கொண்டது போல தோன்றியது.

    அதைத் தாள மாட்டாதவர் போல் அவரே திரும்பிப் பேச ஆரம்பித்தார்.

    நீ பார்த்ததேயில்லியே என் மிஸஸ்ஸை?

    செக்ஷனில் புதுசாய் சேர்ந்திருக்கும் விமலாவைப் பார்த்து உற்சாகமாய் பேசி ஆரம்பித்தார்.

    ஒரு தடவை அவளைப் பார்த்துப் பழகினா போதும். அப்புறம் அடிக்கடி என் வீட்டுக்கு வர ஆரம்பிச்சுடுவ நீ! மனுஷங்கன்னா அப்படி உயிரைக் கொடுப்பா கற்பகம்.

    குரலில் பெருமிதம் இழைய இழைய பேசிக் கொண்டிருந்தார் அவர்.

    ஃபோன் ஒலித்தது.

    அவர் காதில் எந்த ஒலியும் விழுந்த மாதிரியே தெரியவில்லை. நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்த உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருந்தார் அவர்.

    ஃபோனை எடுத்துப் பேசிய டைப்பிஸ்ட் சுரேஷ் காதருகே வந்து ஏதோ கிசு கிசுத்தான்.

    அவர் எதையும் சட்டை செய்யாமல் பேசிக் கொண்டிருந்தார்.

    அடுத்த மாசம் என் ரெண்டாவது மருமகளுக்கு வளைகாப்பு சீமந்தம். எங்க வீட்டிலேயேதான் செய்யப் போறோம். நீங்க எல்லோரும் வந்திருந்து நல்லா 'கிராண்டா' நடத்திக் கொடுக்கணும். என் மனைவிக்கு எல்லா ஃபங்ஷனும் ரொம்ப விமரிசையாப் பண்ணினாத்தான் பிடிக்கும். ஓடியாடி உற்சாகமா வேலை செய்ய அவ இருக்கும்போது நல்லா நடத்தறதுக்கென்ன தடை? என்ன சொல்றீங்க?

    அவ்வளவு பெரிய ஹாலில் நிலவிய நிசப்தத்தில் அவர் குரல் மட்டும் ஓங்கி ஒலித்தது.

    எல்லோர் முகங்களிலும் சங்கடமானதொரு மௌனம். கண்கள் அவரை சந்திக்கப் பயந்து தாழ்ந்தே இருந்தன.

    சுரேஷ் மெதுவாய் அவரருகே போய் அவரை அணைத்தாற்போல் இருக்கையிலிருந்து தூக்கி நிறுத்தினான்.

    டைப்பிஸ்ட் எதிரே வந்து நின்று, சார்! ஆஸ்பத்திரி... என்று இழுத்தபோது.

    'எனக்குத் தெரியும். நான் பார்த்துக் கொள்கிறேன்' என்பது போல சுரேஷ் தலையசைத்து அவனை கையமர்த்தினான்.

    ஏறக்குறைய அவரை ஹாலில் தள்ளிக்கொண்டு போனான் சுரேஷ்.

    எங்கே அழைச்சிக்கிட்டுப் போற? டிஃபன் சாப்பிடவா? கற்பகம் வீட்ல இருந்திருந்தா கையில் ஏதாவது கட்டிக் குடுத்திருப்பா. உனக்குத்தான் தெரியுமே சுரேஷ்! நா வெளியில் கண்டதை சாப்பிட்டு உடம்பைக் கெடுத்தக்கறது அவளுக்குக் கட்டோட பிடிக்காது.

    எப்பவாம்? என்றாள் நிர்மலா தாழ்ந்த குரலில்.

    ஒன் அவர், ஆயிருக்கும் போல தோணுது. இவுரு எங்கேயிருக்கார்னு கண்டுபிடிச்சு இப்பத்தான் ஃபோன் பண்ணியிருக்காங்க பிள்ளைங்க என்றான் டைப்பிஸ்ட்.

    கடைசி கடைசியாய் பொண்டாட்டி பக்கத்தில இல்லாம... இவர் ஏன் இப்படி... எனக்குப் புரியவே இல்லை பிரமீளா தலையை உலுக்கிக் கொண்டாள்.

    ரொம்ப அன்யோன்யமான தம்பதி பிரமீ இவங்க ரெண்டு பேரும்! இவர் அவங்களைப் பத்திப் பேசற மாதிரியேதான் அந்தம்மாவும் இவரைப் பத்தி, நல்ல கொணம்! கோவமே வராது அப்படி... இப்படீ...ன்னு பேசிக்கிட்டு இருப்பாங்க ஹூம்! நிர்மலா பெருமூச்சு விட்டாள்.

    தன்னோட இனிய பாதியின் கடைசி நேரத்தை அவரால் நெனச்சுக் கூடப் பார்க்க முடியல பிரமீ! எங்கே அந்த எண்ணம் தன் மனசுல புகுந்துடுமோன்னு நெனச்சு பயந்துதான் இங்கே வந்திருக்காரு.

    நிர்மலா வருத்தத்தோடு பேசிக் கொண்டிருந்தாள். இங்கே நம்மோட பேசிப் பேசி, தன் மனைவியை முழுஜீவனோட மனசில பதிச்சிக்கிட்டு, அவங்க நல்லாத்தான் இருக்காங்கன்னு ஒரு பிரமையை மனசில வளர்த்துக்கிட்டு இருக்காரு.

    எல்லோரும் துயரத்தோடு நின்று கொண்டிருந்தார்கள். ஆச்சு! இன்னும் ஒரு வருஷந்தான் ரிடையரான பிறகு ஒரு ட்ரிப் எல்லா புண்ய ஸ்தலங்களுக்கும் போகணும்னு கற்பகம் சொல்லிக்கிட்டிருக்கா. அப்புறம் ஃப்ரீதானே? போறதுக்கென்ன...

    வாசலைக் கடந்து படியிறங்கும் வரை அவர் குரல் ஹாலில் கேட்டுக் கொண்டிருந்தது.

    - மங்கையர் மலர்

    2. கீற்றாக ஒரு வெளிச்சம்

    மாலினி நாக்கைக் கடித்து கொண்டாள்.

    இப்ப நான் சொன்னதைத் தவறா எடுத்துக்கிட்டிருப்பாரோ?

    மனசுக்குள் ஒரு சென்ஸார் போர்டை நிறுவி ஒரு வருட காலமாகிறது. ரமேஷிடம் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் யோசித்து யோசித்து, 'பரவாயில்லை, இப்படிப் பேசலாம்!' என்று மனது 'ரைட்' கொடுத்தால்தால் வாயையே திறக்கிறாள்.

    ஆனால், சென்ஸாரின் கத்தரிக்கோலுக்குத் தப்பி வரும் அரை குறை ஆடைக் காட்சிகளைப் போலவே, சில சமயங்களில் மனசை மீறிவார்த்தைகள் உஷ்ணமாக வெளியே வந்து விழுந்துவிடுகின்றன. வாயிலிருந்து வெளியே வந்த வார்த்தைகளைத் திருப்பிப் பொறுக்கி மென்று தின்றுவிட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

    ரமேஷ் பதில் சொல்லாமல் மௌனம் காக்க, மேலும் பயம் பிடித்துக் கொண்டது.

    வாயைத் திறந்து பதில் சொன்னால், அதில் அந்த நேரத்தில் மனத்தில் கொப்பளிக்கும் உணர்ச்சிகள் வெளிப்பட வாய்ப்புண்டு.

    ஆனால் மௌனத்தில்? எதிராளிதான் அந்த மௌனக் கடலில் இறங்கி ‘இப்படி நினைத்திருப்பாரோ, அப்படி நினைத்திருப்பாரோ, கோபம் வந்திருக்குமோ, எரிச்சல் பட்டிருப்பாரோ' என்று முத்துக் குளித்துப் பார்க்க வேண்டும்.

    இத்தனைக்கும் மாலினி பேசியது வீட்டுக்கு வீடு அடிக்கடி கேட்கக் கூடிய ஒரு சொற்றொடர்தான்.

    காஸ் சிலிண்டர் வர்ற நேரத்துக்கு நீங்க வீட்டில் இல்லியா? சிலிண்டர் கொண்டு வர்ற பையன் வந்துட்டுத் திரும்பப் போயிட்டானாமே? பக்கத்து வீட்டுப் பாட்டி சொன்னாங்களே?

    தொழிற்சாலை மூடி ஒரு வருட காலமாக வீட்டில் உட்கார்ந்திருக்கும் ரமேஷுக்கு மாலினி என்ன சொன்னாலும் தவறாகத்தான் அர்த்தமாகிறது.

    கோபமாக மாலினியை முறைத்துக் கொண்டே நின்றவன். சட்டென்று மௌனம் கலைய, வேலையில்லாதவன் தானே? இருபத்து நாலு மணி நேரமும் வீட்டுல உட்கார்ந்திருக்கிறதைத் தவிர உனக்கு வேறென்ன வேலைன்னு கேக்காம கேக்கிறே இல்லே? என்று வெடித்தான்.

    இந்தக் கோபத்தையும் ரோஷத்தையும் ஒரு வேலை தேடிக் கொள்வதில் இவன் செலவிட்டால்

    Enjoying the preview?
    Page 1 of 1