Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mounamaga Oru Ragam
Mounamaga Oru Ragam
Mounamaga Oru Ragam
Ebook160 pages1 hour

Mounamaga Oru Ragam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாழ்த்துரை

வெளி உலகின் நடப்புகளால், உள்மனதில் உண்டாகும் பாதிப்புகளே, கதையாகவும், கவிதையாகவும், கலையாகவும் வெளிப்படுகிறது. அப்படி வெளிப்படும்போது அவற்றின் முகங்கள் மாறுபடும். சில சிந்திக்க வைக்கும், சில சிரிக்க வைக்கும்... சில சீற்றம் கொள்ளச் செய்யும். சில சீர்திருத்தம் செய்யும். எழுத்தாளர் ரேவதி பாலுவின் எழுத்துக்கள் இவையெல்லாவற்றையுமே நம்மில் செய்யக்கூடிய வித்தகம் கொண்டவை.

கடந்த 13 ஆண்டுகளாக நான் ராஜம் மகளிர் இதழின் பொறுப்பேற்று பணிபுரிய ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை அவரும், அவரது எழுத்துக்களும் என் மனதிற்கு மிகவும் பிடித்தமானவை... நெருக்கமானவை.

ஒரு மாதத்திற்கு சராசரியாக முப்பது முதல் நாற்பது சிறுகதைகளை படித்துத் தேர்வு செய்கின்ற நான், ரேவதியின் சிறுகதைகள் தபாலில் வந்தால், ஒத்திப் போடாமல் உடன் படிப்பேன் என்பதும், இன்றுவரை அவரது சிறுகதைகளில் ஒன்றையும் நான் தகுதியில்லை என்று திருப்பி அனுப்பியதில்லை என்பதும், அவரது எழுத்திற்கு அவர் ஈட்டிய பல்வேறு புகழ் மொழிகளில் ஒரு நிஜ மொழி! ஆரவாரமோ, அலட்டலோ அவரிடமும் இல்லை... அவரது எழுத்துக்களிலும் இருப்பதில்லை.

யதார்த்தமும் இயல்பான சரளமும், எளிமையான கலைத்தன்மையும் அவரது படைப்புகளில் நிறைந்திருக்கும். தொலைபேசித் துறையில் பணியாற்றிக்கொண்டே, எஞ்சிய பொழுதுகளை எழுத்திற்குச் செலவழிக்கும் ரேவதி, ஒரு நல்ல மனசிற்குச் சொந்தக்காரர். பழகும்போது, மற்றவரது உடல், மனநலன் குறித்த அவரது அக்கறை இயற்கையாகக் கனிந்து வருவதை நான் உணர்ந்திருக்கிறேன்.

தெளிந்த, அன்பான மனதில் இருந்து ஊற்றெடுக்கும் சீரிய சிந்தனைகள், இந்தச் சமுதாயத்திற்கு புத்துயிர் ஊட்டக் கூடியவை.

ரேவதியின் எழுத்துக்களும் அப்படித்தான். உள்ளத்திலே உண்மையொளி உண்டாயின் எழுத்தினிலே ஒளியுண்டாகும். என் வார்த்தைகள் உண்மையென்று இச்சிறுகதைத் தொகுப்பை படிக்கும் போது, நீங்களும் உணர்வீர்கள்.

மேலும் பல இறவாத புகழுடைய புது நூல்கள், பலநூல்கள் ரேவதி எழுத வேண்டும். மேன்மேலும், நிறைந்த புகழ்பெற வேண்டும் என்று நெஞ்சு நிறைந்த அன்புடன் வாழ்த்துகின்றேன். நல்வாழ்த்துக்கள்.

சந்திரா ராஜசேகர்,
இணையாசிரியர் - ராஜம் & பேசும்படம்.

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580128704647
Mounamaga Oru Ragam

Read more from Revathy Balu

Related to Mounamaga Oru Ragam

Related ebooks

Reviews for Mounamaga Oru Ragam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mounamaga Oru Ragam - Revathy Balu

    http://www.pustaka.co.in

    மெளனமாக ஒரு ராகம்

    (சிறுகதைத் தொகுப்பு)

    Mounamaga Oru Ragam

    (Sirukathai Thoguppu)

    Author:

    ரேவதி பாலு

    Revathy Balu

    For more books

    http://pustaka.co.in/home/author/revathy-balu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    சமர்ப்பணம்

    வாழ்த்துரை

    1. அப்பாவின் ஆஸ்தி

    2. நாளைய தலைவர்கள்

    3. மெளனமாக ஒரு ராகம்

    4. தனியாக ஒரு ரூம்

    5. என்ன ஆச்சு எனக்கு?

    6. அன்பினால் ஓர் ஆக்கிரமிப்பு...

    7. முள்

    8. செண்பகப்பூ

    9. மறுபக்கம்

    10. பேதங்கள்

    11. கறுப்பு வெள்ளை புகைப்படமும் வண்ணப் புகைப்படமும்

    12. தயங்கித் தயங்கி அம்மாவிடம்

    13. பெண்பாவம்

    14. அடுத்த பிறவியில்...

    15. புதிய நோக்குகள்

    16. இனி ஒரு ஆரம்பம்

    17. பிரியங்கள் ஓய்வதில்லை

    18. எங்கள் வீட்டுக்கெதிரே ஒரு சத்திரம் இருக்கிறது

    சமர்ப்பணம்

    என் அருமைத் தாயார் ராஜம்

    அவர்களுக்கும், தகப்பனார் (அமரர்)

    எழுத்தாளர் ரஸவாதி அவர்களுக்கும்.

    வாழ்த்துரை

    வெளி உலகின் நடப்புகளால், உள்மனதில் உண்டாகும் பாதிப்புகளே, கதையாகவும், கவிதையாகவும், கலையாகவும் வெளிப்படுகிறது. அப்படி வெளிப்படும்போது அவற்றின் முகங்கள் மாறுபடும். சில சிந்திக்க வைக்கும், சில சிரிக்க வைக்கும்... சில சீற்றம் கொள்ளச் செய்யும். சில சீர்திருத்தம் செய்யும்.

    எழுத்தாளர் ரேவதி பாலுவின் எழுத்துக்கள் இவையெல்லாவற்றையுமே நம்மில் செய்யக்கூடிய வித்தகம் கொண்டவை.

    கடந்த 13 ஆண்டுகளாக நான் ராஜம் மகளிர் இதழின் பொறுப்பேற்று பணிபுரிய ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை அவரும், அவரது எழுத்துக்களும் என் மனதிற்கு மிகவும் பிடித்தமானவை... நெருக்கமானவை.

    ஒரு மாதத்திற்கு சராசரியாக முப்பது முதல் நாற்பது சிறுகதைகளை படித்துத் தேர்வு செய்கின்ற நான், ரேவதியின் சிறுகதைகள் தபாலில் வந்தால், ஒத்திப் போடாமல் உடன் படிப்பேன் என்பதும், இன்றுவரை அவரது சிறுகதைகளில் ஒன்றையும் நான் தகுதியில்லை என்று திருப்பி அனுப்பியதில்லை என்பதும், அவரது எழுத்திற்கு அவர் ஈட்டிய பல்வேறு புகழ் மொழிகளில் ஒரு நிஜ மொழி!

    ஆரவாரமோ, அலட்டலோ அவரிடமும் இல்லை... அவரது எழுத்துக்களிலும் இருப்பதில்லை.

    யதார்த்தமும் இயல்பான சரளமும், எளிமையான கலைத்தன்மையும் அவரது படைப்புகளில் நிறைந்திருக்கும். தொலைபேசித் துறையில் பணியாற்றிக்கொண்டே, எஞ்சிய பொழுதுகளை எழுத்திற்குச் செலவழிக்கும் ரேவதி, ஒரு நல்ல மனசிற்குச் சொந்தக்காரர். பழகும்போது, மற்றவரது உடல், மனநலன் குறித்த அவரது அக்கறை இயற்கையாகக் கனிந்து வருவதை நான் உணர்ந்திருக்கிறேன்.

    தெளிந்த, அன்பான மனதில் இருந்து ஊற்றெடுக்கும் சீரிய சிந்தனைகள், இந்தச் சமுதாயத்திற்கு புத்துயிர் ஊட்டக் கூடியவை.

    ரேவதியின் எழுத்துக்களும் அப்படித்தான். உள்ளத்திலே உண்மையொளி உண்டாயின் எழுத்தினிலே ஒளியுண்டாகும். என் வார்த்தைகள் உண்மையென்று இச்சிறுகதைத் தொகுப்பை படிக்கும் போது, நீங்களும் உணர்வீர்கள்.

    மேலும் பல இறவாத புகழுடைய புது நூல்கள், பலநூல்கள் ரேவதி எழுத வேண்டும். மேன்மேலும், நிறைந்த புகழ்பெற வேண்டும் என்று நெஞ்சு நிறைந்த அன்புடன் வாழ்த்துகின்றேன். நல்வாழ்த்துக்கள்.

    சந்திரா ராஜசேகர்,

    இணையாசிரியர் - ராஜம் & பேசும்படம்.

    1. அப்பாவின் ஆஸ்தி

    ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே அப்பாவுக்கு மூட் வந்துவிட்டது.

    வேஷ்டியைக் கச்சமாகக் கட்டிக் கொண்டு ஏணி மரத்தைக் கொண்டுவந்து பரண்மேல் சாய்த்து நிறுத்தினார்.

    அவ்வளவுதான்!

    விடுமுறை நாளுக்கே உரிய அசமஞ்சத்தனம் நொடியில் அகன்று போக, ஏககாலத்தில் எல்லோரும் சுறுசுறுப்பானோம்.

    சாவகாசமாய் குளிக்கக் கிளம்பிய அம்மா பதறிக்கொண்டு ஓடி வந்தாள். நிதானமாய் காய் நறுக்கிக் கொண்டிருந்த மன்னி அரிவாள்மணையை ஓரமாகத் தள்ளிவிட்டு, ஒரே எட்டில் அறை வாசலில் வந்து நின்றாள்.

    அப்போதுதான் எழுந்து வாயில் 'டூத்ப்ரஷ்'டன் கீழே கிடந்த 'ஹிந்து'வை கையில் எடுக்கக் கூட முடியாத சோம்பேறித்தனத்தோடு, நின்றவாக்கிலேயே உடம்பை வளைத்து, தலைப்புச் செய்திகளைப் படிக்க முயன்று கொண்டிருந்த சின்னண்ணா, அப்பா ஏணியைக் கையிலெடுத்ததும் அவசரமாக வாய்க் கொப்பளித்து விட்டு காப்பியைக் கூட மறந்துவிட்டு பின்னாடியே ஓடி வந்தான்.

    பாட்டி கையில் வெற்றிலை உரலோடு எல்லோருக்கும் முன்னாடி ஆஜர்.

    ஒரு ஹால், ஒரு பெட்ரூம், ஒரு சமையலறை கொண்ட அந்த சின்ன வீட்டில் நாங்கள் வசிக்கிறோம்.

    நாங்கள் என்பதில் பாட்டி, அப்பா, அம்மா, பெரிய அண்ணா, மன்னி, சின்னண்ணா, நான் ஆகியோர் அடக்கம், இதில் மன்னி சமீப கால சேர்க்கை.

    இந்த சின்ன வீட்டின் முக்யமான அம்சம், பெட்ரூமிலுள்ள பெரிய பரண்தான்: எங்க பாட்டி பாஷையில் சொல்வதானால், ஏழெட்டு பேர் நல்லா கையைக் காலை நீட்டிப் படுத்துத் தூங்கும் அளவுக்கு நீள அகலமான பரண்.

    பிறகென்ன?

    வேண்டாத உடனே தேவைப்படாத நாளைக்கு ஒரு வேளை வேண்டிருக்குமோ போன்ற பலதரப்பட்ட சாமான்கள் அங்கே அடைக்கலமாகியிருந்தன.

    இதைத் தவிர எங்களுடைய தனிப்பட்ட சொத்துக்கள் அவரவர்களால் தனித்தனியாக பத்திரமாக வைக்கப்பட்டது, ஒளித்து வைக்கப்பட்டது முதலியவைகள்.

    'அரியர்ஸ்' வருமோ என்ற பயத்தில் சின்னண்ணா அடுக்கி வைத்திருக்கும் காலேஜ் புத்தகங்கள். நோட்ஸ்கள். இதைத்தவிர திடீரென்று வரும் கற்பனா சக்தியின் உந்துதல்களால் அவன் வரைந்து தள்ளியிருக்கும் ஓவியங்கள்.

    அரை குறை. எலக்ட்ரீஷியனான பெரியண்ணா ஓர் அலுமினியப் பெட்டி நிறைய வைத்திருக்கும் துண்டு ஒயர்கள், போல்ட், நட்டுகள்.

    என்னுடைய வருடாந்திர பள்ளி ஆல்பங்கள், தேசத்தலைவர்கள், பூக்கள், விலங்குகள், போக்குவரத்து சாதனங்கள் என்று பல்வேறு தலைப்புகளில். இதைத் தவிர என்னுடைய பழைய பொம்மைகள், சொப்புகள் அடங்கிய ஓலைப் பெட்டி.

    அக்கா பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளியிருக்கும் சுருக்கெழுத்து நோட்டுகள். அதைத்தவிர அவள் எப்பொழுதும் பூட்டியே வைத்திருக்கும் ஒரு சின்ன சூட்கேஸ்... கொஞ்சம் சினிமாப் பைத்தியமான அவள் சினிமாப் பாட்டு புத்தகங்களையெல்லாம் வாங்கி சேர்ப்பவள். அப்பாவுக்கு பயந்து அவற்றையெல்லாம் இந்த சூட்கேஸில் வைத்திருக்கிறாள் என்பது எங்கள் யூகம். அழுத்தக்காரி! என்ன, ஏது என்று வாயை விட்டு விடமாட்டாள்.

    அம்மா தன் பங்குக்கு ஒரு மரப்பெட்டி நிறையச் சேர்த்து வைத்திருக்கும் அந்தக்கால விகடன், கல்கி பைண்டிங்குகள்.

    இதைத் தவிர அக்காவும் நானும் ஓட்டிய மூன்று சக்கரசைக்கிள் ஒன்று (அம்மா பேரப்பிள்ளைக்காக பத்திரப்படுத்தி வைத்திருப்பது).

    பாட்டி பத்திரப்படுத்தி வைத்திருப்பவைகளில் முக்கியமானது, தாத்தாவோட தடி. (காசியாத்திரை தடியோ!) பாட்டியும் தாத்தாவும் சேர்ந்து எடுத்துக் கொண்ட ஒரே ஒரு போட்டோவும்தான்.

    அந்தக் கால ஸ்டைலில் தாத்தா நாற்காலியில் கம்பீரமாய் உட்கார்ந்திருக்க, பாட்டி பின்னால் புடைவைத் தலைப்பைப் போர்த்திக் கொண்டு நாற்காலியைப் பிடித்துக்கொண்டு நின்றிருக்கும் போட்டோ ரொம்ப நாள் ஹாலில் தான் மாட்டியிருந்ததாம். தாத்தா போனதும், அவர் போட்டோவை மட்டும் பெரிசு பண்ணி சாமி படங்களோடு மாட்டிவிட்டு இதை அப்பா கழட்டிப் போட்டுவிட பாட்டி அதை பத்திரமாக ஒரு பழைய பைக்குள் வைத்து பரணில் ஏற்றிவிட்டாளாம். அம்மா எப்போதாவது கொலு சாமான்களோ அல்லது கார்த்திகைக்காக அகல் விளக்குகளோ எடுக்கப் பரண் மேல் ஏறும் போது பாட்டி, அந்தப் போட்டோவை எடுத்துக் கொடுக்கச் சொல்லி பஞ்சடைந்த கண்கள் அந்த நாளைய ஞாபகங்களில் லயிக்க கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டுத்தர திரும்ப அது பத்திரமாக பரணில் அடைக்கலமாகும்.

    பெரிய பெரிய துணி மூட்டைகளில் சின்னதாய்ப் போன பேண்ட், ஷர்ட்டுகள், கிழிசல் புடைவைகள், ஜாக்கெட்டுகள் என்று ரகவாரியாக இருந்தன. சின்னண்ணா போரடித்தால் திடீரென்று பெரியண்ணாவின் பழைய ஷர்ட் ஒன்றை அந்த மூட்டையிலிருந்து எடுத்துப் போட்டுக் கொண்டு காலேஜ் போவான்.

    ஆக மொத்தம் எங்களைப் பொருத்தவரை பரணில் வேண்டாதது எதுவுமே இல்லை.

    வருடத்திற்கொருமுறை போகிக்கு முன்பாக எப்பொழுதும் பரண் ஒழிக்கும் படலம் நடைபெறும்.

    அப்பாவுக்கு ஞாபகம் வருவதற்கு முன்பாக அம்மாவோ, பெரிய அண்ணாவோ ஏறி ஒட்டடை அடித்து, சாமான்களை கொஞ்சம் இடம் மாற்றி வைத்து எலிப்புழுக்கைகள்,

    Enjoying the preview?
    Page 1 of 1