Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அதிகாரப் பிச்சை..!
அதிகாரப் பிச்சை..!
அதிகாரப் பிச்சை..!
Ebook99 pages34 minutes

அதிகாரப் பிச்சை..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

டான்சுக்கான உடைகளை அவளே வாங்கிக் கொண்டாள். கூட ஒரு டீச்சர் போனாள். அந்த டீச்சரின் உதவியுடன் தைக்கக் கொடுத்தாள்.
 அது 24 மணி நேரத்தில் தைத்து தரப்பட்டதால கூலி இரட்டை மடங்கு.
 வேறு வழியில்லை.
 ரேவதி பற்களைக் கடித்து சகலமும் பொறுத்துக் கொண்டாள். அந்த உடைகளை அணிந்து வீட்டில் நடன ஒத்திகை. உடையைப் பார்த்ததும் ரேவதிக்கு பகீரென்றது!
 பளபளப்பு ஒரு புறமிருக்க, வாளிப்பான பூஜாவின் உடம்பை அது இன்னும் செழுமையாகக் காட்டியது!
 அளவுக்கு மீறிய கவர்ச்சி!
 'இதை அணிந்து கொண்டு பலர் பார்க்க மேடையில் ஆடப் போகிறாளா? பள்ளிக்கூடம் எப்படி அனுமதி தருகிறது?'
 சங்கரிடம் இதைக் காட்டி அவள் கேட்க.
 "அவங்க ஸ்கூல் கண்டிப்புதான் ரேவதி! ஆனா இந்த மாதிரி கல்சுரல் ஃபெஸ்ட்ல விட்ருவாங்க. கொஞ்சம் சினிமாக்காரங்க தொடர்பான ஸ்கூல்."
 "எப்படியோ இருக்கட்டும். பத்தாவது வரைக்கும் இவ இங்கே படிக்கறதுக்குள்ள நம்ம நிலைமை என்னவாகும்?"
 "இதெல்லாம் தேவையில்லாத பயம்!"
 கலை நிகழ்ச்சிகளுக்கு ஒரு வாரமே இருக்க, அன்று பிற்பகல் ரேவதிக்கு பள்ளிக்கூடத்திலிருந்து போன் வந்தது!"உடனே பறப்பட்டு வாங்க!"
 வாரிச்சுருட்டிக்கொண்டு ரேவதி புறப்பட்டாள்.
 'கடவுளே! குழந்தைக்கு ஏதாவது பிரச்சனையா?'
 அங்கு வந்ததும் ஒரு டீச்சர் அழைத்து, "வாங்க...! பூஜா பெரிய மனுஷி ஆயிட்டா. கூட்டிட்டுப் போங்க!"
 ரேவதிக்கு ஒரு பக்கம் பூரிப்பும், மறுபக்கம் பயமும் பொங்கி வந்தது!
 உள்ளே வர, பூஜா நின்று கொண்டிருந்தாள்.
 மகளை ரேவதி கட்டிக்கொண்டாள்.
 "நீ பயப்படாதே பூஜா, வீட்டுக்கு போய் விவரமா எல்லாம் சொல்றேன்."
 "பயமே இல்லைம்மா! எதுக்கு? நீ எதுவும் சொல்ல வேண்டாம்! எனக்கே எல்லாம் தெரியும்."
 ரேவதி மிரண்டாள்.
 எதுவும் சொல்லாமல் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டாள்.
 சங்கருக்கு தகவல் கொடுக்க, ஒரு மணிநேரத்தில் சங்கர் வந்து விட,
 "என்னங்க! தலைக்கு தண்ணி ஊத்திட்டு வீட்டுக்கு அழைச்சு, நலங்கு வைக்கணும். அக்கம்பக்கத்துல நாலு பேரைக் கூப்பிடணும். குழந்தைக்கு பட்டுப்பாவாடை தைக்கணும்!"
 உள்ளே இசை ஒலிக்க,
 ரேவதி ஓடி வர, பூஜா டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தாள்.
 "ஏய்...! நிறுத்துடி, இப்ப நீ ஆடக்கூடாது!"
 "ஏன்? எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை! பாதுகாப்பாத்தானே இருக்கேன்? நாளைக்கு ஃபைனல் ரிகர்சல்!"
 "எங்கே?"ஸ்கூல்ல!"
 "நாளைக்கு நீ போகக்கூடாது! உன்னை வீட்டுக்கு அழைச்சு, சடங்கு செய்யணும்."
 "நிறுத்தும்மா. அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நீ எந்தக் காலத்துல இருக்கே? இதெல்லாம் இயற்கை. ஊரைக் கூட்டாதே. இப்படியே விடு! சொல்லுங்கப்பா."
 சங்கர் அருகில் வந்தான்.
 "அம்மாடி! நீ சொல்றதெல்லாம் நியாயம்தான். ஆனாலும், நீ எங்களுக்கு ஒரே மகள். இது வாழ்க்கைல முக்கியமான ஒருநாள் உனக்கு! இதை நல்லா செய்யணும்ன்னு எல்லா அம்மாக்களும் ஆசைப்படுவாங்க. நீ ஒத்துழைக்கணும்."
 "சரிப்பா! ஞாயிற்றுக்கிழமை வச்சுக்குங்க."
 "அப்படி செய் ரேவதி!"
 "அம்மா...! பட்டுப்பாவாடை வாங்க நான் வரணும். உன் விருப்பத்துக்கு எடுக்காதே. நான் செலக்ட் பண்ணணும். சரியா?"
 "சரிடீ! அதுக்காக உன் இஷ்டத்துக்கு விடவும் மாட்டேன்! பட்ஜெட் இருக்கு! அதுக்குள்ளே நீ வரணும்!"
 "எப்பப் பார்த்தாலும் உனக்கு பட்ஜெட்தானா?"
 "ஆமாண்டி. நான் கோடீஸ்வரி இல்லை. சாதாரண மிடில்க்ளாஸ் குடும்பம். கௌரவமா வாழணும். ஆடம்பரமா செலவழிச்சு, கடனாளியாகி, தலைக்கு துண்டுபோட்டுக்கிட்டு ஒளிஞ்சு நடக்கணுமா? நாளைக்கு என்னை ஒருத்தர் ஒரு கேள்வி கேட்டா, தாங்கிக்க மாட்டேன்!"
 "விடு ரேவதி. நீ போடா"
 பூஜா உள்ளே போய்விட,
 சங்கர் அருகில் வந்தான்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 20, 2023
ISBN9798223272014
அதிகாரப் பிச்சை..!

Read more from Devibala

Related to அதிகாரப் பிச்சை..!

Related ebooks

Reviews for அதிகாரப் பிச்சை..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அதிகாரப் பிச்சை..! - Devibala

    1

    சமையல் கட்டில் வேலையாக இருந்தாள் ரேவதி! வெளியே வந்த போது மேற்கத்திய இசையின் வேகம் உச்சபட்சத்தில் இருந்தது! வீடே அதிர்ந்து கொண்டிருந்தது!

    வேகமாக பெட்ரூமுக்குள் ரேவதி வர,

    பூஜா அந்த இசையை வீடு முழுக்க அதிர விட்டு, ஆவேசமாக ஆடிக் கொண்டிருந்தாள். இந்தப் பக்கம் திரும்பினால், சங்கர் பூஜை அறைக்குள் மனசு ஒன்றாமல் நெளிந்து கொண்டிருக்க, ரேவதி இசையை பட்டென அணைத்தாள்!

    பதினொரு வயது பூஜா படக்கென நின்றது!

    என்னம்மா நீ? எதுக்காக ம்யூஸிக்கை நிறுத்தின?

    அறிவிருக்காடி ஒனக்கு? இப்பிடி வீடே அதிர்ந்து போற மாதிரி மாட்டுப் போட்டு, டான்ஸ் ஆடணுமா? நாம வாழறது.ஃப்ளாட்! நாலுபேர் சண்டைக்கு வரமாட்டாங்க?

    இது வெளிய கேக்காது!

    யாருடீ சொன்னது? வெளி கேட் வரைக்கும் கேக்குது! ஏற்கெனவே நம்ம வீட்ல இரைச்சல் அதிகமா இருக்குன்னு இரண்டாவது மாடில உள்ள சுப்பு புகார் செய்றா! நாலு பேர் வாய்க்கு வந்தபடி பேசணுமா! உங்கப்பா பூஜை பண்ண முடியாம நெளியறார்!

    பூஜா முறைத்தது!

    அடுத்த மாசம் பரீட்சைகள் ஆரம்பம்! ஒழுங்கா ஒக்காந்து படிப்பியா? அதை விட்டுட்டு இதென்ன பாட்டும் கூத்தும்? ஏற்கெனவே எல்லாத்துலேயும் மார்க் குறைச்சல்! என்னைப் பேச வைக்காதே பூஜா!

    அம்மா! அடுத்த வாரம் ஸ்கூல் ஆன்வல் டே! அதுல நான் ஆடப்போறேன். அதுக்காக பிராக்டிஸ் பண்ணிட்டு இருக்கேன். புரியுதா?

    யாரைக் கேட்டு பேரு குடுத்தே?

    யாரைக் கேக்கணும்? ஏம்மா? ஸ்கூல்ல நடக்கற கலை நிகழ்ச்சிகள்ல... பங்கெடுத்துக்க உன் பர்மிஷன் கேக்கணுமா?

    கண்டிப்பா கேக்கணும்! அப்பா, அம்மானு வீட்ல எதுக்கு இருக்கோம்! தண்டத்துக்கா?

    சங்கர் பூஜையை முடித்துவிட்டு எழுந்து வந்தான்.

    என்ன ரகளை காலைநேரத்துல?

    வேறென்ன? உங்க பொண்ணு படுத்தற பாடு தாங்கலை. எல்லாம் நீங்க ஓவரா குடுக்கற செல்லம்தான்!

    பூஜா ஓடி வந்து சங்கரைக் கட்டிக் கொள்ள,

    என்னடா தங்கம்?

    ஸ்கூல்ல கலை நிகழ்ச்சினு வரும்போது கலந்துகிட்டா தப்பா? நான் நல்லா டான்ஸ் ஆடறேன்! அதுல கலந்துகிட்டா, பரிசு கிடைக்குமில்லையா?

    அவ கலந்துகட்டுமே ரேவதி! நீ ஏன் தடுக்கற?

    சர்தான்! பரீட்சைக்கு எப்பப் படிக்கறது? போன டெஸ்ட்ல கணக்குல பெயில்! நான் போய் பிரின்சிபால் முன்னால தலைகுனிஞ்சு நின்னேன். ட்யூஷன் வச்சு பணத்தைக் கொட்டி அழறது எதுக்காக? கவனம் முழுக்க இப்படி போனா, படிப்பு என்னாறது? நீங்க இவளைக் கண்டிக்கறதே இல்லை!

    சங்கர், பூஜா பக்கம் திரும்பினான்.

    அம்மா சொல்றதும் நியாயம்தானேடா? இதெல்லாம் வாழ்க்கைக்கு உதவுமா?

    ஏன்பா உதவாது? இன்னிக்கு பாட்டு பாடறவங்க பெரிய இசைக்கலைஞரா உருவாகலையா? நிறைய பேர் டான்ஸ் ஸ்கூல் வச்சு நடத்தலையா? அப்பா! படிப்பு முக்கியம்தான்! முடிச்சா உங்களை மாதிரி வேலை கிடைக்கும்! சம்பாதிச்சு சராசரியா வாழலாம். அதுல என்னப்பா லாபம்? பத்தோட பதினொண்ணா வாழ எனக்கு விருப்பமில்லை. பேரும், புகழும் கிடைக்கணும். நான் தனியா பளிச்சுனு தெரியணும். நிறைய சம்பாதிக்கணும். கார், பங்களானு பெரிசா வாழணும். ஆள், அம்பாரின்னு - நாம கண்ணை முழிச்சாலே பத்து பேர் காலடில நிக்கணும்! பேசப் பேச கனவுகளைச் சுமந்த கண்கள் விரிந்து கொண்டே போக, ரேவதி மிரட்சியுடன் கணவர் சங்கரைப் பார்க்க லயித்துப் போய்ப் பேசிக் கொண்டிருந்தாள் பதினொரு வயது பூஜா!

    அழகான பெண் குழந்தை.

    வயதுக்கு மீறிய வளர்ச்சி.

    இன்னும் பருவமடையவில்லை.

    நல்ல நிறம் - தளதளப்பான உடம்பு. பெரிய கண்கள். சிரித்தால் முத்துக்களை சிந்தும் பளீர் பற்கள். கருமையான அடர்ந்த கூந்தல்.

    அழகின் ஒட்டு மொத்த உருவம்.

    அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் சொல்லாதவர்கள் இல்லை.

    ரேவதி! உன் பொண்ணு தேவதை மாதிரி இருக்கா. கண் பட்றப் போகுது.

    உன் மகள் உங்க ரெண்டு பேர் சாயலும் இல்லையே? வேற யாரு ஜாடை? உங்க குடும்பத்துல யாரு இத்தனை அழகு?

    ஜாக்ரதை ரேவதி! பெண் குழந்தை. காலம் கெட்டுக்கிடக்கு! அழகான பெண் குழந்தைக்கு ஆபத்தும் அதிகம்.

    ரேவதி வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்கிறாள்.

    அழகு மட்டுமல்ல - ஆசையும் சேர்ந்த பெண் பூஜா.

    சங்கர் தனியார் நிறுவனமொன்றில் அதிகாரி. ரேவதி பள்ளிக்கூடத்தில் டீச்சர். இருவரும் சம்பாதித்து லோன் போட்டு, நாலுவருடங்களுக்கு முன்பு வாங்கிய ஃப்ளாட் இது. இன்னும் கடன் போய்க் கொண்டிருக்கிறது. தவிர, ஒரு பைக்! வீட்டுக்குத் தேவையான பொருட்கள்.

    மிடில் க்ளாஸ்ஸுக்கு கொஞ்சம் மேலே!

    பூஜாவின் ஆடம்பரக் கனவுகளை நிறைவேற்றும் சக்தி இல்லாதவர்கள்!

    பூஜா சாதாரண உடைகளை உடுத்தமாட்டாள். துணிக்கடைக்குப் போனால், அடம் பிடித்து விலை உயர்ந்த உடைகளைத்தான் வாங்குவாள். அதோடு நிற்கமாட்டாள்! அதற்குத் தோதான நகைகள் இமிடேஷினில் - செருப்பு முதற்கொண்டு ஒன்று விடாமல் வாங்குவாள். தவிர, மேக்கப் சாதனங்கள்.

    ரேவதிக்கு இதெல்லாம் பிடிக்காது!

    சங்கர் கண்டிப்பான்.

    விடு! நமக்கு ஒரே குழந்தை. அது ஆசைப்பட்டதை வாங்கிக் குடுக்கலைனா எப்படி?

    "சரிங்க...! இத்தனை செலவு

    Enjoying the preview?
    Page 1 of 1