Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

உள்ளத்தால் துடிக்கிறேன்!
உள்ளத்தால் துடிக்கிறேன்!
உள்ளத்தால் துடிக்கிறேன்!
Ebook112 pages36 minutes

உள்ளத்தால் துடிக்கிறேன்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பார்வதி அம்மா பெட்டியில் துணிமணிகளை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தாள். ராமசேஷன் வந்தார்.
 "டிக்கெட்டை எடுத்து உள்ளே வச்சிராதே! ரயில்ல ஏறின பின்னால பூட்டைத் திறக்க முடியாது என்னால!"
 "உங்க சங்கதிகள் எதையும் நான் தொடலை. கொஞ்சம் பேசாம இருங்க!"
 "சந்திரன் ஆபீஸ்லேருந்து வந்துட்டானா?"
 "வர்ற நேரம்தான். பானுவும் வரலை!"
 "என்னடீது? இன்னும் ஒரு மணி நேரத்துல சென்ட்ரலுக்குப் போயாகணும். ரெண்டு பேரும் வருவாங்களா? மாட்டாங்களா?"
 "உங்க மருமகளுக்குத் திமிர். ரயிலுக்குப் போகணும். வீட்ல எல்லாம் போட்டது போட்டபடி இருக்கு. இன்னிக்கு ஒரு நாள் ஆபீசுக்குப் போகலைனா என்ன? லீவே இல்லையா இவளுக்கு?"
 வாசலில் பைக் சப்தம் கேட்டது.
 சந்திரன் இறங்கி வந்தான்.
 "தாத்தா! ஊருக்குப் புறப்பட்டாச்சா?"
 ஆறு வயதுக் குழந்தை கோகுல் ஓடி வந்தான். பாட்டியின் கழுத்தைக் கட்டிக் கொண்டான்.
 "பானு வந்துட்டாளாம்மா?"
 "இல்லைப்பா! ஒரு வேளை வர முடியாமலா இருக்கும். அரைநாள் லீவாவது போட்டிருக்கலாம். ரயிலுக்கு டிபன் கூட நான்தான் செஞ்சு எடுத்துக்க வேண்டியிருக்கு. வயசாச்சுப்பா. முடியலை. எத்தனை வேலைதான் செய்ய முடியும்சந்திரன் முகம் சிவந்தது.
 "பாட்டி! எனக்குப் பசிக்குது!"
 "இருடா! நாங்க புறப்படற வழியை கவனிப்பமா? உன்னை கவனிப்பமா?" வராண்டாவில் செருப்பு சப்தம் கேட்டது.
 "அய்! அம்மா வந்தாச்சு!"
 பானு உள்ளே நுழைந்தாள். கைப்பையை ஆணியில் மாட்டிவிட்டு, பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.
 முகம் கழுவியபடி திரும்பினாள்.
 "இப்பத்தான் வந்தீங்களா? காபி வைக்கட்டுமா?"
 சந்திரனின் முகத்தில் சிரிப்பில்லை!
 "அத்தே! உங்களுக்கும், மாமாவுக்கும் கொஞ்சம் காபி கலக்கட்டுமா?"
 "ம்...ம்!"
 சமையல் கட்டுக்குள் நுழைந்தாள். பாலை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் ஏற்றினாள்.
 பின்னால் சந்திரன்.
 "ஏன்? உங்களுக்கு உடம்பு சரியில்லையா? முகம் ஒரு மாதிரி இருக்கு!"
 "நீ செய்யறது நல்லால்லை பானு!'
 "என்ன சொல்றீங்க?"
 "அப்பா, அம்மா ரெண்டு பேரும் ரயிலுக்குப் புறப்பட ஒரு மணிநேரம் கூட இல்லை. அரைநாள் லீவு போடக் கூடாதா நீ? உனக்கு லீவு இல்லையா?"
 "லீவு இருக்கு!"
 "பின்ன?""நாளைலேருந்து என்ன பண்ணப் போறீங்க?"
 "புரியலை!"
 "கோகுல் மூணு மணிக்கு வந்துடுவான். நீங்களும், நானும் ஆபீஸ் விட்டு வர ஆறு-ஆறரை ஆகும். குழந்தை வாசல்ல தனியா இருக்க முடியுமா?"
 "அதனால?"
 "தினமும் பர்மிஷன், அரைநாள்னு சொல்லிட்டு வரமுடியுமா? லீவுதான் போடணும்!"
 சந்திரன் பேசவில்லை.
 "காலைல நாலு மணிக்கே எழுந்து கிரைண்டர் போட்டு, மாவு ரெடி பண்ணியாச்சு. சமையல் முடிச்சாச்சு. இட்லி ஊத்தி அதை பேக் பண்ணிக்கற வேலை மட்டும். அதுக்காக ஒரு நாள் நான் லீவு போட முடியுமா?"
 "பானு!"
 "நீங்க போடச் சொன்னா போடறேன். என் லீவு நிலைமை உங்களுக்குத் தெரியாதா? சம்பளம் கட் ஆனா எப்படி குடித்தனம் நடத்தறது?"
 அவன் பேசவில்லை.
 "இந்தாங்க காபி!" அவனிடம் தந்து விட்டு, அவர்களுக்கும் எடுத்துக் கொண்டு கூடத்துக்கு வந்தாள்.
 "சந்திரா... நாங்க இல்லைனு இஷ்டப்படிக்கு செலவு பண்ணாதீங்க ரெண்டு பேரும். குடும்பத்தைப் பார்த்து நடத்துங்க!"
 சந்திரன் எரிச்சலுடன் அப்பாவைப் பார்த்தான்.
 மாதம் ரெண்டாயிரத்துக்கு மேல அப்பாவுக்கு பென்ஷன் வருகிறது. பத்து காசு செலவு பண்ண மாட்டார். தன் மகனின் குடும்பம்தானே... ரெண்டு பேரும் உட்கார்ந்து சாப்பிடுகிறோமே என்ற உணர்வே அவருக்கு இருக்காது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateOct 18, 2023
ISBN9798223898894
உள்ளத்தால் துடிக்கிறேன்!

Read more from Devibala

Related to உள்ளத்தால் துடிக்கிறேன்!

Related ebooks

Reviews for உள்ளத்தால் துடிக்கிறேன்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    உள்ளத்தால் துடிக்கிறேன்! - Devibala

    1

    பார்வதி அம்மா பெட்டியில் துணிமணிகளை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தாள். ராமசேஷன் வந்தார்.

    டிக்கெட்டை எடுத்து உள்ளே வச்சிராதே! ரயில்ல ஏறின பின்னால பூட்டைத் திறக்க முடியாது என்னால!

    உங்க சங்கதிகள் எதையும் நான் தொடலை. கொஞ்சம் பேசாம இருங்க!

    சந்திரன் ஆபீஸ்லேருந்து வந்துட்டானா?

    வர்ற நேரம்தான். பானுவும் வரலை!

    என்னடீது? இன்னும் ஒரு மணி நேரத்துல சென்ட்ரலுக்குப் போயாகணும். ரெண்டு பேரும் வருவாங்களா? மாட்டாங்களா?

    உங்க மருமகளுக்குத் திமிர். ரயிலுக்குப் போகணும். வீட்ல எல்லாம் போட்டது போட்டபடி இருக்கு. இன்னிக்கு ஒரு நாள் ஆபீசுக்குப் போகலைனா என்ன? லீவே இல்லையா இவளுக்கு?

    வாசலில் பைக் சப்தம் கேட்டது.

    சந்திரன் இறங்கி வந்தான்.

    தாத்தா! ஊருக்குப் புறப்பட்டாச்சா?

    ஆறு வயதுக் குழந்தை கோகுல் ஓடி வந்தான். பாட்டியின் கழுத்தைக் கட்டிக் கொண்டான்.

    பானு வந்துட்டாளாம்மா?

    இல்லைப்பா! ஒரு வேளை வர முடியாமலா இருக்கும். அரைநாள் லீவாவது போட்டிருக்கலாம். ரயிலுக்கு டிபன் கூட நான்தான் செஞ்சு எடுத்துக்க வேண்டியிருக்கு. வயசாச்சுப்பா. முடியலை. எத்தனை வேலைதான் செய்ய முடியும்?

    சந்திரன் முகம் சிவந்தது.

    பாட்டி! எனக்குப் பசிக்குது!

    இருடா! நாங்க புறப்படற வழியை கவனிப்பமா? உன்னை கவனிப்பமா? வராண்டாவில் செருப்பு சப்தம் கேட்டது.

    அய்! அம்மா வந்தாச்சு!

    பானு உள்ளே நுழைந்தாள். கைப்பையை ஆணியில் மாட்டிவிட்டு, பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.

    முகம் கழுவியபடி திரும்பினாள்.

    இப்பத்தான் வந்தீங்களா? காபி வைக்கட்டுமா?

    சந்திரனின் முகத்தில் சிரிப்பில்லை!

    அத்தே! உங்களுக்கும், மாமாவுக்கும் கொஞ்சம் காபி கலக்கட்டுமா?

    ம்...ம்!

    சமையல் கட்டுக்குள் நுழைந்தாள். பாலை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் ஏற்றினாள்.

    பின்னால் சந்திரன்.

    ஏன்? உங்களுக்கு உடம்பு சரியில்லையா? முகம் ஒரு மாதிரி இருக்கு!

    "நீ செய்யறது நல்லால்லை பானு!’

    என்ன சொல்றீங்க?

    அப்பா, அம்மா ரெண்டு பேரும் ரயிலுக்குப் புறப்பட ஒரு மணிநேரம் கூட இல்லை. அரைநாள் லீவு போடக் கூடாதா நீ? உனக்கு லீவு இல்லையா?

    லீவு இருக்கு!

    பின்ன?

    நாளைலேருந்து என்ன பண்ணப் போறீங்க?

    புரியலை!

    கோகுல் மூணு மணிக்கு வந்துடுவான். நீங்களும், நானும் ஆபீஸ் விட்டு வர ஆறு-ஆறரை ஆகும். குழந்தை வாசல்ல தனியா இருக்க முடியுமா?

    அதனால?

    தினமும் பர்மிஷன், அரைநாள்னு சொல்லிட்டு வரமுடியுமா? லீவுதான் போடணும்!

    சந்திரன் பேசவில்லை.

    காலைல நாலு மணிக்கே எழுந்து கிரைண்டர் போட்டு, மாவு ரெடி பண்ணியாச்சு. சமையல் முடிச்சாச்சு. இட்லி ஊத்தி அதை பேக் பண்ணிக்கற வேலை மட்டும். அதுக்காக ஒரு நாள் நான் லீவு போட முடியுமா?

    பானு!

    நீங்க போடச் சொன்னா போடறேன். என் லீவு நிலைமை உங்களுக்குத் தெரியாதா? சம்பளம் கட் ஆனா எப்படி குடித்தனம் நடத்தறது?

    அவன் பேசவில்லை.

    இந்தாங்க காபி! அவனிடம் தந்து விட்டு, அவர்களுக்கும் எடுத்துக் கொண்டு கூடத்துக்கு வந்தாள்.

    சந்திரா... நாங்க இல்லைனு இஷ்டப்படிக்கு செலவு பண்ணாதீங்க ரெண்டு பேரும். குடும்பத்தைப் பார்த்து நடத்துங்க!

    சந்திரன் எரிச்சலுடன் அப்பாவைப் பார்த்தான்.

    மாதம் ரெண்டாயிரத்துக்கு மேல அப்பாவுக்கு பென்ஷன் வருகிறது. பத்து காசு செலவு பண்ண மாட்டார். தன் மகனின் குடும்பம்தானே... ரெண்டு பேரும் உட்கார்ந்து சாப்பிடுகிறோமே என்ற உணர்வே அவருக்கு இருக்காது.

    அம்மா பால், நெய் என்று எதையும் விட மாட்டாள். தன் உடம்பைப் பார்த்துக்கொள்ளும் ரகம். ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போட மாட்டாள்.

    ரிடர்ன் ரிசர்வேஷன் பண்ணியாச்சாப்பா?

    இல்லைடா! ரெண்டு மாசம் கோகிலாகிட்ட இருக்கலாம்னு ஐடியா! அங்கே போய்த்தான் தீர்மானிக்கணும்!

    பானு, சந்திரனைப் பார்த்தாள்.

    அப்பா!

    என்னடா?

    அத்தனை நாள் அங்கே நீங்க இருக்கத்தான் வேணுமா?

    ஏன் அப்படி கேக்கற?

    குழந்தையை வச்சிட்டு நாங்க ரெண்டு பேரும் திண்டாடறம். நீங்களும் இல்லைனா...?

    அப்பா குறுக்கிட்டார்.

    அதுக்காக? குழந்தையைப் பார்த்துக்க எங்களைப் பணயமா இருக்கச் சொல்றியா?

    அப்படி நான் சொல்லலைப்பா!

    பின்ன? அவளும் எங்க பொண்ணு! அவகிட்டப் போய் இருக்கணும்னு ஆசை வராதா?

    ..........

    இந்தக் காலத்துல வேலைக்குப் போற மருமகளுக்காக, மாமியாருங்க எல்லாம் ஜெயில் மாதிரி வீட்டுக்குள்ள அடைந்து கிடக்கணும். குடும்பம்னா சமாளிக்கத்தான் வேணும். பணம்தான் பெரிசுனு அலைஞ்சா அவஸ்தைதான்!

    யாரு இங்கே அலையறாங்க? எனக்கும் வேலைக்குப் போய்த்தான் தீரணும்னு ஆசை இல்லை. அவர் படற கஷ்டத்திலே பங்கெடுத்துக்கத்தான் நானும் பாடுபடறேன். கையில் காசு இல்லாம அவர் கஷ்டப்படும்போது மத்தவங்க இரக்கம் இல்லாம இருக்கலாம். கட்டின பொண்டாட்டி நான். என்னால அப்படி இருக்க முடியுமா?

    யாரைடீ நீ சொல்ற?

    நான் யாரையும் சொல்லலை. எங்க பிரச்னைகளைச் சொன்னேன்!

    கோகிலா-அதான் உன் நாத்தனார் - வேலைக்குப் போகலை! மாப்ளையோட ஒரு சம்பளம்தான். குடும்பம் நடக்கலையா? வீதியிலயா நிக்கறாங்க?

    பானு ஆவேசத்துடன் திரும்பினாள்.

    சந்திரன் பார்வையால் அடக்கினான்.

    சரிம்மா! எதுக்கு வீண் பேச்சு? எங்க குழந்தை கோகுல். அவனைப் பராமரிக்கற பொறுப்பு எங்களுக்கு மட்டும்தான். நீயும், அப்பாவும் இனி ஜெயில்ல இருக்க வேண்டாம். கொஞ்ச நாள் பொண்ணு வீட்ல சுதந்திரமா இருங்க. வரலாம்னு தோணும்போது வாங்க!

    ஏன் பார்வதி… வர வர நம்ம சந்திரன் ஒரு மாதிரி பேசத் தொடங்கிட்டான்!

    "அவன்

    Enjoying the preview?
    Page 1 of 1