Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

காலத்தின் கட்டளை!
காலத்தின் கட்டளை!
காலத்தின் கட்டளை!
Ebook102 pages33 minutes

காலத்தின் கட்டளை!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தரகர் வந்துவிட்டார்.
 "அம்மா! நீங்க எதிர்பாக்கற மாதிரி ஒரு நல்ல வரன் வந்திருக்கு. பொண்ணு உங்க பையனோட படிப்புதான்! ஜாதகம் ஒன்பது பொருத்தம் பொருந்தியிருக்கு! இந்த போட்டோ பாருங்க!"
 ராஜம் வாங்கிப் பார்த்தாள்.
 பெண் களையாக இருந்தாள்.
 "அப்பா - அம்மா உயிரோட இல்லை! ஆளாக்கினது அக்காவும், அத்தானும்! அவங்கதான் அப்பா - அம்மா இடத்துல இருந்து எல்லாம் செய்யப்போறாங்க!"
 "வேலை பாக்கறாளா?"
 "ஆமாம்மா!"
 "நான் என்ன சொன்னேன் தரகரே?"
 "இருங்கம்மா! வாழப்போற எடத்துல விரும்பலைனா, ராஜினாமா பண்ணத் தயாரா இருக்கு!"
 "அப்படியா?"
 "உங்களுக்கென்ன வேணும்! இந்த வீட்டுக்கு வந்தப்புறம் வேலைக்குப் போகக்கூடாது! அவ்ளோ தானே?"
 "ஆமாம்!"
 "அதை நீங்க தெளிவா பேசிருங்க! எப்பப் பெண் பாக்க வர்றீங்க?"
 "நந்துகிட்ட பேசிட்டு, நான் உங்களுக்கு போன்ல சொல்றேன். ஏற்பாடு பண்ணுங்க!"
 மாலை மகனிடம் பேசினாள். போட்டோ காண்பித்தாள்அழகா இருக்கா பொண்ணு!"
 "அம்மா, உனக்கு திருப்தினா, எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை! நீ கூப்பிட்ட இடத்துக்கு நான் வர்றேன்!"
 அம்மாவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை!
 தரகரிடம் பேசி, பெண் பார்க்க வரும் நேரம், தேதியை முடிவு செய்து கொண்டாள்!
 கௌரிக்கும் மாப்ளைக்கும் விவரம் சொன்னாள்.
 "அவர் வேலை விஷயமா டெல்லி போறார். நான் வர்றேன்மா!"
 கௌரி வந்துவிட்டாள்.
 மூன்று பேராக போகக்கூடாது என்று தரகரையும் வரச் சொல்லியிருந்தார்கள்.
 புறப்படுவதற்கு முன்பு -
 "அம்மா! எங்கிட்ட கோவப்படாதே! நீ வேலைக்குப் போகாதேனு நான் சொல்லலை! ஆனா ஒரு படிச்ச பொண்ணை வீட்டுக்குள்ள வச்சு வீணடிக்காதே! அவ போனா குடும்பத்துக்கும் நல்லதுதானே?"
 "இல்லை கௌரி! அவ வேலைக்குப் போக வேண்டாம்! நந்து சம்மதிச்சாச்சு!"
 "அம்மா! இப்பத்தான் நான் பேசமுடியும். அண்ணி வந்தப்புறம் பேசினா, அர்த்தம் மாறிடும்! பறக்கத் தெரிஞ்ச பறவையை கூண்டுக்குள்ள அடைக்காதே! குழப்பம் வரும்!"
 "கௌரி! அம்மா விருப்பத்துக்கு விடு!"
 "அண்ணா! நீ போற பாதையும் சரியில்லை! அவஸ்தை படப்போறே!"
 "இதப்பாருடி! ஓவராப் பேசாதே! எங்க குடும்ப முடிவுகளை நாங்க எடுத்துப்போம்!"
 கௌரிக்கு வெறுப்பாக இருந்தது!
 அதற்குமேல் பேசவில்லைமகளுக்கே ஒரு தாயின் பிடிவாதத்தை ஜீரணிக்க முடிய வில்லை! மருமகள் எப்படி மாமியாரை சகித்துக் கொள்ளப் போகிறாள்?
 கௌரிக்கு பயம்மாக இருந்தது.
 மூவரும் புறப்பட்டுவிட்டார்கள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 9, 2023
ISBN9798223006978
காலத்தின் கட்டளை!

Read more from Devibala

Related to காலத்தின் கட்டளை!

Related ebooks

Related categories

Reviews for காலத்தின் கட்டளை!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    காலத்தின் கட்டளை! - Devibala

    1

    "என் பையனை மாதிரி அவளும் எம்.பி.ஏ படிச்சிருக்கணும்."

    இருக்குமா! படிச்ச பொண்ணுங்களோட ஜாதகம் நாலு இருக்கு. எது உங்க மகனுக்குப் பொருந்துதுன்னு பாத்துடலாம்!

    ஆனா ஒரு நிபந்தனை! பொண்ணு வேலைக்குப் போகக்கூடாது!

    அதெப்படீம்மா? நிறைய படிச்ச பொண்ணா இருந்தா, அவ வேலைக்குப் போகத்தான் செய்வா!

    இந்த வீட்டுக்கு மருமகளா வந்தப்புறம் வேலையை ராஜினாமா பண்ணிடணும்!

    சரி! முதல்ல ஜாதகம் சேர்ந்து மற்ற சங்கதிகள் முடிவாகட்டும். கடைசில இதைப் பற்றிப் பேசிக்கலாம்

    தரகர் புறப்பட்டுப் போய்விட்டார்.

    ராஜம் திடமாக இருந்தாள்! தனக்கு வரும் மருமகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு பட்டியலே தயாரித்திருந்தாள்.

    ராஜம் உறுதியான பெண்மணி!

    கணவனை இழந்து தனித்து நின்றபோது ராஜம் பட்ட கஷ்டம் கொஞ்சமல்ல!

    ரெண்டு குழந்தைகள்!

    மகன் நந்து பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு அப்போதுதான் கல்லூரியில் அடியெடுத்து வைத்திருந்தான்.

    மகள் கௌரி பத்தாவது படித்துக் கொண்டிருந்தாள். உறவுக்காரர்கள் யாரும் உதவ முன்வரவில்லை! ராஜம் பள்ளிக் கூடத்தில் டீச்சர். சுமார் சம்பளம்! ஓரளவு நண்பர்கள் உதவினார்கள்.

    ராஜம் கலங்கவில்லை! தன் கையில் உத்தியோகம் இருந்ததால் கரையேறி விட முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்தது.

    கணவரின் சேமிப்பு ரெண்டு லட்சத்துக்கு வந்தது!

    நந்து - நான் படிப்பை நிறுத்திவிட்டு வேலை தேடட்டுமா? என்றான்.

    ராஜம் பொங்கிவிட்டாள்.

    அப்படி ஒரு நிலைக்கு உன்னை நான் விடமாட்டேன் நந்து. கடனை உடனை வாங்கியாவது உங்க ரெண்டு பேரையும் நான் கரையேத்தறேன்! படிப்பைத் தவிர குடும்பக் கவலை எதுவும் உங்க தலைல ஏறி ஒக்காரக்கூடாது! புரியுதா?

    சரிம்மா!

    பள்ளிக்கூட நேரம் போக, நிறைய ட்யூஷன் எடுத்தாள். கை வேலைப் பாடுகள் நன்றாகத் தெரியும். அதைச் செய்தாள்.

    கடுமையாக உழைத்தாள்.

    நந்து எம்.பி.ஏ. முடித்தான். மேலும் சில பட்டங்களைச் சேர்த்துக் கொண்டான்!

    கௌரியும் பட்டதாரி ஆகிவிட்டாள்.

    நந்துவுக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் நல்லவேலை கிடைத்து விட்டது. எடுத்த எடுப்பில் பதினைந்தாயிரம் சம்பளம். தவிர பிற வசதிகள்!

    கௌரிக்கு ஒரு வங்கியில் வேலை கிடைத்துவிட்டது. இருவரும் அம்மாவைப் பிடித்துக் கொண்டார்கள்.

    இனிமே நீ வேலைக்குப் போக வேண்டாம். இத்தனை நாள் பட்ட கஷ்டங்கள் போதும்! புரியுதா?

    இல்லைடா தம்பி. நான் போய்த்தான் ஆகணும்!

    எதுக்கும்மா?

    கௌரிக்குக் கல்யாணம் செய்யணும். நம்ம கையில சேமிப்புனு பார்த்தா, அப்பா பணம் ரெண்டு லட்சம் இருக்கு. கஷ்டங்கள் வந்தப்பவும், அதைநான் எடுக்கலை! அது பத்தாது! மேலும் பணம் கடன் வாங்கணும்! உன் ஒருத்தன் தலைல நான் பாரம் சுமத்த விரும்பலை. ரெண்டு பேருமாச் சேர்ந்து உழைப்போம்!

    நந்துவால் பேச முடியவில்லை!

    கௌரிக்கு வரன் பார்க்கத் தொடங்கி விட்டார்கள்.

    ரயில்வேயில் அதிகாரி - நல்ல சம்பளம்!

    இவளும் வங்கி உத்தியோகம் என்பதால் கௌரவமாக அமைந்து விட்டது!

    அவர்கள் அதிகம் எதிர்பார்க்க வில்லை!

    ஆனாலும் ராஜம் விட்டுத் தரவில்லை!

    இருபது சவரனுக்கு நகைகள் போட்டு, பட்டுச்சேலைகள் எடுத்து, நியாயமாகச் செய்யும் சீர்வரிசைகள் எதையும் குறைக்காமல், கல்யாணத்தை கண்யமாக நடத்தினார்கள்.

    ‘கணவனை இழந்தாலும், ராஜம் கம்பீரத்தை இழக்கவில்லை!’ என்று ஊரே பராட்டியது!

    நாட்கள் ஓடத் தொடங்கிவிட்டன!

    நந்துவை கம்பெனியே எட்டுமாத காலத்துக்கு வேலை நிமித்தம் வெளிநாட்டுக்கு அனுப்ப முடிவு செய்துவிட்டது!

    நந்து அம்மாவிடம் கேட்டான்.

    அம்மா! எட்டு மாசம் அங்கே இருந்துட்டு வந்தா, என் செலவு போக 12 லட்சம் தேறும்! ஏற்கனவே ரெண்டு லட்ச ரூபாய் கல்யாணக் கடன் இருக்கு. போகட்டுமா? நீ தனியா இருப்பியா?

    தாராளமா போயிட்டு வாப்பா! கடனை அடைச்சிட்டு கொஞ்சம் பணம் தேறட்டும். நாளைக்கு உனக்கும் வீடு, வாசல்னு வேண்டாமா?

    நீ இங்கே சமாளிச்சிப்பியா?

    இதப்பாரு நந்து...! ஒரு குழந்தை முன்னேறி உயரத்துக்கு வரணும்னா, தாய் சில தியாகங்களை செஞ்சுதான் ஆகணும்! உன்னைப் பிரிஞ்சு இருக்கறது எனக்குக் கஷ்டம்தான். அதுக்காக உன் எதிர்காலத்தை நான் பலி கொடுக்க முடியுமாப்பா?

    அம்மா!

    வாய்ப்பை விடாதே! பயணத்துக்கு ஏற்பாடு செய் நந்து!

    நந்து உடனே பச்சைக் கொடி காட்டிவிட்டான்.

    திரும்பிப் பார்ப்பதற்குள் எட்டு மாத காலம் ஓடிவிட்டது! நந்து திரும்பி விட்டான், கையில் சில லட்சங்களோடு!

    நந்து இப்போது இன்னும் சதை போட்டு, பளிச்சென கண்களைக் கவரும்படி இருந்தான்!

    கல்யாணக் கடனை அடைத்தது போக பத்து லட்ச ரூபாய் கையில் இருந்த!

    ராஜம் விடவில்லை!

    தனது, நந்துவுடையது என இருவரது பேரில் கூட்டாக வீட்டை வாங்கத் தீர்மானித்துவிட்டாள்.

    வங்கியில் எட்டு லட்ச ரூபாய் வரை கடன் தரத் தயாராக இருந்தார்கள்.

    பதினாறு லட்சத்துக்கு பிரமாதமாக ஒரு ஃப்ளாட் அமைந்துவிட்டது! பாதி கட்டிய நிலையில் இருந்தது. ராஜம் தனக்குத் தேவையானதைக் கேட்டு வாங்கிக் கொண்டாள்.

    ஆறே மாதத்தில் வீடு

    Enjoying the preview?
    Page 1 of 1