Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பூமாலை போட வா! - I
பூமாலை போட வா! - I
பூமாலை போட வா! - I
Ebook98 pages33 minutes

பூமாலை போட வா! - I

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காலையில் அந்த அதிர்ச்சிகரமான சேதி வந்தது! உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த லிங்கம் என்ற ஒரு ஆள் மட்டும் அதிகாலையில் இறந்துவிட்டான் என்ற தகவல்!
குடும்பமே ஆடிப் போனது!
லிங்கத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்படுகிறது என்ற தகவலும் வந்தது!
இந்திராவுக்கு மயக்கமே வந்தது!
ஒரு மணி நேரத்தில் தொழிலாளிகள் பட்டாளம் ஒன்று வீட்டின் முன் கூடிவிட்டது!
“லிங்கத்தைக் கொன்னுட்டீங்க! அவர் குடும்பத்துக்கு என்ன நஷ்ட ஈடு தரப்போறீங்க? எங்களுக்கு உறுதிமொழி தர்றவரைக்கும் போகமாட்டோம்!”
வீட்டின் முன் உட்கார்ந்துவிட்டார்கள்.
குடும்பம் மொத்தமும் உறைந்து, பயந்து -பாதி மரித்துப் போயிருந்தது!
கதிர் வெளியே வந்தான்.
“கண்டிப்பா செய்யறோம். உடனடியா நாங்க பணத்துக்கு எங்கே போவோம்?”
“ஏன்? பெரிசா வீடு எழும்புதே! அதை வித்து செட்டில் பண்ணு!”
“இல்லைனா, கடனை வாங்கு. ஏதோ ஒண்ணு செய்!” பலவிதமான கூச்சல்கள்.
கதிர் போலீசுக்குத் தகவல் கொடுத்துவிட்டான். வந்து விட்டார்கள்.
“எல்லாரும் கலைஞ்சு போங்க!”
“மாட்டோம். எங்களுக்கு நியாயம் கிடைக்கணும்! அதுவரைக்கும் போகமாட்டோம்!“இது தொழிற்சாலை இல்லை! தனி மனிதர்கள் வாழற வீடு! அவங்களும் 24 மணி நேரத்துல எதையும் செஞ்சிட முடியாது! முறையா பேசி, சட்டப்படி என்ன செய்யணுமோ செய்வாங்க! நாங்களே வாங்கித் தர்றோம்!”
போலீஸ் வந்து பேசியதும் கூட்டம் மிரண்டது! கலைந்து போனது!
போலீஸ் அதிகாரி உள்ளே வந்தார்.
“நிச்சயமா ஏதாவது செய்ய வேண்டியிருக்கும்! குறிப்பா, செத்துப் போன லிங்கத்தோட குடும்பத்துக்கு நீங்க பெரிய நஷ்ட ஈடாத் தரவேண்டியிருக்கும்! கூடிய சீக்கிரம் ஏற்பாடு பண்ணிக்குங்க!”
“......!”
“தொழிலாளிகளை ஏமாற்ற முடியாது. கூடாது! அப்புறம் கடல் மாதிரி அவங்க பொங்கிட்டா, நாங்களே கட்டுப்படுத்த முடியாது. ரெண்டாவது - இது அரசியலாயிட்டா, இன்னும் விபரீதம். உங்க குடும்பத்து மேல வச்ச மரியாதை காரணமா, உங்களை நான் எச்சரிக்கறேன்!”
ரமணி தலையாட்டினான்.
இந்திரா கலவரம் பொங்க நின்றாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 16, 2024
பூமாலை போட வா! - I

Read more from தேவிபாலா

Related authors

Related to பூமாலை போட வா! - I

Related ebooks

Reviews for பூமாலை போட வா! - I

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பூமாலை போட வா! - I - தேவிபாலா

    1

    தரகர் ஒருமாதிரி சலித்துப்போய் நிமிர்ந்தார்.

    இது அவர் தரும் நாற்பதாவது ஜாதகம் - அதுவும் பொருந்திய ஜாதகம்!

    அப்பா எதையுமே ஒப்புக் கொள்ளவில்லை! அப்பாவுக்கு ஜோசியம் தெரியும்!

    தரகரே! நீங்க பொருந்துதுனு சொல்லிட்டா, நான் உடனே ஒப்புக்க முடியுமா?

    அய்யா! நல்ல ஜோசியர்களை வச்சுத்தான் நாங்க பொருத்தம் பார்க்கறோம்.

    நீங்க சொல்ற ஆட்கள் சரியான ஜோசியர்கள் இல்லை!

    சரி! நீங்களே பொருத்தம் பார்த்துடுங்க!

    அப்படி அப்பா பார்த்து பொருந்திய ஜாதகங்களின் ஒரு சின்னப்பட்டியல் இருந்தது.

    ஆனால் வேறு சில நிபந்தனைகள் வைத்திருந்தார்.

    குடும்ப அந்தஸ்து, பின்னணி போன்றவைகளுக்கு அது பொருந்த வில்லை!

    அம்மாவே ஒரு மாதிரி சலித்துப் போயிருந்தாள்.

    இதப் பாருங்க! ரமணி நமக்கு மூத்த பையன். அவனுக்கு இப்பவே முப்பது வயசு! இன்னும் காலம் தாழ்த்தினா அவனுக்குக் கீழே ரெண்டு பேர் இருக்காங்க! அதை மறக்கக் கூடாது!

    மூத்த மருமகளை வீட்டுக்குக் கொண்டு வரும்போது கவனமா இருக்கணும்டி! அவதான் இந்தக் குடும்பத்தைக் கட்டிக் காக்கப் போறவ! உனக்கப்புறம் அவதான் இந்த வீட்டுக்கு அம்மா! புரியுதா? அவ நல்லா படிச்சிருக்கணும். ஆனா உத்யோகம் வேண்டாம். லட்சணமா இருக்கணும். அடக்கமா இருக்கணும். இது பெரிய குடும்பம். வழி நடத்தற மனப்பக்குவம் வேணும்!

    அம்மா உள்ளே வந்துவிட்டாள்.

    இவர்களின் மூத்த மகன் ரமணி - வங்கியில் அதிகாரி. அழகானவன். நன்றாகப் படித்தவன். குடும்பப் பாசம் உள்ளவன். சமீபத்தில் வடநாட்டுக்கு மாற்றலாகிப் போனவன். விடுப்பில் அவ்வப்போது வருவான்.

    ஓரளவுக்கு பெற்றவர்களை மதித்து நடப்பவன்.

    இரண்டாவது சசிதர் - இருபத்தி ஏழு வயது - ஒரு கல்லூரியில் பேராசிரியர் - உள்ளூர்தான்.

    மூன்றாவது கதிர் - இருபத்தி நாலு வயது - தனியாரில் உத்யோகம் பார்ப்பவன் - விளையாட்டு வீரன். ஸ்போர்ட்ஸ் கோட்டாவில்தான் அவனுக்கு வேலையே கிடைத்தது! கொஞ்சம் நீக்கு போக்கானவன். அப்பா, அம்மாவிடம் நல்ல பிள்ளையாக இருப்பான்.

    இரண்டு பெண்கள் - இருவரும் கல்யாணமாகி உள்ளூரில் இருக்கிறார்கள்.

    ரமணிக்கு கல்யாண ஏற்பாடு நடக்கிறது!

    அந்த வாரக் கடைசியில் அப்பா ஒரு ஜாதகத்தைப் பிடித்துவிட்டார்.

    தங்கம்! இது பிரமாதமா பொருந்துது! குடும்ப பின்னணியும் நல்லாருக்கு. பொண்ணு போஸ்ட் கிராஜுவேட்! நல்ல தகுதிகளும் இருக்கு! நம்ம ரமணிக்கு இந்த வரன் நிச்சயமா பொருந்தும்!

    சரிங்க!

    முதல்ல ஒரு நல்ல நாளைக் குறிச்சு, பொண்ணைப் போய்ப் பார்த்துட்டு வந்திடலாம்!

    ரமணிக்கு எப்ப லீவு கிடைக்கும்னு தெரியலியே?

    அவன் முதல்ல வரவேண்டாம். நாம போய் பார்த்துப் பேசி, ஒரு முடிவுக்கு வந்துட்டா, அவன் வந்து பார்த்ததும், தாம்பூலம் மாற்றி, தேதியைக் குறிச்சிடலாம்!

    சரி!

    முதல்ல கூட்டம் சேர்க்க வேண்டாம். நீயும், நானும் மட்டும் பாத்துட்டு வந்திடலாம்!

    தரகரிடம் ‘நாளை மறுநாள் நன்றாக இருக்கிறது. பிற்பகல் நாலு மணிக்கு வருவோம்’ என்று குறித்துத் தந்தார்.

    தரகர் அந்த விவரத்தைப் பெண் வீட்டாருக்கு அறிவித்துவிட்டார்.

    சொன்ன நாளில், சொன்ன நேரத்தில் இவர்கள் போய் இறங்கினார்கள். பெண்ணின் அப்பா, அம்மா வரவேற்றார்கள்.

    காதம்பரியை கூட்டிட்டு வாம்மா!

    காதம்பரி ஒரு மைசூர் சில்க் சேலை கட்டி, தலை நிறைய பூவைத்து - பார்க்க அழகாக இருந்தாள்.

    ஒக்காரம்மா! நீ கூச்சப்பட வேண்டாம். படிச்ச பொண்ணு! மனசு விட்டுப் பேசலாம்!

    காதம்பரி சிரித்தாள்.

    நீ வேலைக்குப் போறியா?

    ம்! தனியார்ல இருக்கேன்!

    எங்க வீட்டுக்கு வர்றதுக்கு முன்னால வேலையை ராஜினாமா பண்ணிடு! அதுக்கு ஒனக்கு சம்மதம்தானே?

    உங்க குடும்ப விருப்பம் அதுனா, எனக்குத் தடையில்லை! படிப்பு இருக்கற காரணமா, எப்ப தேவைப்பட்டாலும் வேலை தேடிக்கலாமே!

    வெரிகுட்! வேலையை விடமாட்டேன்னு சில பெண்கள் சண்டித்தனம் பண்ணுவாங்க! நீ மாறுபட்டிருக்கே! அந்த வீட்டுக்கு மூத்த மருமகளா நீ வரப் போறே! குடும்பத்தை சிதறவிடாம அன்பால வழிநடத்தணும். அவன் சம்பளத்தை வாங்கிட்டு வந்து எங்க கைல தருவான். நாளைக்கு அது உன்கைக்கு வரும். மற்றபடி எந்தப் பொறுப்பையும் அவன் ஏத்துக்கமாட்டான். மற்ற தம்பிகளும் அப்படித்தான்! நீதான் குடும்பத்தை நல்லபடியா கொண்டு போகணும்!

    நிச்சயமா!

    இன்னும் கொஞ்சம் பேசினார். அவள் பதில் சொன்ன விதம் பிடித்திருந்தது!

    அம்மாவுக்கும் திருப்தி!

    சரி! எங்களுக்கு காதம்பரியைப் பிடிச்சிருக்கு. ரமணிக்கும் பிடிக்கும்! எங்க அபிப்ராயத்தை ரமணி மீறமாட்டான்! ஆனாலும் அவன் வந்து பார்த்த பிறகு தேதியைக் குறிக்கலாம்!

    மற்ற லௌகீகங்கள்?

    அது ஒண்ணும் பெரிசில்லை! உங்க வசதிபோல், உங்க பொண்ணுக்கு என்ன செய்யணுமோ, அதை செஞ்சிடுங்க!

    ரொம்ப நல்லது!

    காதம்பரிக்கும் ஒரு தங்கை இருந்தாள். அவளும் பட்டதாரி. வேலை பார்க்கும் பெண்.

    தம்பி ஒருவன் மிலிடிரியில் வேலை பார்க்கிறான்.

    ஓரளவுக்கு வசதியான குடும்பம்தான்!

    அப்பா,

    Enjoying the preview?
    Page 1 of 1