Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இளமைக்குப் பெருமை!-1
இளமைக்குப் பெருமை!-1
இளமைக்குப் பெருமை!-1
Ebook102 pages35 minutes

இளமைக்குப் பெருமை!-1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வேணு காலை உணவைச் சாப்பிட உட்கார்ந்திருந்தான். அப்பா பூஜையில் இருந்தார்.
 அத்தை சூடாக இட்லிகளைக் கொண்டு வந்து அவன் பிளேட்டில் வைத்தாள்.
 "ஏன் அத்தே ரொம்ப சோர்வா இருக்கே?"
 "முடியலைடா கண்ணா! வயசாகலையா? எத்தனை நாளைக்கு வண்டி ஓடும்?"
 "நான் சொன்னா, நீ கேக்கறியா? சமையலுக்கு ஒரு ஆளை வச்சுக்கோனு சொல்றேன். நான் கை நிறைய சம்பாதிக்கறேன். எல்லாத்துக்கும் ஆளைப்போடு! நான் பணம் குடுத்துர்றேன். நீ ரெஸ்ட் எடு அத்தே!"
 அத்தை அருகில் வந்து அவன் தலையை செல்லமாகத் தடவிக் கொடுத்தாள்.
 "வேணு! வேலைக்கு வர்றவங்க செஞ்சா, உங்கப்பாவுக்கு புடிக்காது! ஏன், நீயே ஆயிரம் குறை சொல்லுவே! கொஞ்சம் சட்னி போட்டுக்கோ!"
 "வேற என்ன வழி?"
 "கூடிய சீக்கிரம் நீ கல்யாணம் செஞ்சுக்கோ! ஒருத்தி இந்த வீட்டுக்கு வந்துட்டா, பொறுப்பை அவகிட்ட நான் ஒப்படைச்சிர்றேன்!"
 வேணு சிரித்தான்!
 "ஏண்டா சிரிக்கற? கல்யாணப் பேச்சை எடுத்தாலே நீ நழுவற! யாரையாவது விரும்பறீயா?"
 வேணு யோசித்தான். 'ஏன் மறைக்கணும். சொல்லிடலாமே!'
 "ஆமாம் அத்தே! மீரானு ஒரு பொண்ணை நான் விரும்பறேன்!"
 "அவளை இன்னிக்கே இங்கே கூட்டிட்டு வா! அவ வீட்டுப் பெரியவங்களோட நான் பேசறேன். முடிச்சிடலாம்!அது அத்தனை சுலபமில்லை அத்தே!"
 "ஏன்?"
 "அவங்கப்பா ஜோசிய, ஜாதகப் பைத்தியம். பிரமாதமா ஜாதகம் பொருந்தணும். பத்துப் பொருத்தமும் இருந்தாத்தான் கல்யாணம் நடக்கும்!"
 "சரி! பாத்துடலாம்!"
 "எங்க ரெண்டு பேர் ஜாதகமும் பொருந்தும்னு என்ன உத்தரவாதம்? கொஞ்சம் பிசகினாலும் கல்யாணத்தை அவர் நடத்துவார்னு நினைக்கற? மாட்டார். சரி! அப்பாவை உதறிட்டு என் கூட வர மீரா தயாரா இல்லை! அவரும் வேணும், நானும் வேணும்னு சொல்றா! நான் குழம்பி நிக்கறேன். இந்தக் காதல், கல்யாணத்துல முடியும்னு நான் நினைக்கலை! ஏமாற்றம் பின்னால வந்து, வருத்தப்படறதை விட மீரா எனக்கு இல்லைனு முடிவுக்கு வரத் தொடங்கிட்டேன்!"
 "அவசரப்படாதே வேணு! எனக்கும், உங்கப்பாவுக்கும் உன் சந்தோஷம்தான் பெரிசு!"
 "அத்தே! காதல் கல்யாணம் செஞ்சுக்கற எல்லாரும் ஜாதகம் பார்த்தா செய்யறாங்க? நல்லா வாழலையா?"
 "இதப்பாருடா! உங்கப்பா - அம்மா ஜாதகம் பத்து பொருத்தமும் பார்த்து நடந்தது! உங்கம்மா சீக்கிரமே போய்ச் சேர்ந்துட்டா! அவ போவானு எந்த ஜோசியனும் சொல்லலியே!"
 "அத்தே! மீரா எனக்கு ஒத்துழைக்க மாட்டா!"
 "நீ அவளைக் கூட்டிட்டு வா! நான் பேசறேன்!"
 அப்பா பூஜை முடித்து வந்தார்.
 "ராஜம்! நீங்க பேசறதெல்லாம் என் காதுல விழுந்தது! காதலை விட பெத்தவங்களை ஒரு பெண் அதிகம் மதிக்கறானா, அவ நிச்சயமா நல்ல பொண்ணா இருக்கணும். வேணு! அவளைக் கூட்டிட்டு வாடா! பேசலாம்!"
 டெலிபோன் ஒலித்தது. வேணு எடுத்தான்.
 "மீரா பேசறேன்!ஆயுசு நூறு! அப்பா, அத்தைகிட்ட உன்னைப் பத்தித்தான் பேசிக்கிட்டே இருக்கேன்!"
 "அப்படியா?"
 "உன்னைப் பார்க்க விரும்பறாங்க! இங்கே வீட்டுக்கு வர்றீயா?"
 "இல்லை வேணு! உங்ககிட்ட சில விஷயங்களைப் பேசணும்!"
 "அதை விரும்பினா, இங்கே பேசு! என் பெரியவங்க எதுக்கும் தடை இல்லை! நீ வந்து பேசினா, உனக்கே புரியும்! வர்றியா?"
 மீரா ஒரு நிமிடம் போல யோசித்தாள்.
 "சரி வர்றேன். இடம் சொல்லுங்க!"
 வேணு சொல்ல, மீரா மனசுக்குள் வாங்கிக் கொண்டாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 7, 2023
ISBN9798223938248
இளமைக்குப் பெருமை!-1

Read more from Devibala

Related to இளமைக்குப் பெருமை!-1

Related ebooks

Reviews for இளமைக்குப் பெருமை!-1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இளமைக்குப் பெருமை!-1 - Devibala

    1

    காலையில் குளித்துவிட்டு தலைவாரிக் கொண்டிருந்தாள் மீரா! அப்பாவின் குரல் கூடத்தில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது!

    அம்மா உள்ளே வந்தாள்.

    மீரா! உனக்கு லன்ச்சுக்கு இட்லி வச்சிருக்கேன்!

    அப்பா யார்கிட்ட சத்தம் போட்டுக்கிட்டு இருக்காரு?

    எதிர் வீட்டுக்காரர் வந்திருக்காரு! அவரோட தங்கச்சி மாப்ளை விபத்துல இறந்துட்டாராம். சின்ன வயசாம்! பொண்டாட்டியும் ஒருவயசுக் குழந்தையும் இருக்காங்களாம். அவர் சொல்லி அழறாரு!

    அழறவருக்கு ஆறுதல் சொல்லாம, அப்பா ஏன் சத்தம் போடறார்?

    அந்தக் கல்யாணம் காதல் கல்யாணமாம். ஜாதகம் பாக்கலியாம். அதனாலதான் இப்படி ஆயிருக்குனு உங்கப்பா சொல்றார்!

    சரிம்மா! அதை இந்த நேரத்துலயா சொல்றது?

    உங்கப்பா ஜோசியப் பைத்தியமாச்சே! அப்படித்தான் பேசுவார்!

    அந்த ஆள் புறப்பட்டுப் போய்விட்டார்.

    அப்பா உள்ளே வந்தார்.

    ஜாதகப் பொருத்தம் பாக்காம கல்யாணம் செய்யாதீங்கனு அடிச்சுக்கறேன். கேக்கறாங்களா?

    அப்பா ஒரு சந்தேகம். நீங்க கோவப்படக்கூடாது!

    என்னம்மா?

    ஜாதகம் பார்த்துக் கல்யாணம் செய்யற எடங்கள்ல இந்த மாதிரி விபத்தும், துர்மரணமும் நடக்கறதேயில்லையா?

    பெரும்பாலும் நடக்காது!

    ஆனா நடக்க வாய்ப்பிருக்கு. இல்லையா?

    ஏன் இது மாதிரி குதர்க்கமாக பேசற?

    ஏன்பா கோவப்படறீங்க? ஒரு ஆர்க்யூமென்ட்தானே? தப்பில்லையே?

    இருக்கலாம் மீரா! எல்லாத்துக்கும் விதி விலக்கு உண்டு. ஆனா அதுவும் எப்படி நடக்கும்? பிறந்த நேரத்துல சரியானபடி நேரத்தை துல்லியமா கணக்கிட்டிருக்க மாட்டாங்க! ஒரு நொடி தப்பினாக்கூட லக்னம் மாறலாம். நட்சத்திரம் மாறலாம். அதுக்குள்ள பலன் வேறயா இருக்குமில்லையா?

    இது தப்பிக்கற பதில்!

    "இல்லை! உண்மை! இது எல்லாருக்கும் நடக்கறதில்லை! ஒரு சிலருக்கு நடக்குது! இதப்பாரு! கிரகங்கள் கடவுள்தான்! அதை வணங்கணும். நம்பணும். மதிக்கணும்! அல்லாம, இந்த மாதிரி விதண்டா வாதம் பேசறதுல அர்த்தம் இல்லை! நவகிரகங்களும், அதுக்கான ஆலயங்களும், இடப் பெயர்ச்சியும், பலன்களும் பொய் இல்லை! மத்தவங்களைப் பற்றி எதுக்குப் பேசணும். நான் முழுமையா நம்பறேன். அதைக் கடந்து நான் எதையும் செய்யமாட்டேன்!

    மத்தவங்களை நான் திருத்த முடியாது! சரியா?"

    மீரா! தோசை ஊத்தித் தரட்டுமா?

    குடும்மா! ரெண்டே ரெண்டு! அப்பா! நீங்க ஆபீசுக்குப் போகலை?

    கொஞ்சம் லேட்டாப் போவேன். உன் ஜாதகத்தை நம்ம ஜோசியர்கிட்ட குடுத்திருக்கேன்!

    எதுக்கு?

    உனக்கு வயசு 23. இன்னமும் நான் வீட்ல உன்னை வச்சிருந்தா, ‘மகளோட பணத்துக்காக அவளுக்குக் கல்யாணம் கட்டிக்குடுக்காம வச்சிருக்கான் சுந்தரேசன்’னு பேர் வரும்!

    அப்பா! கட்டிக்கப் போறவ நான். எனக்கு இப்பக் கல்யாணம் வேண்டாம்னா என்ன செய்வீங்க?

    அவர் சிரித்தார்.

    என்ன சிரிப்பு?

    வேண்டாம்னு சொல்ல நீ யாரு? உனக்கு குரு பலம் வந்தாச்சு! அதிக பட்சம் போனா, வர்ற ஏப்ரல் மே’ல உன் கழுத்துல தாலி ஏறியே ஆகணும். நான் சொல்லலை! உன் ஜாதகம் சொல்லுது! இப்ப பிப்ரவரி! ஏப்ரல்ல கல்யாணம்னா, இப்பவே முயற்சி பண்ண வேண்டாமா? கடைசி நேரத்துல தவிக்க முடியுமா?

    டெலிபோன் ஒலித்தது!

    அப்பா போய் எடுத்தார்.

    மீரா இருக்காங்களா?

    நீங்க யாரு?

    அவங்க ஆபீஸ்ல வேலை பாக்கறேன். காலைல சேல்ஸ் டாக்ஸ் ஆபீசுக்கு அவங்க வர்றாங்களானு கேக்கணும்!

    இதோ குடுக்கறேன். மீரா! உனக்குத்தான்!

    மீரா ரிசீவரை வாங்கிக் கொண்டாள்.

    ஹலோ! மீரா ஹியர்!

    நான் தாண்டா! சேல்ஸ் டாக்ஸ்னு உங்கப்பாகிட்ட பீலாவுட்டேன்! பெட்ரோல் பங்க் கிட்ட எட்டரைக்கு நில்லு! நான் வந்து பிக்கப் பண்ணிக்கறேன்! சரியா?

    ஓகே! நான் சேல்ஸ் டாக்ஸ் ஆபீசுக்கு வந்துர்றேன். பைல்களை நீங்க எடுத்துட்டு வந்துடுங்க! கிளம்பிட்டேன்!

    ரிசீவரை வைத்தாள்.

    அம்மா! எனக்கு டைமாச்சு! இப்ப சாப்பிட நேரமில்லை! வர்றேன்!

    கைப்பையோடு வாசலில் இறங்கி, செருப்புகளை மாட்டிக் கொண்டு ஓடினாள்.

    லன்ச் பாக்ஸை விட்டுட்டு ஓடறா. இப்பவும் சாப்பிடலை!

    விட்றி! வெளில பார்த்துப்பா! வேலை நிறைய இருக்கு! சாப்பிட அவளுக்கு நேரமில்லை! எனக்குக் குடு! ஜோசியர் வீட்டுக்குப் போகணும்!

    ஏப்ரல்ல கல்யாணம் நடந்துருமா?

    நிச்சயமா! கடவுள் மேல பாரத்தைப் போட்டுட்டு, உன் கடமைகளைச் செய்! அதது நடக்க வேண்டிய நேரத்துல தானா நடக்கும்!

    அம்மா சமையல் கட்டுக்குள் புகுந்தாள்!

    மீரா அவர்களுக்கு ஒரே மகள். செல்லமாக வளர்க்கப் பட்டவள். பிடிவாதக்காரி. தான் நினைத்தது நடக்க வேண்டும்! ஆனால் அதி புத்திசாலி! படிப்பில் எம்.காம். முடியும்வரை முதலிடம்தான். ஒரு நல்ல இடத்தில் வேலையும் உடனே கிடைத்துவிட்டது. அழகுக்குப் பஞ்சமில்லை!

    மொத்தத்தில் மீரா ஒரு முழுமையான பெண்!

    அவளை ஒரு நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க சுந்தரேசனுக்கு ஆசை!

    அதற்கான முயற்சிகளில் சுந்தரேசன் தீவிரமாக இறங்கிவிட்டார்!

    நாள், நட்சத்திரம், நேரம் எல்லாம் துல்லியமாகப் பார்த்த பிறகே எந்தச் செயலையும் செய்வார்.

    அவருக்கு ஆழமான நம்பிக்கை!

    அவருடன் இத்தனை காலம் வாழ்ந்ததில், அம்மாவுக்கும் மேற்படி நம்பிக்கைகள் வந்துவிட்டது!

    மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமே என்ற கவலை மட்டும்தான்.

    மீரா பெட்ரோல் பங்க் அருகில் வந்து நின்றுவிட்டாள். சுற்றிலும் பார்த்தாள். சாலையின் ஒரு முனையில் அந்த மாட்டிஸ் கார் தெரிந்தது!

    Enjoying the preview?
    Page 1 of 1