Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maavilai Thoranam
Maavilai Thoranam
Maavilai Thoranam
Ebook172 pages58 minutes

Maavilai Thoranam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465841
Maavilai Thoranam

Read more from Devibala

Related to Maavilai Thoranam

Related ebooks

Reviews for Maavilai Thoranam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maavilai Thoranam - Devibala

    26

    1

    அலாரம் அடித்தது காலை 4 மணிக்கு.

    ராசி கண்களை விழித்தாள்.

    திருதிருவென கண்கள் எரிந்தன. கஷ்டப்பட்டுத் திறந்தாள். எழுந்து உட்கார்ந்தாள்.

    உடம்பு முழுக்க அடித்துப் போட்டதைப் போல வலித்தது. திரும்பிப் பார்த்தாள்.

    தூளியில் குழந்தை ரேஷ்மா உறங்கிக் கொண்டிருந்தது. ஏறத்தாழ நள்ளிரவு ஒரு மணி வரை தூளி ஆட்டியிருக்கிறாள்.

    அதுவரை குழந்தை தூங்கவில்லை!

    அதன்பிறகு தூக்கம் பிடிக்க ரெண்டு மணி!

    இதோ நாலு மணிக்கு அலாரம்!

    எழுந்து போய் பல் தேய்த்து, ஃபிரிட்ஜ் திறந்து பால் கவர்களை வெளியே எடுத்தாள். கவரை முனை கத்தரித்து, பாத்திரத்தில் கொட்டி, அடுப்பில் வைத்தாள்.

    அரிசி கழுவி குக்கரில் வைத்தாள்.

    அவள் ஒருத்திக்கு மட்டும்தான் சாப்பாடு!

    குழந்தை சாப்பிடும் அளவு ரொம்பக் கொஞ்சம்.

    முதல் நாள் நறுக்கி வைத்திருந்த காய்கறி, பருப்பு வகையறாக்களை வைத்து குக்கரை மூடினாள்.

    இதைவிடக் குறைவாக சமைக்க இனி முடியாது.

    குளிக்கப் போனாள்.

    தலையில் தண்ணீரைக் கொட்டிக் கொள்ளும் சமயம் குழந்தை அழும் சப்தம் கேட்டது.

    ‘அய்யய்யோ! எழுந்தாச்சா?’

    அவசரமாகக் குளியலை முடித்துக் கொண்டு, அரைகுறையாக தலையைத் துவட்டி, பேருக்கு டவல் ஒன்றை மார்போடு சேர்த்து உடம்பில் சுற்றிக் கொண்டு தலைதெறிக்க வெளியே ஓடி வந்தாள்.

    அதற்குள் ரேஷ்மாவின் அழுகை தூளிக்குள் உச்சப்பட்டிருந்தது.

    கால்கள் வெளியே நீட்டியபடி, தூளியை விட்டு இறங்க எத்தனித்துக் கொண்டிருந்தது.

    இருடா! தோ... அம்மா வந்துட்டேன்!

    ஓடிப்போய் எடுத்துக் கொண்டாள்.

    நீ தூங்கவே ராத்திரி ரெண்டு மணி. அதுக்குள்ள ஏம்மா எழுந்திருக்கற? தன் மேல் குழந்தையை அள்ளிப் போட்டுக் கொண்டாள்.

    குழந்தையின் உடம்பில் சூடு தெரிந்தது.

    நெற்றி, கழுத்து, கைகள் எனத் தொட்டுப் பார்த்தாள்.

    ஜுரம் இருப்பது தெரிந்தது.

    குக்கரை மட்டும் இறக்கி வைத்தாள்.

    ஆறு மணியானதும், குழந்தைக்கு ட்ரஸ் போட்டு, தானும் அவசரமாக ஒரு சேலை மாற்றி, தலைவாரிக் கொள்ளக் கூட குழந்தை விடவில்லை. பேருக்கு ஏதோ செய்து கொண்டு வெளியே வந்தாள்.

    கதவைப் பூட்டினாள்.

    தெருக்கோடிக்கு வந்து ஆட்டோவை அழைத்தாள்.

    ஜம்புலிங்கம் தெரு!

    ரேஷ்மா அவள் தோளில் சாய்ந்தபடி லேசான உறக்கத்தில் இருந்தது.

    டாக்டர் விஸ்வநாத் க்ளினிக் முன் ஆட்டோ நின்றது.

    இந்த அதிகாலை நேரம் அவரது கன்சல்டேஷன் நேரமல்ல. குடும்ப நண்பர் என்பதால் மறுக்க மாட்டார்.

    வேட்டி, ஜிப்பாவில் கொஞ்சம் தூக்கக் கலக்கத்தோடு இருந்த டாக்டர் குழந்தையை பரிசோதித்தார்.

    தொண்டைல இன்ஃபெக்ஷன் இருக்கும்மா! அதான் ஜுரம். ஊசி போட்டு, மருந்து தர்றேன்.

    அதை முடித்துக் கொண்டு அதே ஆட்டோவில் வீடு திரும்பினாள்.

    மருந்தின் மயக்கத்தில் அமைதியாக உறங்கத் தொடங்கியது ரெண்டு வயசு ரேஷ்மா.

    நேற்றைக்கு தாமதமாக ஆபீசுக்கு போனபோதே, பிரச்னையாகி விட்டது.

    ‘என்ன சொல்வது? நிச்சயம் மெமோ தந்து விடுவார்கள். நடவடிக்கை எடுப்பார்கள்.’

    ஒன்பது மணி அலுவலகம். மணி எட்டாகி விட்டது.

    கூந்தலில் ஈரம் அப்படியே இருந்தது. துவட்டக்கூட நேரமில்லை.

    அவசரமாகத் துவட்டி, வாரிப் பின்னலிட்டாள். பவுடர் போட்டு, பொட்டு வைத்துக் கொண்டாள்.

    சேலை மாற்றிக் கொண்டாள்.

    சாப்பாட்டை பாக்ஸில் போட்டு கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்.

    ஒரு கூடையில் குழந்தைக்கு பால், பிஸ்கட், மருந்துகள் என சகலமும் சேகரித்துக் கொண்டாள்.

    குழந்தையை தூளியில் இருந்து எடுத்து ஜட்டி போட்டு விட்டாள்.

    கதவைப் பூட்டிக் கொண்டு படிகளில் இறங்கினாள்.

    ஆட்டோ பிடித்து நேராக க்ரீச்சுக்கு வந்தாள்.

    ஆயா எதிர்ப்பட்டாள்.

    ஆயா! குழந்தைக்கு நல்ல ஜுரம். மருந்து கொடுத்திருக்கு. மத்யான மருந்து என்னல்லாம்னு சொல்றேன். கவனமாக கேட்டுக்குங்க.

    யம்மா! கொஞ்சம் இரு! ஜுரம் வந்த குழந்தையை இங்கே விட்டுட்டா போற?

    வேற வழியில்லை ஆயா!

    வேலைக்குப் போற அம்மாக்கள் இருக்கற வரைக்கும் இது மாதிரி பச்சப்புள்ளைங்களுக்கு நாதியில்லை! பொம்பளைகளுக்கும் மனசுல ஈரம் கொறஞ்சு போச்சு!

    ஆயா! எனக்கும் மனசில்லை தான். என் நிலைமை அப்படி! ஆபீஸ்ல ஆக்ஷன் எடுத்துடுவாங்க! புரிஞ்சுக்குங்க ஆயா!

    சரி விட்டுட்டுப் போ. ரொம்ப அழுதா உனக்கு போன் போடறேன்!

    ரேஷ்மா விழித்திருந்தது. ஆயாவிடம் தந்தாள். அழுகையை ஆரம்பித்து விட்டது.

    ராசி திரும்பிப் பாராமல் வாசல் வரை வந்துவிட, அழுகை அதிகமானது. ஆயா ஓடி வந்தாள்.

    இரு தாயீ! குழந்தை மொகமெல்லாம் செவந்து போகுது! நில்லும்மா!

    ராசி நின்றாள். குழந்தையை வாங்கிக் கொண்டாள்.

    ஜுரம் இருக்கு கண்ணா! இந்த நேரத்துல விட்டுட்டுப் போகாதே! ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆச்சுனா, வாழ்நாள் முழுக்க அழ வேண்டிவரும்.

    குழந்தையோடு ஆபீசுக்கு வந்து விட்டாள்.

    பத்து நிமிட லேட்.

    இன்சார்ஜ் இருந்த அறைக்குள் நுழைந்தாள்.

    நான் சொல்லியும் கேக்காம இன்னிக்கும் பத்து நிமிஷம் லே...

    நிமிர்ந்தார்.

    என்னம்மா? குழந்தையோட வந்து நிக்கற?

    ஜுரம் சார்! க்ரீச்ல விட்டுட்டு வர வழியில்லை. நான் போன்ல சொன்னா, பொய் சொல்றேன்னு உங்களுக்குத் தோணும். அதான் கொண்டு வந்துட்டேன். அழுகை அதிகமாகி, அட்மிட் பண்ணும்படி ஆயிட்டா, நான் ஆபீசுக்கு வர முடியாது சார்!

    பேஷ்! நீ எனக்காகவா ஆபீசுக்கு வர்ற?

    இல்லை சார்! எனக்காகத்தான் வர்றேன். இந்த ரெண்டு வயசுப் பச்சக் குழந்தைக்காக வர்றேன். இருபத்து நாலு வயசுல புருஷனையும் பறி கொடுத்து, இது மாதிரி ஒரு கைக் குழந்தையோட நிக்கற என் மாதிரிப் பெண்கள் சொந்தக் கால்ல நின்னுதானே சார் ஆகணும்!

    ராசி...! உனக்கு யாருமே இல்லையா?

    அவர் குரலில் இரக்கம் தெரிந்தது.

    இல்லை சார்! பிறந்த வீடும் இல்லை. புகுந்த வீடும் எனக்கு இல்லை.

    ஏன்மா?

    காதல்! பாழாப்போன காதல்! எல்லாரையும் உதறிட்டு காதல்தான் உசத்தினு காலை வீசி வெளிய நடந்த இளமைத் திமிரு! அவருக்காக எல்லாரையும் தொலைச்சேன். கடைசியா அவரையே தொலைச்சிட்டு நிக்கறேனே!

    ராசி! நீ வீட்டுக்குப் போம்மா!

    தேங்க்யூ சார்! குழந்தையைத் தோளில் சுமந்தபடி கண்ணீரோடு அவரது அறையை விட்டு வெளியே வரும் அவளை பல ஜோடிக் கண்கள் கேள்வி சுமந்து பார்த்தன!

    2

    "பிடி குடுத்தே பேசமாட்டேங்குற. என்னடா அர்த்தம் விக்ரம்?"

    விக்ரம் ஷூவுக்கு லேஸைக் கட்டிக் கொண்டிருந்தான்.

    நிமிர்ந்தான்.

    கல்யாணம் செஞ்சுக்கப் போறது நான்!

    அதனால?

    பெண்ணை நானே தேர்ந்தெடுத்துக்கறேன்!

    இனிமேல் தான் தேர்ந்தெடுக்கப் போறியா? இல்லை, தேர்ந்தெடுத்தாச்சா?

    தேர்ந்தெடுச்சாச்சு!

    நெனச்சேன். இதப்பாருடி! நான் சொன்னப்ப, ‘எம்பிள்ளை நான் கிழிச்ச கோட்டைத் தாண்டமாட்டான்’னு சொன்னியே! நீ கோட்டை, புடவையை, ஜாக்கெட்டை இப்படி எல்லாத்தையும் கிழிச்சுகிட்டு ஒக்காரு இனிமே!

    அம்மா அருகில் வந்தாள்.

    என்னடா விக்ரம் இது? யாரந்தப் பொண்ணு?

    ராசி!

    நம்ம ஜாதியா?

    என் ஜாதி இல்லை! உன் ஜாதி!

    விளையாடறியா?

    என்னம்மா நீ? கல்யாணம்னா, ஒரு ஆணுக்கு, ஒரு பெண் வேணும். வேற என்ன வேணும்?

    எனக்கு எல்லாம் வேணும். உன்னைக் கஷ்டப்பட்டு படிக்க வச்சிருக்கோம். நிறைய செலவு பண்ணியிருக்கோம்.

    அதுக்குத்தான் சம்பாதிச்சுக் கொண்டு வர்றேனே!

    இதப்பாரு! பொண்ணு நம்ம ஜாதியா இருக்கணும். வேலைக்குப் போகக் கூடாது. வரதட்சணை தரணும். நகை, நட்டுனு நிறையப் போட்டுட்டு வரணும்.

    விக்ரம் படி இறங்கினான்.

    என்னடா? நான் பேசறேன். நீ போயிட்டே இருக்கே?

    நேரமாச்சு! சாயங்காலம் மீதியைப் பேசிக்கலாம்!

    பைக்கை ஸ்டார்ட் செய்தான். அது வேகம் பிடித்தது.

    மாலை ஐந்தரைக்கு கண்ணகி சிலைக்குப் பக்கத்தில் பைக் நிற்க, விக்ரம், ராசி இருவரும் இறங்கினார்கள்.

    மணலில் நடந்து, ஒதுக்குப்புறமாக உட்கார்ந்தார்கள்.

    ராசி! நீ என் ஜாதியில்லை.

    அது தெரிஞ்சுதானே லவ் பண்றம்?

    உன்னால எங்கம்மா கேட்ட வரதட்சணையைத் தந்து, கழுத்து நிறைய நகைகளோட, சீர் செனத்திகளோட என் மனைவியா வர முடியுமா?

    விக்ரம்!

    பதில் சொல்லு! அது மட்டுமில்லை. இப்பப் பாக்கற வேலையை நீ விடணும். இது முக்கியமான நிபந்தனை!

    ராசி மணலைத் தட்டிக் கொண்டு எழுந்தாள்.

    ஏய்? எங்கே போற?

    குட் பை! உங்க காதலே வேண்டாம் சாமி! ரொம்ப காஸ்ட்லியா இருக்கு. நான் வர்றேன்.

    த பாருடா! சுருக்குனு ஏறிடுச்சா? இதெல்லாம் எங்கம்மா அபிப்ராயம்! என்னுதுல்லை.

    பின்ன ஏன் சொன்னீங்க?

    ஒக்காரு ராசி!

    அவளை இழுத்து ஏறத்தாழ தன் மடிமேல் போட்டுக் கொண்டான்.

    ஷ்! நாலு பேர் நடமாடற எடம் இது! கட்டுப்பாடு தேவை.

    சரி சரி! எதுக்கு மேற்படி விவரங்களை நான் சொன்னேன்னா, எங்க வீட்டுப் பெரியவங்க சம்மதத்தோட நம்ம கல்யாணம் நடக்க வழியில்லை.

    "அதனால?’’’

    Enjoying the preview?
    Page 1 of 1