Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalavupona Kanavugal
Kalavupona Kanavugal
Kalavupona Kanavugal
Ebook197 pages49 minutes

Kalavupona Kanavugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Devibala
Languageதமிழ்
Release dateFeb 1, 2020
ISBN9781043466862
Kalavupona Kanavugal

Read more from Devibala

Related to Kalavupona Kanavugal

Related ebooks

Related categories

Reviews for Kalavupona Kanavugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalavupona Kanavugal - Devibala

    1

    "வெளியூருக்குப் போய் நீ வேலை செஞ்சுதான் ஆகணுமா? அந்த அளவுக்கு நம்ம குடும்பத்துல பட்டினியும், பசியுமாவா இருக்கம்?" அப்பா கோபமாக கூச்சலிட்டார்.

    நான் சொன்னா, அவளோட தலைல ஏறாது. நீங்க நல்லாக் கேளுங்க நாலு வார்த்தை!

    சொல்லும்மா! நான் மாசம் நாலாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன். நமக்கு சொந்த வீடு இருக்கு. வங்கில உன் கல்யாணத்துக்கு தேவையான பணமும் இருக்கு. நீ எங்களுக்கு ஒரே மகள். நீ உத்யோகம் போய்த்தான் இந்தக் குடும்பம் பிழைக்கணுமா? அதுவும் வெளியூர்ல?

    அப்பா! நீங்க பேசி முடிச்சாச்சா?

    ஏன்மா?

    மீதி இருந்தா அதையும் பேசிருங்க. அப்புறமா நான் பதில் சொல்றேன்!

    சொல்லும்மா!

    என்னை ஏன் முதுகலைப் பட்டம் வாங்க வச்சீங்க?

    படிப்பு அவசியம்மா. நீ நல்லாப் படிச்சே! அதனால படிக்க வச்சேன்.

    முதுகலைல முதல் வகுப்பு, கணிப்பொறில நல்ல பட்டம் இத்தனையும் வாங்கி வச்சிட்டு, அதெல்லாம் துருப்புடிச்சுப் போக விடலாமா அப்பா?

    அதனால?

    விண்ணப்பம் போட்டேன். தேர்வெழுதி, நேர் முகத்துல தேறி, இன்னிக்கு உயர் அதிகாரி பதவிக்கு, வேலைக்கான உத்தரவு வந்திருக்கு. மாதம் ஐயாயிரம் ரூபாய் சம்பளம். கிடைக்குமாப்பா இந்த வாய்ப்பு எல்லாருக்கும்? ராதிகா மூச்சு விடாமல் பேசினாள்.

    சரிம்மா! உன்னை பம்பாய்க்கு தனியா அனுப்பிட்டு மடில நெருப்பைக் கட்டிட்டு நானும், உங்கம் மாவும் உட்காரணுமா? இங்கே - மெட்ராஸ்லேயே. அந்தப் பதவி உனக்கு கிடைச்சிருந்தா சரி.

    தலைமை அலுவலகத்துல நான் பேசிட்டேன். ஒரு வருஷத்துல நிச்சயமா மாற்றல் கிடைக்கும். வந்துற முடியும்.

    அதுவரைக்கும் உன் கல்யாணம்?

    எனக்கு என்னப்பா வயசு?

    இருபத்தி நாலு!

    இன்னும் ஒரு வருஷம் கூடினா, கிழவியா மாறிடமாட்டேன். தைரியமா இருங்க. நல்ல வாய்ப்பை நான் இழக்க விரும்பலையப்பா. தயவு செஞ்சு எனக்கு உத்தரவு குடுங்கப்பா!

    இளகிய குரலுடன் அவள் கெஞ்ச,

    அப்பாவுக்கு மனதை என்னவோ செய்தது.

    சரிம்மா! உன் பிடிவாதம் தான் வெற்றியடையும்னு எனக்கு அப்பவே தெரியும்.

    என்னங்க... பம்பாய்ல எங்கே ராதிகா?

    என் நண்பர் ஒருவர் அந்தேரிங்கர இடத்துல இருக்கார் குடும்பத்தோட. அவருககுக் கடிதம் கொடுத்து அனுப்பறேன். தந்தியும் தரப்போறேன். தாதர் ரயில் நிலையத்துக்கு அவர் வந்து நம்ம ராதிகாவை அழைச்சுகிட்டுப் போவார்.

    அவங்க நல்லவங்கதானே?

    நம்மைவிட நல்லவங்க. பள்ளில ஒண்ணும், கல்லூரில ஒண்ணுமா படிக்கற ரெண்டு பெண்கள். அவர் மனைவியும் உத்யோகம் பார்க்கறாங்க. ராதிகா மாற்றல் கிடைச்சு வர்ற வரைக்கும் அங்கே சுதந்திரமா இருக்கலாம். என்னம்மா சொல்றே?

    சரிப்பா.

    நான் கொண்டு வந்து விடணுமாம்மா?

    தேவையில்லை. பெரிய வேலைல சேரப்போற எனக்கு அந்த அளவுக்குக்கூட தன்னம்பிக்கையும், தைரியமும் இல்லைன்னா எப்படீப்பா?

    சரி! உன் பொருட்களையெல்லாம் எடுத்து வச்சிட்டியா? இந்தா. இதுல பத்தாயிரம் ரூபாய் பணம் இருக்கு. உன் ஆரம்பச் செலவுகளுக்கு வச்சுக்கோ!

    எதுக்கப்பா இத்தனை பணம்?

    புது ஊர். பெரிய நகரம். மத்தவங்க கையை எதிர்பார்க்க முடியுமாம்மா?

    இந்தப் பைல முறுக்கு, சீடை எல்லாம் வச்சிருக்கேன். உனக்குப் பிடிச்ச அதிரசம் இதுல இருக்கு.

    அம்மா ஒரு பெரிய தோல் பையை எடுத்துக்கொண்டு வந்தாள்.

    ராதிகா சிரித்து விட்டாள்.

    ஏண்டீ சிரிக்கிறே?

    நான் படிச்ச படிப்புக்கு வேலை பார்க்கப் போறேனா? இல்லை பிறந்த வீட்லேருந்து புருஷன் வீட்டுக்குப் போகப் போறேனா?

    உங்கம்மாவுக்கு எதுவுமே புரியாதும்மா.

    குழந்தைக்கு அங்கே வாய்க்கு ருசியா எதுவும் கிடைக்கலைனா?

    சரிம்மா. உன் ஆசையை மறுப்பானேன்? எடுத்து வை. அப்பா நான் வெளியே போகணும். நித்யாவை பார்த்துச் சொல்லிட்டு அரைமணி நேரத்துல வந்துர்றன்.

    சரிம்மா.

    அவள் போய் விட்டாள்.

    என்னங்க. இவளை அனுப்பலாமா?

    அதுல தப்பில்லை பார்வதி.

    வயசுப் பொண்ணு! நம்ம கண்காணிப்பும் நேரிடையா இல்லை. கவலையா இருக்கு எனக்கு.

    உன் மக நெருப்பு மாதிரி... நெருங்கினா பொசுக்கிருவா. நீ கவலையே படாதே.

    அம்மா ஏதோ முனகிக்கொண்டு உள்ளே போனாள்.

    அப்பாவும் வெளியில் புறப்பட்டுவிட்டார்.

    அதே நேரம் நித்யாவின் எதிரே இருந்தாள். ராதிகா - அவளது அலுவலக வரவேற்பு அறையில்,

    நாளைக்கு நான் புறப்படறேன் நித்யா.

    பம்பாய்ல தனியா சமாளிப்பியா ராது? எங்கே தங்கப் போறே?

    அப்பாவோட நண்பர் வீட்ல.

    போனதும் எனக்கும் கடிதம் போடு. மறக்காதே! சீக்கிரம் சென்னைக்கு மாற்றல் வாங்கிட்டு வந்துரு.

    சரி நித்தி. நான் வரட்டுமா?

    ராதிகா புறப்பட்டு விட்டாள்.

    நெஞ்சு படபடக்க எழும்பூர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கினாள் செண்பகம். அவளது கருவண்டுக் கண்கள் கலவரம் பூசிக்கொண்டு அலைபாய்ந்தன.

    வா. முதல்ல போய் ஏதாவது சாப்பிட்டு, அப்புறமா போகலாம்.

    மாணிக்கம்.

    சொல்லு செண்பகம்.

    எனக்கு பயம்மா இருக்கு மாணிக்கம்.

    எதுக்கு?

    உன்னை - உன் வார்த்தைகளை நம்பி கிராமத்தை விட்டு ஓடி வந்துட்டேன், கடிதம் எழுதி வச்சிட்டு. இனிமே நான் ஊர் திரும்ப முடியாது. நினைச்சதெல்லாம் நடக்குமா?

    என்மேல நம்பிக்கை வரலை உனக்கு.

    அ... அப்படி இல்லை மாணிக்கம்.

    உன்மேல என் விரலாவது பட்டிருக்கா?

    இல்லை.

    உன்னைப் பெரிய கதாநாயகியாக்கி, உயரத்துல நிறுத்திடலாம்ன்னு நம்பிக்கை வச்சுத்தானே கூட்டிட்டு வந்தேன்.

    உணவகத்தில் போய் உட்கார்ந்தார்கள்.

    விழிகள் திறந்த நிலையில் கனவுகளில் மிதக்கத் தொடங்கிவிட்டாள், செண்பகம்.

    மாணிக்கம் அவளது ஊர்க்காரன்.

    பன்னிரண்டு வயதில் கிராமத்தை விட்டு ஓடிப்போனவன்.

    எப்படி எப்படியோ கஷ்டப்பட்டு இப்போது பிரபல இயக்குநரிடம் உதவி இயக்குநராக வேலை செய்வதாகச் சொல்லி ஊர் திரும்பினான்.

    செழிப்புமிக்க அந்த கிராமத்தை, ஒரு படப் பிடிப்புக்காகத் தேர்ந்தெடுக்க வந்திருந்தான் மாணிக்கம்.

    ஒரு மாதம் கழித்து படப்பிடிப்பு குழுவோடு வந்து இறங்கினான். அங்கேயே முகாமிட்டு ஒரு மாத காலம் சினிமாப் படப்பிடிப்பு நடந்தது.

    ஓடிப்போன மாணிக்கத்துக்கு ஊரில் திடீர் மரியாதை உண்டாகிவிட்டது. செண்பகத்துக்கு உறவுக்காரன் தான் மாணிக்கம்.

    படப்பிடிப்பை பார்க்க வர்றியா செண்பகம்?

    அய்யாவுக்குத் தெரிஞ்சா, கொன்னுருவாங்க!

    அய்யா களத்து மேட்டுக்குப் போன பின்னால வா செண்பகம். சினிமாக்காரங்களை உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கறேன்.

    செண்பகம் தலையசைத்தாள்.

    அய்யா போன பிறகு, ஆத்தாளுக்கும் தெரியாமல் நழுவி தோப்புப் பக்கம் வருவதற்குள் பெரும்பாடாகிவிட்டது.

    அங்கே, படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளும், வேடிக்கை பார்க்கும் ஒரு பெரிய கும்பலும், இருக்க, தயங்கித் தயங்கி வந்தாள் செண்பகம்.

    வா செண்பகம்! மாணிக்கம் எதிர்கொண்டு அழைத்தான்.

    கதாநாயகி ஒரு ஓரமாக உட்கார்ந்து ஒப்பனையில் இருந்தாள்.

    செண்பகம் ஆர்வம் பொங்கப் பார்த்தாள்.

    இயக்குநரைத் தனியாக அழைத்தான் மாணிக்கம்.

    என்ன மாணிக்கம்?

    நான் சொன்ன உறவுக்காரப் பொண்ணு இதுதான் சார். பேரு செண்பகம்!

    அவர் செண்பகத்தை கண்களால் அளவெடுத்தார் ஒரு நிமிடம் போல.

    காமிராமென் அழைக்க –

    வா மாணிக்கம்! வசனம் சொல்லு.

    இரு செண்பகம்! வந்துட்டேன்!

    இயக்குநர் பின்னால் ஓடினான் மாணிக்கம்.

    காமிரா ஓடத் தொடங்கியது.

    ஆக்ஷன்! இயக்குநர் கூச்சலிட,

    கதாநாயகி வசனம் பேசத் தொடங்கினாள்.

    நிச்சயமா என் ஆசை நிறைவேறும். ஒரு நாள் ஊர் மெச்ச உயர்ந்து நிக்கப் போறேன் நான்!

    கட்... கட்...

    மாணிக்கம் அவளிடம் வந்தான்.

    கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துட்டு நீ புறப்படு. நான் அப்புறமா வீட்டுக்கு வர்றேன். சொன்னபடி மாலை நேரத்தில் வந்தான்.

    அய்யா வீடு திரும்பிருக்கவில்லை.

    ஆத்தா மாட்டுத் தொழுவத்தில் சாணி வாரிக் கொண்டிருந்தாள்.

    அடியேய் செண்பகம்! வந்து வராட்டி தட்டி வைடி.

    நீ வராட்டி தட்டப் பிறக்கலை செண்பகம். உன் அழகு எங்க இயக்குநரை ரொம்ப பாதிச்சிருக்கு. முயன்றா ஒரு பெரிய நடிகையா நீ வரலாம். அதுக்கான அத்தனை தகுதிகளும் உனக்கு உண்டுனு சொல்றார்.

    அ... அப்படியா மாணிக்கம்?

    ம். கார், பங்களா, லட்சக்கணக்கான பணம், பேரு, புகழ்... எல்லாம் கிடைக்கும். எல்லாருக்கும் கிடைக்குமா செண்பகம்?.

    செண்பகத்தின் கண்களில் ஏராளமான ஏக்கங்கள் தழும்பின.

    நான் என்ன செய்யணும் மாணிக்கம்?

    மெட்ராஸ்க்கு வரணும்?

    மெ... மெட்ராஸ்க்கா?

    ம். உன்னை பெரிய கதாநாயகியா ஆக்கணும்னா, இந்த கிராமத்துல அது நடக்குமா?

    .....

    ஒப்பனை செய்யணும்! காமிராத் தேர்வு உண்டு. இதெல்லாம் இல்லாம எப்படி நடிகையாக முடியும்.

    இந்த ஊர் எல்லையைக்கூட நான் தாண்டினதில்லையே மாணிக்கம்.

    தாண்டி வா! தப்பில்லை.

    முடியுமா?

    முடியணும். நாளை மறு நாள் படப்பிடிப்பு முடிஞ்சு எல்லாரும் சென்னை திரும்பறம். ரெண்டு நாள் கழிச்சு நான் மதுரை வருவேன். இந்த விலாசத்துல தங்குவேன். நம்ம கிராமத்துலேருந்து ஆண்டிப்பட்டிக்கு பேருந்து இருக்கு. அங்கிருந்து மதுரைக்கு நிறைய வண்டி இருக்கு. நீ வந்துரு. மதுரைலேருந்து சென்னைக்கு உன்னை நான் கூட்டிட்டுப் போறேன்!

    அப்புறம்?

    இந்த நரகத்தைவிட்டு நீ வந்துட்டா, உன் எதிர்காலமே தலைகீழா மாறிடும். அதுக்கு நான் உத்தரவாதம்!

    படப்பிடிப்பு குழுவுடன் மாணிக்கம் புறப்பட்டுப் போய்விட்டான்.

    அடுத்து வந்த நாலு நாட்களில் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு, அதிகாலை மாரியாத்தா கோயிலுக்குப் போவதாக முன்னேற்பாடு செய்து, ஆண்டிப்பட்டி செல்லும் பேருந்தில் ஏறிவிட்டாள் செண்பகம்.

    மதுரை வந்து, அன்று இரவே பாண்டியனில் ஏறி, இதோ சென்னை வந்து விட்டாள்.

    2

    செண்பகத்துக்கு கவலை.

    ‘ஒரு முழு நாள் - அய்யாவும், ஆத்தாளும் தவித்திருப்பார்கள். கடிதம் படித்ததும் என்ன செய்வார்கள்?’

    ‘என்னைத் தேட வேண்டாம். சென்னை செல்கிறேன். ஊரும், உலகமும் மெச்ச ஒரு நாள் திரும்பி வருவேன்-செண்பகம்’

    உட்கார்ந்திட்டே தூங்கறியா? சாப்பிடலை? விரலைச் சொடுக்கினான் மாணிக்கம்.

    கலைந்தாள் செண்பகம்.

    இட்லி பொங்கலை சாப்பிட்டு முடித்தாள். வெளியே வந்தார்கள்.

    வேறொரு ஓட்டலுக்குள் நுழைந்தான் மாணிக்கம். கல்லாவில் உட்கார்ந்தவரிடம் ஏதோ சொன்னான்.

    அவர் செண்பகத்தை ஒரு முறை பார்த்தார்.. தலையை அசைத்தார்.

    வா செண்பகம்!

    மாடியேறி வந்தார்கள்.

    ஒரு அறைக்கதவைத் திறந்தான் மாணிக்கம்.

    தனது கிராமத்து வீட்டில் இரண்டு

    Enjoying the preview?
    Page 1 of 1