Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நீதான் என் காதலி
நீதான் என் காதலி
நீதான் என் காதலி
Ebook92 pages33 minutes

நீதான் என் காதலி

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ந்தி வந்திருந்தது. 


வட இந்தியாவில் இருக்கும் அக்காவிடமிருந்து. 


உடனே புறப்பட்டு வரும்படி. அவளுக்கு ஃபிராக்சர் ஆகிவிட்டதால், உதவி தேவை என்று தந்தி. 


அப்பா, அம்மா பதறிவிட்டார்கள். 


இருவரும் அவசரமாகப் போய் லீவு போட்டார்கள். 


பணம் எடுத்து வந்தார்கள். 


பரபரப்பாக பேக் செய்தார்கள். 


“அம்மா! நீ வீட்டை பார்த்துக்கோ. செலவுக்கு இந்தா ஆயிரம் ரூபாயை வச்சுகோ. போபால் போகணும். குழந்தை எந்த நிலைமைல இருக்காளோ... நாங்க ரெண்டு பேரும் போய்த் திரும்ப பத்து நாளாகும் நிச்சயமா!” 


“சரிப்பா” 


“கேஸ் வரும். பால் கார்ட் வாங்கலை! ஞாபகம் வச்சுக்கோ. காய்கறி வாங்கிக்கோ.”


“அதான் வினய் இருக்கானே!” 


“கிழிச்சான்! நாங்களும் இல்லை. இன்னும் நல்லா அவுத்து விட்ட கழுதையா ஊரைச்சுத்துவான். நீ கொஞ்சம் கண்டிச்சு வைம்மா. காசைக் கண்ல காட்டாதே! புரியுதா?” 


அம்மாவுக்கே பிடிக்கலை. 


“சரி புறப்படுங்க நேரமாச்சு!” 


“அம்மா! நான் ஸ்டேஷன் வரைக்கும் வரட்டுமா?” 


“எதுக்கு! எங்களுக்குப் போகத் தெரியாதா? வாயை மூடிட்டு வீட்ல இரு!”


இருவரும் பாட்டியிடம் சொல்லிக்கொண்டு போய் விட்டார்கள். 


வினய் கூடத்தில் படுத்து விட்டான். 


வெறுப்பாக இருந்தது. 


'பணத்தைக் கண்ணில் காட்ட மாட்டார்கள்!’


நண்பர்கள் மத்தியில் வினய் அவமானப்படாத நாள் இல்லை!' 


மற்றவர்கள் வாங்கி தரும் டீ, டிபன் ஏற்றுக் கொள்ள பிடிக்காது. மறுக்கவம் முடியாது!' 


பதிலுக்கு ஒரு நாள்கூடச் செய்ய முடியாது. 


“பீஸை இவனிடம் தரமாட்டார்கள். அப்பா வந்து கட்டுவார். பஸ் பாஸ்! சகலத்துக்கும் வசதி! ஆனால் சில்லறை மட்டும் தேறாது. 


“பாட்டி! நான் சாயங்காலம் வெளியே போகணும்!” 


“எங்கப்பா?” 


“விக்ரம் அக்காவோட கல்யாண ரிசப்ஷன்!” 


“என்ன வாங்கிட்டு போக போறே!”


“எதுவுமில்லை!” 


“வெறும் கையோடவா ரிசப்ஷன் போறே!” 


“ஆமாம் பாட்டி. எங்கிட்டப் பணம் இல்லையே! என்னை அப்பா, அம்மா நம்பறதில்லையே! அக்கானா பதறி ஓடறாங்க. என்னை மட்டும் ஏன் பாட்டி வெறுக்கறாங்க? நான் என்ன பாவம் செஞ்சேன்?”


பாட்டிக்கு வேதனையாக இருந்தது. 


“நீ ஒரு பாவமும் செய்யலை கண்ணா! உன் மேல அவங்க ரெண்டு பேருக்கும் பாசமில்லைனு நினைச்சியா? உனக்குப் புரிஞ்சுகற பக்குவம் வரலை! நீ பெரிய மனுஷனா வரணும்னு அவங்க ஆசைப்படறாங்க ராஜா!” 


“ஆரம்ப ஆசைகளைப் பொசுக்கிட்டு, அப்புறம் அணைச்சுக்கறதால யாருக்கும் லாபம் பாட்டி?” 


“இந்தா! ஒரு கவர்ல இந்த அம்பது ரூபாயை போட்டு கல்யாணத்துல குடு!  உன் செலவுக்கு இந்த அம்பதை வச்சுக்கோ!” 


“பாட்டீ!” 


“நான் கணக்கு சொல்லிக்கறேன். போ கண்ணா!” 


“பாட்டி! நீ மட்டும் இல்லைன்னா, இந்த வீட்டுக்கு வரவே எனக்கு புடிக்காது பாட்டி!” 


“அப்படியெல்லாம் சொல்லக் கூடாது!” 


மாலை ஐந்தரை மணிக்குக் குளித்தான். 


“பாட்டி எனக்கு தலை துவட்டி விடேன்!”


“இரு வர்றேன்!” 


பாட்டி உள்ளே வந்தாள். 


“ச்சீ படவா! உடம்புல ஒட்டுத் துணி இல்லாமலா நிக்கறே?” 


“நீதானே பாட்டி! தப்பென்ன?” 


“பாட்டியானாலும் நான் பொம்பளை! உனக்குப் பதினேழு வயசு முடிஞ்சாச்சு! நீ குழந்தையில்லை!” 


“உனக்கு நான் குழந்தைதான் பாட்டி!” 


“சரி ஒக்காரு பனைமரம் மாதிரி வளர்ந்தாச்சு. இப்பவும் பாட்டிகிட்ட கொஞ்சிறியா?”


பத்தே நிமிடங்களில் ட்ரஸ் மாற்றிக் கொண்டான்.


தலைவாரி பவுடர் போட்டு வெளியே வந்தான். 


“பாட்டி! நான் சரியா இருக்கேனா?” 


“என் கண்ணே பட்டுடும் போல இருக்கு. ஜாக்கிரதையா போயிட்டு வா! ஊரைச்சுத்தாதே! சீக்கிரம் வந்து சேரு!” 


“சரி பாட்டி!” 


வெளியே வந்து பஸ் பிடித்தான். கூட்டம் அவ்வளவாக இல்லை.


அரைமணி நேரப் பயணம். 


நகரின் மையத்தில் இருந்தது அந்த மண்டபம். எதிரே பஸ் இறங்கினான்.


போக்குவரத்து உச்சத்தில் இருந்து

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 3, 2024
நீதான் என் காதலி

Read more from தேவிபாலா

Related to நீதான் என் காதலி

Related ebooks

Reviews for நீதான் என் காதலி

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நீதான் என் காதலி - தேவிபாலா

    1

    மார்க் ஷீட்டைத் தூக்கி அப்பா அவன் முகத்தில் வீசினார்.

    என்னடா மார்க் இது?

    வினய் பேசாமல் நின்றான்.

    எழுபது பர்சன்ட் கூட வாங்கலை நீ! இதை வச்சிட்டு எந்த காலேஜ் படியை நான் ஏறி இறங்குவேன்?

    அவன் பேசவில்லை.

    இன்ஜினியரிங், டாக்டர். ஐ.ஐ.டினு எத்தனை ஆசைகளை உங்கப்பா மனசுல வச்சிருந்தார். எல்லாத்தையும் உடைச்சு நொறுக்கிட்டியே வினய்! இப்ப நாங்க என்ன பண்ணுவோம்?

    அம்மா தன் பங்குக்குத் தொடங்கினாள்.

    நிக்கறான் பாரு தடியன். பதினேழு வயசுல பெரிய ஆம்பிளையாட்டம் பர்சனாலிட்டி மட்டும் இருக்கு. மண்டைல எதுவும் இல்லை! சொல்லுடா என்ன செய்ய போறே இந்த மார்க்கை வச்சுகிட்டு?

    பி.ஏ. பி.எஸ்ஸினு முயற்சி பண்ண வேண்டியதுதான்!

    அதுக்கும் கூட பெரிய வரிசை நிக்குதுடி! இவன் மார்க்குக்கு அதுகூடக் கிடைக்காது!

    பணம் தள்ளினா?

    எனக்குக் கெட்ட கோபம் வரும். நீயும், நானும் உத்யோகம் போய் சம்பாதிச்சதையெல்லாம் லஞ்சமா அழச் சொல்றியா? சரி அழுவோம். அப்பவாவது இவன் பிரமாதமா வருவானா! மாட்டான். தேர்ட்க்ளாஸ் வருவான். உன் மூஞ்சியைக் கொண்டு போய் எங்கே வச்சுப்ப?

    சரி சரி! சாப்பிட வாங்க ரெண்டு பேரும்!

    அப்பா எழுந்து எரிச்சலுடன் உள்ளே போனார்.

    வினய் அப்படியே நினறான்.

    எரிச்சலாக இருந்தது.

    வினய் ஒன்றும் முட்டாள் அல்ல. ஒரு முட்டாளால் எழுபது சதவிதம் வாங்க முடியாது.

    இன்றைய கல்வி, அட்மிஷன் நிலை மோசம்.

    தொண்ணூறுக்கு மேல் ஒரு க்யு... அதில் பணம், சிபாரிசு என ஒரு பட்டியல்... அப்பா எதற்கும் வளைந்து கொடுக்க மாட்டார்.

    அவர் நினைத்தது நடக்க வேண்டும்.

    அம்மா அதற்கு மேல்.

    ‘நான் நினைப்பதை இவர்களிடம் சொல்ல முடியுமா?’

    ‘சொல்ல விடுவார்களா?’

    துரை சாப்பிட வரப்போறாரா இல்லையா?

    வினய் போய் உட்கார்ந்தான்.

    த பாருடா! கோவத்தை சோத்து மேல காட்டாதே! அப்புறம் அதுவும் கிடைக்காது. நீ உழைச்சாத்தான் உனக்கு வெற்றி. புரியுதா?

    அம்மா பரிமாறத் தொடங்கினாள்.

    நல்லா போட்றி! மூளைல ஒண்ணுமில்லைனாலும் வயிறாவது நிறையட்டும்? தின்னு தீர்க்க வேண்டியதுதானே!

    வினய் சோறு இறங்காமல் தத்தளித்தான்.

    பிளேட்டில் சோற்றைப் போட்டுவிட்டு குத்திப் பேசுவதைவிடக் கொடுமை வேறு இல்லை.

    வராவிட்டால் திமிர்.

    சாப்பிட்டால் வேறு மாதிரி விமர்சனம்.

    கஷ்டப்பட்டு விழுங்கி வைத்தான்.

    அப்பா தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரி.

    அம்மா வங்கியில் வேலை.

    இவனைவிட நாலு வயது மூத்த அக்கா ஒருத்திக்கு போன வருஷம்தான் கல்யாணம் முடிந்தது.

    அவளது கணவன் வட இந்தியாவில், ராணுவத்தில்.

    அந்தக் கல்யாணக் கடன் கொஞ்சம் பாக்கி இருக்கிறது.

    அதற்கு நானா பொறுப்பு?

    ஆரம்பம் முதலே ராணுவத்தனம்!

    பெண் என்றால் சலுகை. அதற்குத்தக்க அக்காவும் நன்றாக படித்தாள். பட்டதாரி ஆனாள். உடனே வேலை கிடைத்தது. வரன் குதிர்ந்தது. கல்யாணம் முடிந்து விட்டது.

    அவளுக்கு சட்சட்டென எல்லாமே நடக்கிறது.

    வினய் பேருக்கு சாப்பிட்டு விட்டு எழுந்து போனான்.

    இப்ப என்னடி செய்யறது?

    காலேஜ் அப்ளிகேஷன் வாங்கியிருக்கமே! நிரப்பி போட்டுப் பாக்கலாம். சிபாரிசு பிடிக்கணும்!

    சரிம்மா! இவன் பி.ஏ. படிச்சுட்டு வந்தா என்ன எதிர்காலம்? வீட்ல சும்மா உட்காரவா இந்த மூணு வருஷப் படிப்பு? நானும் பட்டதாரின்னு நெத்தில எழுதி ஒட்டிக்கலாம்!

    ஆமாம்!

    அது வேண்டாம்! வேற ஏதாவது யோசி!

    லெதர், கேட்டரிங் டெக்னாலஜினு முயற்சி பண்ணலாமா?

    நீ தமாஷ்னு நினைச்சியா? அதுக்கெல்லாம் இடம் சுலபமா கிடைச்சிடுமா! என்ட்ரன்ஸ் இருக்கு. இவன் தேறுவானா?

    வேற என்னதான் செய்யலாம்!

    சனியனை கூப்பிடு!

    வினய் வந்து நின்றான்.

    தபாருடா! எங்களைப் பொறுத்த மட்டும் உன் எதிர்காலம் என்னானே தெரியலே. சரி! இன்னும் பத்து வருஷம் ஒக்காந்து தண்டச்சோறு தின்னறேன்னு வச்சுக்கோ! நாங்க போன பின்னால பிச்சை எடுப்பியா?

    கோயிலுக்கு போய்விட்டு உள்ளே நுழைந்தாள் பாட்டி. அப்பாவின் அம்மா.

    நல்லாயிருக்குடா நீ பேசறது. பதினேழு வயசுல உலகத்தையே ஜெயிக்க முடியுமா? சரி குறைச்சு மார்க் வாங்கிட்டான். என்ன செய்ய முடியும்? மரம் வச்சவன் தண்ணி ஊத்துவான்? எதுக்கு ரெண்டு பேருமா அந்தக் குழந்தையை கரித்துக் கொட்டறிங்க?

    அம்மா! இதுல நீ தலையிடாதே! அவன் கெட்டுப்போக முக்கியக் காரணமே நீதான்!

    Enjoying the preview?
    Page 1 of 1