Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பெரியவங்க
பெரியவங்க
பெரியவங்க
Ebook89 pages32 minutes

பெரியவங்க

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கணேசன் வீட்டுக்குள் நுழைந்தார். அவரது சம்சாரம் வள்ளி ஓடி வந்தாள்.
“ஏன் இப்படி தலை தெறிக்க ஓடி வர்றே?”
“தரகர் போன் பண்ணினார்! ஏழு மணிக்கு உங்களோட வர்றேன்னு நான் சொல்லியிருக்கேன்!”
“எதுக்கு?”
“நம்ம புஷ்பாவுக்கு ஏதோ ஒரு ஜாதகம் நல்லா பொருந்துதாம்! பாத்துடலாமே!”
“சரி! அதுக்கு நான் எதுக்கு?”
“நீங்கதானே புஷ்பாவுக்கு அப்பா?”
“அதை நீதான் சொல்லணும்?”
“உதைபடுவீங்க! என்னைக் கேவலப்படுத்தறீங்களா?”
“யாருடி இவ? சந்தேகம் உனக்குத் தானே வந்திருக்கு?”
“போதும். வயசுக்குத் தகுந்த மாதிரி பேசுங்க! உடனே புறப்படுங்க!”
“ஜாதகப் பொருத்தம் பாக்க ஜோடியா போகணும்னு இல்லை. நீ போனாப் போதும். அது கூட இன்னிக்கு வேண்டாம். ரெண்டு நாள் போகட்டும்.”
புஷ்பா அப்பாவுக்கு காபி எடுத்துக் கொண்டு வந்தாள்.
“அம்மா! அப்பாவுக்கு நாளைக்கு ரிடையர்மென்ட்! உன் கூட இனிமே எல்லா இடங்களுக்கும் அப்பா வருவார்!”
கணேசன் நிமிர்ந்தார்.
பையன் ரவிசங்கர் உள்ளே நுழைந்தான்பைக்கை சர்வீஸுக்கு விட்டாச்சா ரவி?”
புஷ்பா கேட்க,
“இல்லைக்கா! அதை இனிமே காயலான் கடைக்குத்தான் போடணும். புது பைக் வாங்கணும்.”
“நல்ல வண்டி வாங்கணும்னா அறுவது, எழுபது ரூபா ஆகும்டா!”
“ஆகட்டுமே! அப்பா ரிடையர் ஆகிறார். மொத்தப் பணம் வருமே! வாங்கிக்கறேன்.”
“வண்டிக்கெல்லாம் பணம் தர மாட்டேன். வீட்ல ரெண்டு பொண்ணுங்க இருக்கு. அதுங்களை ஆளாக்க வேண்டாமா?” - அம்மா குறுக்கிட,
கடைக்குட்டி ரேணு புகுந்தாள்.
“நான் பிஎஸ்ஸி முடிச்சிட்டு பயோ மெடிக்கல் போகப் போறேன். படிப்புக்கு எனக்குப் பணம் வேணும்.”
ஆளாளுக்கு அப்பாவின் ரிடையர் மென்ட் பணத்தை கமிட் செய்ய - கணேசன் நிலை குலைந்தார்.
‘பெருமாள் சொல்வது நூற்றுக்கு நாறு சரி! நம்மை அத்தனை பேருமாச் சேர்ந்து தெருவுலதான் நிறுத்தப் போறாங்க! யோசிக்கணும். கடமைங்கற பேர்ல தப்பு பண்ணிட்டு, கடைசிக் காலத்துல கையேந்தி நிக்கற நிலைமை வரக் கூடாது!”
கணேசன் உள்ளே வந்து விட்டார்.
வள்ளி பின்னால் வந்தாள்.
“என்னங்க?”
“எனக்குத் தலை வலிக்குது. என்னைக் கொஞ்சம் தனியா விடறியா?”
“ஏன் கோவப் படறீங்க?”
“அப்புறமா ‘மூட்’ வரும் போது கொஞ்சறேன். போறியா?”
வள்ளி வெளியே வந்தாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 16, 2024
பெரியவங்க

Read more from தேவிபாலா

Related to பெரியவங்க

Related ebooks

Reviews for பெரியவங்க

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பெரியவங்க - தேவிபாலா

    1

    கோயில் மண்டபத்தில் தீபாராதனையை முடித்துக் கொண்டு வந்து உட்கார்ந்தார் கணேசன்.

    சௌக்யமா கணேசன்?

    குரல் கேட்டு திரும்பினார். சற்று தள்ளி பெருமாள் நின்று கொண்டிருந்தார்.

    இந்த நிமிஷம் வரைக்கும் சௌக்யம். நாளைக்கு எப்படீனு தெரியலை.

    ரொம்ப பிராக்டிகலான பதில்! ஆனா அது சந்தோஷமா வரலியே! சலிப்பா வருதே!

    வராம? நாளைக்கு எனக்கு ரிடையர் மென்ட்!

    அப்படியா? நிம்மதி! காலை எழுந்து பறக்க பறக்க ஆபீசுக்கு இனி ஓட வேண்டாம். மெதுவா எழுந்து குளிச்சு, நிதானமா சாப்பிட்டு, ரிடையர்டு வாழ்க்கையை ஜோரா அனுபவிக்கலாம். உங்களுக்கு விடுதலைதான்!

    இல்லீங்க! போரடிக்குமே! வருமானம் குறையுமே!

    உங்களுக்கு பென்ஷன் இல்லையா?

    மூணுல ஒரு பங்கு வரும். மீதி பிராவிடண்ட் ஃபண்ட்தான்! கூட்டிக் கழிச்சா குறைச்சல்தான். மூத்தவளுக்கே இன்னும் கல்யாணம் முடியலை. அவளுக்கு அழகு, படிப்பு ரெண்டுமே இல்லை. வயசும் இருபத்தியெட்டு. ஜாதகத்துல வேற பிரச்னை.

    சரி! உங்க பையன் சம்பாதிக்கறானே?

    என்னத்த சம்பாதிக்கறான்... ஒரு ஃபேக்டரில சூபர்வைஸரா இருக்கான். சுமார் சம்பளம். அவனுக்குக் கீழே ஒருத்தி இருக்கா! காலேஜ்ல கடைசி வருஷம். அய்யா! ரிடையர் ஆகி வீட்டுக்கு வரும் போது குடும்ப பாரம் இல்லாம இருந்தா, நீங்க சொல்ற மாதிரி வாழ்க்கையை அனுபவிக்கலாம். இப்ப முடியுமா?

    மொத்தப் பணத்தை எடுத்து மூத்த மகளைக் கட்டிக் குடுக்கப் போறீங்களா?

    புரியலயே?

    பெருமாள் அருகில் வந்து உட்கார்ந்தார்.

    நான் சொன்னாக் கேப்பீங்களா?

    என்ன?

    இந்தக் காலத்துப் புள்ளைங்களை நம்பவே முடியலை. குடும்பத்துல பொறுப்பும் இல்லை. கல்யாணம் நடந்துட்டா, கேக்கவே வேண்டாம். கம்பி நீட்டிர்றாங்க! வந்ததுங்க அதுக்கு மேல இருக்குதுங்க. பெரியவங்களைத் தெருவுல விட்டுட்டுத்தான் மறுவேலை!

    கணேசன் பீதியுடன் பார்த்தார்.

    பையனுங்கதான் இப்படின்னா, பொண்ணுங்க எப்படி இருக்கு? கழுத்துல தாலி ஏறிட்டா கதையே கந்தல். பொறந்த வீட்ல முடிஞ்ச வரைக்கும் சுருட்டிக்கிட்டு, புருஷன் வீட்டுக்குப் போகுது. அங்கேயும் ரகளை. நம்ம பேரையும் சேர்த்துக் கெடுக்டுது. மொத்தத்துல புள்ளைங்களைப் பெத்துட்டு யாருமே நிம்மதியா இல்லீங்க கணேசன்!

    அப்படியா சொல்றீங்க?

    அதுதானே நிஜம்? புள்ளைங்க யாருமே சரியா இல்லாத காரணமாத்தானே, முதியோர் இல்லங்களை மூலைக்கு மூலை திறக்கறாங்க?

    ஆமாங்க!

    பாசம் காரணமா ஆளாக்கி, வேண்டியதை செஞ்சிட்டு, வயசான காலத்துல கையேந்தி நிக்க முடியுங்களா?

    சரியாச் சொன்னீங்க! ஆனா...

    என்ன ஆனா?

    நம்ம கடமைகளை நாம செஞ்சுதானே தீரணும்?

    எது கடமை?

    பசங்களைப் படிக்க வச்சு, கட்டிக் குடுத்து... இதெல்லாம் கடமை இல்லையா?

    சரி... செய்ங்க! அப்புறமா... வயசான பெத்தவங்களை கவனிக்கற கடமை புள்ளைங்களுக்கு இல்லையா?

    நிச்சயமா இருக்கு!

    எங்கே செய்யறாங்க! இதப்பாருங்க! கடைசி வரைக்கும் நீங்க உங்க கால்லதான் நிக்கணும். மரியாதையோட கொள்ளி வாங்கிட்டு போய்ச் சேர நினைச்சா, பாசம், ஈரம், கருணை எல்லாத்தையும் கழட்டி வச்சிட்டு புத்திசாலியா நடங்க! இல்லைனா பின்னால கண்ணீர் விடுவீங்க! அப்புறமா உடம்பு, மனசு ரெண்டும் பலத்தை இழந்து வேதனைதான் மிஞ்சும். அங்கே பாருங்க!

    கணேசன் திரும்பினார். சற்றுத் தள்ளி காவி கட்டிய ஒரு முதியவர் போவோர், வருவோரிடம் கையேந்திக் கொண்டிருக்க, அந்த ஆள், கௌரவமான ஒரு உத்யோகத்துல இருந்தவர். படிச்சவர். புள்ளைங்களுக்கு எல்லாத்தையும் அள்ளிக் குடுத்துட்டு, இன்னிக்குக் கையேந்தி நிக்கறார்.

    அப்படியா?

    இது நாளைக்கு நமக்கும் நடக்கணுமா? யோசிங்க!

    கணேசன் மிரண்டு போனார்.

    புள்ளைங்க வளர்ந்தாச்சு. நீங்க நாளைக்கு ரிடையர் ஆகப் போறீங்க! உங்களை, உங்க சம்சாரத்தை நீங்க காப்பாத்திக்கிட்டா தப்பிக்கலாம்.

    .......!

    வீடு சொந்த வீடுதானே?

    ஆமாங்க!

    நல்லது. யாரும் உங்களை விரட்ட முடியாது. வர்ற பணத்தை வச்சுகிட்டு, சந்தோஷமா காலத்தை ஓட்டுங்க. பாசவலைல விழுந்து நாசமாப் போகாதீங்க!

    ஆலய மணி அடித்தது.

    இது உங்களை எச்சரிக்கற மணி! வரட்டுமா?

    பெருமாள் எழுந்து போக, கணேசன் முகத்தில் ஒரு வேகம் வந்தது.

    2

    கணேசன் வீட்டுக்குள் நுழைந்தார். அவரது சம்சாரம் வள்ளி ஓடி வந்தாள்.

    ஏன் இப்படி தலை தெறிக்க ஓடி வர்றே?

    தரகர் போன் பண்ணினார்! ஏழு மணிக்கு உங்களோட வர்றேன்னு நான் சொல்லியிருக்கேன்!

    எதுக்கு?

    நம்ம புஷ்பாவுக்கு ஏதோ ஒரு ஜாதகம் நல்லா பொருந்துதாம்! பாத்துடலாமே!

    சரி! அதுக்கு நான் எதுக்கு?

    நீங்கதானே புஷ்பாவுக்கு அப்பா?

    அதை நீதான் சொல்லணும்?

    உதைபடுவீங்க! என்னைக் கேவலப்படுத்தறீங்களா?

    யாருடி இவ? சந்தேகம் உனக்குத் தானே வந்திருக்கு?

    போதும். வயசுக்குத் தகுந்த மாதிரி பேசுங்க! உடனே புறப்படுங்க!

    "ஜாதகப் பொருத்தம் பாக்க ஜோடியா போகணும்னு இல்லை. நீ போனாப் போதும். அது கூட இன்னிக்கு வேண்டாம்.

    Enjoying the preview?
    Page 1 of 1