Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பிரசாதப் பொட்டலம்
பிரசாதப் பொட்டலம்
பிரசாதப் பொட்டலம்
Ebook207 pages1 hour

பிரசாதப் பொட்டலம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காரியங்கள் சகலமும் முடிந்து விட்டன மளமளவென!


அதுவரை ஆலய பூஜைகளுக்குத் தற்காலிக ஏற்பாடுகளைச் செய்திருந்தான் நடேசன்.


எல்லாம் முடிந்து நடேசன் ஆலயத்துக்கு வரத் தொடங்கி விட்டான்.


பல ஆண்டுகளாக அங்கு வாழ்ந்த குருக்களை அந்தக் கிராம மக்களால் சுலபத்தில் மறக்க முடியாது!


அந்த கம்பீர உருவமும், வெண்கலக் குரலின் மந்திர உச்சாடனமும்... இப்போதும் காதில் ஒலிக்கிறது?


ஆனால் நடேசன் எந்தக் குறையும் வைக்கவில்லை!


அப்பாவும் போன பிறகு, கோயிலே கதி எனக் கிடந்தான்.


அன்றைக்கு இரவு நேர பூஜையை முடித்துப் பள்ளி கொள்ளச் செய்தபின், ஆலயத்தைப் பூட்டிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான்.


அம்மா முனகல் கேட்டது.


ஓடி வந்தான். தொட்டுப் பார்த்தான்.


“ஜூரம் இருக்கும் போலிருக்கே! கஷாயம் போட்டுத் தரட்டுமா?”


“வேண்டாம்பா”


“அப்பா போன முதல் நீ சரியா இல்லை! தெனமும் விடிய ஒரு நாழிக்குக் குளிச்சு, நைவேத்தியத்துககுனு தனியா சமைச்சு... இனிமே இதெல்லாம் உன்னால முடியுமாம்மா?”


“முடிஞ்சுதானே ஆகணும்?”


“நான் அன்னத்தை வரச் சொல்லட்டுமா?”


“அவளுக்கு வயசாகலையா?”


“பின்ன எப்படீம்மா?”


“உங்கப்பாவுக்குக் குடுத்து வைக்கலை! அவரோட கடைசி ஆசை நிறைவேறவும் இல்லை! எனக்கும் எந்த ஆசையும் நிறைவேறாது”


கண்களை மூடிக் கொண்டாள்.


சுரீலென்றது நடேசனுக்கு!


'அம்மாவை இனி வீட்டு வேலைகளைச் செய்ய வைப்பது மிகப் பெரிய தண்டனை!'


'அப்பா என்ன தப்பாக ஆசைப்பட்டு விட்டார்?'


'நிறைவேற்ற முடியாத ஆசையல்லவே!


கங்காவை அவள் அம்மாவுடன் அடிக்கடி ஆலயப் பிரகாரத்தில் பார்ப்பதுண்டு!


மனசு வேறு எதற்கும் தயார் ஆகாததால், நின்று பார்க்கத் தோன்ற வில்லை!


'நானும் காலம் முழுக்கத் தனித்து வாழ்ந்து விட முடியாது!'


'மனைவி என்று ஒருத்தி நிச்சயமாக வேண்டி வரும்!”


'அது இந்த கங்காவாக இருந்து விட்டுப் போகட்டுமே!’


அம்மாவின் அருகில் வந்தான்.


“அம்மா! அப்பாவோட கடைசி ஆசையை நிறைவேற்ற நான் தயார்!”


அம்மா குபீரென எழுந்து உட்கார்ந்தாள்.


“நடேசா! நீயா சொல்ற?”


“நானேதான்மா!”


“அன்னத்தை சாயங்காலம் வரச் சொல்லு! நான் பேசி முடிவு பண்ணணும்!”


“சரிம்மா”


இரவு ஏழரைக்கு அன்னம் வந்தாள்.


“ஒக்காரு அன்னம்”


“எப்படிம்மா இருக்கேள்?”


“எத்தனை நாளைக்கோ? நடேசன் கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டான்!”


“அப்படியா?”


“எங்காத்துக்காரர், உன் பொண்ணு கங்காதான் இந்தாத்து மாட்டுப் பொண்ணா வரணும்னு சொன்னது உனக்கும் தெரியும்!”


“நான் தவிக்கறேன்மா”


“என்னதவிப்பு?”


“என் பொண்ணுக்கு அந்தத் தகுதி இருக்கா?”


“இதுல என்ன அன்னம் தகுதி? இது பெருமாள் போட்ட முடிச்சுனு நினைச்சுக்கோ. என்ன சொல்ற?”


அன்னம் பேசவில்லை!


“இன்னும் என்ன யோசனை? உம்பொண்ணு சம்மதிக்க மாட்டாளா?”


அன்னம் சிரித்தாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 3, 2024
பிரசாதப் பொட்டலம்

Read more from தேவிபாலா

Related to பிரசாதப் பொட்டலம்

Related ebooks

Reviews for பிரசாதப் பொட்டலம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பிரசாதப் பொட்டலம் - தேவிபாலா

    1

    சுந்தர குருக்களுக்கு நேரம் குறித்து விட்டார் டாக்டர்.

    உறவுகளுக்கெல்லாம் நீங்க சொல்லிக்கலாம். இனிமே அவர் இந்தப் பக்கம் இல்லை

    நினைவு திரும்புமா டாக்டர்?

    மாமி கேட்டாள்.

    தெரியலைமா! திரும்பலாம். திரும்பாமலும் போகலாம். பக்கத்துலேயே இருங்க!

    அவர் தன்னோட கடைசி நிமிஷங்கள்ல ஏதாவது சொல்ல ஆசைப் பட்டா?

    நடேசன் உள்ளே நுழைந்தான்.

    சுந்தர குருக்களின் ஒரே மகன்! இருபத்தியெட்டு வயசு இளைஞன்! எட்டாவதுக்கு மேல் அவனுக்குப் படிப்பு ஏறவில்லை! குருக்கள் அவனையும் வைதீகம் படிக்க வைத்து விட்டார். தனக்குப் பிறகு ஆலயத்தைக் கவனித்துக் கொள்ள ஆள் வேண்டுமே என்று அவனை வாரிசாக்கத் தீர்மானித்து விட்டார்.

    கமலம் மாமிக்கு அதில் விருப்பமில்லை!

    ஏன்னா! நடேசன் படிக்கட்டுமே! எல்லாரையும் போல குழாய் மாட்டிண்டு, நடேசன் உத்யோகம் பார்த்தா, நன்னா இருக்காதோ?. நேக்கு எத்தனை ஆசை தெரியுமா?

    கட்டுக்குடுமியும், காதுல கடுக்கனும் இருந்தா கசக்கறதா நோக்கு? என்னடீ குறைச்சல்? ஆறு கால பூஜை நடத்தி, ஆண்டவன் சேவையே உசத்தினு வாழ்நாளை அர்ப்பணிச்சவன் நான். பெருமாள் நமக்கு என்ன குறை வச்சிட்டார்?

    அதுக்கு நான் சொல்லலை

    இதப்பாரு! நான் குறுக்கே புகுந்து எதையும் தட்டி விடலை! உன் இஷ்டப்படி நடேசன் படிச்சு பெரிய ஆளா வர்றதா இருந்தாலும், வரட்டும். இல்லை, பகவான் சேவையே உசத்தினு நெனச்சா, என் தொழில் வாரிசாகட்டும்! அவன் விருப்பத்துக்கு விட்ரு!

    நடேசனுக்குப் படிப்பு ஏறவில்லை!

    ஆலயத்தில்தான் நாட்டம் இருந்தது.

    வேதங்களை நன்றாகவே கற்றுக் கொண்டு விட்டான். அப்பாவுடனே எந்த நேரமும் இருந்தான்.

    உடம்பில் பூணூல், காதில் கடுக்கன், கட்டுக்குடுமி என அப்பா போலவே உருவாகி விட்டான்.

    கோயில் நடைமுறைகளை நன்றாகக் கற்றுக் கொண்டிருந்தான்.

    அந்த கிராமத்தில் அந்தப் பெருமாள் கோயில் பிரசித்தம்.

    பூஜைகள், விழா நாட்களில் விசேஷங்கள், சிறப்பு வழிபாடுகள் என சுந்தர குருக்கள் கோயிலைப் பிரமாதமாக நடத்தி வந்தார்.

    அந்த ஊரில் வசதியான மக்கள் நிறையவே இருந்ததால், ஆலயமும் ஆரோக்யமாக இருந்தது.

    நகைகள், பட்டுப் பட்டாக வஸ்திரங்கள் என பெருமாள் ஜொலித்தார்.

    நடேசனுக்கு இருபத்தாறு வயது ஆன உடனேயே சுந்தர குருக்களின் உடல் நிலையில் நலிவு காணத் தொடங்கி விட்டது.

    தினசரி ஆலயத்துக்கு வர முடியவில்லை.

    நடேசன் அவர் இல்லாத குறையை அற்புதமாக நிறைவு செய்யத் தொடங்கி விட்டான்!

    கிராம மக்களும் நடேசனைப் பெரிதும் நேசித்தார்கள்.

    சுந்தர குருக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை, பக்கவாதத்தின் சாயல்கள் என பிரச்னைகள் தொடர, அவர் ஆலயத்துக்கு வருவது நின்றே போனது.

    அடிக்கடி மருத்துவமனை... வீடு திரும்பல் என ஊசலாடிக் கொண்டிருந்தார்.

    தன் பிரச்னை புரிந்ததுமே நடேசனுக்குக் கல்யாணம் பேசத் தொடங்கி விட்டார்.

    நடேசன் மறுத்து விட்டான்.

    ஏண்டா நடேசா?

    எனக்குக் கல்யாணத்துல நாட்டமில்லை! எப்ப வேணுமோ, அப்பச் சொல்றேன்!

    உங்கப்பா பார்க்க வேண்டாமா?

    யோகமிருந்தா பார்க்கட்டும்!

    அம்மா சொல்லி சலித்துப் போனாள். அவருக்கும் அந்த ஆசை இருந்தது. அவன் தீர்மானமாக மறுத்து விட்டதால், பேசவில்லை!

    இதோ மரண நொடிகளுக்கு வந்து விட்டார்.

    நடேசன் கட்டில் அருகில் வந்து உட்கார்ந்தான்.

    அம்மா தன் கணவரின் மரணத்தை எதிர்பார்த்து விட்டதால் ஒரு மாதிரி உறைந்து போயிருந்தாள்.

    சுந்தர குருக்களிடம் ஒரு சலனம் தெரிந்தது.

    அப்பா! அப்பா

    நடேசன் அழைக்க, அம்மாபதறி கட்டில் அருகில் வந்தாள்.

    ஏன்னா... கண்ணைத் தொறந்து காருங்கோன்னா!

    குருக்கள் மெல்லத் தன் கண்களைத் திறந்தார்.

    இருவரையும் மாறி மாறிப் பார்த்தார்.

    ந... டே.... சா...!

    அவர் உதடுகள் மெல்ல அசைய, வெகு அருகில் செவிகளைக்

    கொண்டு போனான் நடேசன்.

    அப்பா

    கோயில்ல அன்னம்...?

    "ம்! வந்து கோயிலை சுத்தப்படுத்தி, வழக்கம்போல வேலைகளை செஞ்சு வச்சிட்டுத்தான் போறா!

    அவர் தவிப்பது தெரிந்தது.

    நடேசா! உங்கப்பா வேற என்னவோ சொல்ல ஆசைப்படறார்!

    நடேசா அன்னம்...

    சொல்லுங்கப்பா! அன்னத்தை இங்கே வரச் சொல்லணுமா?

    ஆம் என்பதைப் போல தலையசைத்தார்.

    கூட்டிட்டு வர்றேன்!

    நடேசன் இறங்கி நடக்கத் தொடங்கினான்.

    ‘அன்னம் என்ற அன்னபூரணி ஒரு ஏழைப் பெண்! அவளை சிறு பெண்ணாக இருந்த காலம் தொட்டே குருக்களுக்குத் தெரியும். ஏறத்தாழ அனாதையான அன்னத்துக்குப் புகலிடமே இந்தப் பெருமாள் ஆலயம்தான். கோயிலை சுத்தப்படுத்தி, அற்புதமாகப் பராமரிப்பதில் அன்னத்தை யாரும் மிஞ்ச முடியாது.

    அவளது அழகைக் கண்டு ஆலயத்துக்குத் தொடர்ந்து வரும் ஒருவன் கண் வைத்தான்.

    அது கல்யாணம் வரை போனது. குருக்கள்தான் கல்யாணத்தையும் நடத்தி வைத்தார். ஒரு குழந்தை பிறக்கும் வரை ஒழுங்காக இருந்தவன்; அதன்பிறகு தாறுமாறாக நடந்தான்.

    செய்யாத அயோக்யத்தனமில்லை!

    போலீஸ் பிடித்துக் கொண்டு போய் விட்டது என்றார்கள்.

    ஒருநாள். ஆறு மாதம் கழித்துத் திரும்பி வந்தான்.

    பிரச்னைகள்!

    பணம் கேட்டான்.

    அன்னத்தைத் துன்புறுத்தினான். குருக்களிடம் ஓடி வந்தாள் அன்னம்! அழுதாள்.

    நீ கவலைப்படாதே அன்னம். அவனை இந்த எல்லைப் பக்கமே வரவிடாம நான் தடுத்துர்றன்!

    அவர்தடுக்க,

    குருக்கள் அன்னத்தை வைத்திருப்பதாக ஊர் முழுக்கப் பிரச்சாரம் செய்தான்!

    முதலில் துடித்த அன்னம், பிறகு பழகி விட்டாள்.

    கங்காவுக்கு ஒன்பது வயதாகும் போது ஒருமுறை வந்த அவன், அதன் பிறகு வரவே இல்லை! ஆலயத்தை ஒட்டி ஒரு ஓட்டு வீடு! அதில்தான் அன்னமும், அவள் மகள் கங்காவும்!

    ஆலய சேவையை முடித்து விட்டு, காலையில் குருக்கள் தரும் இரண்டு பிரசாதப் பொட்டலங்களை வீட்டுக்கு எடுத்துச் செல்வாள் அன்னபூரணி.

    அதுதான் காலை உணவு. அதன்பிறகு நாலு வீடுகளில் சமையல் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தாள்!

    மாலை வரை கடுமையாக உழைப்பாள்.

    அதன்பிறகு இரவு எட்டுக்குள் வந்தால்,

    ஆலயத்துக்குள் கோயிலைப் பூட்டும் வரை விழுந்து கிடப்பாள்.

    என்ன கிடைத்தாலும், அவளுக்கொரு பங்கை எடுத்து வைத்து விடுவார் குருக்கள்!

    கங்காவுக்கும் ஆறாவது வகுப்புக்கு மேல் படிப்பு ஏறவில்லை! நிறுத்தி விட்டாள் அன்னம்! மகளையும் தன் வேலைக்குத் தயார் செய்தாள்!

    கங்கா கனவில் வாழும் பெண்! இருக்கிறதோ, இல்லையோ அது அவளுக்கு முக்கியமில்லை!ஆனால் கம்பீரமான ஒரு வாழ்க்கையை மானசீகமாக வாழ்ந்து வருபவள்!

    கங்காவுக்கு இப்போது இரு பத்தி மூன்று வயது!

    அம்மாவின் வழிக்கு வர வில்லை! பிடிவாதம் அதிகம். முன்கோபம் அதை விட.

    அன்னம் கவலைப்பட்டாள்.

    குருக்களிடம் ஓரிரு முறை ஆதங்கப்படவும் செய்தாள்.

    ‘எனக்குப் பொறந்தது பேராசையோட மொத்த வடிவமா இருக்கே! அப்பனோடரத்தம் ஓடறது!"

    விடு அன்னம்! சின்னப் பொண்ணுதானே! அனுபவத்துல சகலமும் சரியாகும்!

    அன்னம் அவருக்கு ஒரு நல்ல தோழி!

    அவர் குழம்பிய சமயங்களில் தன் இதமான சிரிப்பால் அன்னம் உழைக்கும் உழைப்பு கண்டு தானே தெளிந்து விடுவார்.

    அவள் மேல் அசாத்திய மரியாதை!

    இதோ அழைத்து விட்டார். நடேசன் அன்னத்துடன் வந்தான்.

    சற்று தள்ளி நின்றாள் அன்னம். அவருக்கு நேரம் குறித்து விட்டதை அவளும் தெரிந்து வைத்திருந்தாள்.

    பார்வையால் அழைத்தார்..

    போ அன்னம்! உங்கிட்ட என்னவோ சொல்ல அவர் ஆசைப்படறார். கிட்டக்கப் போ!

    அன்னம் வெகு அருகில் வந்தாள்.

    அன்னம்

    சொல்லுங்கோ!

    அவர் பேசுவது அன்னத்துக்குக் கேட்டது.

    எனக்கு நேரம் குறிச்சாச்சு

    அவள் பேசவில்லை!

    நடேசனுக்கு ஒரு கல்யாணம் பண்ணிப் பாக்க முடியலை! என் ஆசையை நிறைவேத்த அவனுக்கு மனசு இல்லை!

    அப்படியில்லைப்பா

    கட்டிலின் மறுபக்கம் இருந்த நடேசன் சின்னக் குரலில் சொன்னான்.

    அன்னம்! நீ உன் ஆயுள் உள்ள வரைக்கும் கோயிலை விட்டுப் போகக்கூடாது!

    இல்லை!

    கங்கா இப்ப எங்கே?

    ஆத்துல வேலையா இருக்கா

    அன்னம் நான் கேக்கப்படாதுதான். கேக்காம இருக்க முடியலை! என் பிள்ளை சம்மதிச்சா, உன் பொண்ணு கங்காவை அவனுக்குக் கல்யாணம் செஞ்சு வைக்கறியா?

    அன்னம் அதிர்ந்தாள்.

    நான் எ...எப்படி... கங்காவை...?

    நீயும் என் ஜாதிதான்! என்ன தயக்கம்?

    அதில்லை! நான் அடுத்த வேளைக் கஞ்சிக்குப் போறாடறவள். பெரிசுக்கு ஆசைப்படலாமா?

    யார் அன்னம் பெரியவா? பெருமாள் சேவை பண்ணிண்டு வர்ற உன்னை விடப் பெரியவா உண்டா?

    அன்னம் கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.

    இதப்பாரு. என் பிள்ளை, உம்பொண்ணு ரெண்டு பேரும் சம்மதிக்கணும்! நான் கட்டாயப்படுத்தலை! இது என் ஆசை! அவ்ளோதான்

    மறுநாள் காலை அவர் மூச்சை நிறுத்திக் கொண்டார்.

    2

    காரியங்கள் சகலமும் முடிந்து விட்டன மளமளவென!

    அதுவரை ஆலய பூஜைகளுக்குத் தற்காலிக ஏற்பாடுகளைச் செய்திருந்தான் நடேசன்.

    எல்லாம் முடிந்து நடேசன் ஆலயத்துக்கு வரத் தொடங்கி விட்டான்.

    பல ஆண்டுகளாக அங்கு வாழ்ந்த குருக்களை அந்தக் கிராம மக்களால் சுலபத்தில் மறக்க முடியாது!

    அந்த கம்பீர உருவமும், வெண்கலக் குரலின் மந்திர உச்சாடனமும்... இப்போதும் காதில் ஒலிக்கிறது?

    ஆனால் நடேசன் எந்தக் குறையும் வைக்கவில்லை!

    அப்பாவும் போன பிறகு, கோயிலே கதி எனக் கிடந்தான்.

    அன்றைக்கு இரவு நேர பூஜையை முடித்துப் பள்ளி கொள்ளச் செய்தபின், ஆலயத்தைப் பூட்டிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான்.

    அம்மா முனகல் கேட்டது.

    ஓடி வந்தான். தொட்டுப் பார்த்தான்.

    ஜூரம் இருக்கும் போலிருக்கே! கஷாயம் போட்டுத் தரட்டுமா?

    வேண்டாம்பா

    அப்பா போன முதல் நீ சரியா இல்லை! தெனமும் விடிய ஒரு நாழிக்குக் குளிச்சு, நைவேத்தியத்துககுனு தனியா சமைச்சு... இனிமே இதெல்லாம் உன்னால முடியுமாம்மா?

    முடிஞ்சுதானே ஆகணும்?

    நான் அன்னத்தை வரச் சொல்லட்டுமா?

    அவளுக்கு வயசாகலையா?

    பின்ன எப்படீம்மா?

    உங்கப்பாவுக்குக் குடுத்து வைக்கலை! அவரோட கடைசி ஆசை நிறைவேறவும் இல்லை! எனக்கும் எந்த ஆசையும் நிறைவேறாது

    கண்களை மூடிக் கொண்டாள்.

    சுரீலென்றது நடேசனுக்கு!

    ‘அம்மாவை இனி வீட்டு வேலைகளைச் செய்ய வைப்பது மிகப் பெரிய தண்டனை!’

    ‘அப்பா என்ன தப்பாக ஆசைப்பட்டு விட்டார்?’

    ‘நிறைவேற்ற முடியாத ஆசையல்லவே!

    கங்காவை அவள் அம்மாவுடன் அடிக்கடி ஆலயப் பிரகாரத்தில் பார்ப்பதுண்டு!

    மனசு வேறு எதற்கும் தயார் ஆகாததால், நின்று பார்க்கத் தோன்ற வில்லை!

    ‘நானும் காலம் முழுக்கத் தனித்து வாழ்ந்து விட முடியாது!’

    ‘மனைவி என்று ஒருத்தி நிச்சயமாக வேண்டி வரும்!"

    ‘அது இந்த கங்காவாக

    Enjoying the preview?
    Page 1 of 1