Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பூமாலை போட வா! - II
பூமாலை போட வா! - II
பூமாலை போட வா! - II
Ebook99 pages34 minutes

பூமாலை போட வா! - II

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அந்த வீடே பரபரப்பாக இருந்தது.
மாற்றலாகி நாளைக்கு ரமணி வரும் நாள். தற்செயலாக அந்த நாள் பிரமாத முகூர்த்த நாளாக அமைந்துவிட்டது. இதை விட்டால் இந்த அளவுக்கு பிரமாதமான நாள் இன்னும் ஒரு மாசத்துக்கு இல்லை!
அதே நாளில் காதம்பரியைப் பார்த்து, தாம்பூலம் மாற்றுவது என அப்பா தயாராகிவிட்டார்.
காதம்பரி வீட்டுக்கும் அதை அறிவித்துவிட்டார்.
“என்னங்க! ரமணி வந்து ஒரு வார்த்தை கேட்டுட்டு, இதை செஞ்சிருக்கலாம்!”
“ரமணி வருவான். நாள் வருமாடி? காலைல ரயில் வருது! ரமணி எட்டு மணிக்குள்ளே வீட்டுக்கு வந்துடுவான். காதம்பரி வீட்டுக்கு சாயங்காலம் போகப் போறோம். நடுவுல ஏராளமான அவகாசம். உன் பிள்ளைகிட்டப் பேச உனக்கு அது போதாதா?”
“நான் பேசவா சொல்றேன்? கட்டிக்கப் போறவன் அவன். அவனுக்குப் பிடிக்கணும்!”
“அவளுக்கென்னடி குறைச்சல்? அவளைப் பிடிக்கலைனு யார் சொல்ல முடியும்? நிச்சயமா புடிக்கும்! தங்கம்...! மசமசன்னு இருக்கக் கூடாது! ஒரு முடிவை எடுத்த பிறகு, அதை செயல்படுத்த கால தாமதம் கூடவே கூடாது! புரியுதா?”
அம்மா எதுவும் சொல்லவில்லை! உள்ளே வந்தாள்.
ரெண்டாவது மகன் சசி - கல்லூரி பேராசிரியர் தயாராகிக் கொண்டிருந்தான்.
“நாளைக்கு நீ லீவு போட்ரு சசி!”
“சரிம்மா! அப்பா - அண்ணனைக் கேக்காம ரொம்ப அவசரப்படறார். அவனுக்கு சில சமயம் சுருக்குனு கோவம் வந்துடும்!”இவருக்கு நினைச்சது நடக்கலைனா, புடிக்காது!”
“அந்த குணத்தையெல்லாம் இனிமே மாற்றிக்கணும்! எங்களுக்கும் சுதந்திரம் உண்டு. ரமணி விட்டுக் குடுக்கறான்! நான் மாட்டேன்!”
சசி புறப்பட்டு விட்டான்.
“சரிப்பா! எது நடந்தாலும் பிரச்னை இல்லாம நடக்கணும்! குடும்பம் சந்தோஷமா இருக்கணும்!”
இரவுக்குள் தாம்பூலம் மாற்றுவதற்குத் தோதான அத்தனை பொருட்களையும் அப்பா சேகரித்துவிட்டார்.
காதம்பரிக்கு சேலை ரவிக்கை இத்யாதிகள்!
பெண்கள் இருவரும் முதல் நாள் இரவே வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.
“ஸ்டேஷனுக்கு யாரு போறாங்க?”
“யாரும் வர வேண்டாம்னு ரமணி சொல்லிட்டான். அவன் வளர்ந்த இடம்தானே! வந்துடுவான்!”
கதிர் மட்டும் ஏதோ ஒரு விளையாட்டுக்காக வெளியூருக்குப் போயிருந்தான்.
அந்த வீட்டுக்கு ஒரு கல்யாணக் களை வந்துவிட்டது!
எல்லாரும் எதிர்பார்த்த மறுநாளைய காலைப் பொழுது விடிந்தது!
தொலைபேசியில் கேட்க, ரயில் சரியான நேரத்துக்கு வருகிறது என்றார்கள்.
எட்டுக்குள் ரமணி வந்துவிடுவான்.
ரமணிக்குப் பிடித்த காலை உணவாகச் செய்து அம்மா காத்திருந்தாள்!
சரியாக ஏழு ஐம்பது!
வாசலில் அந்தக் கால் டாக்ஸி வந்து நின்றது
விரைவில் அவன் கல்யாண மாப்பிள்ளை ஆகப் போகிறான் என்பதால், வந்ததும் அவனுக்கு ஆரத்தி எடுக்க வேண்டும் என்பது அப்பா உத்தரவுஅம்மா ஆரத்தித் தட்டோடு ஓடி வந்தாள்.
ரமணி இறங்கினான்!
ஒருமுறை அம்மாவைப் பார்த்துவிட்டு, டாக்ஸியின் பின் கதவைத் திறந்துவிட்டான்.
ஒரு இளம் பெண்ணும், மூன்று வயதுப் பெண் குழந்தையும் காரைவிட்டு இறங்கினார்கள்.
அவள் கலவரத்துடன் ரமணிக்கு சற்று தள்ளி நின்றுகொண்டாள்.
அப்பா கதவருகில் இருந்தார். அப்பா உட்பட, அனைவர் முகமும் மாறியது!
“அம்மா ஆரத்தியோட வந்திருக்காங்க! என் பக்கத்துல வந்து நில்லு இந்திரா!”
அம்மா ஆடிப்போனாள்.
“ரமணி! அவசரப்படாதே! புருஷன் - பொண்டாட்டிதான் ஆரத்திக்கு சேர்ந்து நிக்கணும். யாரோ ஒருத்தர் உன்பக்கத்துல நிக்கக் கூடாது!”
“யாரோ ஒருத்தர் இல்லைம்மா! இந்திரா என் மனைவிதான்!”
“ரமணீ...!”
அம்மா அலறியபடி ஆரத்தித் தட்டை நழுவவிட, அந்த சிகப்பான திரவம் தரையில் பரவி, ரமணியின் காலைத் தொட்டது!
குடும்பத்தில் அத்தனை பேருக்கும் பலத்த அதிர்ச்சி.
“தங்கம்! அவன் உள்ளே வரவேண்டாம்!”
அப்பா கூச்சலிட்டார்.
சசி அவரை நெருங்கினான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 16, 2024
பூமாலை போட வா! - II

Read more from தேவிபாலா

Related to பூமாலை போட வா! - II

Related ebooks

Reviews for பூமாலை போட வா! - II

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பூமாலை போட வா! - II - தேவிபாலா

    1

    அலுவலகம் போயிருந்த ரமணி, சசி இருவரும் அடித்து பிடித்து வீடு வந்து சேர்ந்தார்கள். கதிர் வீட்டில் இல்லை!

    அம்மா அழுது கொண்டே இந்திராவைக் கைது செய்து போலீஸ் அழைத்துப் போனதைச் சொன்னாள்.

    அப்பா பதறினார்!

    மறுபடியும் போலீஸ் வந்தது! அங்குள்ள சாப்பாட்டுப் பொருட்களை பரிசோதனைக்காக ஒரு வண்டியில் ஏற்றியது!

    வண்டி புறப்பட்டுப் போனது!

    ரமணி நிலை குலைந்து போயிருந்தான்.

    அண்ணே! நாம வக்கீலோடதான் போகணும். நான் ஏற்பாடு பண்றேன். வாங்க!

    வைதேகி விசும்பி அழுது கொண்டிருந்தாள்.

    கவலைப்படாதீங்க! ஃபுட் பாய்ஸன் ஆறதெல்லாம் இயல்பு! இதுக்கெல்லாம் தைரியமா இருக்கணும்!

    சசி சொன்னான்!

    முப்பது பேர் சீரியஸா இருக்காங்களாம். அவங்க உயிருக்கு ஆபத்து வரக் கூடாதே சசி?

    வராதுப்பா! பாத்துக்கலாம். வாண்ணே! அப்பா! கதிர் எங்கே போனான்?

    தெரியலைப்பா! வந்ததும் சொல்றோம்!

    இருவரும் பைக்கில் பறந்தார்கள்!

    சசிக்குத் தெரிந்த வக்கீல் ஒருவர் இருந்தார். அவரை செல்போனில் சசி தொடர்பு கொண்டான்.

    அவர் சேம்பருக்கு வரச் சொன்னார்.

    இருவரும் போய்ச் சேர, சசி விவரத்தை முழுவதுமாகச் சொன்னான்.

    சரி! முதல்ல எஃப்.ஐ.ஆர் பாத்துடலாம். அப்புறம் என்ன வேணுமோ செய்யலாம்!

    அந்த மனிதர் வேறு யாருக்கோ போன் செய்தார். தகவல்களைத் திரட்டிக் கொண்டார்.

    என்ன செலவானாலும் தப்பில்லை! அண்ணியை நல்லபடியா வெளில கொண்டு வரணும்!

    செய்யலாம்!

    மூவரும் ஒரு ‘கால் டாக்ஸி’யை வைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு வந்தார்கள்.

    இந்திரா லாக்கப்பில் வைக்கப்பட்டிருந்தாள்.

    ரமணியைப் பார்த்ததும் இந்திரா அழுதுவிட்டாள்.

    அழாதே இந்திரா! திருஷ்டி பட்ட மாதிரி ஆயாச்சு! நாம யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யமாட்டோம். வக்கீல் வந்திருக்கார். ஜாமீன்ல உன்னை வெளில எடுத்துடலாம்!

    ஆஸ்பத்திரில சேர்க்கப்பட்டவங்க எப்படி இருக்காங்க?

    எல்லாருமே கொஞ்சம் சீரியஸாத்தான் இருக்காங்கனு தெரியுது!

    கடவுளே! அவங்கள்ளாம் பிழைக்கணும்! யாருக்கும் எதுவும் ஆகக் கூடாது!

    இந்திரா புலம்பித் தீர்த்தாள்!

    வக்கீல் உயர் அதிகாரியிடம் பேசிவிட்டு வந்தார்.

    நாளை மறுநாள்தான் ஜாமீன்ல எடுக்க முடியும்மா. ரெண்டு நாள் நீங்க லாக்கப்ல இருந்துதான் தீரணும்! வேற வழியே இல்லை!

    இந்திரா தலையாட்டினாள்.

    ரமணியும், சசியும் புறப்பட்டார்கள்.

    என்னங்க! ஆஸ்பத்திரிக்குப் போய்ப்பாருங்க!

    சரி இந்திரா! நாங்க வர்றோம்!

    மாமா, அத்தை ரொம்ப நொந்து போயிருப்பாங்க! அவங்களை பாத்துக்குங்க!

    சரி இந்திரா!

    இருவரும் நேராக ஆஸ்பத்திரிக்குப் புறப்பட்டார்கள்.

    அன்று மாலைக்குள் மெஸ்ஸுக்கு போலீஸ் சீல் வைத்துவிட்டது!

    கதிர் மாலைதான் வந்தான்.

    அழுதபடி அம்மா, வைதேகி விவரத்தைச் சொல்ல, கதிர் நொறுங்கிப் போயிருந்தான்!

    ரமணி, சசி ஆஸ்பத்திரிக்கு வந்துவிட்டார்கள்.

    ஒரே கூட்டமாக இருந்தது!

    முப்பது பேர் உயிருக்குப் போராடும் நிலை... அவர்களது பரிதவிக்கும் குடும்பம் - கதறல் இத்யாதிகள்.

    யாரைக் கேட்பது என்று தெரியவில்லை!

    கேட்டால் பிய்த்துவிடுவார்கள்!

    ஒரு மாதிரி அந்த தீனமான குரல்களைக் கேட்க பரிதாபமாக இருந்தது. சிகிச்சை நடை பெற்றுக் கொண்டிருந்தது!

    இரண்டு பேரும் வெகுநேரம் அங்கே இருந்தார்கள்.

    அண்ணே! இதுல ஒரு சில பேர் பிழைக்கலாம். மத்தவங்களுக்கு ஏதாவது ஆயிட்டா, அந்தக் குடும்பங்களுக்கு நாம நஷ்ட ஈடு தரணுமா?

    முடியுமா சசி?

    தெரியலியே! அண்ணிக்கு தண்டனை குடுப்பாங்களா?

    ரமணி எதற்கும் பதில் சொல்ல முடியாமல் தவித்தான்!

    இரவு பத்து மணிக்கு இருவரும் வீடு திரும்பினார்கள்.

    அதற்குள் விவரம் தெரிந்து வனிதா, கலா இருவரும் வந்துவிட்டார்கள்.

    எப்போது இந்திரா தடுக்கி விழுவாள் என்று இருவரும் காத்திருந்தார்கள்.

    அம்மாவைத் தனியாக அழைத்து வந்தார்கள்.

    பாத்தியா? ஒருத்தி விதவை, அடுத்தவ சமையல்காரி. விளங்குமா குடும்பம்? வேலையைக் காட்டிடுச்சு பாத்தியா?

    என்னடீ பேசறீங்க? நேத்துவரைக்கும் மெஸ் நல்லாத்தானே நடந்தது?

    அந்தக் கதை இப்ப வேண்டாம்மா! மெஸ்ஸை இழுத்துப் பூட்டியாச்சு! இனிமே அதை நடத்த முடியாது. சம்பாத்தியம் நின்னு போச்சா? ஏகப்பட்ட கடனை வாங்கி, வீட்டைக் கட்டத் தொடங்கியாச்சு. எப்படி முடிப்பீங்க? எங்கே பணம்? குடும்ப மானம் வேற கப்பலேறியாச்சு! அவளை நம்பி எல்லாரும் பின்னால ஓடினீங்க! இப்ப வீதில நிறுத்தப் போறா!

    அம்மா மிரண்டு போனாள்.

    இதப்பாரு! ஏதாவது பிரச்னைனா, கழண்டுகிட்டு நீயும் அப்பாவும் எங்ககூட வந்துடுங்க!

    சபாஷ்!

    அப்பா கை தட்டினார். இருவரும் திரும்ப,

    தங்கம், வந்துட்டாளுங்களா ரெண்டு பேரும்? இதப்பாருங்கடி! உங்கம்மா விரும்பினா, யார் வேணும்னாலும் கூட்டிட்டுப் போங்க! நான் வரமாட்டேன்!

    வேண்டாம். வயசான காலத்துல சிரிப்பா சிரிங்க! எங்களுக்கென்ன? அம்மா நீயாவது வர்றியா?

    உங்கப்பாவை விட்டுட்டு நான் எப்படீம்மா வரமுடியும்?

    இதப்பாருடி! உனக்குப் போகணும்னு விருப்பமிருந்தா, நான் தடுக்கலை!

    இரவு முழுக்க யாருமே உறங்கவில்லை!

    காலை நாளிதழில் செய்தி வந்துவிட்டது.

    ‘உணவகத்தில் கலப்படம். சாப்பாட்டில் விஷம். முப்பதுபேர் உயிருக்குப் போராட்டம். இதன் உரிமையாளர் இந்திரா கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.’

    தொடர்ந்து விவரங்கள் போடப்பட்டு, இந்திராவின் புகைப்படமும் அச்சாகியிருந்தது!

    Enjoying the preview?
    Page 1 of 1