Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இளமைக்குப் பெருமை! - 2
இளமைக்குப் பெருமை! - 2
இளமைக்குப் பெருமை! - 2
Ebook99 pages32 minutes

இளமைக்குப் பெருமை! - 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஜோசியர் பஞ்சாபகேசனின் எதிரே சுந்தரேசன் இருந்தார்.
 "நாள் குறிச்சாச்சா?"
 "அதுக்கு முன்னால் கொஞ்சம் பிரச்னைகளை அலசணும்!"
 "என்ன?"
 "பையனுக்கு விபத்து வருமானு ஜாதகத்துல தெரியாதாங்கறது உங்க கேள்வி. என் ஜோசியத்து மேல உங்களுக்கு வந்த அவநம்பிக்கையை நான் போக்கணுமில்லையா? அது என் கடமையும் கூட!"
 "சொல்லுங்க!"
 "ஜோசியர் தண்டபாணியை எனக்கு நல்லா பழக்கமுண்டு. இந்தத் தொழில்ல தண்டபாணி பல விஷயங்களைக் கத்துக்கிட்டதே எங்கிட்டத்தான்!"
 "சரி!"
 "தண்டபாணி சாவுல ஒரு பெரிய பங்கெடுத்து செஞ்ச உங்க பொண்ணு இப்பவும் அவர் வீட்டுக்குப் போய், அவரோட மனைவி - மகளுக்கு பெரிய அளவுல ஆறுதலா இருக்கா."
 "தெரியும்!"
 "மீராவுக்கு அவங்ககூட எத்தனை காலமா பழக்கம் தெரியுமா?"
 "தெரியாது!"
 "இந்த சாவுலதான். தண்டபாணி வீட்டுக்குப்போன மீராவுக்கு அப்பத்தான் அவரோட சாவே தெரிஞ்சிருக்கு. அங்கேதான் அவரோட மனைவி - மகள் அறிமுகம். 'சாவுல பழகின ஒரு பொண்ணு, பெத்த பொண்ணு மாதிரி செய்யறா! எத்தனை நல்ல மனசு! கடவுள்தான் அவளை அனுப்பி வச்சிருக்கார்'னு அந்தம்மா அழறாங்க!""அப்படியா?"
 "என் கேள்விகளை அப்புறம் கேக்கறேன். தண்டபாணி ஆரோக்கியமா இருந்தவர். திடீர்னு ஒரு மாதிரி உடம்பு பாதிக்கப் பட்டிருக்கு! 'கொஞ்ச நாளா ஏதோ மன உளைச்சல்ல இருந்தார். வெளிய சொல்லலை. அதுவே அவர் உயிரைக் குடிச்சிருக்கு'னு அவர் மனைவி சொல்றாங்க!"
 "விடுங்க. இந்தத் தகவல்களெல்லாம் எனக்கெதுக்கு?' தண்டபாணி யார்னே எனக்குத் தெரியாது!"
 "உங்களுக்குத் தெரியணும். உங்ககிட்ட நல்ல ஒரு ஜோசியர் நான் இருக்க, மீரா எதுக்கு தண்டபாணியை சந்திக்கப் போகணும்?"
 "வேறு யாருக்காவது உதவி செய்யப் போயிருப்பா!"
 "நான் கொஞ்சம் உடைச்சே பேசறேன். என் மனசுல உள்ளதைச் சொல்லிர்றேன்!"
 "சொல்லுங்க!"
 "உங்க மகள் விருப்பத்துக்கு இணங்க, தண்டபாணி அதுக்குப் பொருத்தமா ஒரு ஜாதகம் தயாரிச்சு, அதுல வேணு பேரை எழுதியிருப்பார்."
 "எ...என்னது? பொய் ஜாதகமா?"
 "ஆமாம். ஒருவேளை ரெண்டு பேரும் காதலர்களா இருக்கலாம். நீங்க ஜாதகம் காரணமா தவிர்ப்பீங்கனு தெரிஞ்சு, ஜாதகத்தை வச்சே உங்களை மடக்கணும்னு ஏன் உங்க மகள் நெனச்சிருக்கக் கூடாது?"
 "சே...இல்லை!"
 "இருங்க சார்! வேணு ஜாதகத்தை எடுத்துட்டு வந்து, இதுக்கு பொருத்தமா ஒரு பெண் ஜாதகம் வேணும்னு உங்ககிட்ட கேட்டது உங்க மகள்!"
 "ஆமாம்!"பொய் ஜாதகத்தைத் தயாரிச்சு எடுத்துட்டு வந்தாச்சு! எங்கிட்ட தந்தா, மீரா ஜாதகம் பொருந்துதேன்னு நான் சொல்லுவேன். அழகா அப்பாவோட மனசுப்படி கல்யாணம் நடக்குமே! உங்க ஜோசிய நம்பிக்கையை கைல எடுத்துக்கிட்டு அதன் மூலமாவே உங்களை உங்க மகள் முட்டாளாக்கிட்டா!"
 "இதை நான் நம்பலை."
 "நம்பித்தான் ஆகணும்! எல்லாத்தையும் இப்ப அலசுங்க! கண்டிப்பா பதில் கிடைக்கும். பொய் ஜாதகம் தயாரிச்ச காரணமா தண்டபாணிக்கு மன உளைச்சல். அவர் சாக அதுதான் காரணம்னு தெரிஞ்ச காரணமா ஒரு குடும்பம் நம்மால தெருவுக்கு வந்துடுச்சேன்னு உங்க மகளுக்கு உறுத்தல்."
 அப்பா ஆடிப்போனார்.
 "இந்தப் பொய் ஜாதக சங்கதி வேணு குடும்பத்துக்குத் தெரிஞ்சிருக்கு. அதனாலதான் நிஜத் தகவல்களை அவங்கப்பா நீங்க கேட்டும் தரலை! குட்டு உடைஞ்சிடுமில்லையா?"
 சுந்தரேசன் எழுந்துவிட்டார்.
 "இது பொய் ஜாதகம். நிஜமான வேணுவோட ஜாதகத்துல விபத்து உட்பட எல்லாமே தெரிஞ்சிடும்!"
 சுந்தரேசன் முகத்தில் கொந்தளிப்பு!
 "இதை எப்படி நான் தெரிஞ்சுக்கறது?"
 "இதப்பாருங்க! எனக்கு உங்க குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்கணும்னு எந்த ஆசையும் இல்லை. ஆனா என் தொழில் மேல உங்களுக்கு சந்தேகம் வந்தப்ப, நிரூபிக்க வேண்டியது என் கடமை. ஏன், வேணுவோட ஆபீஸ்ல அவரோட பிறந்த தேதியைக் கேட்டாத் தெரியாதா?"
 "அது போதுமா?"
 "நான் ஜாதகம் கணிக்கக் கேக்கலை. உங்ககிட்ட பொய் சொல்லப் பட்டிருக்கானு தெரிஞ்சிடுமே!"
 சுந்தரேசன் தலையாட்டினார்.
 "எல்லாத்தையும் தெளிவா தெரிஞ்சுகிட்டு வாங்க. அப்புறமா பேசலாம்."சுந்தரேசன் வேகமாக வெளியே வந்தார்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 8, 2023
ISBN9798223867487
இளமைக்குப் பெருமை! - 2

Read more from Devibala

Related to இளமைக்குப் பெருமை! - 2

Related ebooks

Related categories

Reviews for இளமைக்குப் பெருமை! - 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இளமைக்குப் பெருமை! - 2 - Devibala

    1

    "உங்க கைல இருக்கறது அந்தப் பையனோட நிஜமான ஜாதகமே இல்லை"

    சுந்தரேசன் ஆடிப்போனார்.

    அப்படி சொல்லாதீங்க! ஒரு பொய்யைச் சொல்லிக் கல்யாணம் நடத்தற அளவுக்கு அந்தக் குடும்பம் கேவலமான குடும்பம் இல்லை. நீங்க எனக்குக் குடும்ப ஜோசியர்தான். அதுக்காக நல்லதொரு குடும்பத்தை இந்த மாதிரி கேவலமா விமர்சனம் பண்றது தப்பு!

    சுந்தரேசனின் வார்த்தைகள் தீயாக வெளிப்பட்டன.

    என் மனசுல பட்டதைச் சொல்லிட்டேன். அப்புறமா உங்க விருப்பம்!

    இன்னொரு முகூர்த்தத் தேதி?

    நான் குறிச்சு வைக்கறேன். நாளைக்கு வந்து வாங்கிக்குங்க!

    சுந்தரேசன் வெளியே வந்தார்.

    ‘உங்க கைல இருக்கிறது அந்தப் பையனோட நிஜமான ஜாதகமே இல்லே!’

    ‘நீங்க தகவல் கேட்டப்ப, பையனோட அப்பா தரலை! ஏன்?’

    சுந்தரேசன் நிமிர்ந்தார்.

    ‘நீங்க கேட்டும் தரலைனா, ஏதோ ஒரு விவகாரம் இருக்கு!’

    ஜோசியரின் வார்த்தைகள் சுந்தரேசன் காதில் திரும்பத் திரும்ப ஒலித்தது!

    அதில் ஒரு நியாயம் இருந்தது!

    பதில் சொல்ல முடியாத கேள்விகள்.

    ‘சரி! எதுக்காக பொய் ஜாதகம் தயாரிக்கணும்?’

    ‘மருமக வேணும்னு வரன் பாக்க, ஜாதகம் தர, மீரா பொருத்தமான பெண்ணைப் புடிச்சுக் குடுங்கனுதானே கேட்டா. அவளே பொருத்தம்னு ஜோசியர்தானே சொன்னார்?’

    ‘எதுவுமே இதுல பலவந்தமா நடக்கலியே?’

    ‘எல்லாம் இயல்பாத்தானே நடந்திருக்கு? அப்புறம் எங்கே பிரச்னை?’

    சுந்தரேசனுக்கு மண்டை குழம்பியது.

    வீட்டுக்கு வந்தார். நேரம் மாலை ஏழுமணி!

    மீரா வந்துட்டாளா?

    இல்லீங்க!

    ஆஸ்பத்திரி - தெரிஞ்சவங்க வீட்ல சாவுனு மீரா பிஸியா இருக்கா! கல்யாணம் தீர்மானிக்கப்பட்ட பிறகு இப்படி ஒரு பொண்ணு ஊரை சுற்றக் கூடாது! வந்ததும் சொல்லி வைக்கணும்!

    சரி! ஜோசியர் புதுத் தேதியைக் குறிச்சுத் தந்தாரா?

    நாளைக்குத் தருவார். அவர் புது வெடிகுண்டைத் தூக்கிப் போடறார் மீனு!

    என்ன?

    என் கைல இருக்கறது வேணுவோட நிஜமான ஜாதகமே இல்லேன்னு சந்தேகப்படறார்!

    மீனாட்சிக்கு அதிர்ச்சி!

    ‘உண்மை வெளில வந்துடுமா? கடவுளே! என்னல்லாம் விபரிதங்கள் வரப்போகுதோ?’

    ஜோசியரை நான் கண்டிச்சேன். ஆனாலும், உள்ளுக்குள்ளே எனக்கே ஒரு உறுத்தல் இருக்கு. பிறந்த தேதி, தகவல்களை வெச்சு புதுசா ஜாதகம் எழுதிப்பார்க்கலாம்னா, வேணுவோட அப்பா கோவப்படறாரே?

    மீனாட்சிக்கு பேச நாக்கே எழவில்லை!

    ‘துப்பறியத் தொடங்கிட்டாரா? உண்மை வெளிய வந்துடுமா?’

    தொலைபேசி அழைத்தது.

    சுந்தரேசன் போய் எடுத்தார்.

    நான் ஜோசியர் பஞ்சாபகேசன் பேசறேன்!

    சொல்லுங்க?

    சமீபத்துல காலமான ஜோசியர் தண்டபாணி குடும்பத்தோட உங்க மகள் மீரா ரொம்ப நெருக்கமா? எத்தனை வருஷப் பழக்கம்?

    தெரியலையே!

    இதுக்கு பதில் தெரிஞ்சா பல உண்மைகள் வெளிவரும் சார்!

    தண்டபாணி உங்க வர்க்கம். நீங்களே கேட்டுக் சொல்லுங்களேன்!

    சரி! சொல்றேன்!

    ரிசீவரை வைத்தார். சுந்தரேசன் அவசரமாக பல கணக்குகளை போடத் தொடங்கிவிட்டார்.

    அதே நேரம் மீரா, வேணுவின் அருகில் ஆஸ்பத்திரியில் இருந்தாள்.

    தண்டபாணியின் மரணம் பற்றிய விவரங்களை மீரா சொன்னாள்.

    வேணு கேட்டுக் கொண்டிருந்தான்.

    சல்லிக்காசு சேர்த்து வைக்கலை! வாடகை வீடு! கல்யாண வயசுல மகள் கௌசல்யா! நாளைய விடியல் என்னான்னு அந்தம்மாவுக்குத் தெரியலை. குடும்பம் உருக்குலைஞ்சு நிக்குது!

    பாவம்தான்!

    நோயே வராதவர், மாரடைப்புல செத்திருக்கார்!

    அப்படியா?

    மாரடைப்பு வரக்காரணம், மன உளைச்சல். தப்பு செஞ்சிட்டேன்னு கொஞ்ச நாளா புலம்பினாராம். ஆனா என்னதப்புன்னு சொல்லலை!

    அப்பாடா!

    என்ன வேணு நீங்க? நம்மை அவர் மாட்டிவிடலை! ஆனா ஒரு பொய் காரணமா, அவர் பலியாகியிருக்கார். பொய்க்குக் காரணம் நாம்தானே? அந்தப் பொய்தானே அவர் குடும்பத்தைத் தெருவுல நிறுத்தியிருக்கு. ஒரு வகைல தண்டபாணி மரணத்துக்கு நாமதான் தார்மீகப் பொறுப்பை எடுத்துக்கணும்!

    மீரா பேசப்பேச வேணுவுக்கு கலவரமாக இருந்தது. அவளை பீதியுடன் பார்த்தான்.

    இப்ப நீ என்னதான் சொல்ற?

    அந்தக் குடும்பத்துக்கு ஏதாவது உதவி செஞ்சாகணும் வேணு.

    என்ன உதவி?

    புரியலை. அந்தப் பொண்ணு என்ன படிச்சிருக்கானு தெரியலை! பெரிசா படிக்கலைனு அம்மா சொன்னாங்க! ஒரு வேலை வாங்கித் தரணும் வேணு!

    மீரா...என்னைக் கொஞ்சம் பேச விட்றியா?

    சொல்லுங்க!

    ஜோசியர்கிட்ட பொய் ஜாதகம் குறிச்சுத்தர நாம கேட்டது நிஜம். ஆனா கட்டாயப்படுத்தலை. ஒரு காதலை வாழ வைக்க அவர் ஒத்துழைச்சார். மாட்டேன்னு அவர் சொல்லியிருந்தா, நாம வேற எடம் பார்த்திருப்போம். அவரை பலவந்தப்படுத்தி நாம ஜாதகம் வாங்கலை! அதனாலே அவரோட மரணத்துக்கு நாம பொறுப்பை ஏத்துக்க முடியாது!

    என்ன வேணு இப்படி பேசறீங்க?

    பேசாம? இதப்பாரு! அவர் பணம் சேர்த்து வைக்கலைன்னா அது நம்ம தப்பா? அவர் குடும்பம் தெருவுல நிக்க நீ காரணமில்லை மீரா!

    வேணு!

    "வேண்டாத வேலைகளை தயவு செஞ்சு இழுத்துப் போட்டுக்காதே! சொல்லிட்டேன். அது மட்டுமில்லை.

    Enjoying the preview?
    Page 1 of 1