Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

புதிய அரசாங்கம்!
புதிய அரசாங்கம்!
புதிய அரசாங்கம்!
Ebook104 pages55 minutes

புதிய அரசாங்கம்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அந்த ஓட்டல் வாசலில் காத்திருந்தாள் அருந்ததி.
 மாலை நாலு மணி சுமாருக்கு சுந்தரிடமிருந்து டெலிபோன் வந்தது. பதினைந்து நாட்களுக்குப் பிறகு வந்த அழைப்பு.
 அருந்ததி ஒரு மாதிரி எரிச்சலில் இருந்தாள்.
 "இவனை நான் காதலித்ததே தப்போ?"
 "ஒரு அரசியல்வாதியின் மகன்!"
 "காதல் நிறைவேறுமா என்று தெரியாது. தேர்தல் கால வாக்குறுதி போல ஆகிவிட்டால்?"
 அருந்ததி வேலை பார்க்கும் கம்பெனியில் பிஸினஸ் ரீதியாக சுந்தருக்கு தொடர்புண்டு. மூன்று வருட காலமாக அவனைத் தொடர்ந்து அருந்ததி வர்த்தக ரீதியாக சந்திக்கிறாள்.
 அடிக்கடி பேசி, பழகி கடந்த ஏழெட்டு மாதங்களாகத்தான் இருவரும் காதலிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
 வீட்டுக்கு தகவல் தெரியாது.
 சமீபமாக வளர்ந்து வரும் அந்தப் பெரிய கட்சியின் ஒரு முக்கிய உறுப்பினர் சுந்தரின் அப்பா.
 திடீரென தேர்தல் அறிவிக்கப்பட்டு விட, சுந்தரின் அப்பா பொன்னம்பலம் பயங்கர பிஸியாகி விட்டார்.
 சுந்தருக்கும் அப்பாவிடம் தன் காதலைப் பற்றி சொல்ல முடியவில்லை. நேரமில்லை.
 "நீங்களும், உங்கப்பா மாதிரி அரசியல்ல குதிக்கப் போறீங்களா சுந்தர்?"
 "இதுவரைக்கும் அந்த அபிப்ராயம் இல்லை. எங்கண்ணன்தான் அப்பாவோட அரசியல் வாரிசு!"
 "நீங்க அரசியல்ல இறங்கறதா இருந்தா, நம்ம காதலுக்கு சமாதி கட்டிரலாம்!"ஏன் அருந்ததி?"
 "வேண்டாம். அரசியல் வாழ்க்கைல நிம்மதி தொலைஞ்சு போகும். எனக்குப் பிடிக்கலை."
 "கவலைப்படாதே! எனக்கும் அதுல ஆர்வமில்லை. அப்பா சம்பந்தப்பட்ட கட்சியே புதுசு. எந்த அளவுக்குத் தேறும்னு பார்க்கலாம்!"
 திடீர் தேர்தல் அறிவிக்கப்பட்டு,
 கூட்டணிகள் நிராகரிக்கப்பட, பொன்னம்பலம் சார்ந்த கட்சி தனியாகவே தேர்தலில் நிற்கும் நிலை.
 அதனால் இடைவிடாத பிரசாரம்...
 மக்கள், பழைய ஆட்சிகளால் அலுத்துப் போய் ஒரு மாற்று அரசாங்கத்தை எதிர்நோக்கியிருந்த நேரம்...
 நூற்று அறுபது இடங்களைப் பிடித்து விட்டது அந்தக் கட்சி. பொன்னம்பலம் பல ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் ஆளுங்கட்சி பிரமுகரைத் தோற்கடித்திருந்தார்.
 எங்கும் பரபரப்பு...
 அடுத்த வாரம் புதிய அரசாங்கம் அமைய வேண்டும்.
 பொன்னம்பலத்துக்கு நிதி அமைச்சர் பதவி கிடைக்கக்கூடும் எனத் தெரிந்தது. இந்த நிலையில் எல்லா பரபரப்பும் முடிந்து சுந்தர் அருந்ததியை சந்திக்க நேரம் குறித்திருந்தான்.
 சுந்தர் பைக்கில் வந்து இறங்கினான்.
 "ஸாரி! ரொம்ப நேரமாக் காத்திருக்கியா? வா!"
 இருவரும் ஏஸி ரெஸ்ட்டாரெண்டுக்குள் நுழைந்தார்கள். லேசாகக் கூட்டம் இருந்தது.
 உட்கார்ந்தார்கள்.
 "ஸாரிமா! தேர்தல் பரபரப்பு இருந்த காரணமா வெளிய வர முடியலை!"
 "ஓ... நீங்களும் பிரசாரத்துக்கு போனீங்களாக்கும்?இல்லை! எனக்குத்தான் ஈடுபாடு இல்லைனு நான் முன்னமே சொல்லியிருக்கேனே!"
 "இனி உங்களைப் பிடிக்க முடியாது. நிதியமைச்சர் மகன்... பத்திரிகைல செய்தி வரும்! உங்ககிட்ட சிபாரிசு தேடி தினசரி நூற்றுக்கணக்கா வருவாங்க!"
 சிரித்தான் சுந்தர்.
 பேரர் வர, ஸ்வீட் ஆர்டர் செய்தான்.
 "எதுக்கு? அப்பா அமைச்சர் ஆனதுக்கா?"
 "ம்! அதுவும் சந்தோஷம்தானே?"
 "இல்லை சுந்தர்! எனக்கு அரசியல் பிடிக்கலை. அமைதி குலைஞ்சு போகும். நம்ம காதல் இனி தொடர வேண்டாம்னு நான் நினைக்கறேன்!"
 "அருந்ததி! நீ என்ன உளர்ற?"
 "உளறலை! உண்மை பேசறேன். கடந்த கால அரசியல் கதைகளை நான் நிறைய படிச்சிருக்கேன். பணம் சம்பாதிக்கணும், பதவில இருக்கும்போது. அதுக்காக அக்ரமத்தோட எந்த எல்லைக்கும் போகலாம்... இதுதானே அரசியல் பால பாடம்."

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateOct 18, 2023
ISBN9798223459699
புதிய அரசாங்கம்!

Read more from Devibala

Related to புதிய அரசாங்கம்!

Related ebooks

Reviews for புதிய அரசாங்கம்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    புதிய அரசாங்கம்! - Devibala

    1

    அந்த ஓட்டல் வாசலில் காத்திருந்தாள் அருந்ததி.

    மாலை நாலு மணி சுமாருக்கு சுந்தரிடமிருந்து டெலிபோன் வந்தது. பதினைந்து நாட்களுக்குப் பிறகு வந்த அழைப்பு.

    அருந்ததி ஒரு மாதிரி எரிச்சலில் இருந்தாள்.

    இவனை நான் காதலித்ததே தப்போ?

    ஒரு அரசியல்வாதியின் மகன்!

    காதல் நிறைவேறுமா என்று தெரியாது. தேர்தல் கால வாக்குறுதி போல ஆகிவிட்டால்?

    அருந்ததி வேலை பார்க்கும் கம்பெனியில் பிஸினஸ் ரீதியாக சுந்தருக்கு தொடர்புண்டு. மூன்று வருட காலமாக அவனைத் தொடர்ந்து அருந்ததி வர்த்தக ரீதியாக சந்திக்கிறாள்.

    அடிக்கடி பேசி, பழகி கடந்த ஏழெட்டு மாதங்களாகத்தான் இருவரும் காதலிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

    வீட்டுக்கு தகவல் தெரியாது.

    சமீபமாக வளர்ந்து வரும் அந்தப் பெரிய கட்சியின் ஒரு முக்கிய உறுப்பினர் சுந்தரின் அப்பா.

    திடீரென தேர்தல் அறிவிக்கப்பட்டு விட, சுந்தரின் அப்பா பொன்னம்பலம் பயங்கர பிஸியாகி விட்டார்.

    சுந்தருக்கும் அப்பாவிடம் தன் காதலைப் பற்றி சொல்ல முடியவில்லை. நேரமில்லை.

    நீங்களும், உங்கப்பா மாதிரி அரசியல்ல குதிக்கப் போறீங்களா சுந்தர்?

    இதுவரைக்கும் அந்த அபிப்ராயம் இல்லை. எங்கண்ணன்தான் அப்பாவோட அரசியல் வாரிசு!

    நீங்க அரசியல்ல இறங்கறதா இருந்தா, நம்ம காதலுக்கு சமாதி கட்டிரலாம்!

    ஏன் அருந்ததி?

    வேண்டாம். அரசியல் வாழ்க்கைல நிம்மதி தொலைஞ்சு போகும். எனக்குப் பிடிக்கலை.

    கவலைப்படாதே! எனக்கும் அதுல ஆர்வமில்லை. அப்பா சம்பந்தப்பட்ட கட்சியே புதுசு. எந்த அளவுக்குத் தேறும்னு பார்க்கலாம்!

    திடீர் தேர்தல் அறிவிக்கப்பட்டு,

    கூட்டணிகள் நிராகரிக்கப்பட, பொன்னம்பலம் சார்ந்த கட்சி தனியாகவே தேர்தலில் நிற்கும் நிலை.

    அதனால் இடைவிடாத பிரசாரம்...

    மக்கள், பழைய ஆட்சிகளால் அலுத்துப் போய் ஒரு மாற்று அரசாங்கத்தை எதிர்நோக்கியிருந்த நேரம்...

    நூற்று அறுபது இடங்களைப் பிடித்து விட்டது அந்தக் கட்சி. பொன்னம்பலம் பல ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் ஆளுங்கட்சி பிரமுகரைத் தோற்கடித்திருந்தார்.

    எங்கும் பரபரப்பு...

    அடுத்த வாரம் புதிய அரசாங்கம் அமைய வேண்டும்.

    பொன்னம்பலத்துக்கு நிதி அமைச்சர் பதவி கிடைக்கக்கூடும் எனத் தெரிந்தது. இந்த நிலையில் எல்லா பரபரப்பும் முடிந்து சுந்தர் அருந்ததியை சந்திக்க நேரம் குறித்திருந்தான்.

    சுந்தர் பைக்கில் வந்து இறங்கினான்.

    ஸாரி! ரொம்ப நேரமாக் காத்திருக்கியா? வா!

    இருவரும் ஏஸி ரெஸ்ட்டாரெண்டுக்குள் நுழைந்தார்கள். லேசாகக் கூட்டம் இருந்தது.

    உட்கார்ந்தார்கள்.

    ஸாரிமா! தேர்தல் பரபரப்பு இருந்த காரணமா வெளிய வர முடியலை!

    ஓ... நீங்களும் பிரசாரத்துக்கு போனீங்களாக்கும்?

    இல்லை! எனக்குத்தான் ஈடுபாடு இல்லைனு நான் முன்னமே சொல்லியிருக்கேனே!

    இனி உங்களைப் பிடிக்க முடியாது. நிதியமைச்சர் மகன்... பத்திரிகைல செய்தி வரும்! உங்ககிட்ட சிபாரிசு தேடி தினசரி நூற்றுக்கணக்கா வருவாங்க!

    சிரித்தான் சுந்தர்.

    பேரர் வர, ஸ்வீட் ஆர்டர் செய்தான்.

    எதுக்கு? அப்பா அமைச்சர் ஆனதுக்கா?

    ம்! அதுவும் சந்தோஷம்தானே?

    இல்லை சுந்தர்! எனக்கு அரசியல் பிடிக்கலை. அமைதி குலைஞ்சு போகும். நம்ம காதல் இனி தொடர வேண்டாம்னு நான் நினைக்கறேன்!

    அருந்ததி! நீ என்ன உளர்ற?

    உளறலை! உண்மை பேசறேன். கடந்த கால அரசியல் கதைகளை நான் நிறைய படிச்சிருக்கேன். பணம் சம்பாதிக்கணும், பதவில இருக்கும்போது. அதுக்காக அக்ரமத்தோட எந்த எல்லைக்கும் போகலாம்... இதுதானே அரசியல் பால பாடம்.

    இப்ப ஆள வந்திருக்கறது புதிய கட்சி அருந்ததி!

    எதுவானா என்ன சுந்தர். அரசியல் சாக்கடைதான். அதை சுத்தப்படுத்த யாருக்குமே இங்கே திறமை இல்லை சரி விடு! நான் அரசியல்ல இல்லையே!

    ஆனா மந்திரி மகன்தானே! ஊழலோட வேர்களே வாரிசுகள்தானே?

    ஸ்டாப் இட் அருந்ததி. எதையும் உணராம கண்மூடித்தனமாப் பேசாதே! நாம காதலிக்கறம். கல்யாணம் செஞ்சுக்கப் போறம். நம்ம கால்ல நிப்பம். போதாதா?

    சுந்தர்!

    அப்பா பணத்தையோ, அரசாங்க சலுகைகளையோ நான் அனுமதிக்கப் போறதில்லை. நம்பறதும், நம்பாததும் உன் இஷ்டம்!

    ........

    உங்க ஆபீஸில் சாதாரண பியூன் கூட கமிஷன்வாங்குறான். அதிகாரி லஞ்சம் வாங்கறார். அராஜகம் நடக்குதுன்னு வேலையை ராஜினாமா பண்ணிட்டு வாயேன், ஏன் செய்யலை?

    சுந்தர்?

    எங்கேதான் ஊழல் இல்லை. விட்டுத்தள்ளு! நம்ம வாழ்க்கையை நாம வாழப் போறம். இந்த வாரத்துல எங்கப்பாகிட்ட விவரத்தைச் சொல்றேன். நீயும் உங்க வீட்ல சொல்லிடு! பெரியவங்க முறைப்படி பேசி முடிவெடுக்கட்டும்!

    சரி சுந்தர்!

    போகும் அவளைக் கவலையுடன் பார்த்துக் கொண்டு நின்றான் சுந்தர்.

    2

    அடுத்த நாளே தன் அப்பாவிடம் பிரச்னையை சொல்லி விட்டாள் அருந்ததி.

    அப்பா நான் ஒருத்தரை எட்டு மாசமா காதலிக்கிறேன்!

    அப்பா புருவம் சுருக்கினார்.

    அம்மா குறுக்கிட்டு, நம்ம ஜாதிதானேடீ?

    ஆமாம்மா!

    பையன் யாரும்மா? என்ன செய்யறான்?

    பிஸினஸ் பண்றார். நல்ல வருமானம். எம்.காம். படிச்சிருக்கார்பா!

    குடும்பம்?

    மந்திரி பொன்னம்பலத்தோட ரெண்டாவது பிள்ளை!

    என்னது? அப்பா தடாலென எழுந்தே விட்டார்.

    "நீங்க பயப்பட வேண்டாம்பா. நாங்க காதலிக்கத் தொடங்கும்போது, அது ஒரு சாதாரண கட்சியாத்தான் இருந்தது. இப்ப ஜெயிச்சு ஆட்சி அமைச்சிருக்கு.

    Enjoying the preview?
    Page 1 of 1