Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இது ஆரம்பம்தான்!
இது ஆரம்பம்தான்!
இது ஆரம்பம்தான்!
Ebook124 pages37 minutes

இது ஆரம்பம்தான்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தாமு எங்களிடம் எப்படி பழகினார் என்பதெல்லாம் எனக்கு சரியாக நினைவில்லை! இந்த ஊருக்கு நான் மாற்றலாகி வந்த புதிதில் முதலில் எங்களை வரவேற்றவர் தாமுதான்!
 நான் ஏன் மாற்றலாகி வந்தேன் என்ற கதையை சுருக்கமாக முதலில் உங்களுக்குச் சொல்ல வேண்டும்.
 இருந்த இடம் கோவை.
 அருகில் நீலகிரி இருந்ததால் அதன் கனமான குளிர் அம்மாவுக்குச் சேரவில்லை. தவிர, பருத்திப் பஞ்சின் தூசி வேறு!
 அம்மாவுக்குச் சுத்தமாக கோயம்புத்தூர் க்ளைமேட் சேரவில்லை! ஆஸ்த்மா அதிகமாகி தினசரி டாக்டர் வரவு என்றாகிவிட பிரச்சினை அதிகமானது!
 அண்ணனுக்கு தனியாரில் உத்யோகம்.
 அதன் கிளை கோவையை விட்டால் பம்பாய்தான். அவனால் தென்னகத்தில் வேறு எங்கும் வர முடியாது. மேலும் அண்ணியின் பிறந்த வீட்டார் முழுவதும் கோவையில்தான். அண்ணனுக்கு அந்த ஆதரவு அதிகம். அண்ணி நகர மாட்டாள்.
 மேலும் அண்ணியின் முரட்டுத்தனம் + ராஜ தர்பாரை அம்மாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இது முதல் காரணம்.
 எனக்கு இருபத்தெட்டு வயதாகியும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை! அதை நடத்த வேண்டும் என்ற முயற்சி அண்ணனிடம் அறவே இல்லை. பண அதிகாரம் அண்ணியிடம். அவன் என்ன செய்வான் பாவம்!
 அடிக்கடி அம்மாவுக்கும் அண்ணிக்கும் உரசல்.
 சரி! நான் பார்த்தேன்யாரையும் கேட்காமல் மாற்றலுக்கு விண்ணப்பித்துவிட்டேன். ஒரே மாதத்தில் சென்னைக்கு மாற்றல் கிடைத்து விட்டது.
 அண்ணிக்கு திகீர் என்றாகி விட்டது.
 என் சம்பளம் கணிசமாக வீட்டுக்கு உபயோகமாகிக் கொண்டிருந்தது.
 அது இனி வராதல்லவா?
 "எதுக்குடி ரோகிணி மாற்றல் இப்ப?"
 "நான்தான் அண்ணி அப்ளை பண்ணினேன்!"
 "அதான் ஏன்னு கேக்கறேன்?"
 "அம்மாவுக்கு அடிக்கடி உடம்புக்குப் பிரச்னை! மருந்துச் செலவு தாங்கலை! அதான் மாற்றம் இருக்கட்டுமேனு!"
 அண்ணி பேசவில்லை.
 அக்கம்பக்கத்தில் விவரமறிந்து என்னை வேறுவிதமாக எச்சரித்தார்கள்.
 "ஏற்கனவே உங்கண்ணனுக்கு பொறுப்பு இல்லை! நீ விலகியும்போனா, சுத்தமா விட்டுப் போகும்!"
 "சரி! நாளைக்கு ஒரு கல்யாணம், காட்சினு ஆயிட்டா, உங்கம்மாவையும் நீ கூட்டிட்டா போக முடியும் உன்னோட! அப்ப உங்கம்மா இதே கோயம்புத்தூருக்கு வந்து தானே ஆகணும்! உங்கண்ணி சும்மா இருப்பாளா?"
 எனக்கு 'பக்'கென்றது.
 'நான் அவசரப்பட்டு விட்டேனோ?'
 'அட! எனக்கு இந்த ஜென்மத்தில் கல்யாணம் நடக்கும் என்று தோன்றவில்லை!'
 'நானேதான் நடத்திக் கொள்ள வேண்டும்!'
 'அது சுலபமில்லை!'
 'நடக்கும்போது பார்க்கலாம்!என் லேட்டஸ்ட் கவலை கல்யாணம் அல்ல! சென்னையில் எங்களுக்கு யாரையும் தெரியாது.'
 'எங்கே தங்குவது?'
 ஆபீசில் கேட்டே விட்டேன்!
 என் ஆபீஸ் மானேஜர் ராமமூர்த்திதான் எனக்கு உதவி செய்ய முன்வந்தார்.
 "நீ கவலைப்படாதே ரோகிணி! அங்கே என் ஸ்நேகிதர் கோபால் இருக்கார். அவர்கிட்ட நான் போன்ல பேசறேன். உன் கையில லெட்டரும் தர்றேன். உனக்கு வேண்டிய ஏற்பாடுகளை அவர் செய்வார்! நீ தைரியமா இரு!'"
 நான் அம்மாவுடன் புறப்பட்டு விட்டேன்.
 கையில் சொல்லும்படியாக பொருட்கள் எதுவும் இல்லை.
 ரெண்டு துணிப் பெட்டி, கொஞ்சம் தட்டுமுட்டு சாமான்கள். நாளை ஒரு குடும்பம் நடத்த வேண்டுமானால் சகலமும் வாங்க வேண்டும்!
 'என் ஒரு சம்பளத்தில் சாத்தியமா?'
 அம்மா கேட்டே விட்டாள்!
 "எனக்காக நீ உங்கண்ணனை விட்டு நிக்கறது சரியா ரோகிணி?"
 "விடும்மா! குளத்துல குதிச்சாச்சு! நீச்சல் தெரியாதுனு பயப்பட முடியுமா? பாத்துக்கலாம் வா!"
 நாங்கள் புறப்பட்டு விட்டோம்.
 எனக்கும் அடிமனதில் மெலிதாக ஒரு கலக்கம் இருக்கத்தான் செய்தது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateOct 18, 2023
ISBN9798223235972
இது ஆரம்பம்தான்!

Read more from Devibala

Related to இது ஆரம்பம்தான்!

Related ebooks

Reviews for இது ஆரம்பம்தான்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இது ஆரம்பம்தான்! - Devibala

    1

    தாமு எங்களிடம் எப்படி பழகினார் என்பதெல்லாம் எனக்கு சரியாக நினைவில்லை! இந்த ஊருக்கு நான் மாற்றலாகி வந்த புதிதில் முதலில் எங்களை வரவேற்றவர் தாமுதான்!

    நான் ஏன் மாற்றலாகி வந்தேன் என்ற கதையை சுருக்கமாக முதலில் உங்களுக்குச் சொல்ல வேண்டும்.

    இருந்த இடம் கோவை.

    அருகில் நீலகிரி இருந்ததால் அதன் கனமான குளிர் அம்மாவுக்குச் சேரவில்லை. தவிர, பருத்திப் பஞ்சின் தூசி வேறு!

    அம்மாவுக்குச் சுத்தமாக கோயம்புத்தூர் க்ளைமேட் சேரவில்லை! ஆஸ்த்மா அதிகமாகி தினசரி டாக்டர் வரவு என்றாகிவிட பிரச்சினை அதிகமானது!

    அண்ணனுக்கு தனியாரில் உத்யோகம்.

    அதன் கிளை கோவையை விட்டால் பம்பாய்தான். அவனால் தென்னகத்தில் வேறு எங்கும் வர முடியாது. மேலும் அண்ணியின் பிறந்த வீட்டார் முழுவதும் கோவையில்தான். அண்ணனுக்கு அந்த ஆதரவு அதிகம். அண்ணி நகர மாட்டாள்.

    மேலும் அண்ணியின் முரட்டுத்தனம் + ராஜ தர்பாரை அம்மாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இது முதல் காரணம்.

    எனக்கு இருபத்தெட்டு வயதாகியும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை! அதை நடத்த வேண்டும் என்ற முயற்சி அண்ணனிடம் அறவே இல்லை. பண அதிகாரம் அண்ணியிடம். அவன் என்ன செய்வான் பாவம்!

    அடிக்கடி அம்மாவுக்கும் அண்ணிக்கும் உரசல்.

    சரி! நான் பார்த்தேன்.

    யாரையும் கேட்காமல் மாற்றலுக்கு விண்ணப்பித்துவிட்டேன். ஒரே மாதத்தில் சென்னைக்கு மாற்றல் கிடைத்து விட்டது.

    அண்ணிக்கு திகீர் என்றாகி விட்டது.

    என் சம்பளம் கணிசமாக வீட்டுக்கு உபயோகமாகிக் கொண்டிருந்தது.

    அது இனி வராதல்லவா?

    எதுக்குடி ரோகிணி மாற்றல் இப்ப?

    நான்தான் அண்ணி அப்ளை பண்ணினேன்!

    அதான் ஏன்னு கேக்கறேன்?

    அம்மாவுக்கு அடிக்கடி உடம்புக்குப் பிரச்னை! மருந்துச் செலவு தாங்கலை! அதான் மாற்றம் இருக்கட்டுமேனு!

    அண்ணி பேசவில்லை.

    அக்கம்பக்கத்தில் விவரமறிந்து என்னை வேறுவிதமாக எச்சரித்தார்கள்.

    ஏற்கனவே உங்கண்ணனுக்கு பொறுப்பு இல்லை! நீ விலகியும்போனா, சுத்தமா விட்டுப் போகும்!

    சரி! நாளைக்கு ஒரு கல்யாணம், காட்சினு ஆயிட்டா, உங்கம்மாவையும் நீ கூட்டிட்டா போக முடியும் உன்னோட! அப்ப உங்கம்மா இதே கோயம்புத்தூருக்கு வந்து தானே ஆகணும்! உங்கண்ணி சும்மா இருப்பாளா?

    எனக்கு ‘பக்’கென்றது.

    ‘நான் அவசரப்பட்டு விட்டேனோ?’

    ‘அட! எனக்கு இந்த ஜென்மத்தில் கல்யாணம் நடக்கும் என்று தோன்றவில்லை!’

    ‘நானேதான் நடத்திக் கொள்ள வேண்டும்!’

    ‘அது சுலபமில்லை!’

    ‘நடக்கும்போது பார்க்கலாம்!’

    ‘என் லேட்டஸ்ட் கவலை கல்யாணம் அல்ல! சென்னையில் எங்களுக்கு யாரையும் தெரியாது.’

    ‘எங்கே தங்குவது?’

    ஆபீசில் கேட்டே விட்டேன்!

    என் ஆபீஸ் மானேஜர் ராமமூர்த்திதான் எனக்கு உதவி செய்ய முன்வந்தார்.

    நீ கவலைப்படாதே ரோகிணி! அங்கே என் ஸ்நேகிதர் கோபால் இருக்கார். அவர்கிட்ட நான் போன்ல பேசறேன். உன் கையில லெட்டரும் தர்றேன். உனக்கு வேண்டிய ஏற்பாடுகளை அவர் செய்வார்! நீ தைரியமா இரு!’

    நான் அம்மாவுடன் புறப்பட்டு விட்டேன்.

    கையில் சொல்லும்படியாக பொருட்கள் எதுவும் இல்லை.

    ரெண்டு துணிப் பெட்டி, கொஞ்சம் தட்டுமுட்டு சாமான்கள். நாளை ஒரு குடும்பம் நடத்த வேண்டுமானால் சகலமும் வாங்க வேண்டும்!

    ‘என் ஒரு சம்பளத்தில் சாத்தியமா?’

    அம்மா கேட்டே விட்டாள்!

    எனக்காக நீ உங்கண்ணனை விட்டு நிக்கறது சரியா ரோகிணி?

    விடும்மா! குளத்துல குதிச்சாச்சு! நீச்சல் தெரியாதுனு பயப்பட முடியுமா? பாத்துக்கலாம் வா!

    நாங்கள் புறப்பட்டு விட்டோம்.

    எனக்கும் அடிமனதில் மெலிதாக ஒரு கலக்கம் இருக்கத்தான் செய்தது.

    சென்னை சென்ட்ரலில் இறங்கியபோது முதலில் எங்களை வரவேற்றவர் தாமுதான்.

    நாங்கள் முழித்த முழியில் ஊருக்குப் புதிது என்று தாமு கண்டுபிடித்திருக்க வேண்டும்.

    ரோகிணியா?

    ஆமாம்! நீங்கதான் மிஸ்டர் கோபாலா?

    இல்லைமா கோபாலோட நண்பன் நான். கோபால் தற்சமயம் ஊர்ல இல்லை! ஆபீஸ் வேலையா அவசரமா டெல்லி போயிருக்கார். நேத்துதான் புறப்பட்டுப் போனார். திரும்பி வர பதினஞ்சு நாள் ஆகும். நீங்க வர்ற விவரத்தை என்கிட்ட சொல்லி, உங்களுக்கு உதவச் சொன்னார். என் பேரு தாமோதரன். தாமுன்னு கூப்பிடுவாங்க! போலாமா?

    அவருடன் நானும் அம்மாவும் நடந்தோம்.

    நங்கநல்லூரில் தில்லை கங்கா நகரில் இருந்தது கோபாலன் வீடு! மின்சார ரயிலில் எங்களை அழைத்துப் போனார் தாமு. பழவந்தாங்கலில் இறங்கி ஆட்டோ பிடித்தார்.

    கோபால் வீட்டையே தாமுதான் திறந்தார்.

    வாங்க!

    இருவரும் உள்ளே நுழைந்தோம்.

    முதல்ல பத்து நிமிஷம் ரெஸ்ட் எடுங்க! அப்புறமா குளிங்க ரெண்டு பேரும். நான் போய் ஓட்டல்லேருந்து டிபன் வாங்கிட்டு வர்றேன்!

    இந்த வீட்ல யாருமில்லையா?

    கோபால் சம்சாரம் போன மாசம்தான் பிரசவத்துக்காக ஊருக்குப் போனாங்க. இன்னும் டெலிவரி ஆகலை! திரும்பி வர நாலஞ்சு மாசமாகும். தலைப் பிரசவம்!

    அப்படியா?

    தற்சமயம் கோபாலும் இல்லை! நீங்க கூச்சப்படாம இந்த வீட்ல தங்கிக்கலாம்! நான் போய் டிபன் வாங்கிட்டு வந்திர்றன்! பாத்ரூம்ல கெய்ஸர் இருக்கு. உபயோகப்படுத்திக்குங்க!

    தாமு ஒரு கூடையுடன் வெளியேற,

    "என்னடீ ரோகிணி இது?’

    எதும்மா?

    முன்னப் பின்ன தெரியாத ஒரு வீட்ல ரெண்டு பொம்பளைங்க வந்து தங்கமாலா?

    என்னம்மா பயம்? வேற யாரும் இல்லையே!

    கோபால் வீடுனு சொல்றார் இந்த தாமு. கோபால் ஊர்ல இல்லை. அவர் அனுமதியில்லாம இந்த வீட்ல தங்கலாமானு தெரியலியே! நாளைக்கு ஏதாவது பிரச்னை வந்தா?

    நீ சும்மாரும்மா! உனக்கு எதுக்கெடுத்தாலும் பயம்தான். அவர் அனுமதியோடதானே இந்த தாமு நமக்கு உதவ முன்வந்திருக்கார். ஆற செலவை லோன் போட்டுத் தந்துரலாம்!

    நான் குளிக்கப் போறேன்!

    அம்மா டவலோடு உள்ளே போக,

    அரைமணி நேரத்தில் ஆவி பறக்கும் டிபனோடு தாமு வந்து விட்டார்.

    சாப்பிட்டு முடித்தோம்.

    ரெண்டு பேரும் படுத்து ஒரு தூக்கம் போடுங்க! மத்யான சாப்பாட்டோட நான் வர்றேன்!

    சார் ஒரு நிமிஷம்!

    சொல்லும்மா!

    இன்னிக்கு ஒரு நாள் ஓட்டல்னா தாங்கும். தினசரி கட்டுப்படியாகுமா?

    உங்களை யார் தினமும் ஓட்டல்ல சாப்பிடச் சொன்னது? வீட்ல சமைச்சு சாப்பிடவேண்டியதுதானே?

    வீட்டுக்கு எங்கே போறது நாங்க?

    ஏன் இது வீடாக தெரியலியா உனக்கு?

    நான் சிரித்து விட்டேன்.

    சார்! எங்களுக்கு சொந்தமில்லாத ஒரு இடத்துல நாங்க எப்படி உரிமை கொண்டாட முடியும்?

    "அம்மாடீ! கோபால் எங்கிட்டச் சொல்லிட்டுத்தான் போயிருக்கான். அவனுக்கு திடீர் ட்யூட்டி!

    Enjoying the preview?
    Page 1 of 1