Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அம்மா மாதிரி...
அம்மா மாதிரி...
அம்மா மாதிரி...
Ebook105 pages24 minutes

அம்மா மாதிரி...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மறுநாள் ராஜேஸ்வரி சொல்லி விட்டாள். 

"தரகரே! அந்தப் பொண்ணை இங்கே கூட்டிட்டு வாங்க! அதாவது பெத்தவங்க கூட்டிட்டு வரட்டும்!" 

"ராஜி... இதென்ன புதுப் பழக்கம்? பொண்ணை நாம பாக்கப் போகாம, பொண்ணு நம்மைப் பாக்க வரலாமா?" 

"தாராளமா! இப்பல்லாம் நிறைய இடங்கள்ள அப்படித்தான் நடக்குது! காலம் மாறிட்டே வருது! உங்களுக்கு மட்டும் அது புரியலையா?" 

"என்னவோ செய்ங்க! எல்லாம் தலைகீழா மாறிட்டு வருது! முன்னல்லாம் அடி வாங்கினவன் சண்டைல அலறுவான். இப்ப கராத்தேல அடிக்கறவன் அலர்றான். ஆட்டுக்கல்ல, கல்லு நிக்கும், குழவி சுத்தும். கிரைண்டர்ல கல்லு சுத்துது! என்னல்லாம் ஆகுமோ?" 

ஆனந்த் வந்ததும் ராஜி சொல்லி விட்டாள். 

"நீ ஆபீஸ் போக வேண்டாம். இன்னிக்கு வீட்ல இருக்கணும்!"

"சரிம்மா!" 

அவர்களுக்கு பிஸினஸ், தனி ஆபீஸ் எல்லாம் இருந்தாலும், ஆனந்த் சட்டம் படித்திருந்ததால வேறு ஒரு சில இடங்களில் சட்ட ஆலோசகராக இருந்தான். 

வசந்த் என்ஜினீயர். 

கடைசி நிர்மல் இன்னும் முடிக்கவில்லை. படித்துக் கொண்டிருக்கிறான். தரகர் பெண் வீட்டாரிடம் விவரம் சொல்ல, அவர்களும் சம்மதித்து, எப்போது அழைத்து வரவேண்டும் எனக்கேட்டு, ராஜேஸ்வரி நேரம் சொல்ல, மறுநாள் பிற்பகல் மூன்றுமணி என முடிவானது! 

பெண்ணின் அப்பா சந்தோஷத்தில் இருந்தார். 

நாம் எப்படி அங்கே போகலாம் மாப்பிள்ளையை இங்கே வரச் சொல்லுங்கள் என்று இரண்டு மகள்களும் சண்டை போடாத குறையாக கத்தியும் பிரயோஜனமில்லை. பணக்கார வீட்டு மருமகள் என்ற  போதை கண்ணை மறைத்திருந்தது... 

தரகர் எல்லாம் சொல்லியிருந்தார். 

"அநேகமா முடியும். அவங்க கேட்ட எல்லா தகுதிகளோட, ஜாதகம் 10 பொருத்தம் பொருந்தியிருக்கு! அமையறது கஷ்டம் அமைஞ்சிருக்கு!" 

அப்பா அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தார். 

"நம்ம நந்தினி குடுத்து வச்சிருக்கா! இப்படி ஒரு இடம் அமைஞ்சா, நமக்கு அவளைப் பத்தின கவலை வாழ்நாள் முழுக்க இல்லை!" 

நந்தினி பேசவில்லை!

மௌனமாக இருந்தாள். 

"அப்படியே ரெண்டாவது பையனை நமக்கு மடக்கிப் போடுங்கப்பா!" சின்னவள் சாந்தினி சொல்லிவிட்டுக் கண்ணடித்தாள். 

"போக்கிரி! உனக்கு வாய் அதிகம். ராஜேஸ்வரி அம்மா வீட்டுக்கு மருமகளாப்போக ஒரு தனித் தகுதி வேணும்" 

சாந்தினி சிரித்தாள். 

நந்தினி உள்ளே வந்து விட்டாள். 

"அக்கா! கனவு காணத் தொடங்கிட்டியா?" 

"இல்லைடி சாந்தினி! எனக்குப் பிடிக்கலை!" 

"என்ன பிடிக்கலை" 

"இந்த கல்யாணம் பேச்சு – அது தொடர்பான சந்திப்புகள் எதுவும் பிடிக்கலை!" 

"ஏன்கா?" 

"ராஜேஸ்வரி அம்மாவை நான் பாக்கலை! ஆனா நிறையக் கேள்விப்பட்டிருக்கேன்! அந்த அல்லி தர்பார் ஆட்சிய, புருஷன், பிள்ளைகளுக்கே மூச்சு முட்டறதாத் தகவல்! நான் எந்த மூலைக்கு?" 

"அக்கா! நீ கவலைப்படாதே! இங்கே எல்லாத்துக்கும் தலையாட்டு. அங்கே போய் அந்தம்மா பல்லைப் புடுங்கி விடு!" 

"நான் என்ன பல் டாக்டரா?" 

"நான் உன் கூட இருந்தா, நீயும் ஜோக்கடிக்கறே பார்த்தியா?"

பிற்பகல் இரண்டு மணிக்கு நந்தினியை அவள் அம்மா அலங்கரித்தாள்.   

"ஏம்மா இவ்ளோ மேக்கப்?" 

"சும்மாரு! வேணும்! பெரிய இடத்துக்கு வாழப்போற! உன் தோற்றத்துல ஒரு கம்பீரம் வரவேண்டாமா?" 

"சரி!" 

தயாராகி விட்டார்கள். 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 24, 2024
ISBN9798224068685
அம்மா மாதிரி...

Read more from Devibala

Related to அம்மா மாதிரி...

Related ebooks

Reviews for அம்மா மாதிரி...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அம்மா மாதிரி... - Devibala

    1

    ராஜேஸ்வரி எதிரில் பவ்யமாக உட்கார்ந்திருந்தார் தரகர்.

    சொல்லுங்கம்மா!

    முதலாவதா ஜாதகம் நல்லா பொருந்தணும்!

    சரிம்மா! பத்துப் பொருத்தமும் சரியா இல்லாம எடுக்க மாட்டேன்!

    நல்லது! ஆனந்துக்கு வயசு இருபத்தி ஆறு! மூணு வயசு வித்யாசம் நிச்சயமா இருக்கணும்!

    ஆகட்டும்மா!

    நல்லா படிச்சிருக்கணும் பொண்ணு! ஆனா கண்டிப்பா வேலைக்குப் போகக்கூடாது.

    ஓக்கே!

    ஓரளவு வசதியான குடும்பமா இருக்கணும் அழகா, அடக்கமா இருக்கணும்!

    இன்னும் ராஜேஸ்வரி அடுக்கிக்கொண்டே போனாள்.

    தரகருக்கு முழி பிதுங்கி விட்டது.

    "எங்க குடும்பத்துல இது முதல் கல்யாணம். எந்தக் குறையும் இருக்கக்கூடாது! நான் சொன்ன மாதிரி இல்லைனா, அப்படி கிடைக்கறவரைக்கும் எம்பிள்ளை ஆனந்த் காத்திருப்பான்.

    தரகர் புறப்பட்டுப் போய்விட்டார்.

    அப்பா வெங்கடேசன் வந்தார்.

    ராஜி! இத்தனை கண்டிஷன்களை நீ போட்டா, எப்படி பொண்ணு கிடைக்கும்!

    ஏன் இதெல்லாம் சுலபமான கண்டிஷன்கள் தானே? வீட்டுக்கு வர்ற மூத்த மருமகள் சரியா அமையலைனா, எல்லாமே கோணிக்கும்.

    உன் இஷ்டம்! இந்த வீட்ல உனக்கு எதிர்க் குரல் எப்ப புறப்பட்டிருக்கு. நானும், உன்னோட மூணு பிள்ளைகளும் உனக்கு அடங்கித்தான் நடக்கறம். ஒரு பெண்ணைப் பெத்து நீ வளர்க்கல! அப்படி வளர்த்திருந்தா, கொஞ்சம் கஷ்டம் புரிஞ்சிருக்கும்! மருமகள் வந்து உன் பல்லைப் பிடுங்கணும்!

    அப்படியா? ராஜேஸ்வரி பல்லைப் புடுங்க இனிமே ஒருத்தர் பொறந்துதான் வரணும்!

    கம்பீரமாக உள்ளே போனாள்.

    ராஜேஸ்வரி கழுத்தில தாலிகட்டிய நொடியிலிருந்து வெங்கடேசனுக்கு ஏற்றம்தான்!

    ரொம்பவும் சாதாரண நிலையிலிருந்த வெங்கடேசன் படிப்படியாக உயர்ந்து, இன்று உச்சிக்கு வந்து விட்டார்.

    ராஜேஸ்வரியைக் கேட்காமல் எதையும் செய்ய மாட்டார். எந்த முடிவையும் எடுக்க மாட்டார்.

    அவரது ஆபீசில், ராஜேஸ்வரிக்கு தனி கேபின்!

    அவள் எப்போதும் வரமாட்டாள்.

    என்றாவது ஒரு நாள் வந்து விட்டால், அத்தனை பேருக்கும் நடுக்கம்தான் வியர்த்து விடும்!

    எல்லாரையும் கூப்பிட்டு விசாரிப்பாள்.

    அதட்டுவாள்... ஆலோசனை கூறுவாள்.

    அவள் ஆபீசை விட்டுப் போனதும், மழை விட்ட வானம் போல அப்படி ஒரு ஆறுதல்!

    வீட்டிலும் எதிர்த்து யாரும் ஒரு கேள்வி கேட்க முடியாது.

    வெங்கடேசனுக்குப் பழகிவிட்டது.

    ஆனால் பிள்ளைகளிடம் மெல்ல மெல்ல முணு முணுப்பு இப்போதெல்லாம் வரத் தொடங்கி விட்டது.

    மூத்தவன் ஆனந்துக்கு அம்மாவை எதிர்க்க கனவில் கூட தைரியம் வராது!

    அடுத்தவன் வசந்த் முனகத் தொடங்கி விட்டான்.

    மூன்றாவது பையன் நிர்மல் அம்மாவிடம் பயப்படவும் மாட்டான். அதே சமயம் அம்மாவின் நடவடிக்கை அராஜகம் அன்றெல்லாம் விமர்சனம் செய்யவும் மாட்டான்.

    மொத்தத்தில ராஜேஸ்வரி கொடியை சாய்க்க யாருக்கும் தைரியமில்லை!

    தரகர் நாலாவது நாளே அரக்கப் பரக்க ஓடி வந்தார்.

    அம்மா நீங்க சொன்ன அத்தனை தகுதிகளும் நிறைஞ்ச ஒரு பொண்ணு ஒரே ஒரு பொண்ணுதான் கிடைச்சிருக்கு!

    அப்படியா? போட்டோ இருக்கா?

    வாங்காம வருவேனா?

    தரகர் எடுத்துக் காண்பித்தார்!

    ராஜேஸ்வரி அதை எடை போட்டாள்.

    அழகா இருக்காம்மா?

    பரவால்ல!

    எப்பம்மா பொண்ணு பாக்கப் போறம்?

    இருங்க! அவங்க குடும்ப விபரங்கள் எல்லாம் தெரிய வேண்டாமா?

    இதுல இருக்கம்மா?

    தரகர் ஒரு ஃபோல்டரை எடுத்துக் கொடுத்தான். ராஜேஸ்வரி பார்த்தாள்.

    ஓ... என்ஜினீயர் புண்ய கோடி மகளா? இவளும், இவ தங்கச்சி ஒருத்தியுமா?

    ஆமாங்க!

    தங்கச்சி என்ன பண்றா?

    பி.காம் கடைசி வருஷம் படிக்குது!

    ராஜேஸ்வரி கொஞ்ச நேரம் கண் மூடி உட்கார்ந்திருந்தாள்.

    சரி! அந்தப் பொண்ணுகிட்ட நான் முதல்ல போன்ல பேசணும்.

    எதுக்கு? கேட்டபடி வெங்கடேசன் வந்தார்.

    எல்லாத்துக்கும் உங்ககிட்ட பர்மிஷன் கேக்கணுமா?

    அதிலம்மா! போன்ல பேசினா முகத் தெரியுமா? உணர்ச்சிகளை பலபேருக்குக் காட்டிக் குடுக்கறதே முகம் தான்! நேர்ல பாக்காம கல்யாணம் செஞ்சுறதில்லை! பாத்துரலாமே! ராஜேஸ்வரி கொஞ்சம் யோசித்தாள்.

    நாளைக்கு நான் சொல்றேனே!

    எழுந்து உள்ளே போய் விட்டாள்.

    நாளைக்குப் பொண்ணைப் பாக்கலாம்னுதான் சொல்லப்போறா! ஆனா அதை இப்பச் சொன்னா என் பேச்சு எடுபட்ட மாதிரி ஆயிடாது? ராஜிக்கு எப்பவும் தன் குரல் தான் இந்த வீட்ல ஓங்கி ஒலிக்கணும்!

    சுலபமாகச் சொல்லிவிட்டு அப்பா சிரித்தபடி போனார். ஆனால் அப்பா அளவுக்கு பிள்ளைகளால் அவளை ஜீரணிக்க முடியவில்லை! ஒரு தார்மீகக் கோபம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

    2

    மறுநாள் ராஜேஸ்வரி சொல்லி விட்டாள்.

    தரகரே! அந்தப் பொண்ணை இங்கே கூட்டிட்டு வாங்க! அதாவது பெத்தவங்க கூட்டிட்டு வரட்டும்!

    ராஜி... இதென்ன புதுப் பழக்கம்? பொண்ணை நாம பாக்கப் போகாம, பொண்ணு நம்மைப் பாக்க வரலாமா?

    தாராளமா! இப்பல்லாம் நிறைய இடங்கள்ள அப்படித்தான் நடக்குது! காலம் மாறிட்டே வருது! உங்களுக்கு மட்டும் அது புரியலையா?

    "என்னவோ செய்ங்க! எல்லாம் தலைகீழா மாறிட்டு வருது! முன்னல்லாம் அடி வாங்கினவன் சண்டைல அலறுவான். இப்ப கராத்தேல அடிக்கறவன்

    Enjoying the preview?
    Page 1 of 1