Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

'மை' விழி வாசலிலே!
'மை' விழி வாசலிலே!
'மை' விழி வாசலிலே!
Ebook95 pages31 minutes

'மை' விழி வாசலிலே!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ராஜா சங்கீதாவின் கழுத்தில் தாலி கட்டி விட்டான்.
அவர்களது உபச்சாரத்தைத் தாங்க முடியவில்லை. அளவுக்கு அதிகமான பணிவும், செயற்கைத்தனமும் ராஜா வீட்டில் யாருக்குமே பிடிக்கவில்லை.
முதல்நாள் ராத்திரியிலிருந்தே தொடர்ந்து வாண வேடிக்கை நடத்திக்கொண்டிருந்தார் சொக்கலிங்கம்.
பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருந்தார்.
ராஜாவுக்கு ஒரு வகை உபச்சாரம்...
அப்பா, அம்மாவுக்கு வேறு வகை என்று ஏகவாரியாக பிரித்து இருந்தார்கள்.
எல்லாம் முடிந்து முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சொக்கலிங்கம் வீடு அலங்கரிக்கப் பட்டிருந்தது.
ராஜா கல்யாணம் முடிந்த களைப்பில் ‘அக்கடா’ என்று சாய்ந்திருந்தான்.
சகாயம், ஜெர்வின் அருகில் வந்தார்கள்.
“ராஜா! இன்னும் கொஞ்ச நேரத்துல சாந்தி முகூர்த்தம். நீ குழந்தை இல்லை. எல்லாம் தெரியும் உனக்கு. ஆனாலும் சொல்றோம். கிராமத்துப் பொண்ணு! அதிகம் தைரியம் இருக்காது. அவ மிரண்டு போற மாதிரி செயல்படாதே!”
“அண்ணா! நீங்க கவலையே பட வேண்டாம். எனக்கு களைப்பா இருக்கு. இன்னிக்கு எதுவும் நடக்காது!”
“அப்படியில்லைடா!”
சொக்கலிங்கம் வந்தார்“மாப்ளை ரெடியா?”
“தோ... வந்துட்டே இருக்கான்.”
அவர் போய்விட்டார். பட்டுவேட்டி, சட்டை சகிதம் தனியறைக்குள் நுழைந்தான் ராஜா.
சற்று நேரத்தில் சங்கீதா உள்ளே வர, கதவு தாளிடப்பட்டது வெளியே.
பால் செம்புடன் குனிந்த தலை நிமிராமல் வந்த சங்கீதா, அதை வைத்துவிட்டு, நமஸ்கரித்தாள்.
“எழுந்திரு! தமிழ் சினிமால்லாம் வேண்டாம். இயல்பா இருப்பம். நிறையப் பேசுவோம்! இப்படி வந்து உட்காரு!”
சங்கீதா கூச்சத்துடன் உட்கார்ந்தாள்.
“என்னைப்பாரு! எத்தனை நேரம் நிலத்தையே பார்த்துட்டு இருப்பே?”
“எனக்கு வெக்கமா இருக்கு!”
“அப்ப படுத்துத் தூங்கலாமா?”
“உங்க இஷ்டம்!”
அருகில் நெருங்கி, அவள் முகவாயைத் தொட்டு மெல்ல நிமிர்த்தினான்.
அவள் முகத்தை நேருக்கு நேர் நெருக்கத்தில் பார்த்தான்.
புருவத்துக்கு மேல் புள்ளிக் கோலமெல்லாம் போட்டு, அழகான முகத்தை அசிங்கப்படுத்தி இருந்தார்கள்.
‘சொல்லலாமா?’
‘இதுமாதிரி நகை மூட்டையாக நாளை முதல் இருக்காதே என்று சொல்லி விடலாமா?’
“அவ கிராமத்துப் பொண்ணு! எடுத்த எடுப்புல உன் அறிவு ஜீவித்தனத்தைக் காட்டி அவளை மிரள வைக்காதே!”
ஜெர்வின் சொல்லியிருந்தாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 3, 2024
'மை' விழி வாசலிலே!

Read more from தேவிபாலா

Related authors

Related to 'மை' விழி வாசலிலே!

Related ebooks

Related categories

Reviews for 'மை' விழி வாசலிலே!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    'மை' விழி வாசலிலே! - தேவிபாலா

    1

    "இங்கே டவுன்ல எத்தனையோ பொண்ணுங்க இருக்கும்போது, ஏம்மா அத்தனை தூரம் கிராமத்துக்குப் போகணும்? எனக்கு சுத்தமாப் புடிக்கலை!"

    தபாரு ராஜா! நீ கிராமத்துலயா வாழப்போறே? கல்யாணம் முடிஞ்சு அவ இங்கேதான் வரப்போறா!

    சரிம்மா! அதுக்கு அவ்ளோதூரம் போவானேன்?

    ராஜா எனக்கு ஜோசியத்துல நம்பிக்கை அதிகம். தரகர் தந்த ஜாதகங்களை, நம்ம ஜோசியர்கிட்டத்தான் தந்தேன். ரெண்டு வருஷமா உனக்குப் பார்க்கத் தொடங்கியாச்சு. இப்பத்தான் பத்துப் பொருத்தமும் பிரமாதமாக பொருந்தின ஒரு ஜாதகம் மாட்டியிருக்கு. அந்தப் பொண்ணு கிராமத்துல இருந்தா, நானா பொறுப்பு?

    அப்பா பேசவே இல்லை.

    சரி! மற்ற விவரங்களைத் தெரிஞ்சுகிட்டியா?

    தெரிஞ்சுக்காம இருப்பேனா? நல்ல குடும்பத்துப் பொண்ணு. ஒரே மகள். கிராமத்துல சொந்தமா எட்டுகட்டு வீடு! நிறைய நிலபுலன்கள் சங்கீதாவோட அப்பா அந்த கிராமத்துக்கே பெரிய மனுஷன்!

    நீ இரம்மா! நான் அவரையா கட்டிக்கப் போறேன்? அந்தப் பொண்ணு என்ன படிச்சிருக்கா?

    அதெல்லாம் நான் கேக்கலை. நிச்சயமா உம் பொண்டாட்டி வேலைக்குப் போகணும்னு நானும். அப்பாவும் எதிர்பார்க்கலை. உனக்கு அந்த அவசியம் இல்லை. கைநிறைய சம்பளம் வருது. பின்ன என்னப்பா?

    பொண்ணு அவதான்னு நீ முடிவே பண்ணியாச்சா?

    ஏறத்தாழ! ஒரு வாட்டி நம்ம திருப்திக்காகப் போய்ப் பார்க்க வேண்டியதுதான். நாளைக்கு புறப்படறம்!

    எந்த இடம்?

    மதுரைக்குக் கிழக்கால நாப்பது கிலோமீட்டர் தள்ளி ஒரு கிராமம்!

    ராஜா பேசவில்லை.

    அப்பா, அம்மா சொல்லுக்கு எதிர்ச்சொல் அவனிடம் இல்லை. காரணம், அவனை சுதந்திரமாக அவர்கள் வளர்த்ததுதான்! அவன் எதைக் கேட்டும் அப்பா மறுத்ததில்லை. கண்டிப்பு காட்ட மாட்டார்கள்.

    நல்ல ஒரு ஸ்நேகிதனாகத்தான் அவர்களிடம் அவன் பழகுவான்.

    நிறைய நண்பர்கள் உண்டு.

    நல்ல நண்பர்கள்.

    அம்மாவிடமே செக்ஸ் பற்றிப் பேசுவான்.

    சில விசேஷ நாட்களில் அப்பாவுடன் சேர்ந்து ‘தண்ணி’ போடுவான்.

    "எல்லாருடனும் அந்தக் குடும்பம் ஒட்டி ஒட்டிப் பழகுவதால் அவர்களைப் பிடிக்காதவர்களே அந்த வட்டாரத்தில் இருக்க முடியாது.

    எல்லா சந்தோஷங்களையும் அனுபவிப்பார்கள்.

    ஆனால் எதிலும் வரம்பு மீற மாட்டார்கள்.

    தான் என்ற அகந்தை அறவே கிடையாது.

    அப்பா ஓய்வு பெற இன்னும் மூன்று வருடங்களே பாக்கி.

    பங்குச் சந்தையில் வேறு பணம் குவிக்கிறார்.

    மறுநாள் காரிலேயே அப்பா, அம்மா, ராஜாவுடன் அவர்களது நெருங்கின குடும்ப நண்பரான சகாயமும் புறப்பட்டார்கள்.

    நான் கிறிஸ்தவன்... நான் உங்ககூட வந்தா அவங்க தப்பா...!"

    என்ன சகாயம் நீ? ராஜாவை விட பத்து வயசு மூத்தவன் நீ. எங்களுக்கு நீயும் பிள்ளைதான்!

    அக்கா வர முடியலையேனு எனக்குக் கோபம்தான்! ராஜா குறுக்கிட்டான்.

    பசங்களுக்கு இது பரீட்சை நேரம் ராஜா! விட்டுட்டு அவளால வரமுடியலை. அவளுக்கு மனசெல்லாம் நம்மகிட்டத்தான் இருக்கும்!

    சகாயமும், அவர் மனைவி ஜெர்வினும் வெகுநாட்களாக ராஜாவின் குடும்ப நண்பர்கள். மதம் என்பதையெல்லாம் கடந்து அத்தனை நெருக்கம்.

    ராஜா ஆபீஸ் நேரம் போக மீதிநேரம் சகாயம் வீட்டில்தான் இருப்பான். எதற்கும் அவர்களை ஆலோசனை கலக்காமல் செய்யவே மாட்டான். ஜெர்வின் அவனை தன் தம்பியை விட அதிகமாக நேசித்தாள். இந்த வரன் வந்ததுமே...

    கிராமத்துப் பொண்ணு சரிப்படுமாக்கா?

    உனக்கென்ன சந்தேகம் ராஜா?

    உத்யோகம் பாக்கறவளா இருந்தா, இன்னும் கொஞ்சம்...!

    நான் உத்யோகமா, பாக்கறேன்?

    உங்க விஷயம் வேறக்கா!

    எல்லாம் ஒண்ணுதான் ராஜா! எத்தனை நாள் அம்மா கஷ்டப்பட முடியும்? ஒருத்தி உனக்குனு வந்தாத்தானே அவங்களுக்கு ரெஸ்ட் தரமுடியும்! வேலைக்குப் போகாம இருந்தா, குடும்பத்தை நல்லா கவனிக்க முடியும்!

    நீண்ட பயணத்துக்குப் பின் கிராமத்துக்குள் கார் நுழைந்தது.

    கோயிலை அது கடக்க,

    எதிரே ஒரு கூட்டம் எதிர்ப்பட்டது.

    சொக்கலிங்கம் அய்யாவூட்டுப் பொண்ணைப் பார்க்க வர்ற மாப்ளைவூட்டுக்காரங்க தானே?

    ஆமாம்!

    டேய் அடீடா!

    மேளம் கொட்டத் தொடங்கியது. நாதஸ்வரம் ஒலிக்க,

    ராஜா முகம் சுளித்தான்.

    என்னம்மா இது? இப்பத்தான் பொண்ணு பாக்கவே போறம். கல்யாணமே நிச்சயமான மாதிரி...

    விடு தம்பி! அவங்க விருப்பம். நமக்கென்ன நஷ்டம்?

    சரி! எனக்குப் பிடிக்கலைனா?

    அப்பா திரும்பிப் பார்த்து முறைத்தார்.

    அதை அங்கே வந்து முடிவு பண்ணு!

    பாருங்க சகாயம் அண்ணா!

    நீ பேசாம வா ராஜா!

    சொக்கலிங்கம் வீடு பழைய கால அரண்மனை போல இருந்தது. இவர்கள் இறங்கியதும், நாதஸ்வரம் உச்சத்தில் ஒலிக்க, ஒரு பெரியவர் வந்து ராஜாவுக்கு மாலை போட்டார். இன்னொருவர் பொன்னாடை போர்த்தினார்.

    உள்ளே அழைத்து வந்தார்கள்.

    வீடியோ

    Enjoying the preview?
    Page 1 of 1