Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பேராசை!
பேராசை!
பேராசை!
Ebook106 pages37 minutes

பேராசை!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஜோசியர் எதிரில் சுமதி இருந்தாள்.
அவர் நலம் விசாரித்து விட்டு, சுமதி தந்த ஜாதகத்தை கையில் வாங்கினார்.
“கல்யாண யோகம் எப்பன்னு சொல்லுங்க! அப்புறம் பொருத்தமான ஒரு ஜாதகத்தையும் குடுங்க!”
அவர் சிரித்தார்.
“நல்லா சம்பாதிக்கத் தொடங்கிட்டா உங்க மகள். அதைக் கொஞ்ச நாள் அனுபவியுங்களேன். அதை விட்டுட்டு ஏன் கல்யாணத்துக்கு அவசரப்படறீங்க?”
“இல்லீங்க. கட்டிக் குடுத்துட்டா நிம்மதி இல்லையா?”
ஜோசியர் சிரித்தபடி ஜாதகத்தை அடுத்த பத்து நிமிடங்கள் ஆழமாக அலசினார்.
“இன்னும் ஆறு மாசத்துல இந்த ஜாதகத்துக்கு கல்யாணம் நடந்தே தீரணும். ஆறு மாசமே அதிகபட்சம்!”
“அப்படியா?”
“மாங்கல்ய யோகம் வந்தாச்சும்மா. நீங்க இப்பவே ஏற்பாடுகளை ஆரம்பிச்சாத்தான் நான் சொல்ற நேரத்துல முடியும்!”
சுமதிக்கு முகத்தில் மலர்ச்சி பூத்தது.
“அப்படீன்னா, சந்தியா தகுதிக்குத் தக்கபடி ஒரு நல்ல பையனை நீங்களே புடிச்சுக் குடுங்களேன்...”
“அமெரிக்கால வேலை பாக்கற...”
“ஜோசியரே! இருங்க! வெளிநாட்டு விவகாரமே வேண்டாம். என் மகள் அப்பாவைப் பாக்காம வாழ மாட்டா. அதனால அடுத்த தெருவுல மாப்ளை கிடைச்சாக் கூட நல்லதுதான்!”ஜோசியர் சிரித்தார்.
“அதையெல்லாம் நாம தீர்மானிக்க முடியாதம்மா!”
“எனக்குத் தெரியும். முடிஞ்ச வரைக்கும் முயற்சி செய்யக் கூடாதா?”
“நான் மாட்டேன்னு சொல்லலை. பெண் எப்பவும் அப்பா மடிலயே இருக்க முடியுமா?”
“அதை அவ இப்ப புரிஞ்சுக்கற மனநிலைல இல்லை”
“சரி! ஜாதகம் எப்படி இருக்கு?”
“நிறைஞ்ச செல்வத்தோட, ஆயுளோட, ராஜாத்தி மாதிரி இருப்பா உங்க மகள்!”
“அது போதும் எனக்கு!”
“நான் நீங்க கேட்ட மாதிரி ஒரு வரனோட வந்து சேர்றேன். தைரியமா இருங்க...”
“ரொம்ப நன்றி ஜோசியரே!”
சுமதி நிறைவுடன் வெளியே வந்தாள்.
‘என் மகளுக்கொரு நல்ல வாழ்க்கை அமைஞ்சா அதைவிட சந்தோஷம் எனக்கு என்ன இருக்கு?’
இதுநாள் வரை இருந்த சந்தோஷம் அத்தனையும் ஒட்டுமொத்தமாக இனிமேல்தான் குலையப் போகிறது என்பது சுமதிக்கு அப்போது தெரியாது.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 16, 2024
பேராசை!

Read more from தேவிபாலா

Related to பேராசை!

Related ebooks

Reviews for பேராசை!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பேராசை! - தேவிபாலா

    1

    முதல் சம்பளத்தை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தாள் சந்தியா.

    அம்மா! அப்பா இன்னும் வரலியா?

    வர்ற நேரம்தான் சந்தியா! என்னம்மா? ஏன் அப்பாவைக் கேக்கற?

    இன்னிக்கு நான் முதல் சம்பளம் வாங்கிட்டு வந்திருக்கேன் இல்லையா? அப்பா கைல அதைத்தர வேண்டாமா?

    நடராஜன் உள்ளே நுழைந்தார்.

    என்ன சொல்றா குழந்தை?

    உங்க செல்லப் பொண்ணு முதல் சம்பளம் வாங்கிட்டு வந்திருக்கா. அதை உங்க கைலதான் தருவாளாம்!

    ஏன்மா? அம்மா கைல குடு. நானே அம்மா கிட்டத்தானே தர்றேன்!

    இல்லைப்பா. முதல்ல நீங்க. அப்புறம்தான் அம்மா!

    சுமதி பெருமிதத்துடன் மகளைப் பார்த்தாள்.

    அப்படியே இருக்கட்டும்! எனக்குப் பெருமை தாங்க!

    ரெண்டு பேரும் நிக்கறோம். ஆசீர்வாதம் வாங்கிக்கோ சந்தியா!

    இருவர் காலிலும் விழுந்து- பிறகு அப்பாவிடம் ஸ்வீட் பாக்கெட்டுடன் சம்பளத்தை தந்தாள்.

    சந்தியா சமீபத்தில் பி.டெக் படிப்பை முடித்து விட்டு, கல்லூரி காம்பஸ் நேர்முகத்தில் ஒரு தனியார் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு உடனே வேலை கிடைத்து விட்டது.

    பெரிய பதவி. எடுத்த எடுப்பில் முப்பதாயிரம் சம்பளம்.

    கம்பெனி கார் வந்து அழைத்துப் போகும். கொண்டு வந்து விடும். அங்கேயே உணவு. குளிரூட்டப்பட்ட அறைகள். சொகுசான உத்யோகம்!

    நடராஜனுக்கு பெருமை பிடிபடவில்லை.

    என் மகளோட புத்திக்கு இதெல்லாம் குறைச்சல். அவ இன்னும் சாதிப்பா!

    நடராஜன் ஒரு வங்கியில் அதிகாரி. சொந்த வீடு, கார் எல்லாம் உண்டு.

    சந்தியா பிறந்த வேளைதான் அவருக்கு பதவி உயர்வு வந்து, வசதிகள் பெருக ஆரம்பித்தன.

    சந்தியா ஒரே மகள். அப்பா செல்லம்.

    அவள் கேட்ட எதையும் நடராஜன் மறுக்க மாட்டார்.

    ரொம்பச் செல்லம் குடுக்கறீங்க. இது நல்லதுக்கில்லை. பெண் குழந்தை வேற!

    இதப்பாரும்மா! சலுகைகளால புள்ளைங்க கெட்டுப் போறதா நினைக்கறது தப்பு. என் மகள் விவகாரத்துல இதை நான் உடைச்சுக் காட்டறேன்!

    அதுதான் நடந்தது. சந்தியா ஒரு தப்பு தண்டா இல்லாமல் நல்லபடியாகத்தான் வளர்ந்தாள்.

    அழகான பெண்! ஒரு குறைபாடும் இல்லை!

    சந்தியா! நாளைக்கே உனக்கொரு பேங்க் கணக்கு ஆரம்பிச்சுத் தர்றேன். இந்தச் சம்பளத்தை அப்படியே போட்ரு! உன் கைச் செலவுக்கு நான் தர்றேன்!

    ஏன்பா? இது குடும்பத்துக்கு உபயோகப்படட்டுமே!

    வேண்டாம்மா. என் வருமானமே நம்ம மூணு பேருக்குப் போதும். இதையும் கமிட் பண்ண வேண்டாம். கடன் எதுவும் இல்லாம தெளிவா இருக்கோம்!

    ஆமாண்டி. இந்தப் பணத்தைச் சேர்த்து வச்சா, நாளைக்கு உன் கல்யாணத்துக்கு உதவும். இல்லையா?

    இரு சுமதி! என்ன பேசற நீ? குழந்தையோட கல்யாணத்துக்கு அவ பணமா? அப்புறமா அப்பானு சொல்லிட்டு நான் எதுக்கு இருக்கேன்?

    என்னங்க நீங்க? சந்தியா உங்க மகள். அவ பணம்னு பிரிச்சுப் பாக்கணுமா?

    ஆமாம் டாடி! இந்த இடத்துல அம்மா சொல்றதுதான் கரெக்ட்!

    செல்லம்மா! நான் பிரிச்சுப் பாக்கலைடா. உன்னைப் படிக்க வச்சு, நல்ல வேலையும் வாங்கித் தந்தாச்சு. உன் கல்யாணத்தையும் நடத்தற கடமை என்னுது. இந்த சேமிப்பு உன் எதிர்காலத்துக்கு உதவட்டுமே! நல்ல புருஷனா அமைஞ்சாலும் இனிமே வர்ற காலத்துல ஒரு பெண் தன் கால்ல நிக்கற நிலைமை வந்தாச்சு. அதுதான் கௌரவம்!

    சரி. யாரு இப்ப கல்யாணம் செஞ்சுக்கப் போறது?

    நீதான்! வேலையும் கிடைச்சாச்சு. உன் ஜாதகத்தை உடனே எடுத்துடப் போறோம்!

    வேண்டாம். எங்க டாடியை விட்டு நான் போக மாட்டேன்!

    ஒண்ணு செய். கல்யாணம் ஆனதும் உன் டாடியையும் கூடவே கூட்டிட்டுப் போயிடு!

    ஏன்? கூடாதா? எங்கப்பாவை ஏத்துக்கற ஆள்தான் எனக்குப் புருஷனாக முடியும்!

    அசடு மாதிரி பேசாதே!

    டாடி! நான் சீரியஸா பேசறேன். நம்ம வீட்ல நான் சந்தோஷமா இருக்கேன். நான் யாரையாவது காதலிச்சேனா? ஏன்? காதல்கூட உங்க கிட்டேயிருந்து என்னைப் பிரிக்கக் கூடாதுனு தான்!

    சரிடா கண்ணா! உள்ளூர் மாப்ளையாப் பார்த்து கல்யாணத்தை செய்யலாம். தினமும் நான் உன்னைப் பாக்கற மாதிரி ஏற்பாடு செஞ்சிடலாம். அதது காலாகாலத்துல நடக்கணும்மா. தள்ளிப் போடக் கூடாது!

    எனக்குப் பிடிக்கலை...

    இப்ப எனக்குப் பசிக்குது!

    வாங்க! எல்லாம் தயாரா இருக்கு!

    மூவரும் உள்ளே வந்தார்கள்.

    சூடான சப்ஜி, சப்பாத்தி தட்டில் விழ, நடராஜன் முதல் விள்ளல் எடுத்து சந்தியாவுக்கு ஊட்டி விட்டார்.

    அவளுக்கு ஊட்டி விடாமல் அவர் சாப்பிடவே மாட்டார்.

    சில நிமிடங்களில் சந்தியா உறங்கி விட்டாள்.

    பாவம்! படிச்சு வேலைக்குப் போனாலும் என்னதான் வளர்ந்தாலும் இன்னமும் குழந்தையாவே இருக்கா!

    எனக்கு ரொம்பக் கவலையா இருக்குங்க!

    எதுக்கு சுமதி?

    பெண் குழந்தைங்க பெத்தவங்க கிட்ட இத்தனை பற்றும் பாசமும் வைக்கக் கூடாது...

    அதனால என்னம்மா?

    நாளைக்கு வாழப்போற எடத்துல எங்க டாடினு வாய்க்கொரு தரம் இவ சொன்னா, புருஷனுக்குப் பிடிக்காதுங்க. இதை அவளுக்குப் புரிய வைக்கணும்!

    பக்குவமா எடுத்துச் சொல்லலாம் சுமதி! ஒருத்தன்கூட வாழத் தொடங்கும் போது மனசு மாறும். இயல்பா நடக்கக் கூடிய எதையும் இழுத்து வச்சு கஷ்டப்படுத்த வேண்டாம். புரியுதா? அவ போக்குல அவளை விடு. நான் சரி பண்ணிக்கறேன்!

    ஜாதகத்தை எடுத்துடலாமா?

    தாராளமா! நம்ம ஜோசியரைக் கலந்து பேசிடலாம். அவர் விவரமானவர். கல்யாண நேரம் எப்ப வருதுனு அவர் சொல்லிடுவார் சுமதி!

    நாளைக்கு நல்ல நாளா இருக்குங்க. நாளைக்கே நான் ஜோசியரைப் பாத்துர்றேன்!

    சரி சுமதி!

    சுமதி சட்டென அவரது கைகளைப்

    Enjoying the preview?
    Page 1 of 1