Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

துரோகம் புதிது!
துரோகம் புதிது!
துரோகம் புதிது!
Ebook89 pages29 minutes

துரோகம் புதிது!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“நம்ம ஜேம்ஸைப் பத்தி நீ என்ன நினைக்கறே மேரி?”


“யாரு? உங்க தங்கச்சி மகன் தானே?”


“ம்!”


“அவனை விட ஒரு நல்ல பையன் உண்டா?”


“அவன் நல்லவன்தான். ஆனா மூணாவது தங்கச்சியைக் கூட இப்பத்தான் கட்டிக் குடுத்தான். ஏகப்பட்ட கடன் இருக்கே அவனுக்கு!”


“அவனுக்குக் கடன் இருந்தா, உங்களை அது எப்படி பாதிக்கும்?”


“நான் என்ன சொல்ல வர்றேன்னு உனக்குப் புரியலையா?”


“புரியுதுங்க. நம்ம ஸ்டெல்லாவை ஜேம்ஸுக்குக் கட்டிக் குடுக்கலாம்னு சொல்ல வர்றீங்க!”


“ஆமாம்.”


“ரொம்ப நல்ல தீர்மானம். கடன் சுமையும், குடும்ப பாரமும் உள்ள இடத்துல வாழ்க்கைப்படட்டும். அப்பத்தான் அவளுக்கு பொறுப்பு வரும்”


“குழந்தை கஷ்டப் படுவாளோ?”


“படட்டும். நீங்க செல்லம் குடுத்து அவளைக் கெடுத்தது போதும். உருப்படியா இன்னிக்குக் காலைலதான். கண்டிச்சீங்க அவளை முதன் முதலா!”


“ஏதும் ஏடாகூடமா ஆகக் கூடாதுன்னு பயந்துதான் இந்தக் கல்யாண யோசனை!”


“உங்க தங்கச்சிகிட்ட பேச வேண்டாமா? ஜேம்ஸ் சம்மதிக்க வேண்டாமா?”


அழைப்பு மணி ஒலித்தது.


திறந்தார் ராபர்ட்.


ஜேம்ஸ் வாசலில் நின்றான்.


“ஆயுசு நூறு! உன்னைப் பற்றித்தான் நானும் உங்கத்தையும் பேசிட்டு இருக்கம்!”


“வா தம்பி!”


“இந்தாங்க மாமா ஸ்வீட்!”


“என்ன விசேஷம் ஜேம்ஸ்?”


“எனக்கு ஆபீஸ்ல ப்ரமோஷன் வந்திருக்கு. அதான் அம்மா ஸ்வீட் வாங்கிட்டுப் போகச் சொன்னாங்க!”


“அவளும் வந்திருக்கலாமே!”


“வழக்கமான ரத்த அழுத்தம். என் கடன் சுமையெல்லாம் நீங்கி, நான் தெளியற வரைக்கும் அம்மாவோட நோய் தீராது!”


“உன் கடனைத் தீர்க்க நான் ஒரு வழி சொல்லப் போறேன் ஜேம்ஸ்!”


“என்ன மாமா அது?”


“என்னங்க நீங்க? உங்க தங்கச்சி கிட்ட பேச வேண்டிய விஷயம் இது!”


“சரிதான்! சம்மதம் சொல்ல வேண்டியது இவன்தானே?”


“என்ன மாமா பேசறீங்க ரெண்டு பேரும்?”


“சம்பாதிக்கற பெண் ஒருத்தி உனக்கு மனைவியா வந்தா, கஷ்டம் தீரும் இல்லையா?”


“அம்மாவும் இதைச் சொல்லத் தொடங்கிட்டாங்க மாமா. தரகர் வீட்டுக்கு வரத் தொடங்கிட்டார்!”


“அப்படியா?”


“அம்மா போற வேகத்தைப் பார்த்தா, ஒரு மாசத்துக்குள்ள நிச்சயம் பண்ணிடுவாங்கனு தோணுது!”


“பார்த்தியா மேரி? சரியான நேரத்துல பேசத் தொடங்கிட்டம் ரெண்டு பேரும். நீ இப்பவே புறப்படு ஜேம்ஸ்!”


“எங்கே மாமா?”


“உங்க வீட்டுக்குத் தான்!”


“எதுக்கு?”


“மத்தவங்க முந்திக்கறதுக்கு முன்னால, நான் அப்ளிகேஷன் போட்ரலாம்னு பாக்கறேன்!”


“புரியலை!”


“கையில ஸ்டெல்லாவை வச்சிட்டு, வெளிப் பெண்களுக்கு உங்கம்மா ஏன் அலையணும்?”


“மாமா!”


“உனக்கு ஸ்டெல்லாவைக் கட்டிக்க இஷ்டமா ஜேம்ஸ்?”


“உடனே எப்படி மாமா பதில் சொல்ல முடியும்?”


“ஏன்? எம் பொண்ணு அழகா இல்லையா? கை நிறைய சம்பாதிக்கலையா? உன்னோட குழந்தைக் காலம் தொட்டு பழகின பெண். என்ன யோசனை ஜேம்ஸ்?”


“அம்மாவைக் கலக்காம யாருக்கும், எந்த பதிலும் நான் சொல்றதில்லை!”


“சரி வா! இப்பவே புறப்படலாம்!”


“நீங்க நாளைக்கு வாங்களேன் மாமா. இது தொடர்பா நானும், அம்மாவும் இன்னிக்கு பேசிர்றம்!”


“குட்! அதுவும் நல்லதுதான். உங்கம்மா என்ன சொல்லப் போறா? மனப்பூர்வமா சம்மதிப்பா. எனக்குத் தெரியாதா என் தங்கையை?”


“நான் வர்றேன் மாமா. அத்தே நான் வர்றேன்!”


வீடு வரும்வரை ஒரு மாதிரி குழப்பத்தில் இருந்தான் ஜேம்ஸ். வீட்டுக்குள் நுழைந்தான்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 3, 2024
துரோகம் புதிது!

Read more from தேவிபாலா

Related to துரோகம் புதிது!

Related ebooks

Reviews for துரோகம் புதிது!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    துரோகம் புதிது! - தேவிபாலா

    1

    ஆளுயரக் கண்ணாடியின் எதிரே இருந்தாள் ஸ்டெல்லா. அப்போதுதான் குளித்து விட்டு வந்திருந்தாள். உள்பாவாடை, ரவிக்கை மட்டும் அணிந்து மேலே ஒரு டவலும் போர்த்திக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

    தன்னை முழுமையாக ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். அவளுக்கே மிதமிஞ்சிய கர்வம் உண்டானது. தன்னை அலங்கரித்துக் கொள்ளத் தொடங்கினாள். அம்மா உள்ளே நுழைந்தாள்.

    ஸ்டெல்லா!

    ம்!

    உனக்கு இன்னமும் சம்பளம் வரலியா?

    வந்தாச்சு!

    நீ இன்னமும் எங்கிட்டத் தரலை!

    ஸ்டெல்லா பதில் பேசாமல், ட்வீஸர் கொண்டு தன் புருவங்களை சீராக்கத் தொடங்கினாள்.

    நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லலை!

    ஏன் பணம்... பணம்னு இப்படி பறக்கறே? எரிச்சலுடன் எழுந்து வந்தாள். கைப்பை திறந்து, அந்தக் கவரை எடுத்து அம்மாவிடம் தந்தாள்.

    அம்மா உள்ளே விரல் நுழைத்து பணத்தை உருவினாள். எண்ணத் தொடங்கினாள். நிமிர்ந்தாள்.

    ஆயிரம்தான் இருக்கு!

    ஆமாம்!

    உனக்கு ரெண்டாயிரத்து முன்னூறு ரூபா சம்பளம்!

    என் செலவு போக மீதியை கவர்ல வச்சிருக்கேன்!

    ஆயிரத்து முன்னூறு ரூபா செலவா? அப்படி என்னடீ உனக்கு செலவு? நடுத்தரக் குடும்பத்துல பொறந்துட்டு இது நல்லாருக்கா ஸ்டெல்லா?

    நிறுத்தும்மா! நான் வயசுப் பொண்ணு. அழகானவ. ஆயிரம் தேவைகள் எனக்கிருக்கும். உங்கிட்ட எல்லாத்துக்கும் எதிர்பார்த்துட்டு நிக்க முடியுமா? நான் அப்பாவை பணம் கேக்கலை. என் சொந்த சம்பாத்தியத்துல செலவு பண்ண யாரைக் கேக்கணும் நான்?

    ஒரு பெண்ணுக்கு இது அழகல்ல!

    அழகான பெண்ணுக்கு எல்லாமே அழகு தான்!

    இங்கே நீ கொட்டம் அடிக்கலாம். நாளைக்கு ஒருத்தனுக்கு சொந்தமாயிட்டா, இதெல்லாம் நடக்காது!

    நடக்கும். நடக்க வைப்பேன்.

    அம்மா கலக்கத்துடன் அறையை விட்டு வெளியே வந்தாள். அப்பா ராபர்ட் காலை தினசரியில் தன்னை நுழைத்துக் கொண்டிருந்தார்.

    காபி கொண்டு வா மேரி!

    அம்மா காபியுடன் வெளிப்பட்டாள். அதை வாங்கி மௌனமாகக் குடித்தார்.

    நீங்க ஆபீஸ் புறப்படலை?

    இல்லை. லேட்டாப் போனா போதும்!

    நான் போய் டிபன் தயார் பண்றேன்! அம்மா எழுந்து உள்ளே வந்து விட்டாள். அவர் மேலும் அவளுக்குக் கோபம் வந்தது.

    ‘மகளின் ஆணவப் போக்கை இவர் கண்டு கொள்ளவே மாட்டாரா? இவரால் இவர் தரும் சலுகையால்தான் அவள் இந்த அளவு துணிச்சல் பெற்று விட்டாளா?’

    காலை உணவு தயாரானதும், கணவரை அழைத்தாள்.

    ஸ்டெல்லா! டிபன் ரெடி!

    ஸ்டெல்லா கைப்பையோடு வெளிப்பட்டாள்.

    ஸாரி மம்மி! எனக்கு டயமில்லை. நான் வர்றேன். வெளில பார்த்துக்கறேன்!

    ஸ்டெல்லா ஒரு நிமிஷம்!

    என்ன டாடீ?

    இப்படி வந்து உட்காரு!

    எனக்கு நேரமாச்சு டாடீ! சிணுங்கிய படியே வந்து உட்கார்ந்தாள்.

    யாரு விஜய்?

    விஜய்? எந்த விஜய் டாடி?

    நீ ஒருத்தனோட வெளில சுத்தறதா தகவல் வந்திருக்கு எனக்கு. யாரவன்?

    ஓ... அவனா? என் பாய் ஃப்ரண்ட் டாடி!

    அப்பா தடாலென எழுந்து விட்டார்.

    நோ ஸ்டெல்லா. இதெல்லாம் எனக்குப் பிடிக்கலை. நாம கிறிஸ்தவக் குடும்பத்துல பிறந்தாலும், பழமையும் ஒழுக்கமும், பண்பாடும் நிறைஞ்சவங்க. நீ அழகான பொண்ணு. அசம்பாவிதம் எதுவும் நடக்க விடமாட்டேன் நான்!

    டாடி! விஜய் நல்ல ஒரு ஸ்நேகிதன்!

    ஸ்டாப் இட்! எந்த நல்ல நட்புக்கும் ஆழ்மனசுல ஏதாவதொரு எதிர்பார்ப்பு இருக்கும். இன்னொரு முறை உன்னைப் பற்றி எங்கிட்ட புகார் வரக் கூடாது. மைண்ட் யூ! நீ போகலாம்!

    ஸ்டெல்லா முகம் தொங்க வெளிப்பட்டாள். பஸ் நிறுத்தத்தை அடைந்தாள்.

    கனமான கூட்டம்.

    வெயில் சுள்ளென்று அடித்தது. உள்ளே, வெளியே எரிச்சலாக உணர்ந்தாள்.

    அருகில் வந்து ‘பைக்’ நின்றது.

    ஹாய்!

    திரும்பினாள்.

    மார்பு முடிக்குள் தங்கச் சங்கிலி ஒளிந்திருக்க, வாயில் தொங்கும் சிகரட்டோடு அவளைப் பார்த்துக் கண்ணடித்தான் விஜய்.

    ஸ்டெல்லா சிரிக்கவில்லை.

    என்னாச்சு? மோனாலிசாவுக்கு ‘மூட்’ அவுட்டா? வண்டில ஏறு!

    வேண்டாம்!

    ச்சீ! சீன் க்ரியேட் பண்ணாதே! பத்து பேர் நம்மையே பாக்கற இடம். சீக்கிரம் வண்டில ஏறுடா!

    ஸ்டெல்லா ஏறிக் கொண்டாள். அவன் துரிதப்படுத்தினான் வண்டியை.

    அது நகரின் பிரதானப் பகுதியில் இருந்த நட்சத்திர அந்தஸ்த்து பெற்ற ஒரு உணவகத்தின் முன்னால் நின்றது.

    நோ விஜய்! எனக்கு ஆபீசுக்கு டயமாச்சு!

    லீவு போடு!

    Enjoying the preview?
    Page 1 of 1