Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அன்றொரு நாள்
அன்றொரு நாள்
அன்றொரு நாள்
Ebook112 pages39 minutes

அன்றொரு நாள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காலை டிபன் சாப்பிடாமல் சுஜிதா புறப்பட்டு விட்டாள்.
 "ஏன்டீ டிபன் சாப்பிடாம போற?"
 "வெளில சாப்பிட்டுக்கறேன்மா!"
 "உனக்கு புடிச்ச ஆப்பமும், குருமாவும் பண்ணித்தர்றேன்டி! ரெண்டே ரெண்டு சாப்பிட்டு போ!"
 "வேண்டாம்னா, விட்ரும்மா!"
 அஜய் உள்ளே வந்தான்!
 "எனக்குக் குடும்மா!"
 சூடாக அம்மா ஆப்பத்தை தயாரித்துத் தர, "தேங்காப்பால் இருக்காம்மா!"
 "இருக்குடா! குருமாவும் இருக்கு!"
 சுஜிதா வெளியே வந்தாள்!
 "நாக்கைக் கட்டுப்படுத்து அஜய்! உனக்கு தொப்பை விழுது! முப்பது கூட ஆகலை!"
 "பரவாயில்லை இந்த வயசுலதான் ருசியா சாப்பிட முடியும்!"
 "இப்பவே சக்கரை, உப்பு, எண்ணைன்னு பலசரக்குக் கடையை உடம்புல ஏத்திக்காதே!"
 "நீ போடீ! உனக்கு புருஷனா வர்றவன் பாவம்!"
 "கண்டிப்பா சாப்பாட்டுல கண்டிஷன் போடுவேன்!"
 "பாவம்! அந்த ஆள்!"
 சுஜிதா புறப்பட்டு வாசலில் இறங்கி விட்டாள். காரை எடுத்துக் கொண்டாள்அஜய் சாயங்காலம் நீயும் அஞ்சு மணிக்கே வந்துடு!"
 "எதுக்கு?"
 "யாரோ ஒரு நண்பரைக்கூட்டிட்டு வரப்போறாளாம்! நூடுல்ஸ் பண்ணச் சொல்றா!"
 "வரட்டும்! அதுக்கு நான் ஏன் வரணும்!"
 "எனக்கு சந்தேகமாக இருக்குடா! கல்யாணப் பேச்சுக்கும் வர்றவருக்கும் என்ன தொடர்பு?"
 "என்னம்மா சொல்ற?"
 தன் சந்தேகத்தை வெளியிட்டாள் ஜெயா!
 ராம் உள்ளே வந்தார்.
 "எம்பொண்ணு தப்பு-தண்டாவுக்கு போகமாட்டா! - நம்ம குடும்பத்துல அந்த மாதிரி எதுவும் இதுவரைக்கும் நடந்ததில்லைடா!"
 "அதுக்கான தகுதி உங்களுக்கெல்லாம் இல்லை!"
 "நான்சென்ஸ்! எங்களுக்கு என்னடா குறைச்சல்?"
 "சரி விடு! உன் செல்லக்குட்டி மேல ரொம்ப நம்பிக்கை வைக்காதே! கவுத்துடப்போறா!"
 "விடுடா! அவர் டென்ஷனாகப்போறார்!"
 இவர்கள் அலசும் நேரம், ஒரு உயர்தர உணவகத்தின் முன்பு சுஜிதா காரை நிறுத்தினாள்!
 அது ஒரு பிரபலமான அசைவ உணவகம்!
 சுரேஷ் நாயர் அங்கே காத்திருந்தான்!

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 7, 2023
ISBN9798223525790
அன்றொரு நாள்

Read more from Devibala

Related to அன்றொரு நாள்

Related ebooks

Related categories

Reviews for அன்றொரு நாள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அன்றொரு நாள் - Devibala

    1

    "இன்னிக்கு முகூர்த்த நாள்! சுஜிதா ஜாதகத்தை இன்னைக்கு கையில எடுத்துடலாம்!"

    ராம் சொல்ல, அவர் மனைவி ஜெயா பதிலே சொல்லவில்லை.

    கோயில்ல போய் சாமி பாதத்துல வச்சிட்டு அங்கிருந்து ஆரம்பிக்கலாம்! இப்பல்லாம் இன்டர்நெட் மூலம் நல்லபடியா வரன் பார்த்துடலாம். கல்யாண ஏஜென்சிகள் நிறைய இருக்கே! படக்கெனு நல்ல வரனா மாட்டிக்கும்!

    ஜெயா இப்போதும் மௌனத்தைத் தொடர,

    வெளிநாட்டுக்கெல்லாம் நான் அனுப்பமாட்டேன்! உள்ளூர்ல நம்ம கண்பார்வைல குழந்தை இருக்கணும்! நெனச்சா அப்பப்போ நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வரணும்!

    ஜெயா எழுந்து உள்ளே போனாள்!

    ஜெயா நில்லு!

    எனக்கு சமையல் கட்டுல வேலையிருக்கு! ராத்திரி டிபனுக்கு ரெடி பண்ணணும்!

    இப்ப மணி ஏழரை! ராத்திரி எட்டறை மணிக்கு சாப்பிட்டா போதும்! என்ன அவசரம்?

    சரி! என் வேலைகளை நான்தானே செஞ்சாகணும்!

    இதுவும் உன் வேலைதாண்டி! நீ சுஜிதாவுக்கு அம்மா! அவ கல்யாண மேட்டர் பேசும் போது நீ எதுவும் பேசாம ஒதுங்கியிருந்தா எப்படி!

    இதப்பாருங்க! சுஜிதா விஷயத்துல நான் தலையிடமாட்டேன்!

    ஏன் இப்படி பேசற?

    உங்க பொண்ணு பிடிவாதக்காரி! அவ நினைச்சது நடக்கணும்! எதுக்கும் இறங்கி வரமாட்டா! எல்லாத்துக்கும் விவாதம் பண்ணுவா! தனக்குத்தான் எல்லாம் தெரியும்னு இருப்பா! பெத்த அம்மாவையே மதிக்கமாட்டா! நான் ஏதாவது நல்லதை சொல்லி, அவ அதைப் பொருட்படுத்தாம அலட்சியப்படுத்தினா எனக்கும் கோபம் வரும்! வீண் சண்டை வரும்! வீட்டுல்ல! வயசு பொண்ணு கல்யாணத்தை நீங்களே பேசி முடிங்க!

    சுஜிதா உள்ளே அழைத்தாள்!

    சுஜிதாவின் அண்ணன்! அவனை விட மூன்று வயது பெரியவன்.

    அம்மா செய்யுறது ரொம்ப சரி!

    என்னடா சரி? நீயும் தாளம் போடறே?

    அப்பா! சுஜிதா எங்க பேச்சையெல்லாம் கேக்கமாட்டா! எதுக்கு மரியாதையை கெடுத்துக்கணும்?

    உங்கம்மாவுக்கு ஜாலராவா?

    இல்லையே! அம்மா எப்பவுமே யாரையும் புண்படுத்தமாட்டாங்க! பிடிக்காதவன் கூட முகத்துல அடிச்ச மாதிரி பேசமாட்டாங்க! ஓரவஞ்சனை இல்லை எதுலயுமே, எதை யார் சொன்னாலும் அம்மா ஏத்துக்குவாங்க!

    ஜெயாவுக்கு பெருமிதமாக இருந்தது மகன் என்றைக்குமே ஜெயாவின் பக்கம்தான். அம்மாவை ஒருநாளும் அவன் விட்டுத்தரமாட்டான்!

    நீங்க ரெண்டு பேரும் எப்பவுமே ஒரு கட்சிடா!

    அப்படி இல்லைப்பா! நீங்க கண்மூடித்தனமா தங்கச்சி பக்கம் இருப்பீங்க!

    அவ என் செல்ல மகள்டா! அவ பிறந்த பிறகுதான் அதிர்ஷ்ட காற்று என் பக்கம் வீச ஆரம்பிச்சது! இன்னிக்கு நாம சொந்த வீடு, கார், கை நிறைய பணம்னு வர்றதுக்கு அடித்தளம் போட்டதே என் செல்ல குட்டிடா!

    இதப்பாருங்க! என் பிள்ளைக்கும் எந்த ஒரு குறைச்சலும் இல்லை! அவனும் யோகக் காரன்தான்!

    இல்லடி! இவன் பிறந்தப்ப நாம சாதாரண நிலைமைலதான் இருந்தோம்! இன்னும் சொல்லப்போனா கடனும் பிரச்சனையும் நிறைய இருந்தது! சுஜிதாவை நீ உண்டான பிறகுதான் எல்லாமே தலைகீழா மாறிடுச்சு! உனக்கு அது தெரியும்! என்னோட மகாலஷ்மி அவ! இதை எங்கே வேணாலும் நான் சொல்லுவேன்!

    அஜய் முகம் சுருங்கிப் போனது!

    அம்மா! காபி கொடு

    இந்த நேரத்துல எதுக்குடா காபி?

    ஏம்மா ஒரு காபி குடிக்கக்கூட தடை பண்ணுவீங்களா? இதையே சுஜிதா கேட்டா, நீங்களே எழுந்து அடுப்படிக்கு ஓடுவீங்க!

    நீ முகம் கழுவி, ட்ரஸ் மாத்திட்டு வாடா!

    அஜய் உள்ளே போனான்!

    ஜெயா ஒரு அரசாங்க பள்ளிக்கூடத்தில் டீச்சர்!

    நடுத்தர குடும்பத்திலிருந்து வந்த பெண்மணி! பொறுமை என்றால் அதுதான் ஜெயா!

    கணவனுக்கு சமமாக சம்பாதிக்கும் எந்த ஒரு அகங்காரமும் இல்லாத பெண்!

    பேராசை கிடையாது! இருப்பதை கொண்டு நல்லபடியாக குடித்தனம் நடத்தும் திறமை உள்ளவள்!

    அவள் சொல்வது நிஜம்தான்!

    சுஜிதாவை ஜெயா உண்டான போது, பெரிய இடத்தில் வேலை கிடைத்து அதிர்ஷ்டக்காற்று அவர் பக்கம் வீசத் தொடங்கிவிட்டது!

    அப்போது, முதல் அந்தப் பெண்ணின் மேல் அலாதி ஈடுபாடு பாசம் என்பதை விட, வெறி என்று சொல்லுமளவுக்கு அவள் மேல பாசம்!

    அதற்காக மகனைப் பிடிக்காமல் இல்லை.

    அவனையும் நேசிப்பார்.

    ஆனால் பெண் பல மடங்கு மேலே.

    அவரது அதிகப்படியான சலுகை, வசதிகள் அமைந்துவிட்டதால் சுஜிதாவின் பிடிவாதமும், முன்கோபமும் அவளுடன் சேர்ந்து வளர்ந்தது.

    சட்டென எதையும் ஒப்புக் கொள்ள மாட்டாள். நினைத்தது நடக்க வேண்டும். கேட்டது கிடைக்க வேண்டும். இல்லையென்றால் அவளது வீம்பும், வேகமும் கூடிப்போகும் சாதிக்காமல் விடமாட்டாள்.

    அப்பாவாக இருந்தாலும் தூக்கி எறிவாள். அவர் மகள் மேலே உள்ள ஆசையால் அதை தாங்கிக் கொள்வார். ஜெயாவால் முடியாது.

    அம்மா-மகளுக்கு மோதல் தான்.

    ஜெயா தப்புகளை சுட்டிக்காட்டுவாள். தன் பிள்ளைகளாக இருந்தாலும் அதை மழுப்பி மூடமாட்டாள். கண்டிப்பாள்.

    "பெண் குழந்தை இப்படி வளரக்கூடாது.

    நாளைக்கு இன்னொரு குடும்பத்தில் போய் வாழ வேண்டும். அனுசரித்து நடக்க பழக வேண்டும். வரும் கணவன் எப்படி இருப்பான்? என்று தெரியாது.

    அவனும் பிடிவாதமும், முன்கோபமும் உள்ளவனாக இதே மாதிரி அமைந்துவிட்டால் முட்டி மோதும் நிலை வந்து விடும்.

    பெண்தான் அடங்க வேண்டும். சில இடங்களில் குடும்பங்களில் உள்ள பந்தங்கள் தப்பாக நடந்தாலும் தட்டிக் கேட்ககூடாது. சகித்து கொள்ளத்தான் வேண்டும்." என்று சொன்னால் சுஜிதா ஒப்புக்கொள்ள மாட்டாள்.

    அது எப்படி முடியும்? பிடிக்காத சங்கதிக்கு என்னால் தலையாட்ட முடியாது. எதுக்கு தலையாட்டணும்

    அது உன் புகுந்த வீடுடி

    அதுக்காக அவங்களுக்கு கொம்பா மொளச்சிருக்கு

    அப்படி இல்லம்மா உங்கப்பாகிட்டகூட எனக்கு பிடிக்காத சங்கதிகள் இப்பவும் நிறைய உண்டு

    அப்பா கவனி!

    தெரியும்மா எனக்கு

    பேச விடுடி! அதுக்காக அதை நான் தட்டிக் கேட்கிறேனா

    கேட்கணும்மா

    கேட்டா, அவருக்குப் பிடிக்காதுடி! சண்டை வரும்! முடிவுல மனக்கசப்பு வரும்

    "அதுக்காக

    Enjoying the preview?
    Page 1 of 1