Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கோலாகலம்..!
கோலாகலம்..!
கோலாகலம்..!
Ebook124 pages2 hours

கோலாகலம்..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்று இரவு, அவரிடம் பேச வேண்டும் என்றாள் ஜெயந்தி! 

"என்ன விஷயம் ஜெயந்தி?'' 

"உங்களுக்கு வலது கையா இருக்கற சஞ்சயோட குடும்பம் எங்கேயிருக்குனு தெரியுமா உங்களுக்கு?" 

"எதுக்கு இப்ப இந்த கேள்வி? அந்த நாலு பேரும் வேலை போன ஆத்திரத்துல இங்கே வீட்டுக்கு வந்து உன்னை பார்த்தது எனக்கு தெரியும் ஜெயந்தி! நீயா சொல்லுவேன்னு நான் எதையும் கேக்கலை! அவங்க சஞ்சய் பற்றி தாறுமாறா உங்கிட்ட போட்டுட்டு போயிருப்பாங்க! அதான் உன்னோட அடுத்த கட்ட விசாரணை! நம்ம ஊர்ல புத்திசாலிகளை சுலபமா ஜீரணிக்க மாட்டாங்க! சீனியாரிட்டி பேசிட்டு சில கிழங்கள் இடத்தை விட்டு நகர விரும்பாது!" 

"நான் உங்களை கேக்கறதே வேற காரணத்துக்காக! சஞ்சய் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?" 

"அவனுக்கு பெத்தவங்க இல்லை! சின்ன வயசுல விபத்துல போயிட்டாங்க! இவன் ஒரு ஆர்ஃபனேஜ்ல வளர்ந்தவன்! கிறிஸ்தவ பாதிரியார் தான் இவனை ஆளாக்கியிருக்கார்! அவரை நான் பார்த்திருக்கேன்! சஞ்சய் கூட்டிட்டு போய் அறிமுகப்படுத்தினான். அவங்க சாரிட்டிக்கு நான் நன்கொடை தந்தேன்! அப்ப அந்த ஃபாதர் என்ன சொன்னார் தெரியுமா?" 

"இவனை மாதிரி ஒரு புத்திசாலியை பார்க்க முடியாது! அத்தனை உயர் படிப்புகளையும் ஸ்காலர்ஷிப்புல படிச்சவன்! எங்க இல்லத்துக்கே இவனால் பெருமைனு சொன்னார்! இவனை மாதிரி அனாதை பசங்க சுயம்புவா தலை நிமிர்ந்தா, அனாதைகள் சமூகத்துக்கு ஒரு மரியாதை உருவாகும்னு சொன்னார்! இதெல்லாம் தான் அவன் மேல நான் அதிக நம்பிக்கை வைக்க காரணம்! சில சமயம் குறுக்கு வழில போய் வர்த்தகங்களை ஜெயிப்பான்! அதை நான் கண்டிச்சு கேட்டதுக்கு, 

"யாருக்கும் நாம துரோகம் பண்ணலையே சார்! நேர்மை பேசி நாம விலகி நின்னா, இன்னொருத்தன் அதை குறுக்கு வழில தட்டிட்டு போவான்! எல்லாத்தையும் நேர் வழில அடைய முடியாது சார்! இங்கே நல்லவனை விட வல்லவனுக்குத்தான் மரியாதை அதிகம் சார்!" 

"அவன் சொல்ற எல்லாமே நடைமுறைல சரியா இருந்தது! புது தியரியை எனக்கு அவன் கற்பிச்சான்! ஒரு தப்பை செஞ்சாலும் சட்டத்துல உள்ள சந்து பொந்துகள்ள புகுந்து வரத்தெரியணும் சார்! இங்கே தலைமுறை மாறுது ஜெயந்தி! நியாயங்களை தனக்கு சாதகமா எல்லாரும் வளைச்சுக்கறாங்க! நாம அதுலேருந்து விலகி நின்னா, பின்னுக்கு தள்ளப்படுவோம்! இது கம்ப்யூட்டர் யுகம்! கணவனும் மனைவியும் சேராம குழந்தை உருவாகற காலம்! நீரோட்டத்துல நாமும் கலக்கலைனா, குப்பையா ஒதுக்கப்படுவோம்'' 

"நான் சஞ்சயை பார்த்து பேசணும்!" 

"நீ அவனை பார்த்திருக்கியே! வேலைக்கு சேர்ந்த அன்னிக்கு உங்கிட்டத்தானே ஆசிர்வாதம் வாங்கினான்?" 

"இப்ப பாக்கணும்! அதுக்கு முன்னால அந்த ஃபாதரையும் பாக்கணும்!" 

"நீ என்ன சொல்ல வர்றேன்னு எனக்கு புரியலை" 

"நான் சொல்றதை மட்டும் கேளுங்க! எதுக்குனு அப்புறமா நான் சொல்றேன்" 

"சரி! முதல்ல ஃபாதரை பாத்துடு! காலைல போகலாம்!" 

மறுநாள் காலை ஜெயந்தியை ஆர்ஃபனேஜுக்கு அழைத்து வந்தார் பட்டாபி! 

"நீ இவர் கிட்ட என்ன பேசணுமோ, அதைப்பேசு! எனக்கு ஏர்போர்ட் வரைக்கும் போகணும்" 

ஜெயந்தி அவரிடம் சுமார் ஒரு மணி நேரம் பேசினாள்! நேராக கம்பெனிக்கு வந்து விட்டாள்! சஞ்சய் தான் ஓடி வந்து வணங்கினான்! 

 

 

Languageதமிழ்
Release dateFeb 24, 2024
ISBN9798224971121
கோலாகலம்..!

Read more from Devibala

Related to கோலாகலம்..!

Related ebooks

Related categories

Reviews for கோலாகலம்..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கோலாகலம்..! - Devibala

    1

    வீடு கல்யாண பரபரப்பில் களைகட்டி விட்டது! கடந்த ஆறு மாதங்களாக சகல ஏற்பாடுகளும் நடக்கிறது! பட்டாபிக்கு எதை செய்தாலும் அதை திருந்த செய்ய வேண்டும்! செலவை பற்றி கவலைப்படாத மனிதன்! எதை வாங்கினாலும் அது முதல் தரமாக இருக்க வேண்டும்! ஒரு அப்பழுக்கு இருக்கக்கூடாது! கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் பட்டாபி! படிப்பு என்னவோ வெறும் பள்ளிக்கூட படிப்புதான்! சின்ன வயதில் அப்பா இறந்து ஒரு விதவை தாயார், இரண்டு தம்பிகள், இரண்டு தங்கைகளுடன் குடும்ப பாரம் தலையில் ஏற, பட்டாபி கலங்கவேயில்லை! நண்பர் மூலம் மும்பை வந்து அங்கே பலரிடம் அடிபட்டு, மிதிபட்டு, துறைமுகத்தில் வேலைக்கு சேர்ந்து படிப்படியாக ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் தன்னை பொருத்திக்கொண்டு, பத்து வருஷங்களில் இருபத்தி நாலு மணி நேரமும் உழைத்து தன் முப்பதாவது வயதில் தலை நிமிர்ந்து விட்டார்! அடுத்தடுத்து தன் தம்பி தங்கைகளை ஆளாக்க நிறைய செலவழித்தார்! லட்சங்களில் புரளத்தொடங்கி விட்டார்! மும்பை மகாலஷ்மி இவருக்கு அருளையும் பொருளையும் வாரி வழங்க, சுலபமாக கோடீஸ்வர அந்தஸ்த்தை எட்டி விட்டார்! முப்பத்தி இரண்டு வயதில் நன்றாக படித்த, தன் செயலாளராக வேலைக்கு சேர்ந்த ஜெயந்தியை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்! பங்களா, கார், நிலபுலன்கள், சொத்துக்கள் என நிறைய சேர்த்து விட்டார்!

    அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள், பிறந்து விட்டன! ஜெயந்திக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டுமென்ற ஆசை! மூன்று குழந்தைகள் வேண்டாம் என உறுதியாக சொல்லி அதற்கான அறுவை சிகிச்சைகளையும். முடித்து விட்டார் பட்டாபி! எதையும் ஒன்றுக்கு பலமுறை யோசித்து, அதை நிறைவேற்றுவதில் திடமாக இருப்பார்!

    தன் உடன் பிறப்புகளுக்காக லட்சங்களில் செலவழித்தார்! அவர்களை அவர்கள் காலில் நிற்க வைத்த பின் கதவுகளை மூடி விட்டார்!

    இரண்டு தங்கைகளையும் நன்றாக படிக்க வைத்து, வேலை வாங்கி தந்து நல்ல இடத்தில் கல்யாணம், தலா இரண்டு பிரசவங்கள், என எல்லாம் நடத்தினார்! அதன் பிறகு அவர்கள் வீடு கட்ட பணம் கேட்க, கடுப்பாகி விட்டார்!

    நீ நிறைய சம்பாதிக்கறே! அண்ணன்னு உரிமைல கேக்கறாங்க! குடுத்தா என்ன?

    அம்மா கேட்க, ஆவேசமானார் பட்டாபி!

    இதுக்கு மேல நீ பேசினா நான் அம்மானு கூட பார்க்க மாட்டேன்! காலம் முழுக்க நீ பெத்த புள்ளைகளுக்கு நான் செஞ்சுகிட்டே இருக்கணுமா? எனக்குனு ஒரு குடும்பம் இல்லையா? என் தம்பிகள், தங்கைகளுக்கு எத்தனை லட்சங்கள் செலவழிச்சிருக்கேன்னு இந்த டயரியை பாரு! அவங்க நாலு பேரையும் ஆளாக்கின பிறகு தான், நான் வீடு, வாசல், சொத்து சுகங்களை சேர்த்திருக்கேன்! என் பொண்டாட்டி புள்ளைங்களும் வாழணும் இல்லையா? ஏன்மா, அம்மாக்கள் திருந்தவே மாட்டீங்களா?

    தம்பிகளுக்கும் இதே நீதி தான்! பந்தபாசம் எப்போதும் உண்டு! வரலாம், போகலாம்! இன்றும் ஒரு தீபாவளி நாள் என்றால் ஒன்று கூடலாம்! எல்லாருக்கும் துணி மணிகளை எடுத்து அத்தனை செலவுகளையும் செய்வார்! இது தான் பட்டாபி!

    அவரது மூத்த மகள் அபிநயா! அவள் என்ஜினியரிங் முடித்து விட்டாள்! நல்ல படிப்பாளி! படிப்பு தவிர வேறெதிலும் கவனம் செலுத்தமாட்டாள்! கோல்ட் மெடலிஸ்ட், கல்லூரியில்! கல்லூரி வளாகத்தில், நேர்முகத்தில் மூன்று கம்பெனிகளில் தேர்வாகி, பெரிய சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டாள்!

    "என்னங்க! நம்ம கம்பெனி இருக்கும் போது அபி எதுக்கு வெளில வேலை பாக்கணும்? நம்ம பிசினஸை இம்ப்ரூவ் பண்ணலாம் இல்லையா?’’

    அம்மா ஜெயந்தி கேட்க,

    இல்லைம்மா! நான் என் கால்ல நிக்க ஆசைப்படறேன்!

    அவளை அவ போக்குல விட்ரு ஜெயந்தி! அவரவருக்கு ஒரு லட்சியம் இருக்கும்! நம்ம புள்ளைங்களா இருந்தாலும் நாம அதுல குறுக்கே நிற்கக்கூடாது!

    இரண்டு பெண்களும் பிறந்ததுமே ஜெயந்தி கம்பெனி வேலைக்கு வர வேண்டாம் என தடுத்து விட்டார் பட்டாபி!

    ரெண்டும் பெண் குழந்தைகள்! கவனமா வளர்க்கணும்! அது உன்னால மட்டும் தான் முடியும் ஜெயந்தி! நான் இருபத்தி நாலு மணி நேரமும் றெக்கை கட்டி பறந்து கிட்டு இருப்பேன்! நீதான் குழந்தைகள் மேல கவனம் செலுத்த முடியும்! குடும்பம், பிசினஸ் ரெண்டுலேயும் நிச்சயமா முக்கியமான முடிவுகளை உன்னை கேட்டுத்தான் எடுப்பேன்!

    அது தான் நடந்தது! மூத்த மகள் அபி, இரண்டாவது மகள் அர்ச்சனா இருவரையும் ஜெயந்தி தான் கண்ணுக்குள் வைத்து ஆளாக்கினாள்!

    அர்ச்சனாவுக்கு பாட்டு, நடனம், நல்ல பேச்சுத் திறன் எல்லாம் இருந்தது! அவள் விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பை தேர்ந்தெடுத்தாள்! புகைப்பட கலையில் அதிக ஆர்வம்! தவிர பப்ளிக் டீலிங் கூடுதல்! மீடியாவில் தன் பெயர் பேசப்பட வேண்டும் என நினைக்கும் பெண்! படிப்பு முடிவதற்குள், தொலைகாட்சியில் செய்திகள் வாசிப்பது, பிரபலங்களை பேட்டி காண்பது போன்றவைகளை ஆரம்பித்து விட்டாள்! ஃபோட்டோ ஜர்னலிசமும் முடித்து விட்டாள்! எந்த நேரமும் இருப்பு கொள்ளாமல் பரபரப்பாக இருப்பாள்!

    ஏண்டீ, இத்தனை வேலைகளை இழுத்து போட்டுட்டு செய்யறே? நம்ம கிட்ட இல்லாத வசதியா?

    அம்மா! எனக்கு பணம் சம்பாதிக்கறது முக்கியமில்லை! இது என்னோட பேஷன்! பட்டாபி மகள்னு ஒரு ஐ.டி. ப்ரூஃப் எனக்கு வேண்டாம்! அர்ச்சனா அப்பா பட்டாபினு சொல்லணும்!

    உதைப்பேன்! உங்கப்பா தான் நமக்கெல்லாம் அடையாளம்!

    இல்லைம்மா! இதை நான் ஏத்துக்கலை!

    சப்பாஷ்! இது தான் என் மகள்! நான் சின்ன வயசுல இதே துடிப்போட தான் இருந்தேன்! எனக்கான அடையாளங்களை நானே உருவாக்கிட்டேன்! என் ரத்தம், அர்ச்சனா உடம்புல அதிகமா பாயுது!

    நானும் அப்படி நின்னவ தான்! என்னை நீங்க அனுமதிச்சீங்களா?

    அதுல உனக்கு மனக்குறை இருக்கா ஜெயந்தி?

    இல்லீங்க! நல்ல புருஷன் கிடைச்ச பிறகு ஒரு பொண்ணு எதையும் விட்டுத்தரலாம்! எனக்கு என்ன குறை? இதைவிட ஒரு உயர்ந்த வாழ்க்கை யாருக்கு கிடைக்கும்? பெண்கள் ரொம்ப உயரம் போனா பிரச்னைகளும் கூடவே வரும்! அது குடும்பத்தையும் பாதிக்கும்! நான் பெண்களை மட்டம் தட்டலை! நானும் படிச்சவதான்! சமூகத்துல உச்சம் தொட்ட பெண்கள் பலருக்கு சொந்த வாழ்க்கை சோக வாழ்க்கை ஆனது உலகத்துக்கே தெரியும்!

    அம்மா! நான் எனக்குனு எல்லை கோடுகளை வகுத்துட்டு தான் வாழ்வேன்!

    இது தான் பட்டாபி குடும்பம்!

    இந்த நிலையில் பட்டாபியின் கம்பெனியில் வேலைக்கு வந்து சேர்ந்தான் சஞ்சய் என்ற இளைஞன்! உயர் கல்வி, அழகு, கம்பீரம் என எதிலும் குறைவில்லாதவன்! மார்க்கெட்டிங் டிவிஷனுக்கு ஒரு அதிகாரியை தேடி நேர்முகம் ஏற்பாடு செய்ய, சஞ்சய் அதை சந்திக்க வந்தான்! எம்.பி.ஏ.படித்தவன்! அது தவிர இன்னும் சில கல்வி தகுதிகளும் அவனுக்கு இருக்க, நேர்முகத்தில் அவனது அறிவை பார்த்து மிரண்டு போனார் பட்டாபி! அவனை தேர்ந்தெடுத்து விட்டார்! வேலைக்கு சேர்ந்த ஆறே மாதங்களில் பல பெரிய வர்த்தகங்களை பட்டாபியின் காலடியில் கொண்டு வந்து சேர்த்தான்! போட்டி கம்பெனிகளை காணாமல் போக வைத்தான்! பட்டாபி மிரண்டார்! பலரை

    Enjoying the preview?
    Page 1 of 1