Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தப்பிக்க முடியுமா..?
தப்பிக்க முடியுமா..?
தப்பிக்க முடியுமா..?
Ebook97 pages32 minutes

தப்பிக்க முடியுமா..?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஜோசியரைக் கலந்து கோபால் மூன்று தேதிகளைக் குறித்துக் கொண்டு வந்துவிட்டான்.
 "அண்ணே! இதுல ஒண்ணைத் தேர்ந்தெடு!"
 "கோபால்! இதெல்லாம் பொண்ணு வீட்டுக்காரங்க வேலைடா!"
 "இருக்கட்டும். யார் செஞ்சா என்ன?"
 "இல்லைடா! நமக்குனு ஒரு கௌரவம் இருக்கு! அதை விட்ரக்கூடாது."
 "இதுல நம்ம கௌரவம் என்ன கெட்டுப்போச்சு! நான் போற வழில அவங்க வீட்ல இந்தத் தேதிகளைக் குடுத்துட்டுப் போறேன்."
 கோபால் புறப்பட்டுவிட்டான்.
 தனம் வெளியே வந்தாள்.
 "பாத்தீங்களா? தேதிகளை எடுத்துக்கிட்டு இவர் போறாராம்! நல்லா இருக்கா? இந்தக் கல்யாணம் நடந்துட்டா, இவரை மாட்டுக்காரனைவிட கேவலமா அந்த வீட்ல நடத்தப் போறாங்க!"
 "தனம்...!"
 "கோவப்படாதீங்க! உங்கம்மா உயிரோட இருந்தா, பேசுவாங்களா மாட்டாங்களா?"
 "என்னை என்னடீ செய்யச் சொல்றே?"
 சபாபதிக்கு ஆத்திரம் வந்துவிட்டது.
 "நீங்க எங்கிட்ட கோவப்படாதீங்க! சொல்ற கடமை இருக்கு, சொல்லிட்டேன். நம்ம குடும்பம்னு ஆயாச்சு. தாங்கிக்க முடியலை. அப்புறம் நீங்க குடும்பத் தலைவர். என்ன முடிவெடுத்தாலும் சரி.அப்பாவிடம் வந்தார் சபாபதி.
 "என்னப்பா இது...?"
 "தனம் சொல்றதுல தப்பே இல்லை. நமக்குனு ஒரு மரியாதை இருக்கு. அதை நாமதான் காப்பாத்திக்கணும். கோபாலுக்கு அது புரியாது."
 "நீங்க பேசுங்கப்பா!"
 "யார் பேசியும் லாபமில்லை சபா! கோபாலுக்கு புடிச்சுப்போச்சு! நல்லதோ, கெட்டதோ - வாழறப்போறவன் அவன். நீ ஏன் பேசி கெட்ட பேர் எடுக்கற? தனத்துக்கிட்ட சொல்லு! நடக்கறது நடக்கட்டும்."
 சபா யோசித்தான்.
 "சரிப்பா!"
 "பேச்சைக் குறைக்கணும் சபா. அதிகம் பேசினா, நோய்லதான் வந்து முடியும். புரியுதா?"
 "புரியுதுப்பா...!

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 8, 2023
ISBN9798215915547
தப்பிக்க முடியுமா..?

Read more from Devibala

Related to தப்பிக்க முடியுமா..?

Related ebooks

Related categories

Reviews for தப்பிக்க முடியுமா..?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தப்பிக்க முடியுமா..? - Devibala

    1

    வேதாவுக்கு தன் புருஷனைக் கண்டாலே பிடிப்பதில்லை! அப்படி ஒரு வெறுப்பு!

    என்ன காரணம்?

    பல காரணங்கள். கொஞ்சம் கொஞ்சமாக கசப்பு படிந்து பெரிதாகிவிட்டது. தாம்பத்யத்தில் முக்கியமான ஒரு பகுதி - ஒருவரையொருவர் கடைசி சுவாசம் வரைக்கும் நேசிக்க வேண்டும். கோபதாபம், ஊடல், எல்லாமே வந்துபோகும். வந்தால்தான் வாழ்க்கையில் சுவை. ஆனால், ஆரம்பம் முதலே வேதாவுக்கு கோபாலைப் பிடிக்கவில்லை.

    வேதாவுக்கு அப்பா இல்லை.

    அம்மாவும், ஒரு தம்பியும், ஒரு தங்கையும் மட்டும்தான்.

    அப்பா இறந்ததால், அந்த நிறுவனத்தில் தம்பிக்கு வேலைகொடுத்து விட்டார்கள். வேதாவும் +2 வரை படித்தவள். சொல்லும்படியாக அழகொன்றும் இல்லை. நிறமும் குறைச்சல். போதாக் குறைக்கு அப்பா இல்லை. பணப் பிரச்சனை.

    24 வயது கடந்துவிட, அம்மா பயந்துவிட்டாள்.

    வந்த வரன்கள் அவளைத் தட்டிக் கழித்தன.

    இந்த நிலையில் கோபாலின் ஜாதகம் பொருந்தியிருப்பதாக தரகர் வந்து சொன்னார்.

    விற்பனை பிரதிநிதி - சுமார் சம்பளம் - வயதான ஒரு அப்பா, அண்ணன், அண்ணி - அவர்கள் குடும்பம்! வரச்சொல்லலாமா பெண்ணைப் பார்க்க என்று கேட்க,

    அம்மா உடனே வரச்சொல்லி விட்டாள்.

    கோபால் அந்த வாரக் கடைசியில் வேதாவைப் பெண் பார்க்க வந்துவிட்டான்.

    அப்பா, அண்ணி, குழந்தைகள் வந்திருந்தார்கள்.

    கோபாலும் ரொம்ப அழகில்லை. சுமார் ரகம்தான்.

    வந்த சிலநொடிகளில் தன் வீடு போல கலகலப்பாக பேசத் தொடங்கிவிட்டான்.

    வேதா வந்தாள். பார்த்தான்.

    தனக்கு அழகு முக்கியமில்லை. நல்ல குணம் வேண்டும் என்றான்.

    தனக்கு, வேதாவைப் பிடித்திருக்கிறது என்றான்.

    மற்ற விஷயங்களைப் பேசத் தொடங்க, தன் அப்பா அண்ணியை பேசவிடாமல் கோபாலே பேசிவிட்டான்.

    உங்ககிட்ட என்ன இருக்கோ, அதைச் செய்ங்க. ஒரு கோயில்ல வச்சுக் கல்யாணத்தை நடத்தினால்கூட போதும் என்றான்.

    வேதாவின் அம்மாவுக்குப் பிடித்துவிட்டது.

    அண்ணனிடம் பேசிவிட்டு நிச்சயத்துக்குத் தேதி குறிக்கலாம் என்றார்கள்.

    வீடு திரும்பிவிட்டார்கள்.

    கோபாலின் அண்ணன் சபாபதி இருந்தார்.

    எனக்கு பொண்ணைப் புடிச்சுப் போச்சு. தேதி குறிக்கலாம். என்றான் கோபால்.

    நீ எதுவும் பேசலயேடி...

    உங்க தம்பி எங்கே பேசவிட்டார்? எல்லாத்தையும் அவரே பேசி முடிவெடுத்துட்டாரே!

    அப்பா அதிகமாக பேசமாட்டார்.

    என்னடா கோபால்?

    அவரை ஏன் கேக்கறீங்க? வீட்டுக்குப் பெரியவங்கனு நானும், மாமாவும் போயிருக்கோம். இவர் கொஞ்சம் அடக்கி வாசிக்கணும். இல்லைன்னா வரப் போறவ நம்ம யாரையும் மதிக்க மாட்டா. விருப்பப்பட்டதை செய்ங்க, கோயில்ல கல்யாணம்னு எதுக்கு வாயை விடணும்?

    அண்ணி! அவங்க வசதி குறைஞ்ச குடும்பம். அந்தப் பொண்ணுக்கு அப்பா இல்லை!

    சரி தம்பி! அப்பா இல்லைனா, தம்பி இருக்கான். அவங்க வீட்டுப் பொண்ணை கரை சேக்கறது அவங்க பொறுப்பு. நீங்க எதுக்கு பரிதாபப் படறீங்க...?

    அப்படி இல்லை! நமக்கும் ஒரு மனிதாபிமானம் வேண்டாமா?

    எனக்கது இல்லைனு சொல்றீங்களா?

    அய்யோ! நான் உங்களை எதுவுமே சொல்லலியே அண்ணி!

    இதப்பாருங்க! இன்னிக்கு நடந்தது எனக்குப் பிடிக்கலை! எனக்கு இதுல தலையிட உரிமையும் இல்லை. கல்யாணத்துக்கு வந்து வாழ்த்திட்டு சாப்டுட்டு போறேன்!

    எழுந்து உள்ளே போய்விட்டாள்.

    அண்ணி ஏன் இப்படிக் கோவப்படறாங்க?

    கோபால்! அவ சொல்றதுல தப்பில்லை. நாம ரொம்பத் தாழ்ந்து போனா, தலைல ஏறிடுவாங்க. கல்யாணப் பேச்சுக்கெல்லாம் ஒரு முறை இருக்கு.

    எனக்குப் புடிச்சிருக்கு!

    சரி! வாழப்போறது நீதான்! இதுதான் நடக்கணும்னு யோகமிருந்தா நடக்கும்.

    எழுந்து உள்ளே வந்தான்.

    ஏன் தனம் கோவப்படற...?

    இதப்பாருங்க. அந்தப் பொண்ணு வேதா ரொம்ப ரொம்ப சுமாரா இருக்கா! சரி அழகை விடுங்க. ஆனா முகத்துல ஒரு சிரிப்புகூட இல்லை. பத்து வார்த்தைக்கு ஒரு வார்த்தை பதில். வேற பொண்ணா இல்லை... உங்க தம்பி கேக்கவே வேண்டாம். போன எடத்துல கௌரவமா இருக்காம, சளசளன்னு பேசறார். எப்படி மதிப்பாங்க?

    அது அவன் சுபாவம்டி...

    மாத்திக்கணும். வெளித் தோற்றத்துல ஒரு மனுஷனுக்கு அழகு இல்லைனாக் கூட பரவால்லை. உள் அழகை வளர்த்துக்கணும். இல்லைனா எல்லாரோட கேலிக்கும் ஆளாவோம்.

    அவன் வளர்ந்த விதம் அப்படி!

    தப்பில்லை. நமக்கு பழகிப்போச்சு! எல்லாருக்கும் சரிப்படுமா?

    விடு! அவனுக்கு அந்தப் பொண்ணைப் பிடிச்சிருக்கு. தரகர் மூலமா நான் விசாரிக்கறேன். அவதான் இங்கே வரணும்னா வரட்டுமே!

    அவ இந்த வீட்டுக்கு வந்தா, வீட்டோட நிம்மதியே போய்டும்னு எனக்குத் தோணுது.

    ஏன் தனம் இப்படி பேசற?

    மனசுல பட்டதைச் சொன்னேன். விதி அப்படித்தான்னு இருந்தா, நான் நெனச்சு மாத்த முடியுமா என்ன?

    எழுந்து போய்விட்டாள் .

    அண்ணனுக்கு கலவரமாக இருந்தது.

    அதேசமயம்-

    வேதா வீட்டில் விவாதம் சூடுபிடித்திருந்தது.

    "ஏண்டி

    Enjoying the preview?
    Page 1 of 1