Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மாப்பிள்ளைத் தோழன்
மாப்பிள்ளைத் தோழன்
மாப்பிள்ளைத் தோழன்
Ebook109 pages37 minutes

மாப்பிள்ளைத் தோழன்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"பொண்ணு வேலையை விடமாட்டா!" 

"எதுக்கு விடணும்? வீட்ல ஓக்காண்டு பேன் பார்க்கவா பொம்மனாட்டி படிக்கறா. போயிட்டு வரட்டும். நாலு காசு வந்தா குடும்பத்துக்கு நஷ்டமா?" 

சொன்னது அத்தை- ரமணியின் அத்தை. 

அப்பாவின் அக்கா. அறுபதைக் கடந்தவள். பன்னிரண்டில் கல்யாணம் முடித்து அதன் பிறகே பருவமடைந்து புருஷ சுகத்தை உணரும் முன்பே பூவை இழந்தவள். 

அந்தக்காலப் பெரியவர்களின் அவசரம், சமூக நிர்ப்பந்தம்... 

அத்தைக்கு தலையை மழித்து, நார்மடி சேலையக் கட்டிவிட்டு விட்டார்கள். 

அது முதல் தம்பியின் குடும்பத்தில் ஐக்கியமாகி, அவன் பெற்ற குழந்தைகளை பொத்திப் பொத்தி வளர்த்து.. அத்தையில்லா விட்டால் அந்த வீட்டில் அணுவும் அசையாது என்ற நிலை இன்று. 

அம்மாவுக்கு இப்போதுகூட ஆதங்கம்தான். 

கணவனும் சரி, குழந்தைகளும் சரி, நாத்தனார் சொல்படிதானே நடக்கிறார்கள்.

இது சில சமயம் யுத்தமாக வெடிக்கும் சமயம் வரும். ஆனால் வெடிக்காது. இப்போது வயதாகி விட்டதால் அம்மாவுக்கும் பக்குவம் வந்துவிட்டது. 

"மற்றபடி சேஷன் குடும்பம் நல்ல குடும்பம். நாளைக்கு போறம் இல்லையா?"

"என்னக்கா?" 

''நாள் நன்னாருக்கு. போய்ப் பார்த்துட்டு வந்துருங்கோ நாலு பேருமா!"

"யாரு நாலு பேர்?" 

"நீ, சிவகாமு, ரமணி, அவனோட ஸ்நேகிதன்!" 

"நீ?" 

"என்ன பேசற நீ? மழிச்ச தலையும், நார்மடியுமா நான் வரணுமா? வரலாமா? எல்லாம் நீங்க பார்த்து முடிவெடுத்தா போதும். அவரோட ஸ்நேகிதன் சரியாக கணக்குப்போடுவான். அவனை முடிவெடுக்க விடுங்கோ!" 

"சரிக்கா" 

மறுநாள் அரை நாள் லீவில் வந்துவிட்டான் ரமணி. 

"அவன் வரலியாடா?" 

"நேரா அங்கே வந்துருவான். எத்தனை மணிக்குப் போகணும் அத்தே?" 

"ஏண்டா பறக்கறே? சரி சரி வா! டிபன் எடுத்துக்கோ!" 

"அவாத்துல சொஜ்ஜி, பஜ்ஜி தர மாட்டாளா? வயத்தைக் காலியா வச்சின்டு போறது நல்லதில்லையா?" 

"உனக்கு இன்னும் குழந்தைத்தனமே மாறலடா ரமணி. நீ குடித்தனம் நடத்தி.... அழகுதான் போ." 

"அப்படி வளர்த்து வச்சிருக்கேள் அவனை!" 

"என்னடீ தப்பு? உன் ஆம்படையானை வளர்த்ததும் நான்தான். என்ன குறைச்சல் இப்ப உனக்கு?" 

அம்மா பேசவில்லை. 

அத்தையை விவாதத்தில் வெல்ல அந்த வீட்டில் யாராலும் முடியாது. அத்தனை சாதுர்யமாக மடக்கி விடுவாள். 

நேரம் ரெண்டரை! 

"சிவகாமு நீ ரெடியா?" 

"வர்றேன்கா!" அம்மா வெளியே வந்தாள். 

"இதென்ன முன் கொசுவம் வச்சு சின்னப் பெண்ணாட்டம்? நாட்டுப் பொண் வரப்போறா. உனக்கே இன்னும் இளமை போகலைன்னு நினைப்பு. அழகா மடிசார் கட்டிண்டு போ." 

"தடுக்கித் தடுக்கிண்டு..." 

"என்னடி முணுமுணுப்பு?" 

"ஓ... ஒண்ணுமில்லைக்கா. கட்டிண்டு வர்றேன்!" 

"தபாருடா விசு! அங்கே போய் கெக்கே பிக்கேன்னு வழியாதே! பேச்சுல தெளிவா இரு!" 

"என்ன பேசணும்னு நீ சொல்லலியே!" 

"சரியாப்போச்சு. வரதட்சணை அது இதுன்னு எதுவும் கேட்டுத் தொலையாதே! அவா செய்யறதைச் செய்யட்டும். பொண்ணை உங்க எல்லாருக்கும் பிடிச்சிருந்தா, முடிவு பண்ணிடுங்கோ!" 

"நீ பார்க்க வேண்டாமா அத்தே?" 

ரமணி குறுக்கிட்டான். 

"உங்களுக்கெல்லாம் பிடிச்சா எனக்கும் பிடிக்கும். கிளம்புங்கோ சீக்கிரம். சிவகாமு, இன்னும் நீ மடிசார் கட்டிண்டு ஆகலையா?" 

"பின்னால வழிச்சுக்கறதுக்கா!" 

"கஷ்டம்! மூணு பெத்தாச்சு. ரெண்டு பொண்களைக் குடுத்து, பேரண் பேத்தி கூடப் பார்த்தாச்சு. இன்னமும் மடிசார் கட்டத்தெரியல நோக்கு. வர்றேன் இரு!" 

அத்தை உள்ளே போனார். 

Languageதமிழ்
Release dateFeb 26, 2024
ISBN9798224644032
மாப்பிள்ளைத் தோழன்

Read more from Devibala

Related to மாப்பிள்ளைத் தோழன்

Related ebooks

Reviews for மாப்பிள்ளைத் தோழன்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மாப்பிள்ளைத் தோழன் - Devibala

    1

    பொருத்தம் அமோகமா இருக்கு!

    அப்படியா?

    ஜாதகத்துல பத்துப் பொருத்தமும் அம்சமா பொருந்தறது. நம்ம பத்மாவுக்கு ஏற்ற வரன் இந்த பிள்ளையாண்டான்தான்!

    என்ன வயசு?

    இருபத்தியெட்டு- உங்க பத்மாவைவிட மூணு வயசு பெரியவன். நல்ல உத்யோகம். மாசம் ஆறாயிரம் ரூபா சம்பளம். தவிர, கண்டும் காணாம வரும்படி!

    லஞ்சமா?

    அய்யோ இல்லை! கமிஷன். ரமணி தங்கமான பிள்ளை. தப்பான காரியத்துக்கு ஒரு நாளும் போகமாட்டான். ரெண்டு தங்கைகளுக்கும் கல்யாணம் ஆயாச்சு. சொந்தவீடு. பெத்தவா ரெண்டு பேரும் பசுவாட்டமா, அதிர்ந்து பேசமாட்டா. ஒரு விதவை அத்தை. குடும்பமும் சின்னதுதான். நாளைக்கே நம்ம பத்மா போயிட்டா, இவ பேச்சைக் கேட்டு நடப்பா எல்லாரும்

    அப்பா சந்தோஷப்பட்டார்..

    அம்மாவையும் அது தொற்றிக் கொண்டது.

    நம்ம பத்மா உத்யோகம் பாக்கறதுல அவாளுக்கு ஒண்ணும் கஷ்டமில்லையே?

    பணம் நிறைய இருக்கு. தேவையில்லை. அங்கே போன பின்னால வேலை வேண்டாம்னா விட்டுக்கட்டும்!

    நத்திங் டூயிங்! சேலைத் தலைப்பை எடுத்து அவசரமாக மேலே போட்டுக்கொண்டு வெளியே வந்தாள் பத்மா.

    வேலையை மட்டும் நான் விடமாட்டேன். நாலாயிரத்துக்கு மேல சம்பளம் வர்ற உத்யோகம் கிடைக்குமா எல்லாருக்கும்? நிச்சயம் விடமாட்டேன்!

    சரி! இப்ப அதுவா பிரச்னை? என்னிக்குப் பெண் பார்க்க வரச் சொல்லட்டும் அவாளை?

    இந்த வாரம் ஆபீஸ்ல இன்ஸ்பெக்ஷன். வசதிப்படாது!

    ஞாயிற்றுக்கிழமை?

    நான் ஸ்நேகிதி ஒருத்தியோட கல்யாணத்துக்கு காஞ்சிபுரம் போகணும். சான்ஸே இல்லை!

    பின்ன எப்ப?

    இன்னும் ரெண்டு ஞாயிறு முடியாது. மே டே அன்னிக்குப் பார்க்கலாமா?

    ஒரு மாசம் கழிச்சா?

    எனக்கு அப்பத்தான் டயம்!

    இது நன்னால்லை பத்மா. இப்பவே உன் பிடிவாதம் பெரிசானா, எதுவும் சரிப்படாது. நாளை மறு நாள் பர்மிஸன் போட்டுட்டு வா. மத்யானம் மூணறைக்கு அவாளை வரச் சொல்லுங்கோ பஞ்சாட்சரம்! அப்பா உத்தரவிட்டார்.

    மற்றபடி லௌகீக சங்கதிகள்? அம்மா இழுத்தாள்.

    பெரிசா எதிர்பார்க்க மாட்டா. வந்து பேசுங்கோ!

    தபாருங்க மாமா. வரதட்சணை அது இதுன்னு பத்தாம்பசலித்தனமா பேசற பையனா இருந்தா, இந்த ஆத்துக்குள்ள காலை வைக்கப்படாது, ஆமா!

    பத்மா!

    நான் வர்றேன் சார்!

    அவர் போய்விட,

    அம்மா எரிச்சலுடன் பத்மாவைப் பார்த்தாள்.

    இப்படி ஜான்சிராணி மாதிரி மாரை நிமிர்த்திண்டு அவா எதிர்ல பேசாதே. கொஞ்சம் அடங்கு. பொம்மனாட்டினு மறக்காதே!

    சரியான ஒரு ஆம்பிளையைத்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்.

    நாங்களும் எல்லாரும் அப்படி பண்ணிண்டவாதான். அதனாலதான் ஆம்பளையாட்டம் உன்னைப் பெத்து வச்சிருக்கேன்!

    எனக்கு ஆபீசுக்கு நேரமாச்சு. சாதத்தைப் போடு!

    அம்மாவைப் பின்தொடர்ந்து நடக்கும் தன் ஒரே மகளைக் கவலையுடன் ஏறிட்டார் சேஷன்.

    அதிகபட்ச செல்லமா, அதீத சுதந்திரமா, உத்யோக தைரியமா எது இவளை இத்தனை முரட்டுத்தனமாக மாற்றியது? ஒரு வீட்டில் போய் நல்லபடியாக இந்தப் பெண் அனுசரித்து வாழுமா?

    தெருவில்கூட இவள் முதுகில் ‘ஆம்பளைப் பாப்பாத்தி’ என்ற விமர்சனம் வந்து மோதுவதை அப்பாவே கேட்டதுண்டு.

    இடுப்பில் விரல் பட்டுவிட்டது என்ற காரணமாக பஸ்ஸில் ஒருவனை பட்டென அறைந்து காலைநேர போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தவள் இந்த பத்மா.

    அலுவலகத்திலும் ‘ஜொள்’ பார்ட்டிகள் எதுவும் இவள் இருந்த திசைப்பக்கமே தலைவைத்துப் படுக்கமாட்டார்கள்.

    இவளைக் கண்டால் சிம்ம சொப்பனம்.

    பத்மா அலுவலகம் புறப்பட்டுப் போய்விட்டாள்.

    ஏன்னா?

    சொல்லுடி!

    இந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணப்போய் என்னல்லாம் அவமானப்படப் போறமோ?

    அதுக்காக வளர்ந்த பொண்ணை ஆத்துக்குள்ள வச்சிண்டே எத்தனை காலம் இருக்கறது?

    இவ தன்னைக் கொஞ்சம் மாத்திக்கணும்!

    தோணலை! உறவு மாறும்போது மனசும் மாறும்னு நம்புவோம். வர்றவன் இவளை விட அராத்துப் பேர்வழியா இருந்தா, இவ பல்லைப் புடுங்கட்டும். இல்லைனா இவளுக்கு கூஜா தூக்கட்டும். இதுக்கு மேல நம்மால என்னடீ செய்ய முடியும்?

    அவரும் எழுந்து புறப்பட்டு விட்டார்.

    ரொம்ப எதிர்பார்ப்பாளோ?

    நம்மகிட்ட பணமா இல்லை? என் பயம் அதுல்லை. இவ குறுக்கே பேச வந்துருவாளேங்கறதுதான்!

    அதை நான் சமாளிச்சுக்கறேன்!

    எனக்கென்னவோ, இந்த இடம் குதிரும்னு தோணறது!

    அதே நேரம்,

    பத்மா தன் கேபினுக்குள் உட்கார்ந்து, ஃபைலைப் பார்க்கத் தொடங்கினாள்.

    ஸ்டெனோவுக்கு தயாரிக்க வேண்டிய கடிதங்களைக் குறித்துக் கொண்டாள்.

    மணியடித்தாள்.

    ஸ்டெனோ வர,

    லெட்டர் எடுத்துக்குங்க!

    தன் சரளமான ஆங்கிலத்தால் கடிதங்களை சொல்லத் தொடங்கினாள்.

    மூன்று கடிதங்களை முடித்துவிட்டு,

    சீக்கிரம் ரெடி பண்ணுங்க! வெளில ஒரு பிரஸ்மீட் இருக்கு. எம்.டி. என்னைத்தான் போகச் சொல்லியிருக்கார்!

    சரி மேடம்!

    அது பங்கு மார்க்கெட் பற்றிய விவரங்களை பொதுமக்களுக்கு, பத்திரிகைகளுக்கு என்று தகவல் தரும் ஒரு கன்சல்டன்ஸியை தன்னிடம் வைத்திருந்த நிறுவனம். பங்கு மார்க்கெட் தொடர்பாக அடிக்கடி பெரிய ஓட்டல்களில் ப்ரஸ்மீட் நடைபெறும். அதை எதிர்கொள்ள ஆங்கிலப்புலமை சற்று அதிகம் வேண்டும். அதனால் எம்.டி.பத்மாவை அனுப்புவார்.

    கடிதங்கள் வர, கையெழுத்திட்ட பத்மா, எழுந்துவிட்டாள்.

    வண்டி ரெடியா?

    ரெடிம்மா! என்றான் ப்யூன்.

    சரசரவென நடந்து வாசலை நெருங்கி விட்டாள்.

    "மேடம், எம்.டி. கூப்பிடறார்!"

    நேரமாச்சு. மீட் முடிஞ்சு வந்த பின்னால சந்திக்கறேன்னு சொல்லு!

    இதையே இன்னொருவர் சொல்லியிருந்தால், உத்யோகம் போயிருக்கும். ஆனால் இவளை ஒன்றும் செய்ய முடியாது அவரால். அத்தனை கெடுபிடி பத்மா.

    காரில் ஏறினாள். டிரைவர் வண்டியை எடுத்தான். சாய்ந்து உட்கார்ந்து நகரத்தை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்.

    அந்த

    Enjoying the preview?
    Page 1 of 1