Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Raasi
Kaadhal Raasi
Kaadhal Raasi
Ebook94 pages30 minutes

Kaadhal Raasi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நர்மதா என்ற பெண் பாஸ்கரை காதலிக்கிறான். அவ்வாறு சம்மதம் பெறும் நேரத்தில் நர்மதாவின் அப்பாவிற்கு என்ன ஆனது? கல்யாணராமனை நர்மதா மணமுடிக்கும் நேரத்தில் என்ன அனது? இதில் யாருக்கு காதல்ராசி இல்லை . வாசித்து அறிவோம்....

Languageதமிழ்
Release dateOct 25, 2021
ISBN6580100606639
Kaadhal Raasi

Read more from Devibala

Related to Kaadhal Raasi

Related ebooks

Reviews for Kaadhal Raasi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Raasi - Devibala

    https://www.pustaka.co.in

    காதல் ராசி

    Kaadhal Raasi

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    இன்னிக்கு மத்யானம் அரைநாள் லீவு போட்டுட்டு வாம்மா!

    எதுக்குப்பா?

    உன்னைப் பெண் பார்க்க வர்றாங்க!

    யாரு?

    நல்ல வரன்தான். கம்பெனி ஒண்ணுல லீகல் அட்வைசரா இருக்கான் பையன். கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபா சம்பளம். சொந்த வீடு, சொத்துக்கள் எல்லாம் இருக்கு. நல்ல குடும்பம். ஒரே பையன். உனக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. உன் போட்டோ பார்த்து அவனுக்குப் புடிச்சாச்சு! நீ அவனைப் பார்க்கணம்னுதான் இங்கே வர்றான்.

    நர்மதா பேசவில்லை.

    ஏம்மா ஒண்ணும் சொல்லலை?

    நீங்க என்னைக் கேக்காம, இது மாதிரி ஒருத்தரை வரச்சொன்னது தப்புப்பா!

    அம்மா வெளியே வந்தாள்.

    நீ யாருகிட்ட பேசறேன்னு நினவிருக்கா நர்மதா உனக்கு?

    நீ சும்மாரும்மா! கட்டிக்கப்போறவ நான். அப்பா என் விருப்பம் கேக்காம யாரையும் வரச்சொல்றது சரியில்லை!

    அவன் உன்னைப் பார்க்கத்தான்மா வர்றான். கல்யாணமா நடந்து போச்சு? பாக்க வர்றதுல என்னம்மா தப்பு?

    தப்புதான்பா! ஒரு பெண்ணோட உணர்வுகள் சம்பந்தப்பட்ட விஷயம் இது! அதை நீங்க ஏன் புரிஞ்சுகலை?

    அப்பா சன்னமாக அடிபட்டார்.

    நிறுத்துடி! பேசிட்டே போறியே!

    விடு! அவ பேசட்டும். இப்ப என்னம்மா சொல்ற? அந்தப் பையனை வரவேண்டாம்னு நான் சொல்லணுமா?

    ஆமாம்பா!

    சரி சொல்லிர்றன். என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா?

    இதை நீங்க இத்தனை தாமதமா கேட்டிருக்க வேண்டாம்பா! போகட்டும். நான் இன்னும் கொஞ்சநாள் கழிச்சு சொல்லலாம்னு நெனைச்சேன்!

    அப்பா அம்மா முகத்தைப் பார்த்தார்.

    இரண்டு பேரிடமும் சின்னக் கலவரம் இருந்தது.

    நர்மதா அதிக நேரம் அதை நீடிக்கவிடவில்லை.

    நான் ஒருத்தரை நேசிக்கறேன்!

    நெனைச்சேன்!

    சொன்ன அம்மாவை, அப்பா முறைத்தார்.

    நீ சொல்லும்மா!

    அவரும் படிச்சவர்தான். ஒரு கம்பெனில நல்ல உத்யோகத்துல இருக்கார். மாசம் எட்டாயிரம் சம்பளம்!

    எத்தனை நாளாம்மா இந்தக் காதல்?

    ஒண்ணரை வருஷமா!

    "ஏன் எங்கிட்ட சொல்லலை?''

    ரெண்டு பேருமே அவசரப்படலை! ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க அவகாசம் வேணும்னு நெனைச்சோம்.

    இப்ப புரிஞ்சுகிட்டாச்சா?

    ஓரளவு!

    அவனுக்கு பெத்தவங்க, கூடப்பிறப்புகள் எல்லாம் உண்டா?

    சொல்லும்படியா யாருமில்லை! பேச்சிலர் மேன்ஷன் ஒண்ணுல தங்கியிருக்கார்!

    நம்ம ஜாதியா? அம்மா அவசரப்பட்டாள்.

    இல்லைம்மா!

    என்னது? அம்மாவின் குரல் அலறலாக வெளிப்பட்டது.

    ஏம்மா பதட்டப்படற? அவர் மனுஷ ஜாதிதான். அது போதாதா உனக்கு? தாலி கட்டிக் கூட்டிட்டுப் போனா, என்னை நல்லபடியா வச்சுக் காப்பாத்தத் திராணி உண்டு. இதைவிட நல்ல தகுதி ஒரு ஆம்பிளைக்கு என்னம்மா வேணும்?

    என்னங்க இவ இப்படி பேசறா?

    அப்பா பேசவில்லை!

    ஜாதி இல்லை! குலம், கோத்திரம் தெரியலை! எவனையோ இந்த வீட்டு மாப்பிள்ளையா எப்படி ஒப்புக்கறது?

    முடிஞ்சா ஒப்புக்கோ! அவர் இந்த வீட்ல வந்த வாழப்போறதில்லை. நான்தான் அவர் வீட்டுக்குப் போகணும்.

    அவனுக்குத்தான் வீடுன்னே ஒண்ணு இல்லையே.

    நிறுத்தும்மா! எனக்கு அவரைப் பிடிச்சிருக்கு! இதுக்கு மேல நான் ஒண்ணும் சொல்றதுக்கில்லை!

    என்னங்க! நீங்க பேசாமலே இருந்தா எப்படி? இவ இப்படி நம்ம தலைல கல்லைத் தூக்கிப் போட்டுட்டாளே! நாளைக்கு நம்ம சாதி சனம்னு ஒருத்தர் மூஞ்சில எப்படி முழிப்போம்?

    ஏம்மா... உனக்கு பெத்த பெண்ணைவிட சாதி சனம்தான் முக்கியமா?

    ஆமாண்டி! பெத்து வளர்த்த எங்களைக்கூட மதிக்காம எவனையோ கட்டிப்பேன்னு ஒத்தக் கால்ல நிக்கறியே! நீமட்டும் எங்களை மதிச்சியா?

    "நிறுத்து மரகதம்! அவ பிடிவாதமா இருக்கா! வளர்ந்த பொண்ணு! கை

    Enjoying the preview?
    Page 1 of 1